டைட்டானிக் படம் எடுத்த பிறகு பனிரெண்டு ஆண்டுகள் கழித்து அவதார் படம் எடுத்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.1994ம் ஆண்டே இந்த யோசனை அவருக்கு இருந்தாலும் அப்போது உள்ள தொழில் நுட்பங்களின் உதவி சாத்தியம் இல்லாத காரணத்தால் அதை கொஞ்சம் தள்ளி வைத்தார்.அது மாதிரி ஒரு படத்தை எடுக்க யாராவது முயற்சி செய்தார்களா என்று உலகம் முழுக்க வெளியான படங்களை பார்க்க தொடங்கினார். அதற்கே நேரம் சரியாக இருந்த காரணத்தால் எந்த படத்தையும் இயக்க ஒத்துக் கொள்ளவில்லை.டெர்மினேட்டர் மூன்றாம் பாகம் அவர் இயக்க மறுத்த காரணத்தால் படுதோல்வி அடைந்தது. ஆனால் அவர் தேடல் மட்டும் முடியவடையவில்லை.முடிவில் அவதார் படம் எடுப்பது சாத்தியம் என்று நிரூப்பித்து காட்டியது ஒரு தமிழ்ப்படம்.அதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்.மீள்வே கொஞ்ச காலம் பிடித்தது.ஆனால் இன்று தமிழ் நாட்டு மக்கள் அவதார் படத்தை வாயை பிளந்து பார்த்தாலும் இதனுடைய மூலப்படத்தை காலில் போட்டு மிதித்தார்கள்.அந்த படம் வெளியான நேரத்தில் அதை புரிந்து கொள்ளாமல் போய் விட்டார்கள்.
அப்படி அவர் பார்த்த படம் ரஜினிகாந்த் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான பாபா படம் தான்.இதில் இருந்த மைனஸ்களை(தெரியாமல் எழுதி விட்டேன்.உடனே ஓட்டுக் குத்த ஓட வேண்டாம்.) எல்லாம் எடுத்து விட்டு ப்ளஸாக மாற்றி எடுத்த படம் தான் அவதார்.
படத்தின் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்..
பொறுப்பில்லாத பையன் வீட்டில் இருந்தால் அது ஒரு ஊனம் தான்.ஆனால் அவதாரில் நாயகனுக்கே ஊனம்.
இங்கு காதலை துறந்தவுடன் இமயமலைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.ஆனால் அங்கு கிரகத்திற்கு போனவுடன் நாயகனுக்கு ஒரு காதல் பிறக்கிறது.
இமயமலையில் மகாஅவதார் இருக்கிறார்.சம்ஸ்கிருதம் தான் மொழி.அதிலிருந்து அடித்த பெயர் தான் அவதார்.இங்கு புதிதாக ஒரு மொழி இருக்கிறது.எல்லோரும் சேர்ந்து வேண்டிக் கொண்டால் உயிர் பிழைத்து விடுகிறார்கள்.பாபாவில் ரஜினியை எரிக்க பார்ப்பார்கள் அவர் பிறகு தப்பி விடுவார்.
வேற்று கிரகத்திற்கு வித்தியாசம் காட்ட வேண்டுமே - வினோத மிருகங்கள்,பறக்கும் மலை எல்லாம் 3டியில் காட்டப்படுகிறது.
பாபாவில் அவர் பார்க்க முடியாத வெளிச்சத்தில் இருப்பார்.உடனே அதை மாற்றி கிருஷ்ணரில் நிறமான நீல நிறம் நவி கிரகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
இதுக்கு மேல சொல்ல ஒண்ணும் ஒரு ஹாலிவுட் படத்திற்கு ஒரு தமிழ்ப்படம் தான் முன்னுதாரணம் என்று தெரிந்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இப்படி நான் எழுதப் போறேன் என்று சொன்னவுடன் நிறைய நண்பர்கள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.காரணம் பாபா படம் இன்னொரு முறை பார்த்து விட்டார்களோ என்று ஐயம் வருகிறது.
அதனால் அவதார் பார்க்கும் முன் பாபா பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.குசேலன் படத்தை வைத்து ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படம் எடுக்க முயற்சி செய்கிறாரா என்று ஆராய்ந்து விட்டு சொல்கிறேன்.எதற்கும் குசேலன் படத்தையும் சேர்த்து பார்க்கவும்.பின்ன நான் பெற்ற இன்பம்....
