Wednesday, December 29, 2010

கர்ணபாரதம்

குருஷேத்திர யுத்ததிற்கு திட்டம் போட கௌரவர்கள் கூடியிருக்கிறார்கள். பீஷ்மர் தான் தலைமை என்பதை எல்லோரும் முடிவு செய்து ஒத்துக் கொள்கிறார்கள்.அப்போது நடக்கும் வாக்குவாதத்தில் கர்ணன் பீஷ்மர் இருக்கும் வரை களமிறங்க மாட்டேன் என்று கோபித்து கொண்டு கர்ணன் செல்கிறான். கர்ணன் இல்லாத களத்தில் அம்பை விடவே அர்ஜூனன் யோசிக்கிறான். கிருஷ்ணன் எல்லோரையும் கர்ணனாக நினை என்று யோசனை சொல்கிறான். போர் தொடங்குகிறது. பத்தாம் நாள் பீஷ்மர் சிகண்டியால் சாய்க்கப்படுகிறார். கர்ணன் களமிறங்குகிறான்.

"உன்னை பார்த்தாலே விஜயன் உக்கிரமாக போர் புரிந்திருப்பான். துரியனைக் காக்க நீ வேண்டும் என்பதாலே உன்னை களம் இறக்காமல் நான் பார்த்துக் கொண்டேன்..நீ மாபெரும் வீரன் கர்ணா.." என்று பீஷ்மர் சொல்ல

"தெரியும் தாத்தா..அர்ஜூனனை அழித்து விட்டு தான் மறுவேலை.." என்று கர்ணன் சொல்ல

"கிருஷ்ணன் இருக்கும் வரை அது நடக்காது..அவனை சாய்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.. அவனை சேர்ந்தவர்களைக் கொன்று விடு..அவன் தானாக சோர்ந்து விடுவான்.."

பதிமூன்றாவது நாள் யுத்தத்தில் அபிமன்யூம், பதிநான்காவது நாளில் கடோத்கஜனும் சாய்க்கபடுகிறார்கள். அர்ஜூனை அழிக்க வைத்திருந்த ஆயுதம் கடோத்கஜனை அழிக்க உதவுகிறது. கர்ணனும், அர்ஜூனனும் துக்கத்தில் இருக்கிறார்கள்.

குந்தியைச் சந்திக்க வருகிறான் கிருஷ்ணன்.

"என் பேரன்களைக் கர்ணன் கொல்லும் போது பார்த்துக் கொண்டாயிருந்தாய் யசோதா மைந்தா..ஏன் கர்ணனை நீ கொல்லவில்லை.."

"என்னால் கர்ணனைக் கொல்ல முடியாது அத்தை.."

"என்ன காரணம்.."

"அவன் உன் மகன் அத்தை..சூரியனுக்கும் உனக்கும் பிறந்தவன்..என்னால் எப்படி அவனை கொல்ல முடியும்.."

"நான் அவனை உடனே பார்க்க வேண்டும்.." என்று குந்தி அடம் பிடிக்க கண்ணன் மனதுக்குள் சிரித்து கொள்கிறான்.

கர்ணன் பாசறையில் தூங்காமல் அமர்ந்திருக்கிறான்.

"மகனே.." என்ற சத்தம் கேட்டு வெளிச்சமாக்குகிறான். "அம்மா அர்ஜூனன் பாசறை அங்கே இருக்கிறது..வழி தெரியாமல் வந்து விட்டீர்களா.."

"வழி தவறவில்லை..தகர்த்த வழியை நேர் செய்ய வந்தேன்.. நீ என் பிள்ளை.." என்று குந்தி சொல்ல

"நான் தேரோட்டியின் மகன்.."

"கர்ணா.. நீ என் மூத்த மகன் என்று தெரிந்தால் துரியனும்,தர்மனும் சந்தோஷப்படுவார்கள்.. நீ அரியணையில் ஏறலாம்.."

"அரியணை..எனக்கு துரியன் தந்த அங்க தேசமே போதும்..அர்ஜூனன் அம்மாவாக இருங்கள் போதும்.."

"நான் உன் அம்மா தான்.." பாசறையில் இருக்கும் சால்வையை அணிந்து காட்டுகிறாள். "இந்த சால்வையைத்தான் நான் உன்னை ஆற்றில் விடும் போது அணிந்திருந்தேன்.. வேறு யாராவது அணிந்தாலும் எரிந்து போவார்கள்..ஏன் தொடக்கூட முடியாது.." என்று குந்தி சொல்ல அதை தொட்டுப் புண்ணாக்கி கொண்ட பெண்கள் எல்லாம் கர்ணன் நினைவில் வந்து மறைந்தார்கள். "என்னோடு வந்து விடு..பாண்டவர்கள் உன் தம்பிமார்கள்.." என்று குந்தி சொல்ல

"நீ எங்கே அம்மா இத்தனை நாளாக இருந்தாய்..எனக்கு துரியன் தான் எல்லாம். அரண்மனை,அதிகாரம் எல்லாம் அவன் போட்ட பிச்சை..அவனை விட்டு வர முடியாது.."

"சரி வர வேண்டாம்..உன் தம்பிகளைக் கொன்று விடாதே.."

"அர்ஜூனனைத் தவிர.." என்ரு திருத்தம் சொல்கிறான்.

"அர்ஜூனன் மீது நாக அஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது..இது மட்டும் போதும்.."

"சரி அம்மா..நான் உன் பிள்ளை என்று போர் முடியும் வரை வெளியே சொல்லாதே.. நான் இறந்து விட்டால் உன் மடியில் போட்டு இவன் என் மூத்தப்பிள்ளை என்று சொல்வாயா.."

"இப்போதே சொல்கிறேன்..என்னோடு வந்து விடு.."

"நான் இறந்தால் மட்டும் சொன்னால் போதும்..உயிர் உள்ள வரை துரியன் தான்.." கர்ணன் வழியனுப்பி வைக்கிறான்.

பதினெழாவது நாள் போர் நடக்கிறது.கிருஷ்ண,சல்லிய சூழ்ச்சியால் நாகாஸ்திரம் அர்ஜூனனை உரசி செல்கிறது. தேர் சேறில் சிக்கிக் கொள்ள கர்ணன் கொஞ்ச நேரம் அவகாசம் கேட்கிறான்.

"அர்ஜூனா அவனை கொல்.."

"கிருஷ்ணா அவன் நிராயுதபாணியாய் நிற்கிறான்..அவன் ஆயுதம் எடுக்கட்டும்.."

"அபிமன்யூ,கடோத்கஜன் எல்லாம் ஆயுதத்தோடு நின்றார்களா..நீ கொல்கிறாயா நான் கொல்லட்டுமா.." என்று கிருஷ்ணன் சொல்ல அர்ஜூனன் கர்ணனை அம்புகளால் துளைக்கிறான்.கடைசி நாள் போரில் ஒருவரையும் கொல்ல முடியாமல் அர்ஜூனன் தடுமாறுகிறான். கிருஷ்ணனுக்கு போர்க்களத்தில் அவனை காப்பாற்றுவதே பெரும்பாடாய் இருக்கிறது. என் குறி தவற என்ன காரணம் என்று கிருஷ்ணனிடம் கேடுக் கொண்டேயிருக்கிறான்.கேள்வியின் போதெல்லாம் கிருஷ்ணன் முகத்தில் மாறாத புன்னகை வந்த வண்ணமேயிருக்கிறது.

பதினெட்டாவது நாள் போர் முடியும் வரை குந்தி எல்லாவற்றையும் அடக்கி வைத்து கொள்கிறாள். ஈமச்சடங்குகள் நடக்கும் போது கர்ணனை மடியில் போட்டு அழுகிறாள்.
"என் மூத்தப்பிள்ளையைக் கொன்று விட்டாயே கண்ணா.." என்று கண்ணனிடம் கோபப்படுகிறாள்.

"கர்ணன் என் அண்ணனா..இது உனக்கு முன்னரே தெரியுமா அம்மா.." என்று குந்தியிடம் அர்ஜூனன் கேட்கிறான்.

"தெரியும்..கண்ணன் தான் சொல்ல வேண்டாம் என்று சொன்னான்.." என்று குந்தி சொல்ல

"முதல் நாள் போரிலேயே எல்லோரையும் கர்ணனாக நினைத்து கொள் என்று கண்ணா சொன்னாயே..உன்னை கர்ணனாக நினைத்துக் கொண்டு உன்னை கொன்றிருந்தால் என் அண்ணன் இறந்திருப்பானா..நீ தானே அவன் மேல் அம்பு விட சொன்னாய்.." என்று அர்ஜூனன் கோபபடுகிறான்.

" இருவரில் யாராவது ஒருத்தர் தான் இருக்க முடியும்..அவனை கொல்லவில்லை என்றால் அவன் உன்னை கொன்றிருப்பான்..துக்கம் தாளாமல் உன் சகோதர்களும், அம்மாவும் இறந்திருப்பார்கள்..ஒன்றை விட ஐந்து பெருசு அர்ஜூனா.." என்று கண்ணன் சமாதானப்படுத்தினாலும் அர்ஜூனனுக்கு மனசு ஆறவில்லை.

"அவன் என்னை விட வீரன் என்று நீ முன்னர் சொன்ன போது ஒத்துக் கொள்ள முடியவில்லை..இன்று ஒத்துக் கொள்கிறேன்..அவன் என்னை விட வீரன்..என் அண்ணன்..நடந்தது மகாபாரதப் போர் அல்ல..கர்ண பாரதம்..நான் கொன்ற எல்லோருமே எனக்கு கர்ணனாக தெரிந்தார்கள்..கர்ணன் இறந்தப்பின் ஒருவரையும் என்னால் கொல்ல முடியாமல் போனதற்கு இன்று தான் காரணம் தெரிந்தது" என்று சொல்லிக் கொண்டே கர்ணன் சிதைக்கு நெருப்பு வைக்கிறான்.

Friday, December 24, 2010

மன்மதன் அ(சொ)ம்பு

மன்(னார்) மதன்(கோபால்) அம்பு(ஜம்) இப்படி ரொம்ப வித்தியாசமாக தலைப்பு யோசித்த அளவுக்கு கதையை யோசித்திருந்தால் கொஞ்சம் நல்லாயிருந்திருக்கும். படம் தொடங்கும் போதே கமல் அவர் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டார். நிஷா (அம்பு - சொம்புவின் திரைவுலகத்தில் இந்த பெயர்) பாரிஸ் செல்கிறார். நிஷாவின் ரசிகர் சொல்கிறார் - " நான் நல்லா நடிப்பேன்.எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.உங்க கால் செருப்பா கூட நடிப்பேன்." அதற்கு சங்கீதா(சங்கு ஊதற வயசுல சங்கீதா) "வலது கால் செருப்பா இடது கால் செருப்பா." இது மாதிரி வலிமையான நகைச்சுவை காட்சில் படம் முழுவதும் நிரம்பிக் கிடக்கிறது. இது மாதிரியான காட்சிகளை ரசிக்க முடியாத அளவிற்கு அதீத ரசனைக் குறைபாடு வந்து விட்டதே என்று மனம் வெம்பி சாக கிடந்தேன். உதயநிதி ஸ்டாலின் ஏன் படத்தை கை மாற்றி விட்டார் என்ற சந்தேகம் வந்ததுமே தப்பித்திருக்க வேண்டும். விதி வலியது. ஒண்ணு மட்டும் சொல்றேன்ல எத்தனை சாரு வந்து உங்களைக் கிழி கிழி கிழிச்சாலும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க. அது மட்டும்தாம்லே உண்மை. மன் - அம்பு இந்த வார்த்தைகளைப் பெரிய பாண்ட் போட்டவுடனே மாதவன் தெரிந்திருக்க வேண்டாமா. எப்படியிருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க மாதவன். 3 இடியட்ஸ் நடிச்சப்போ கூட நீங்க முட்டாளா எனக்கு தெரியல.ஆனா கமல் படம்னு நம்பி வந்த உடனே தான் தெரிஞ்சுது நீங்க எவ்ளோ பெரிய முட்டாள்னு.ரமேஷ் அரவிந்த் உங்களுக்கு மும்பை எக்ஸ்ப்ரஸ் படத்தில் வாங்கியும் தெரியல போல.

இன்னொரு வசனம்.யப்பா முடியல.திரிஷா மேல மாதவன் சந்தேகப்படுறார். திரிஷா தப்பு செய்ய கேரவன் எல்லாம் வேண்டாம். அதுக்கு வெளிநாடு தான் போவேன்னு ஒரு வசனம் (உபயம் கமலஹாசன்) சொல்வார். அப்படியே கொலைவெறி வந்து "மை டாடி இஸ் நாட் இன் தி குதிர்னு சொல்லாதீங்க கமல்னு கத்தணும் போலயிருந்தது.

கமலுக்கு அவருடைய தோல்விப்படங்கள் எல்லாம் இன்னும் மண்டையில் குடைச்சல் குடுக்குது போல. ஆளவந்தான் படத்தில் வரும் காஷ்மீர் வெளி நாட்டவர் கடத்தல் அதை மீட்கப் போகும் கமல் டீம் இதிலும் கமல் டீம் போகிறது.பாடலை எடுத்து விட்டு ரிவர்ஸில் ஓட விட்டுயிருக்கிறார்கள். நீலளளளளளளளளளளளளளளள வானம். இனி இதை கமல் கண்டுப்பிடித்தது மாதிரி பேசுவார்கள். அதெல்லாம் பத்து வருடம் முன்பு குமுதம் ஒரு பக்க கதையில் வந்த தீம். (முதல் பட இயக்குனர் நாயகிக்கு காட்சியை விளக்கிறார். நாயகிக்கு குழந்தை கிடையாது. ஒரு ஆழகான குழந்தை ஒவியம். அதை படுத்து உருண்டு புரண்டு கலைக்க சொல்கிறார். நாயகி யோசிக்கிறாள். இயக்குனர் சொன்னதை மட்டும் செய்யுங்கள் என்று சொல்ல மனமே வராமல் கலைக்கிறாள். ப்ரிவியூவின் போது அந்த காட்சி ரிவர்ஸில் ஓடுகிறது. கலைந்த கோலப்பொடியைப் படுத்து புரண்டு அழகான குழந்தை ஒவியமாக மாறுகிறது.) அடுத்து குணா படத்தில் அறையைச் சுற்றி வந்து கவிதை பேசுவார். அது மாதிரி சுற்றி வந்து திரிஷாவிடம் கவிதை சொல்கிறார். திரிஷாவின் சொந்த குரலில் கவிதை படிக்கும் போது யாரோ சம்மட்டியால் தலையில் அடிப்பது போலுள்ளது. இதுல கூட சங்கீதா வேற. வாத்து மாதிரி ஒரு நடை. இவ்வளவு திராபையான நாயகியை எந்த சினிமாவிலும் சமீபத்தில் பார்க்கவில்லை. கமல் கூட நடிச்சாச்சி. இனி ஒய்வு எடுக்க வேண்டியது தான். அடுத்து ஹேராமில் வருவது போல கொலை,அஹிம்சை என்று பேசி இம்சை செய்கிறார். தோல்வியடைந்த படங்கள் அவர் காதில் ரீங்காரமிடுகிறது போல.

(ஏலே எவம்ல அது நீ மட்டும் ஒழுங்கான்னு கேக்குறது.ஒரே ஒரு காதல் தோல்வியை வச்சிக்கிட்டு எப்போ கதைன்னு ஒண்ணு எழுதினாலும் லிப்ஸ்டிக் கறை,ரத்தக்கறை,வெள்ளைச்சட்டைன்னு நீயும் எழுதுவ தானே.உன் காதுல இதெல்லாம் கேக்காதாலேன்னு கத்துறது.வந்தேன் பிச்சிப்புடுவேன் பிச்சி.)

இந்த கவிதையைத் தூக்கணும்னு கோர்ட் கேஸ் வேற.முதல்ல அது கவிதையான்னு கண்டுப்பிடிக்க மனு கொடுக்கணும். திரிஷா பாடும் போது கேட்டா காதுல ரத்தமே வருது. தமிழ் மொத்தமா செத்துருச்சி. கடைசியா எதுக்கு கப்பல்,பிரான்ஸ்,ஏதேன்ஸ்,பார்சிலோனா எல்லாம்.இந்த கதையை தான் சிவகுமார், நதியாவை வைத்து எடுத்து விட்டார்களே.சிவகுமார்,நதியா,சுரேஷ் நடிச்ச படத்தோட ரீமேக் போல.

சுரேஷை சிவகுமார் கார் விபத்தில் தெரியாமல் கொன்று விட,சுரேஷின் காதலியான நதியாவை சிவகுமார் எப்படி கல்யாணம் செய்து கொள்கிறார் என்பது தான் கதை.

இங்க தோசையைத் திருப்பி போட்டு இருக்காங்க. கமலின் மனைவியைத் திரிஷா கொன்று விட (அட தெரியாமல் கார் விபத்தில் தான்) மாதவனின் காதலியான திரிஷா கமலை கல்யாணம் செய்து கொள்கிறார்.

கமல் முன்னாடி எல்லாம் ஹாலிவுட் படத்தைத் தான் சுட்டதா சொன்னாங்க.இப்போ தமிழ்ப்படத்தையா. டூ பேட் கமல்.இருங்க சாரு கிட்ட போட்டு குடுக்கிறேன்.பாதி காசாவது திரும்ப தாங்க.பாதி விமர்சனம் வாபஸ்.

இதை இன்னொரு மும்பை எக்ஸ்பிரஸ்னு கணிச்சி சொன்ன பின்னூட்டப் புயல் ஜெமோ புகழ் ராம்ஜி யாகூவிற்கு நன்றி. உதயநிதி நீங்க ஒரு புத்திசாலின்னு மட்டும் எனக்கு தெரிஞ்சது. நெக்ஸ்ட் இளைஞனாமே.அதுவும் பொங்கலுக்கு.

Tuesday, December 21, 2010

வன்மம்

தீடிரென இந்த வன்மம் எங்கிருந்து கொப்பளித்தது எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது. நிச்சயம் இன்று வந்திருக்க வாய்ப்பில்லை.எங்கோ அடிமனதில் ஒளிந்திருந்தது இன்று வெளியே வந்திருக்கிறது இவன் மூலமாக. ஆழ்மனதில் இதுவரை என்னை துரத்திய சித்ரவதைகளை செயல்படுத்தவே இந்த வேலையில் நான் சேர்ந்திருக்கலாம். மனதளவில் இன்னமும் குழந்தையாகவேயிருக்கும் பெண்ணைக் கற்பழித்து விட்டு சட்டம் செய்கிறவனை என்ன செய்வது என்றே தெரியாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது மனது.

"நான் யார் தெரியுமா..அந்த பொண்ணுக்கு பதினெட்டு வயசு முடிஞ்சு நாலு மாசம் ஆகுதுன்னு டேட் ஆப் பெர்த் காட்டுவேன்.." கத்திக் கொண்டிருப்பவனை இங்கேயே சுட்டால் என்ன.தோணிச்சி ஆனா செய்ய முடியாது.ரத்தமாக கிடந்தவள் நினைவுக்கு வந்து வந்து போனாள்.

டீக்கொண்டு வரும் பையனிடம் ஜாடை காட்டினேன்.பேசிக் கொண்டிருந்தவன் மேல் சூடாக டீயைக் கொட்டி விட அவன் பிடிக்கும் முன் பையன் போக்கு காட்ட,பேப்பர் வெயிட் தூக்கி அடிப்பது மட்டும் தான் தெரிந்தது. ஏதோ நெற்றியில் வெடித்தது போல ஒரு உணர்வு. மயக்கத்தில் கூட அவனை என்ன செய்யலாம் என்பது மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தது. சின்ன வயதில் காளை மாடுகளுக்கும், கறிக்காக வளர்க்கப்படும் கொழுத்தப் பன்றிகளுக்கும் துடிக்க துடிக்க செய்வது நினைவுக்கு வரவும் முழிப்பு வந்து விட்டது.

வெறி தீரும் மட்டும் அவனை அடிக்க சொல்லி விட்டு வலிக்கு ஊசி போடுவது போல அவனுக்கு கொடுத்த சரக்கில் மயக்க மருந்தை கலக்க சொல்லியிருந்தேன்.பாத்ரூம் எங்கே என்று செய்கையில் கேட்டவனுக்கு கையை காட்டினேன். எங்காவது மயங்கி சரிவான் என்று தெரிந்தே பின் தொடர்ந்தேன். ப்ளஸ் 1 படிக்கும் போது தவளையும்,எலியையும் அறுத்து அறுத்து விளையாடியிருந்தது ஞாபகப்படுத்திக் கொண்டு பன்றிகளுக்கு அவர்கள் செய்ததை நான் இவனுக்கு செய்திருந்தேன். இனி எந்த பெண்ணுக்கும் வயது சான்றிதழ் தேவைப்படாது என்று நினைத்துக் கொண்டேன்.

காலையில் எழுந்த போது ஸ்டேஷனே கொஞ்சம் களேபரமாகயிருந்தது.

"யோவ்..என்னய்யா ஸ்டேஷன் இது..சேகர் ஆளு அவன்..இந்த அடி அடிச்சிருக்கீங்க..அதோட விட வேண்டியது தானே..யாரு இப்படி பண்ணது..அடுத்த மாசம் கல்யாணம் அவனுக்கு.."

"சார்..அவன் பேப்பர் வெயிட் எறிஞ்சதுல எனக்கு இப்போ தான் மயக்கமே தெளிஞ்சுது..என்ன நடந்தது சார்.."

மெதுவாக அடிக்குரலில் எஸ்.பி சொல்லி விட்டு "நீ தான் பண்ணியிருப்பன்னு தெரியும்.." பின் சத்தமாக சொல்லும் போது "டாய்லட் போகும் கீழே விழுந்து அவனுக்கு படக்கூடாத இடத்தில அடிப்பட்டுருச்சியா..ஒருத்தனை அரெஸ்ட் பண்ணினா பொறுப்பா பாத்துக்க வேண்டாம்.."

"சார் இனிமே அப்படி நடக்காம பாத்திக்குவேன்.."

"கிழிச்ச..உன் மேல விசாரணை கமிஷன் இருக்கு..வேற வேலை தேடுற வழியப் பாரு.."

வீட்டிற்கு போனால் எஸ்.பி எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.

"என்ன கோபமா..நீ ஏதாவது செய்வேன்னு தெரியும்..இப்படி செய்வேன்னு தெரியாது..நம்ம ஆளுங்க தான் விசாரணை கமிஷன்ல இருப்போம்..பார்த்துக்கலாம்.."

நெற்றி தெரிந்த வலியினால் தொட்டுப் பார்த்தேன். வீக்கம் குறைய தொடங்கியிருந்தது.கூடவே வன்மமும்.