Tuesday, December 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
நான் தான் முதலில் அவதாரில் பாபாஜியின் முகவெட்டு நவி குருப்புக்கு இருக்கிறது என்று எழுதினவன்
கேபிள் சங்கர்
அப்படியா?????????
நன்றி கேபிள் அண்ணா இது நீங்க தூக்கி போட்ட வடையின் நீட்சி
நன்றி பேநா மூடி ஏன் இவ்வளவு ஷாக்கு ஐ பின்னூட்டம் வேலை செய்யுது
ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி வேலை செய்திருக்க கூடாதா யாரையாவது கடிச்சி வைச்சி இருக்கலாம்
ஹன்டிங் முடிஞ்சாச்சு, அடுத்து ரீவைண்டிங்கா??
Mooku podaippa iruntha ippadi ellam yosikka thonum boss. :-)
அட பாபா...
இதை தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதிவச்சுட்டு அப்படியே பக்கத்துல நீயும் உக்கார்ந்துக்க ராசா... :))
ஆஹா கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்கே !
:)
படுபாவிகளா? என்னாமா சிந்திக்கிறீங்க..
ராமாயணம்தான் அவதார். ராமர் அவதாரம். நாவிக்கள் வானரக் கூட்டங்கள். ராமர் நீலநிறம். ஜடாயு, பறவைக் கூட்டங்கள். இரண்டிலும் காடுகள்தான் பேக்கிரவுண்ட். இரண்டிலும், கதாநாயகனை தங்களுக்குள் ஒருவனாக ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருக்கிறது.
aha......
vetri vila nnu oru kamal padam vanthuche gnabagam irukkaa???
athai parthu thaan avatar padam yeduthanga theriyumaaa
ennoda puthu blog kku vanga thala....
இந்த பதிவ ஜேம்ஸ் காம்ரூனுக்கு அனுப்பி, பாபா படத்துக்கு ராயல்டி வாங்கி கொடுக்கலாம். உங்க சேவை நாட்டுக்கு தேவை. அடுத்து குசேலன் பார்க்கபோறீங்க. வாழ்த்துக்கள்.
ஹையோ ஹையோ
இரும்பு,
எங்க ரூம் போட்டிருக்கிறீங்க அப்படீன்னு சொன்னா நம்மளும் வந்து கலந்துக்கலாமில்ல!!
அவதாரின் skeletonization Technologyய அறிமுக படுத்தின இந்த படத்தை விட்டுடீங்களே பாஸ்.....
http://www.youtube.com/watch?v=ufqn1We9hVU
அப்படியே இதயும் பாருங்க....
http://www.youtube.com/watch?v=absFoV049xg
ஹாய் இரும்புத்திரை அரவிந்த் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் அவதார் படத்தை பாபா படத்திலிருந்து காப்பி அடித்துள்ளார்கள் என்று கூறியுள்ளிர்கள் அதை நான் மறுக்கிறேன்.
ஏனென்றால் பாபா படத்தில் இருந்து கொஞ்சம் கதையை மட்டுமே உருவியிருகிரர்கள். மீதி கதையை முக்கியமாக படத்தின் கருவை வியட்நாம் காலனி என்ற படத்தில் இருந்து உருவி இருக்கிறார்கள். அதில் பிரபு அந்த காலனியில் உள்ள மக்களை காலி செய்வதற்காக அந்த காலனிக்கு வருவார். ஆனால் பிறகு உண்மையை உணர்ந்து கொண்டு காலனி மக்களுக்காக போராடுவார். அதை போலவே இதில் நவி குருப்பை அந்த மரத்தை விட்டு துரத்துவதற்காக அவதார் வருகிறார் பிறகு உண்மை நிலையை புரிந்துகொண்டு நவி குருப்புக்காக போராடுகிறார்.
அரவிந்த் அண்ணன் என்னுடைய இந்த கேள்விக்கு பதில் அளிக்கவும். நான் இப்பொழுதுதான் பதிவு உலகிற்கு புதிதாய் வந்துள்ளேன். எனக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன். என் பெயர் பிரகாஷ் என்னுடைய மின்னஞ்சல் முகவரி prakash.salem3@gmail.com. தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பவும்.
இப்படிக்கு
உங்கள் நண்பன்
பிரகாஷ்.
Post a Comment