Thursday, December 16, 2010

ஹேரி பிரவுன் - ஈசனாகுமா

வயதுகேற்ப நடியுங்கள் என்று சொல்லிக் கொண்டேயிருப்பதை விட அதற்கேற்ப கதையையும் நடிகர்களையும் தான் உருவாக்க வேண்டும்.அப்படி கன்னடத்தில் உருவான படத்தைப் பார்க்க ஆவல் எழுந்துள்ளது.

போதையும்,கொலையுமாக ஹேரி பிரவுன் ஆரம்பிக்கிறது. ஈசன் டிரைலரில் வருவது போல ஒரு போலீஸ் அதிகாரி,ஒரு வயதானவர்,இன்னும் இளமை கொஞ்சும் பட்டாளங்கள் என்று ஹேரி பிரவுன் நகர்வதும் இது வேறு மாதிரியான நகரம் என்று சசிகுமார் சொன்னதும் இன்னும் நிரடுகிறது. அமீரின் யோகியும் இப்படித்தான் ஆரம்பித்தது.அமீர் வாங்கிய உதைகளும் அதற்குப்பிறகான மௌனமும் இன்னும் நினைவில் நிரம்பி வழிகிறது. இன்னும் ரெண்டு நாட்கள் தான் எல்லாம் தெரிந்து விடும். மிஷ்கின் காத்துப்பட்டு சசியும் திரும்பியிருக்கிறது போலவே ஒரு உணர்வு.காற்றில் வீசப்பட்ட சாருவின் வாள் மிஷ்கினோடு சேர்த்து சசிகுமாரையும் வெட்டுவது போல அந்திவேளையில் ஒரு கனவு.

சரி கதைக்கு வருவோம்.ரொம்ப சிம்பிளான கதை.ஒரு சப்வே.அதில் எல்லா காரியங்களையும் செய்யும் இளந்தாரிகள்.யாராவது வந்தால் அடித்து பணத்தைப் பிடுங்கிறார்கள். போதைப்பொருள்,பெண்கள் என்று சக நேரமும் அவர்களால் அந்த நடைபாதை ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது.ஹேரியின் மனைவி மருத்துவமனையில் இருக்கிறார்.பார்க்க அந்த நடைபாதை தான் குறுக்குவழி.அங்கே போக வேண்டாம் என்று அவரிடம் சொல்வதால் அவர் சுற்றியே போகிறார்.மனைவி சாகக்கிடக்கிறாள் என்று தொலைபேசி வந்தப்பிறகும் பயத்தினால் சுற்றியே போய் இறப்பதற்கு முன்னால் போய் சேர முடியவில்லை.

பப்பில் தண்ணியடிக்கும் போது நான் அவர்களை தாக்கவே இந்த கத்தியை வைத்திருக்கிறேன் என்று சொல்லும் நண்பன் அடுத்த நாளே கொல்லப்படுகிறார்.போலீஸ் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் கைது செய்தவர்களை அனுப்பி விடுகிறார்கள்.துக்கம் தாளாமல் போதையில் சப்வேயில் நுழைந்தவரிடம் கொள்ளையடிக்க முயல்பவனை கொன்று விடுகிறார். போலீஸ் நண்பனின் வழக்கில் பெரிதாக முன்னேற முடியாது என்று சொல்ல இவர் பழி வாங்க கிளம்புகிறார். முக்கியமான குற்றவாளி மட்டும் தப்பித்து விட மற்றவர்களை கொன்று கூடவே கொள்ளையும் அடிக்கிறார்.

இவர் பழிவாங்கும் அதிரடியால் போலீஸூம் களத்தில் இறங்க ஒரு இளைஞர்களுக்கும் போலீஸூக்கும் கலவரம் வெடிக்கிறது.(உயர் நீதி மன்ற லாயர் -போலீஸ் சண்டை இந்த இடத்தில் நல்லா பொருந்தும்). கலவரத்தின் போது அங்கு போகும் ஹேரியைத் தடுக்க இரண்டு போலீஸ் அதிகாரிகள் வருகிறார்கள். கலவரக்காரர்களால் தாக்கப்படும் போது ஹேரியால் காப்பாற்றப்படுகிறார்கள். தொடர்ந்து திடுக்கிடும் சாதாரண முடிவில் எல்லோரும் பயமில்லாமல் அங்கு விளையாடுகிறார்கள்.ஹேரி சப்வே வழியாக பயமில்லாமல் தனியே நடந்து போகிறார். சப்வே என்பதை தெருவாக,ஏரியாவாக சசிகுமார் மாற்றியிருக்கலாம். ஹேரி என்ற கிழவனுக்கு பதில் சசிகுமார் இருக்கலாம். இன்னும் கொஞ்ச நேரம் எல்லாம் தெரிந்து விடும். அவரும் மிஷ்கின் மாதிரி சுப்ரமணியபுரம் எதோட இன்ஸ்பிரேஷன் தெரியுமா. அதை ஒன்றும் சொல்லாமல் இதை மட்டும் வெளுக்கலாமா என்று ஆரம்பித்து விடாமலிருக்க வேண்டும்.

Tuesday, December 14, 2010

மிஷ்கின்,சாரு,பஞ்சாயத்து,பாலிடால்

கலைஞர் தொலைக்காட்சி உரையாடலில் ரஷ்யன் படத்தைத் திருடிய ஜகனாந்தனும்,கொரிய படத்தைத் திருடிய சேரனும் ஜப்பான் படத்தைத் திருடிய மிஷ்கினின் ஆற்றல்களைப் புகழ்ந்து தள்ளினார்கள். அதை பார்த்து விட்டு சொன்னது சாரு பத்தி தெரியாம இந்த பயபுள்ள கொஞ்சிக்கிட்டு அலையுது.சாரு வர்ற இரண்டு செகண்ட் சீனும் எடிட்டிங் செய்யும் போது போக போகுது.அப்புறம் தெரியும்.அது இன்னைக்கு நடந்திருக்கு.

இப்படி சரியா பதினாலு நாளுக்கு முன்னாடி சொன்னது இப்போ நடந்திருக்கு.

ஊருல ஒரு பழமொழி சொல்வாங்க.குணம் தெரியாமல் குணட்டிக்கிட்டு அலையிறான்னு. சாரு பத்தி தெரியாம மிஷ்கின் பயபுள்ள துள்ளி விளையாடி இருக்கு.ஆப்பு வாங்கும்னு சொன்னது பலிச்சிருச்சே.

என்ன ஒரு ஞான திருஷ்டி உனக்கு அப்படின்னு யாராவது சுத்தி போடாம இருக்கணும்.

இது ஆறு மாசத்துக்கு முன்னாடி எழுதியது.அது இப்போ நடக்குது.ஸ்டார்ட் மியூசிக்.

அதுல சாருவுக்கு டான்ஸ் வரலன்னு நான் சொன்னேன்.ஆனா மிஷ்கின் நடிப்பே வரலைன்னு சொல்லிட்டார். அது தான் இந்த கும்மாங்குத்துக்கு காரணம்.யுத்தம் செய் படத்தை சாரு நார் நாரா கிழிச்சி போடலைன்னா நான் சரியா சாருவைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.இந்த ஜூன் மாச பதிவுல சொன்ன மாதிரி இனி மிஷ்கினுக்கு தொடர்வேட்டு தான். எத்தனை பதிவு வரப்போகுதோ. அவருக்கு நடிப்பு வரலைன்னு சொன்னதுக்கே இந்த கதின்னா தேகம் நாவலை சொல்லியிருந்தா மிஷ்கின் என்னவாயிருப்பார். யொய் பிளட் என்று அமீர் மிஷ்கின் காதைத் தொட்டுப் பார்த்து விட்டு ஷேம் பிளட் என்று சொல்லியிருப்பார்.

நான் நாளைக்கே சாரு யுத்தம் செய் மெமரிஸ் ஆப் மர்டர்ஸ்னு சொன்னா போதும்.அதிர்வேட்டு அடங்க ஒரு மாசம் ஆகும்.சேரனை விடவா சாரு கேவலமா நடிக்கிறார்னு நான் நங்கூரம் மாதிரி அஞ்சாறு பிட்டை சேர்த்து போடுவேன்.

சாருவை சொன்னா போதுமா.ஜெமோவை ஒண்ணும் சொல்லாம விட்டா வரலாறு என்னை ஒரு நாளும் மன்னிக்காது. உள்ளடி வேலை ஜெமோவை செய்றதுல மிஞ்ச முடியாது.நண்பர் பவா செல்லத்துரை சொல்லி மிஷ்கின் கார் அனுப்பி ஜெயமோவை அவர் அலுவகத்தில் படம் பார்க்க வைத்ததாக என்னைக்கு கல் எறிஞ்சாரோ அதுக்கான பலன் இன்னைக்குத்தான் கிடைச்சிருக்கு.ரெண்டு மாங்கா. ஒண்ணு பவா செல்லத்துரை - பார்ட் ஒன்ல சாரு அவருக்கு வைச்ச வேட்டு. இன்னொரு மாங்கா - மிஷ்கின் இனி வரப்போறது எல்லாம் அவருக்குத்தான். ஜெமோ இது உங்களுக்கான அறுவடை காலம்.ஜஸ்ட் ரைப் அண்ட் எஞ்சாய்.இனி மிஷ்கினுக்கும் அறுவடை காலம் தான். யுத்தம் செய் படத்தை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.

சாரு புகழ்ந்த வரிசையில் அமீர்,வசந்தபாலன்,மிஷ்கின் எல்லோரும் வாங்கியாச்சி.இன்னும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த சசிகுமார் தான் தப்பித்திருக்கிறார்.அடுத்த வாரம் ஈசன் வருது.அது கூட காப்பின்னு தான் சொல்றாங்க.பாக்கலாம்.ஹேரி பிரவுன் என்ற படம் என்று சொல்கிறார்கள்.டிரைலர் பார்த்தால் கூட கொஞ்சம் டவுட் வருது.அடுத்து சசி தான் போல.புத்தக வெளியிட போனாலே அதிர் வேட்டு தான் போல.இன்னும் இரண்டு நாட்கள் தான்.வெட்ட வெளிச்சாமாகி விடும். அடுத்த வாரம் மன்மதம் அம்பு.சாருவுக்கு இன் பொங்கல் வரை பொங்கல் வைப்பது தான் வேலையாகயிருக்கும்.

Sunday, December 12, 2010

பெண் வாசனையில்லாத வீடு

யாருமில்லாத மழை நாளில் வீட்டிற்கு வந்திருந்தாள். ராட்சஸி மாதிரி பம்பரமாக சுழன்று எல்லாவற்றையும் ஒழுங்கு செய்திருந்தாள். இப்படியா வீட்டை வைக்கிறது என்று கோபம் வேறு நடுநடுவே வந்து தொலைத்தது.

"ஒரே ஆம்பிளை வாசனை..இன்னும் கொஞ்ச நாள் தான்..இந்த வீட்ல பெண் வாசனை தான் அடிக்கும்.. நமக்கு பெண் குழந்தையா பிறக்கணும்.."

"ம்.. கேக்க நல்லாதானிருக்கு.."

பக்கத்து வீட்டிலிருந்து தான் சாப்பாடு கொண்டு தருவார்கள். "என்னடா நல்ல வாசனையா வருது.. யாராவது பொண்ணுங்க வந்தாங்களா.."

"இல்லையே..நான் இப்போ தான் குளிச்சேன்.."

"ம்..நானும் பாக்கத்தானே போறேன் எந்த பொண்ணு உன்னை கட்டிக்கிட்டு முழிக்கப் போகுதுன்னு.."

அவள் பிறந்த நாள் பரிசாக மெட்டி பரிசளித்திருந்தேன்.

"என்ன ஒண்ணு தானிருக்கு..இன்னொன்னு எங்கே.."

"அதான் இது.."

"என்ன ஜோக்கா..உதை வேணுமா.."

"இல்ல ஒண்ணு எங்கிட்ட இருக்கு..நீ தான் சமயுரிமை பேசுற பெண் போராளி ஆச்சே..அதான் ஒண்ணு என் செயின்ல டாலரா தொங்குது.."

"கால்ல போட முடியாதே.."

"மோதிரமாக போட்டுக்கோ.."

எத்தனை நாள் மறைத்திருந்தாளோ தெரியவில்லை.அவள் வீட்டில் எப்படியோ பார்த்திருக்கிறார்கள். அவன் தான் வேணும் என்று அவள் சுயேட்சையாக நின்று டெபாஸிட் இழந்திருந்தாள். வீட்டில் யாருமே பேசாமல் மௌனமாக போராட்டம் தொடங்கியிருக்கிறார்கள். அமைதி போரின் முடிவில் அவள் தற்கொலைக்கு முயன்றிருந்தாள்.கடைசி செமஸ்டர் என்பதால் வெளியே யாருக்கும் தெரியவில்லை. நான் பயந்து போய் எங்காவது பதுங்கியிருந்தால் அது வெளியே தெரிந்திருக்கும். குற்றப் பத்திரிக்கையின் பக்கங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டேயிருந்திருக்கும்.

இயல்பாக இருக்க முயற்சித்து கொண்டிருந்தேன். நடிக்க முடியாமல் உள்ளுக்குள் நொறுங்கி கிடந்தேன். இதோடு ஒரு முடிவிற்கு கொண்டு விட வேண்டும். வீட்டிற்கு நேராக போய் பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு கிளம்பினாள்.

வாசலிலே அவ சின்ன வயது ஆதர்ஷம் என்னை எதிர்ப்பார்த்து இருப்பது போல தெரிந்தது.

"நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.."

"நானும்.."

"யாருக்கோ உங்க பொண்ணைக் கட்டிக் கொடுக்கப் போறீங்க..ஏன் எனக்கு தந்தா என்ன.. நான் நல்லா பாத்துப்பேன்.."

"முடிச்சிட்டியா..அடி வாங்குறதுக்கு முன்னாடி போயிரு.."

"நீங்க அடிச்சாலும் பரவாயில்லை.. எனக்கு அவ வேணும்.."

"உன்ன அவ கூட பாத்த முத நாளே அடிச்சிருப்பேன்..அடிக்கல காரணம் அவ கண்ல நீ தெரிஞ்ச.. உன்ன அடிச்சிருந்தா நீ வேணும்னு சூசைட் செஞ்சி என்னை மிரட்டியிருக்க மாட்டா..உன் கூட வந்திருப்பா.."

என்ன செய்வது என்றே தெரியவில்லை. கொஞ்சம் புத்திசாலித்தனமான அப்பனாக இருக்கிறான்.அவ கிட்ட பழகும் போது இந்த ஆளை எடை போடாமல் விட்டது தப்பாய் போய் விட்டது.

கையில் வெட்டுக்காயத்தை மறைக்க கை உடைந்தது போல கட்டுப் போட்டிருந்தாள். எல்லோரும் கேட்டதற்கு ஓடும் ரயிலில் இருந்து விழுந்து விட்டேன் என்று சொல்கிறாள். உங்க அப்பன் தான் அந்த ரயில் என்று கத்த வேண்டும் போலிருந்தது.

"எப்படியிருக்க.."

"ம்..உயிரோடு தானிருக்கேன்.."

"என் மேல என்ன கோபம்.."

"ஒரு தடவையாவது என்ன பாக்க வரணும்னு தோணலையா..நான் இருக்கேன்னா செத்துட்டேன்னா கூட தெரியாம இப்போ வந்து கேக்குற.."

"நான் வந்தேன்..உங்க வீட்ல தான் விடல.."

"அப்ப எங்க அப்பா சொல்றது பொய்னு சொல்லுவ போல.."

"ஆமா உங்க அப்பா சொல்றது தான் உண்மை..நான் சொல்றது பொய்..போ போய் உங்க அப்பா பார்த்து வச்சிருக்கிறவனைப் போய் கல்யாணம் பண்ணிக்கோ.."

"தேர் யூ ஆர்..உனக்காக போய் சூசைட்..ச்சீய்..நல்லவேளை நான் சாகல.."

"செத்து தொல..நானாவது நிம்மதியாயிருப்பேன்.." கோபத்தில் வார்த்தை வந்து விட்டது."ஸாரி.." சொல்லி சமாதானப்படுத்தலாம் என்பதற்குள் மொத்தமாக போயிருந்தாள். மெட்டியை என் ஜூனியர் ஒருவனிடம் கொடுத்து என்னிடம் கொடுக்க சொல்லியிருக்கிறாள். அதற்கு முன்பே நான் செயினில் இருந்து வெட்டி எறிந்திருந்தேன்.

"இனி என் வீட்டில் எப்போவுமே ஆண் வாசனை தான் அடிக்கும்னு போய் அவ கிட்ட சொல்லு.." என்று சொல்லியிருந்தாலும் அந்த வாசனை இன்னும் வீட்டிலிருப்பதாக நினைத்து நச்சரித்து வேறு இடத்திற்கு குடி போயிருந்தோம். இருந்தாலும் மழை நாளில் அந்த வாசனை இன்னும் நிரடுகிறது. கனவில் எத்தனை குழந்தை வேண்டுமென கேட்கிறாள். பதில் சொல்வதற்குள் முழிப்பு வந்து விட்டது.வெளியே விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது.

மழையைத் தானே யாசித்தோம்..
கண்ணீர் துளிகளைத் தந்தது யார்..
பூக்கள் தானே யாசித்தோம்..
கூழாங்கற்களை எறிந்தது யார் யார்..


Saturday, December 11, 2010

நந்தலாலா - குறியீடு தேடி ஒரு பயணம்

சாருவின் பரிந்துரையால் நந்தலாலா பார்த்தேன்.

//முக்கியமாக, அகியின் பாட்டி.அகி பள்ளிக்கூடத்திலிருந்து வரும்வரை அவள் கழிப்பறைக்குச் செல்லாமல் அவனுக்காகக் காத்திருக்கிறாள்.//

என்ன கொடுமை சாரு இது.பேரன் வந்தால் தான் கழிப்பறைக்கு போக வேண்டும் என்பதில்லை.சிறுநீர் முட்டினாலும் போகலாம்.ஐந்து நாள் சுற்றுலா செல்லும் பேரன் வரும் பாட்டி கழிப்பறை போகாமலே காத்திருப்பாளா. சொடக்கு எடுத்து விடவே வேலைக்காரியிடம் காசு தரும் பேரன் மற்ற விஷயங்களை சொல்லவில்லை.காரணம் அதை சொல்லாமலே செய்வாள் என்று. மிஷ்கின் பாசம் கண்ணை மறைக்குது. நியாயம் தான்.ஆனாலும் இந்த அளவுக்கு இருக்கக்கூடாது. சாதாரண காட்சி அது.இயக்குனரே மலைத்து போகும் அளவிற்கு குறியீடு வந்து மிஷ்கின் குறியீடு கிறுக்காக மாறினாலும் ஆச்சர்யமில்லை.

சாருவின் பரிந்துரையால் நந்தலாலா பார்த்தேன்.இதை தமிழின் முதல் படம் என்கிறார்கள் விபரம் தெரியாதவர்கள்.இதை உலகின் முதல் படம் என்று சொன்னால் தான் மனம் ஆறும். தமிழின் முதல் படம் என்று சொல்லி புண்படுத்தி விட்டார்கள். நீங்கள் சாதாரணமாக வைத்த காட்சி கூட சதா ரணமாக மாறி நந்தலாலாவே சரணம் என்று சொல்லும்படி ஆகி விட்டது.

ஸ்னிக்தா பேசும் அந்த ஐந்து நிமிட வாழ்க்கை வரலாறில் உங்களுடைய முந்தைய இரண்டு படமும் குறியீடுகளாக மறைந்து கிடக்கிறது என்ற நீங்கள் அறியாத உண்மையை நான் இன்று தான் கண்டுப்பிடித்தேன். ஒரு கார் டிரைவரை நம்பி ஏமாந்த கதையை சொல்லும் போது கண் விழித்து பார்த்தால் புது இடம்.அங்கே புது சரக்கு மூன்று நாளில் முப்பத்தாறு பேர் வந்ததாக சொல்வாள். அதில் ஒருவராக சித்திரம் பேசுதடி படத்தில் வந்த பாவனாவின் அப்பாவும் இருந்திருக்கலாம்.போலீஸ் ரைடின் போது அவருக்கு பதில் நரேன் மாட்டிக் கொள்கிறார்.அதில் அவர் எந்த பெண்ணிடம் போனார் என்று நீங்கள் காட்டாமல் விட்ட உங்கள் புத்திசாலித்தனத்தை எப்படி மெச்சுவது என்றே தெரியாமல் மெச்ச முடியாமலிருக்கிறேன்.

அடுத்து கிழவன் அவளை கடத்த முயல்வதற்கு ஒரு காரணம் சொல்லி அவன் துரத்துவதால் அங்கு இருந்து தப்பி வந்து விட்டேன் என்று கூறுவாள்.எப்படி தப்பி வந்திருக்க முடியும் என்று யோசித்து பார்த்தேன். அப்போது தான் உங்கள் அஞ்சாதே படம் ஞாபகம் வந்தது.கத்தால கண்ணாலே என்று தொடங்கும் பாடலில் ஆடும் பெண்ணிற்கு இதே மாதிரியிருந்த முகச்சாயலை வைத்து தான் கண்டுப்பிடித்தேன். பாடலின் முடிவில் பாண்டியராஜன் கொல்லப்படும் போது ஏற்படும் களேபரத்தில் அவள் தப்பியிருப்பாள் என்று கண்டுப்பிடித்தேன்.இப்படி உங்களின் முந்தைய படத்திற்கே தொடர்பு இருக்கும் போது ஜப்பானிய படத்திற்கு தொடர்பு இருக்காதா என்ன.

முந்தைய படங்களில் இருந்த கறையை இந்த படத்தில் நீக்குவதாக காட்டும் போது அகலிகையை சாபத்திலிருந்த மீட்ட ராமன் நினைவுக்கு வந்தார்.நீங்கள் ராமனாக இருப்பதால் தான் டிராக்டர் ஓட்டிய அந்த சீதாவை தேடிக் கொண்டு பலூன் விற்பதாக வைத்திருந்த குறியீடு இன்னும் சொல்லாமல் எனக்கு பல கதையை சொல்லியது.

இப்படி எல்லாம் யோசித்து மற்றவர்களையும் யோசிக்க வைத்து சேர்த்த பாவத்தை கழுவ வேண்டும் என்று நினைத்து இரண்டு நாட்கள் ரூம் போட்டு அழ வேண்டும் என்று பக்கத்திலிருந்த தீவிற்கு சென்றேன். அவன் சொன்ன இரண்டு நாள் வாடகை என் பத்து நாள் முருகன் டாலர்கள் என்பதால் அந்த தீட்டத்தைத் தள்ளி வைத்து விட்டு குறியீடு கண்டுப்பிடிக்க கிளம்பி விட்டேன்.

Wednesday, December 8, 2010

கிருஷ்ண உபதேசம் ஆஃப்டர் ராமராஜ நந்தலாலா

நந்தலாலா - ராமராஜன் படங்கள் பொருத்திப் பார்த்தப்பின் நடு பகலில் தூக்கத்திலிருந்து ஸ்கைப்பில் எழுப்பிய நண்பன் நீ மட்டும் ஏன் இப்படி இருக்கிற.ஒழுங்காவே எதையுமே உனக்கு சொல்ல வராதா. எனக்காக எல்லா முகமூடிகளையும் கழற்றி வைத்து விட்டு சாதாரணமாக ஒரு முறை விமர்சனம் செய்ய வேண்டும் என்று சொல்ல. 

எனக்காக - இந்த வார்த்தைகளின் மீது எனக்கு நம்பிக்கையேயில்லை என்று அவனிடம் சொல்ல முடியுமா.எனக்காக செய் என்று யாராவது சொன்னால் கொலைவெறி வந்து விடுகிறது.அப்படியென்ன அடுத்தவன் சுயத்தைப் பாதிக்கும் அளவிற்கு அவன் மீது அன்பு,பாசம். எனக்கு எந்த நேரத்தில் எப்படி தோன்றுகிறதோ அப்படித்தான் செய்வேன் என்று சொல்ல ஆசை தான்.இனியும் அப்படித்தான்.பத்து வருட நட்பை ஒரே நாளில் உடைக்க மனசு வரவில்லை. 

அப்படி சொல்லாமல் இந்த கதையை சொல்லி வைத்தேன்.

கிருஷ்ணரிடம் தர்மன் சொன்னானாம் - "என்ன இந்த ஊரில் எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்கள்.." துரியோதனன் சொன்னானாம் - "என்ன இந்த ஊரில் எல்லோருமே கெட்டவர்களாக இருக்கிறார்கள்..". எனக்கு நல்லவர்கள்,கெட்டவர்கள் என்று பிரித்து பார்க்கத் தெரியாது.ஆனால் அவனிடமிருந்த பதற்றம் தான்(அரியணை போய் விடுமே) அவன் கண்ணுக்கு அப்படி தெரிந்திருக்கிறது.

என்னை பொருத்தவரை நல்லவன் என்றால் இதுவரை சந்தர்ப்பம் கிடைக்காத கெட்டவன் என்று வைத்து கொள்வோம்.கெட்டவன் என்றால் சந்தர்ப்பம் கிடைத்த நல்லவன் என்றும் சொல்லலாம். தர்மருக்கு ஒரு அப்படி வாய்ப்பு வருகிறது.பதினைந்தாவது நாள் போர்.துரோணரைக் கொன்றே ஆக வேண்டிய கட்டாயம்.பீமன் அசுவாத்தாமா என்று யானையை கொன்று விட்டு அசுவாத்தாமாவை கொன்று விட்டேன் என்று கத்துகிறான்.துரோணர் நம்பாமல் தர்மனிடம் கேட்ட அவன் பூடகமாக "பீமன் கொன்றது அசுவாத்தாமா.." என்று இடைவெளி விட்டு "என்ற யானையை.." என்று மெதுவாக சொல்கிறான்.அப்படி சொன்னது துரோணர் காதில் விழாமலிருக்க கிருஷ்ணர் சங்கெடுத்து ஊதுகிறார். துரோணர் ஆயுதங்களை கீழே போட,இதற்கென்றே பிறந்த துருபதனின் மகன் துரோணரை சாய்க்கிறான்.அது வரை நிலத்தில் படாமல் இரண்டு அங்குலம் மேலே ஓடிய தேர் நிலத்தில் இறங்கிறது.

தர்மனுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வேணுமா நீயும் பதிவு எழுது. நந்தாலாலா அருமை என்று சொல்லு.நான் ஒரு கேள்வி கேக்குறேனான்னு பாரு.அப்புறம் சொல்லு.  அப்படி தர்மருக்கு நல்லவனாக தெரிந்தவர்கள் எனக்கு நந்தலாலா பார்க்கும் போது ராமராஜன் தெரிந்தார். ஆணாதிக்கம் தெரிந்தால் என்ன அர்த்தம் என்று கேட்டால் அதை நான் சொல்லாமல் சாய்ஸில் விடுகிறேன். 

கிருஷ்ணனிடம் பதினைந்தாம் நாள் போருக்குப்பின் தர்மன் கோபப்படுகிறான்."என்னையும் இதற்கு உடந்தை ஆக்கி விட்டாயே என்று.." கிருஷ்ணன் சொல்கிறான் - "அப்படியென்றால் நீ சண்டைக்கே வந்திருக்கக்கூடாது..எனக்கு வெற்றியோ,தோல்வியோ முக்கியமில்லை.என்னால் துரியோதனன் இறந்தாலும் நீ அரியணை ஏறினாலும் எனக்கு பிரச்சனையில்லை.எனக்கு நான் எப்படி யுத்தத்தை எப்படி நடத்துகிறேன் என்பது தான் முக்கியம்.எனக்கு இதனால் ஒரு பலனும் இல்லாவிட்டாலும் நாளை யுத்தத்தில் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதற்கு நானே உதாரணமாகயிருப்பேன்.."

"ஏன் இப்படி செய்கிறாய்.."

"தர்மா..உனக்கு உன் தேர் தரையில் இறங்கியது தான் பிரச்சனை.இதனால் நீ நரகத்தைப் பார்த்து விட்டு வருவாய்..பிம்பம் உடைந்ததால் நீ வருந்துகிறாய்.பீஷ்மர் சாய்க்கப்பட்ட சமயம் நீ இப்படி கதறவில்லையே..எனக்கு பிம்பமே ஏற்படுத்தாமல் இருப்பதால் நான் நானாகவே இருக்கிறேன்.. பதினெழாம் நாள் கர்ணனை சாய்க்க வேண்டும்.நீ போய் தூங்கு.." என்று அர்ஜூனன் இருக்கிமிடத்திற்கு நகர்கிறான்.

"கிருஷ்ணன் என்ன சொன்னாலும் கேள்வியே கேட்காத அர்ஜூனனாகத் தான் உன்னிடமிருக்கிறேன். நீ தர்மனாக மாறி அப்படி செய் இப்படி செய் என்று சொல்லி எனக்குளிருக்கும் கிருஷ்ணனை எழுப்பாதே.." என்று சொல்லி விட்டு பகல் தூக்கத்தைத் தொடர்ந்தேன்.

Sunday, December 5, 2010

ரத்த தரித்திரம்

கம்பெனி,ஒன்ஸ் அபான் அ டைம் இன் இந்தியா(ராம் கோபால் வர்மா இயக்கவில்லை) - இந்த மாதிரி அரைச்ச மாவையே அரைச்சி அரைவேக்காடாக தருவதை என்று தான் நிறுத்தப் போகிறாரோ தெரியவில்லை.

ஒரே பாணியிலான டெம்பிளேட் கதையில் இரு நாயகர்கள்.இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டும் வேலை பார்த்துக் கொண்டும் தம்தமது காதலியோடும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.ஈகோ பிரச்சனையாலும், பழி வாங்குதலாலும் இருவரின் தந்தையும் கொல்லப்படுகிறார்கள்.  அதை தொடர்ந்த பழி வாங்குதல் கதையை தான் காதில் பூ சுற்றுகிறார்கள்.

முதல் பாகத்தை தமிழுக்காக இருபது நிமிடங்களாக குறைத்திருக்கிறார்கள். அதில் தான் எத்தனை குழப்பங்கள். எடிட்டிங்,ஒளிப்பதிவு,இசை,பாடல்கள்,கதை சொல்லி கௌதம் மேனன் என்று முடிந்த வரை பாடாய் படுத்துகிறார்கள்.புரிகிற கதையில் இந்த கௌதம் மேனன் கதை சொல்லியாய் எதுக்கு அதை இன்னொரு முறை சொல்கிறார் என்று தெரியவில்லை.ரொம்ப வெட்டியா இருக்கார் போல. பழி வாங்குவது பரிசுத்தமானது என்ற மகாபாரத கேப்ஷனையே அசிங்கப்படுத்திட்டேங்களே பாவிகளா.

ராம் கோபால் வர்மா நீங்க பேசாம நித்யானந்தா கதையை எடுக்க போறீங்க தானே அதை எடுங்க. தமிழ்ல வசனம் எழுத கூட ஆள் நாங்களே தர்றோம்.அதை விட்டுப் போட்டு இப்படியா துரத்தி துரத்தி படம் பாக்குறவனை சாத்து சாத்துன்னு சாத்துறது.

மகாபாரதத்தில் வரும் பீஷ்மர் கதாபாத்திரம் மாதிரியே விவேக் ஒபராய் அணியில் ஒருவர். இப்படி எல்லாம் மகாபாரதத்தை ஞாபகப்படுத்தினாலும் கதை என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ககிட்டி,ஆஷிஸ் வித்யார்த்தி,கோட்டா சீனிவாசராவ்,சுதீப்,அபிமன்யூ சிங், சத்ருகன் சின்கா என்று பெரும் தலைகளை எல்லாம் வைத்து அணிவகுப்பு நடத்தியிருக்கிறார்கள்.

அரசியலில் இறங்கியப்பின் பழிவாங்குதலை தற்காலிகமாக நிறுத்தும் விவேக் ஒபராயை சூர்யா சுட்டுக் கொன்று விட்டு அவர் அரசியலில் இறங்குகிறார். கதையில் எத்தனை வருடத்தில் இந்த கொலைகள் நடக்கிறது என்று குழப்பமாகவே உள்ளது.ராதிகாவை விட்டு விட்டு வரும் விவேக் ஒபராய் அரசியலில் இறங்கும் முன் புதிதாக குடி வரும் வீட்டில் ராதிகா இருக்கிறார்.ஆனால் சாகும் போது கைக்குழந்தை தானிருக்கிறது.பிரியா மணி கையில் இருந்த குழந்தையை வாங்கி தந்திருப்பார்கள் போல.

குழந்தை பழி வாங்கும் என்று சிம்பாலிக்காக காட்டுகிறார்கள் போல.இதை தான் கிழக்கு கரை படத்தில் பி.வாசு குழந்தை கையில் துப்பாக்கியைக் கொடுத்து இனி கிழக்கு கரை இவன் கையில் என்று சொல்லி இயக்கம் பி.வாசு என்று போட்டது ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.பர்ஸ்ட் பார்ட் பார்த்ததுமே பொத்திக்கிட்டு இருக்க வேண்டியது தானே என்று கனவில் ராம்கோபால்வர்மா வந்து சொல்வார் என்று நினைக்கிறேன்.வரட்டும் ஏ காவ் மே இந்தியைப் பேசி விட வேண்டியது தான்.

Saturday, December 4, 2010

நந்தலாலா - ராமராஜனின் டவுசரின் நீட்சி

டிசம்பர் வந்தாலே கர்னாடக சங்கீதம் களைக் கட்டுவது போல நான் ராமராஜனை ஒரு கட்டு கட்டுவது ஒரு வழக்கம்.ராமராஜன் படத்தில் நாயகன் மிகவும் நல்லவனாகயிருப்பான்.பெண்களுக்கு ஆபத்து என்றால் பொங்குவான் போன்ற டெம்ப்ளேட்டினால் காலியான ஒரு நடிகர் அவர்.இந்த டெம்ப்ளேட்டையும், அம்மாவை பார்த்தால் கேள்வி கேட்க வேண்டும் என்ற மணிரத்னம் பாணி சினிமாவையும்(தளபதி,கன்னத்தில் முத்தமிட்டால்) மக்களுக்கு ஞாபகப்படுத்தினால் போதும் ஒரு தமிழ்ப்படம் தயாராகி விடும். குறியீடுகளையும்,கேமரா கோணங்களையும்,கதையின் போக்கு வித்தியாசமாக வேண்டுமே இருக்கவே இருக்கிறது ஜப்பானிய,கொரிய சிந்தனைகள்.

அம்மாவிடம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு பதில்(மணிரத்னம் அது மாதிரி இரண்டு படம் எடுத்தார்) ஒருவனுக்கு முத்தம் வாங்க வேண்டும்,மற்றவனுக்கு ஒரு அறை கொடுக்க வேண்டும். கொடுக்கல்,வாங்கல்(நேரெதிர் சிந்தனை - இதுவும் குறியீடு தான்) சிந்தனையோடு இருவரும் ஒன்றாக பயணிப்பதே கதை.

இதில் கதாநாயகன் மிக மிக நல்லவன். பெண்களுக்கு ஆபத்தோ விபத்தோ நடக்கும் போது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் அதை எதிர்க்கும் அள்விற்கு புத்திசாலித்தனம் உடையவன். ஒரு பள்ளி மாணவி சைக்கிள் ஓட்டும் போது கீழே விழுகிறாள்.உடனே எச்சில் தொட்டு வைத்துக் கொள் என்று சொன்னதும் தொடர்ச்சியாக ஒரு பாட்டு.ராஜ்கிரண் பாணியிலான உப்புமூட்டை சுமக்கிறான்.கூழாங்கற்களைக் கொடுத்ததும் நெஞ்சில் செல்லமாக குத்தும் அசட்டுத்தனமும் உண்டு.கூழாங்கற்களுக்கு நான் குறியீடு சொல்லா விட்டால் நான் என்ன விமர்சகன்.நான் என்ன இலக்கில்லாவாதி.பொதுவாக நீர் ஓடிக் கொண்டேயிருக்கும் இடத்தில் மட்டும் தான் இந்த கற்கள் உருவாகும்.அது மாதிரி வாழ்க்கையில் நிறைய அடிப்பட்டால் நீயும் எல்லோரும் விரும்பும் கூழாங்கற்களாய் இருப்பாய் என்று மன நலம் பாதிக்கப்பட்ட மிஷ்கின் கதாபாத்திரம் சொல்கிறது.(உஸ் முடியல). அடுத்து புதுமணத் தம்பதிகள்.அவர்களை கேலி செய்பவர்களில் ஒருவனை பாட்டிலால் அடிக்கும் அளவிற்கு பெண்களுக்காக போராடுபவன்.அடுத்து கற்பழிப்பு மற்றும் கடத்தலில் சிக்கிக் கொள்ளும் பெண்களையும் காப்பாற்றுகிறான். இன்னும் ஒரு கிழவி தான் மிச்சம்.அதையும் செய்து கன்னத்தோடு கன்னம் வைத்தால் அடுத்த முதல்வர் மிஷ்கின் வாழ்க என்று நானே கோஷம் போடுவேன். ராமராஜன் படத்தில் ராமராஜனை ஒரு தலை பட்சமாக விரும்பும் பெண்ணை வில்லன் கெடுத்து விடுவான்.உடனே ராமராஜன் பொங்கி எழுந்து "தங்கச்சி" அவனை உனக்கு கட்டி வைக்காமல் ஒய மாட்டேன் என்று கிளம்பி விடுவார்.இதையே ரஜினிகாந்தும் செய்திருக்கிறார்.இங்கு விபச்சாரம் செய்யும் ஸ்னிக்தாவை அம்மா என்று சிறுவன் ஏற்றுக் கொள்கிறான். நம்ம நாயகன் பாஸ்கர் மணி என்ன செய்கிறான். அவன் புத்தி தெளிந்ததும் பேச மாட்டானா என்று ஏங்கும் ஸ்னிக்தாவைப் பார்த்து சிரித்து விட்டு எங்கே இன்னும்  கொஞ்ச நேரமிருந்தால் கல்யாணம் செய்யும் நிலை வந்து விடுமோ என்று ஓடுவது போல் இருக்கிறது பாஸ்கர் மணியின் பலூன் விற்கும் வேகம். இதுவே அந்த பள்ளி மாணவியை சந்தித்திருந்தால் - என்ன நடக்கும். எச்சில் வைத்தாயா என்று கேட்டே காதல் வந்திருக்குமோ என்னவோ.

சிறுவனின் அம்மா இன்னொரு கல்யாணம் செய்து கொண்டதற்கு அடிக்கும் மிஷ்கின் அவன் அப்பாவை ஒன்றும் செய்யவில்லையே என்ன ஒரு ஆணாதிக்கம் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அது ராமராஜன் போன்ற பெண்களுக்கு அறிவுரை சொல்வார்கள்.இதில் இவர் அடித்து விடுகிறார்.சரி போய் தொலையுது என்றாலும் மனசு கேட்க மாட்டேங்குதே.பைத்தியமாய் இருக்கும் அம்மாவிற்கு மொட்டை அடித்து குளிக்க வைத்து விடுதியில் சேர்க்கும் மிஷ்கினுக்கு இடுப்பில் இருக்கும் பேண்டை கட்ட தெரியாமல் போவது நல்ல நகைமுரண் தான்.

கூழாங்கற்கள்,மலைபாம்பு,வெள்ளை வீடுகள்,காலணிகளை மாற்றுவது எல்லாம் மிஷ்கின் மூளையில் உதித்திருக்கும் என்றால் நான் நம்பவே மாட்டேன்.நிறைய புத்தகங்களையும்,படத்தையும் பார்த்தாலே இந்த இழவு குறியீடுகளை வைத்து தொலைத்து விடலாம்.

இளையராஜாவிற்கு வருவோம். மிக பெரிய ஏமாற்றம்.ராமராஜனின் படத்தில் கூட இதை விட நல்ல பாடல்களிருக்கும்.நம் படைப்புகளைத் திருடினால் கதறும் மனசு அடுத்தவன் படைப்பைத் திருடினால் அறிவுஜீவி பட்டம் கொடுக்கிறது.பக்கத்து வீட்டில் எரியும் தீ நம் கூரைக்கு மாற எவ்வளவு நேரம் ஆகும். மிக திராபையான கிளிஷே காட்சிகளை எல்லாம் வைத்து நம் ஊருக்கு ஏற்றார் போல அடுத்தவனின் சிந்தனையைத் திருடும் கலையும்,அதற்கு ஆதரவாக ஒரு மூன்று இலக்கியவாதிகளுமிருந்தால் இழவு பேரரசு கூட அறிவுஜீவியாக மாறி விடலாம்.முக்கியமாக அவருக்குள் இருக்கும் நாயகன் கனவும் பலித்து விடும்.

ஜப்பானிய இயக்குனருக்கு நன்றி என்று போட்டு விட்டால் இந்த திருட்டு இல்லை என்று ஆகி விடாது. எதையுமே செய்யா விட்டாலும் பரவாயில்லை நான் அவர் கூட உட்கார்ந்து படம் பாக்கணும்,சில காட்சிகள் அப்படியே அவர் மாதிரியே எடுத்திருக்கிறேன் காரணம் அது தான் அவருக்கு செய்யும் கைமாறு விளக்குமாறு என்று பேசாமலே இருந்தாலே போதும்.அடுத்து உங்க யுத்தம் செய் மெமரிஸ் ஆப் மர்டஸ் என்ற கொரியன் படத்தின் காப்பியாமே.அந்த இயக்குனர் பக்கத்திலும் அமர்ந்து படம் பார்க்க உங்களுக்கு தோணும்.டிரிபியூட் செய்ய அப்படியே காட்சிகளை வைத்திருப்பீர்கள். பேசாமல் நன்றி என்று போட்டு விடுங்கள்.இன்னும் உங்கள் சார்பாக இன்னும் சிலர் வரலாம்.

மிஷ்கின் திறமையாக திருடுவது எப்படி,மாட்டிக் கொண்டால் எப்படி பேசுவது என்று உங்கள் உதவி இயக்குனர்களுக்கும் சொல்லி கொடுங்கள்.பாருங்க உங்க முன்னாள் உதவி இயக்குனர் பேங்க் ஜாப் படத்தை நாணயம்(பெயரை பாருங்கையா) என்று எடுத்து பப்படம் கொடுத்து விட்டார்.அதனால் உங்களை மாதிரி நேர்மையாக திருட சொல்லித்தாருங்கள்.

Sunday, November 28, 2010

நொந்தலாலா - உயிர்மையில் வரவே வராத கட்டுரை

நந்தலாலா பற்றி வந்த எல்லா விமர்சனங்களையும் படித்து விட்டேன்.இன்னொரு முறை அழுத்தம் திருத்தமாக இரண்டு மணி நேரம் ஓடிய கிகுஜிரோ படத்தை இரண்டரை மணி நேரம் பின்னால் முன்னால் நகர்த்தி பார்த்து வேண்டிய மட்டும் குறியீடுகளைக் குறித்து கொண்டேன். விமர்சனங்களை வைத்து பார்த்தாலே நிறைய காட்சிகளை ஓப்பிட முடிகிறது.எண்பதுகளில் மணிரத்னம் செய்ததை மிக லாவகமாக மிஷ்கின் செய்கிறார்.(எப்படி என்றால் இரண்டு மூன்று படத்தை பிராய்ந்து எடுத்து திறம்பட ஒட்ட வைக்கும் நேர்த்தியால் நாயகன் டைம்ஸ் பத்திரிக்கை முதல் நூறு சிறந்த படங்களில் ஒன்றாக வந்தது.) ஆப்பிரிக்காவில் பெண்கள் லுங்கி அணியார்கள்,வீடு உயரத்திலிருக்கும் அது எப்படி யோகியில் வந்தது என்று கேள்வி மேல் கேள்வி வைத்த சாரு இதை கொண்டாடுகிறார். கிகுஜிரோ படத்தில் தலையில் இலைகளைத் தொப்பியாக இருந்தது நந்தலாலாவில் கையில் பனையோலையாக வைத்திருப்பது போல மாற்றி விட்டால் உலகத்தில் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக ஆகி விடுமா.


 அமீரிடம் சாரு வைத்த கேள்வியையே(பருத்தி வீரனை அப்படியே வங்காள மொழியில் சுட்டு எடுத்து விட்டு இயக்கம் சாரு என்று போட்டால் விடுவீர்களா) திரும்ப சாருவிற்கு வைக்கலாம்.ஜீரோ டிகிரியை கொஞ்சம் நகாசு வேலை பார்த்து எழுதியவர் மிஷ்கின் என்று போட்டால் விட்டு விட முடியுமா. கடைசி காட்சியில் மிஷ்கினின் கதாபாத்திரத்தின் பெயர் தெரிகிறதாம்.பார் யூவர் கைண்ட் இன்பர்மேஷன்,லோஷன், மோஷன் ஜப்பானிய படத்திலும் கடைசியில் தான் தெரிகிறது.இன்னும் பிற ஒற்றுமைகள்

1.டேட்டிங் போகும் ஜோடி - நந்தலாலாவில் தேனிலவிற்கு போகும் ஜோடி.(லிவிங் டூ கெதர் என்று சொன்னாலே தமிழகத்தில் போராளியாக மாறி விடுவார்களே.அதனால் இதிலும் நேட்டிவிட்டி.

2.லாரிக்காரனுடன் சண்டை இதில் கிகுஜிரோ ஜெயிக்கிறார் - அதில் லாரி டிரைவர் மிஷ்கின் பற்றி உண்மையை அறிந்து கொள்கிறார்.

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

பழங்காலத்திலிருந்தே தாசியின் மீது நமக்கு அடங்காத ஆர்வமிருக்கிறது.மாறி வரும் தமிழ்ச்சமூகத்தால் சமீப காலமாக வந்த திரைப்படங்களில் நாயகியை அப்படி ஒரு கதாபாத்திரங்களில் பார்த்தால் அது சொல்லப்படாத ஈர்ப்பாக மாறுகிறதோ என்ற எண்ணம் வராமலில்லை.வேதம் படத்தில் அனுஷ்கா ஏற்றுக் கொண்ட வேடமது.தப்புத்தாளங்களில் சரிதா,அரங்கேற்றம் படத்தில் பிரமீளா என்று பாலசந்தர் ஆடி முடித்த எழுபதுகளின் ஆட்டம் திரும்ப ஒரு சுற்று வருகிறது.

பையனின் அம்மாவை தேடி சென்று அவளுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதை அறியுமிடம் தான் கிகுஜிரோ படத்தில் இடைவேளை.அதை மிஷ்கின் ஆர்டர் மாற்றி இறுதி காட்சிக்கு பக்கத்தில் வைத்திருப்பார். ஜப்பானிய படத்தில் ஹோமில் இருக்கும் அம்மாவை நந்தலாலாவில் மிஷ்கின் கொண்டு ஹோமில் சேர்த்தால் அது அட்டக்காப்பியில் இருந்து தழுவல் என்று ஆகி விடும் ஆக்கி விடுவார்கள் போல.

அமீர் சாருவின் புத்தகம் வெளியிடும் போது நான் புத்தகமே படிப்பதில்லை என்று சொன்னார்.அவரும் மிஷ்கின் போல லத்தீன் அமெரிக்க புத்தங்களைப் படித்திருந்தால் யோகியை சரியாக தமிழ்ப்படுத்தியிருப்பார்.அவருக்கும் ஒரு அம்பாஸிடர் கார் கிடைத்திருக்கும்.

நந்தலாலா விமர்சனமே இப்ப தான் வருதாம்.வெரி ஸ்லோ.நான் யுத்தம் செய் பார்த்துட்டேன்.திருட்டு என்பது அடுத்தவன் கற்பனையைத் திருடுவதும் தான்.என்றாவது யாராவது எழுதிய மாஸ்டர் பீஸ் கதையை நான் திருடி கொஞ்சம் மாற்றி எழுதி பெயர் வாங்கினால் யாரும் வந்து கேக்காதீங்க.நானும் அடிச்சி விடுவேன்.என் அண்ணன் வாழ்க்கையில் நடந்தது என்று.மிஷ்கினுக்கு மட்டும் தான் அண்ணன் இருக்கிறாரா என்ன.

நவம்பர் பதினைந்தாம் தேதி எழுதியது.

ஒரிஜினல் யுத்தம் செய் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.இதை பார்த்து விட்டு நான் பார்த்த திரில்லர்களிலேயே முதல் ஆயிரம் படத்தில் இதுவும் ஒன்று என்று சாரு சொல்லலாம்.மூலத்தில் (இருபத்தியொரு வயதில் துணை இயக்குனருக்கு மூலம் வந்தால் இப்படு உட்கார்ந்து யோசிப்பானா என்று மிஷ்கின் அடுத்து தரப் போகும் பேட்டியில் சொல்லலாம்.ஏற்கனவே வேட்டி கழன்று விட்டது.அது மாதிரி நிலை எனக்கு வரணுமா.அதனால் தெளிவாக) மூலப்படத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகளுமே ஆண்கள். இதில் சேரனுக்கு துணையாக தீபா என்ற புதுமுகம் தான் பெண் போலீஸ் அதிகாரி.வில்லன் கடைசி வரை பிடிபடவில்லை. மிஷ்கின் அந்த குழந்தையே நீங்க தான் என்பது போல சக போலீஸ் அதிகாரி தான் அந்த வில்லன் என்று சொல்லலாம்.ஏன் சக என்று சொல்ல வேண்டும் சேரன் தான் அந்த வில்லன் என்று சொல்லலாம். நாமும் ஆகா இதுக்கு ஆஸ்கார் கிடைக்காதா ஆம்பாஸிடர் கார் கிடைக்காதா என்று மூச்சுத் திணற திணற அசராமல் பேசுவோம்.

இன்னும் மிச்சமிருக்கிறது.ஸ்டே டியூண்ட்.

Monday, November 22, 2010

பழைய கணக்கு

மிஷ்கின் - அமீர் ஆப்பிரிக்கப் படத்தைத் தழுவி எடுத்தார்.இவர் மட்டும் ஜப்பானிய படமான கிகுஜிரோ தழுவாமலா எடுத்து இருக்கிறார்.அமீரின் திருட்டு என்று வெளுத்து எடுத்து இருக்கிறார்.லுங்கியைக் கூட சரியாக கவனித்து இருக்கிறார்(ஞானி "பாசம்").ஆனால் மிஷ்கினை ஒன்றுமே சொல்லவில்லை.

அஞ்சாதே வெளியான சமயத்தில் மிஷ்கினின் பேட்டியில் இருந்து சில வரிகள் - "சித்திரம் பேசுதடி படம் முடிந்தப் பிறகு எனக்கு அடுத்தப் படம் கிடைக்க ஒரு வருடம் ஆனது.அந்த கோபத்தில் நான் முதலில் எடுத்த காட்சி படத்தின் க்ளைமேக்ஸான கறும்பு காட்டில் எடுத்த காட்சிகள் தான்.

ஏற்கனவே அஞ்சாதே படம் பார்த்து வாயை பிளந்து இருந்ததால் அவர் மேல் ஒரு மரியாதையைக் கூட்டியது இந்த பேட்டி.சுப்ரமணியபுரம் படத்தை விட இது சிறந்த படம் என்று இன்று வரை சொல்லி வருகிறேன்.இப்படி படம் கிடைக்காத சமயம் - போராடும் குணமும்.படம் கிடைத்தப் பிறகு அடுத்தவன் கற்பனைத் திருடும் இல்லை தழுவும் குணமும் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.

சமீபத்தில் ஆனந்த விகடன் படித்தப் போது அவர் சொன்ன பதில்கள் அவர் மேலிருந்த மரியாதையை முற்றிலும் குறைத்து விட்டது.

ரசிக்கும் எதிரி - ஜப்பானிய இயக்குனர் கிடானோ.(யார் என்று பார்த்தால் கிகுஜிரோ படத்தின் இயக்குனர்).அவரோடு சேர்ந்து நந்தலாலா பார்க்க வேண்டும் என்பது தான் ஆசை என்று சொல்லியிருக்கிறார்.

என் ஆசையும் அதேதான்.அவருடன் பார்த்தால் அவர் இப்படித்தான் சொல்வார் - இந்த படத்திற்கு நந்தலாலா என்ற பெயரை விட கிகுஜிரோ தான் பொறுத்தமாக இருக்கும்.(கண்ணதாசன் பரிசளிக்கப் போன கவிதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கவிதை அவர் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.காரணம் அது அவருடைய கவிதை.முயலுக்கு மூன்று கால் என்று தலைப்பு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அந்த நபரிடம் சொன்னாராம்.)

அடுத்த கேள்வி யாருக்கும் இதுவரை தெரியாத உண்மை - நந்தலாலா படம் என் சொந்த வாழ்வின் பதிப்பே என்று அளந்து விட்டது.

திருடுங்க,தழுவுங்க தப்பேயில்லை - ஒரு டைட்டில் கார்டு போட்டு சொல்லுங்கள்.அதுதான் உண்மையான படைப்பாளிக்கு கொடுக்கும் மரியாதை.

கிகுஜிரோவின் கதை - ஒரு சிறுவன் கோடை விடுமுறையில் தாயைத் தேடி செல்லும் கதை.துணைக்கு ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட முதியவன்.

நந்தலாலாவின் கதை - முதியவனுக்கு பதில் வாலிபன் என்று போடுங்கள்.அட என்ன மாற்றம்.

எழுத்து என்பது எழுத்தாளனின் இரத்தம் என்று சொல்லும் மிஷ்கின் கிகுஜிரோ படம் என்ன ஜப்பானிய இயக்குனரின் கழிவா.(இரத்தம் நமக்கு போனால் தான் இரத்தம்.மற்றவனின் முகத்தில் வழிந்தால் அது தக்காளி சாஸ் போல.)

உங்களுக்காக இரண்டு படங்களின் புகைப்படங்கள்.



அட ஜப்பான் படத்தில் சிறுவன் வலதுப்பக்கம் நிற்கிறான்.நந்தலாலாவில் இடதுப்பக்கம் நிற்கிறான்.(யோவ் விளக்கெண்ண..நம்ம ஊர்ல கீப் லெப்ட்.)

அட ஜப்பான் படத்தில் பேண்ட் இடுப்பில் நிற்கிறது.நந்தலாலாவில் இடுப்பில் நிற்கவில்லை கையில் பிடித்திருக்கிறார்.

அட ஜப்பான் படத்தில் நாயகனின் முகம் பார்க்கிறான்.நந்தலாலாவில் திரும்பி நம்மை பார்க்கிறான்.

அட ஜப்பான் படத்தில் வெட்டவெளி.நந்தலாலாவில் ஒரு மரம் இருக்கிறது.

அட ஜப்பான் படம் வண்ணத்தில் இருக்கிறது(புகைப்படம்).நந்தலாலாவில் கறுப்பு வெள்ளையில் இருக்கிறது.(ஒவியம்).

ஆறு வித்தியாசம் கண்டுப்பிடிச்சி சொல்லாமல் இருந்தால் குமுதம் நடுப்பக்கம் என் கனவில் வராதே.

அட ஜப்பான் படம் வெளிவந்து விட்டது.நந்தலாலா இன்னும் வரவில்லை.சரி இது வேண்டாமா அது ஜப்பான்.இது தமிழ்.இதுவும் சரியில்லையா இளையராஜாவின் பெயர் மிஷ்கின் பெயருக்கு முன்னால் வருகிறது.

ஒரு புகைப்படத்தில் இவ்வளவு வித்தியாசம் காட்டும் மிஷ்கின் படத்தில் எவ்வளவு காட்டியிருப்பார்.காப்பி அடிப்பவன் அதிக மார்க் வாங்குவது தான் உலக நியதி.அவன் சரக்கையும் சேர்த்து விடுவான்.அதற்காக காப்பி அடிக்கவில்லை என்று அர்த்தமா.

இளையராஜா - சீனிகம் படத்தின் தரத்தையும்,நான் கடவுள் படத்தின் தரத்தையும் இளையராஜா இசை தான் குறைத்து விட்டது என்று சாரு சொல்லியிருக்கிறார்.

இசைக்கு இளையராஜாவை குற்றம் சொல்வதில் எனக்கு உடன்பாடே கிடையாது.காரணம் அவரிடம் சேர்ந்து பணியாற்றும் இயக்குனரை தான் குறை சொல்ல முடியும்.

இளையராஜாவால் தான் என்னால் இந்தி பேசும் மக்களைப் பகடி செய்ய முடிந்தது.சீனிகம் பாடல்களை எல்லோரும் விரும்பி கேட்டப் போது நான் சொன்னேன்.இதெல்லாம் நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்னால் கேட்டது என்று நக்கல் செய்ய முடிந்தது.

நான் கடவுள் பாடல்களை விட,பா படத்தின் பாடல்களை விட நந்தலாலா படத்தின் பாடல்கள் தரம் குறைந்தது தான்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான சாபக்கேடு - லூசு பசங்க பாடும் போது மட்டும் கருத்துள்ள பாடல்கள் பாடுகிறார்கள்.

"தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்..
தாய் உன்னை காண தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்.."

இப்படி ஒரு பாட்டு இளையராஜாவின் குரலில்.

நான் என் அம்மாவை வருடத்தில் இருபது நாள் தான் பார்க்கிறேன்.பார்த்ததும் இப்படி பாடல் பாட நான் ஒரு லூஸாக மாறத் தயார்.

என்னை கவர்ந்த ஒரே பாட்டு - நரிக் குறவர்கள் பாடல்.

மிஷ்கின் படம் என்பதால் இசை உலகத்தரமாகி விடாது.

இருந்தாலும் இந்தப் படத்தை நான் பார்க்க விரும்பும் காரணங்கள்.

ட்ரைலர் ஜோசியம் - அந்த பையன் மிஷ்கினை விட நன்றாக நடித்து இருக்கிறான்.அப்ப மிஷ்கின் - அமீரை விட நன்றாக நடித்து இருக்கிறார்.

கடைசி இருபது நிமிடங்கள் - வசனம் கிடையாது பிண்ணனி இசை மட்டும் தான்.

ரோகினி - மொட்டை அடித்துக் கொண்டு மிஷ்கினின் தாயாக நடித்து இருக்கிறார்.(இது மிஷ்கினின் இடைச்செருகலாக இருக்கும் என்பது சர்வ நிச்சயம்.)

இளையராஜா காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் கொடுத்தார் என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது பாரதிராஜா,பாலு மகேந்திரா மற்றும் மணிரத்னம் தான்.அப்படி நந்தலாலா பாடல்கள் நிற்காது என்பது மட்டும் உறுதி.

Tuesday, November 16, 2010

பேக் டிராக்கிங்

லேப்டாப் பேக்கை காணவில்லை.பாஸ்போர்ட்,விசா போயிருந்தாலும் பரவாயில்லை. ஆபிஸ் லேப்டாப் போய் விட்டது.அதை நினைத்தால் இன்னொரு பெக் அடிக்கலாமா என்று யோசித்தேன். பல கோடி மதிப்புள்ள பிராஜக்ட் போன மாதிரி பில்டப் குடுப்பானுங்க.இத்துப் போன லேப்டாப் போனதற்கு இவ்வளவு கேர்லெஸ்ஸா இருக்கீங்களே உங்களால எப்படி ஒரு டீமை லீட் பண்ண முடியும்னு சரியா அங்கேயே ஆப்பு வைப்பாங்க.இருந்தாலும் இவ்வளவு குடித்திருக்கக்கூடாது.எல்லாம் அவளால வந்தது. யாரா சரியா போச்சு.எல்லாரும் சேர்ந்து என் தலையிலே கட்டி வைச்சாங்களே அந்த ராட்சஸி தான் காரணம்.

ஏதோ என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ஆபிஸ்ல பார்ட்டி.எனக்கு பிரமோஷன் கிடைக்கும்னு சொன்னாங்க. வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல வாயிலே ஊத்திட்டாங்க.இதை இவக்கிட்ட சொன்னா ஆமா இவரு பச்சமண்ணு பீடிங் பாட்டில்ல ஊத்தி வாயிலே வைச்சுட்டாங்கன்னு என்னைத் திட்டுறா. இதுக்கும் கொஞ்சம் தாங்க அடிச்சிருந்தேன். அதுவும் வாரத்துக்கு ரெண்டு நாள் அடிச்சிக்கலாம்னு இவ தான் சொன்னா.இப்போ இவளே மீறினா எப்படி.கண்ணம்மா அப்படின்னு கொஞ்சினா கம்முன்னு கிடன்னு சொல்றா.கண்ணாம்மான்னு கெஞ்சினா கம்முன்னா கம்மு கம்முனாட்டு கோன்னு சொல்வா. நான் என்ன இவ வைச்ச ஆளா வர்றதுக்கும் போறதுக்கும். இதுக்கெல்லாம் காரணம் என் அப்பா அம்மா தான். போன் போட்டு இரண்டு ஏறு ஏறலாம்னு பாத்தா ஏண்டா நீ தானே அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க அடம் பிடிச்சேன்னு சொல்றாங்க.நான் எப்போ சொன்னேன்.இருங்க தண்ணியடிக்கிறதுக்கு முன்னாடி பார்சல் வாங்க இந்த கடைக்கு தான் வந்தேன்.கேட்டா அப்படி எதுவும் இல்லையேன்னு சொல்றான். தண்ணியடிச்சா எல்லாத்துக்கும் இளக்காரமா போச்சு.

சரி லேப்டாப் பேக் போய் தொலையுது.கல்யாணம் பண்ணிக்கிட்டா பர்த்டே விஷ் பண்ணலை,பிறந்த நாளுக்கு கோயிலுக்கு வரலன்னு எல்லாம் சண்டைக்கு வரக்கூடாதுன்னு சொல்லி தான் கல்யாணம் பண்ணினேன்னு நினைக்கிறேன்.அதுவும் சரியா ஞாபகமில்லை.ஆ வந்துரிச்சி. அவ கூட சண்டை போட்டுட்டு பிரபு கூட தான் அவன் கார்ல தண்ணியடிக்க வந்தேன்.அவன் கார்ல விட்டுப்பேன்னு போன் பண்ணினா மச்சான் ஏண்டா என் பொண்டாட்டி கூட சந்தோஷமாயிருந்தா பொறுக்காதா உனக்குன்னு சொல்றான். படுபாவி இதுக்குத்தான் என் கூட வந்து பெப்ஸி குடிச்சியா.ஏண்டான்னு கேட்டா விரதம்னு சொல்றான்.பேக் பத்தி கேட்டா நாளைக்கு சொல்றேன்னு சொல்வான்.

ஆங் எங்க விட்டேன்.பிறந்த நாள்,கல்யாண நாள் எல்லாம் மறந்துறக்கூடாதுன்னு தான் அவ பிறந்த அன்னிக்கே அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.தண்ணியடிச்சிட்டு போனா திட்டுவான்னு தான் நேரா பாத்ரூம் போனேன்.அங்க வந்து வழிய மறைச்சிக்கிட்டு நின்னா ஒருத்தனுக்கு எரிச்சல் வராதா. "இன்னைக்கு என்ன நாள்.." இப்படி சம்பந்தமேயில்லாம கேட்டா புதன் கிழமை அதுக்கு என்ன.. வாரத்துல இன்னைக்கு தண்ணியடிக்கலாம்னு நீயே பெர்மிஷன் குடுத்தே தானே.." இப்படி பதில் சொன்னா இதெல்லாம் நல்லா தெரியுமே.. இன்னைக்கு எங்கப்பாவுக்கு கல்யாண நாள்னு சொன்னேனே அது மறந்துரிச்சா.." என்ன சொல்ல ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும். என் கல்யாண நாளே எனக்கு ஞாபகத்துல இருக்காது.பிரபு கார்ல ஏறுறதுக்கு முன்னாடி இங்க இருந்து சிகரெட் பிடிச்சேன்.கடையையும் பூட்டிட்டான்.

கொஞ்சம் தெளிய ஆரம்பித்திருந்தது.ரொம்ப தூரம் நடந்து விட்டேன்.கால் வலி.ஆபிஸ்ல இருந்து வரும் போது இருந்திச்சி.இங்க மறந்து விட்ட மாதிரியும் இல்ல.வீட்டுக்கு போய் தூங்கிட்டு நாளைக்கு தேடுவோம்.ரெண்டாவது தடவை அடிச்சேன்னு தெரிஞ்சா திரும்பவும் சாமியாடுவா.பாத்ரூம் போய் குளிச்சிட்டு சைலண்டா தூங்கிருவோம்.பாத்ரூம் போனா அங்க லேப்டாப் பேக் தொங்குது.

பிரபு கிட்ட சொல்ல போனை அடிச்சேன்."மச்சான் எப்படியா பேக் டிராக் பண்ணிக் கண்டுப் பிடிச்சிட்டேன்.." சொல்லிட்டு திரும்பினா இவ நிக்குறா.

இதை தான் மூக்க சுத்தி காதை தொடுறதுன்னு நக்கல் விடுறா.கோபம் வந்தாலும் அடக்கிட்டேன். இன்னொரு பேக் டிராக்கிங் எல்லாம் என்னால முடியாது.

"உங்கப்பா கல்யாண நாளை நான் மறப்பேனா செல்லம்.." எல்லார் மாதிரியும் நானும் பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டேன்.வேற ஒண்ணுமில்ல பாரை மூடிட்டான்.அங்க போக முடியாது.

முக்கிய குறிப்பு : இந்த கதையில் வரும் எல்லா சம்பங்களும் கற்பனை.அதையும் மீறி யாரையாவது இந்த கதை நினைவு படுத்துற மாதிரி இருந்தா ரப்பர் வைச்சி அழிச்சிருங்க.ரப்பர் இல்லன்னா எச்சில் தொட்டு அழிச்சிருங்க.

Sunday, November 14, 2010

அர்ஜூனனின் முட்டாள்த்தனம்

சுபத்ரை அபிமன்யூவை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள்.அர்ஜூனன் சுபத்ரையுடன் மாலை பொழுதில் மகிழ்ச்சியாக இருக்கிறான்.யட்சன் ஒருவன் பதற்றத்துடன் ஓடி வருகிறான்.அர்ஜூனா என்னை நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல அர்ஜூனனும் பிரச்சனையை கேட்காமல் மாளிகைக்குள் அழைத்து செல்கிறான்.அந்த நேரத்தில் கிருஷ்ணன் வந்து "அர்ஜூனா நீ அடைக்கலம் குடுத்து வைத்திருப்பது என் எதிரிக்கு..அவனை வெளியே அனுப்பு.." என்று கத்த

"வா கிருஷ்ணா..உள்ளே வா.." அர்ஜூனன் ஆரத்தழுவ வருகிறான்.

"எதிரி இருக்கும் வீட்டில் என் பாதம் படாது.." தழுவ வந்த கைகளை கிருஷ்ணன் தட்டி விடுகிறான்.

"கிருஷ்ணா அவர்கள் என் விருந்தினர்கள்..அனுப்ப முடியாது.." என்று அர்ஜூனன் சொல்ல

"என் எதிரியை ஒளித்து வைப்பனும் என் எதிரியே..வா சண்டைக்கு..நீ ஜெயித்தால் அவனை நான் விட்டு விடுகிறேன்..நான் ஜெயித்தால் நீ அவனை வெளியே அனுப்ப வேண்டும்.." என்று கிருஷ்ணன் சொல்ல

"சுபத்ரா..என் காண்டீபத்தை எடுத்து கொண்டு வா.." என்று மனைவியிடம் சொல்ல

"அண்ணா என்ன விளையாட்டு இது.." சுபத்ரை கிருஷ்ணனைப் பார்க்கிறாள்.

ஒன்றுமாகாது என்பது போல கிருஷ்ணன் தலையை ஆட்ட காண்டீபத்தோடு வருகிறாள் சுபத்ரை.

துவந்த யுத்தம் நடக்கிறது.சுற்றியிருக்கும் மாடமாளிகையின் காரை எல்லாம் பெயர்ந்து விழுகிறது.மூன்று நாட்கள் விடாமல் வெற்றி தோல்வி என்று முடிவே வராமல் கொஞ்சம் கொஞ்சமாக சண்டை போராக நடக்கிறது.இருவர் மேனியும் அம்புகள் பாய்ந்து குருதியின் நிறமாக மாறியிருக்கிறது.

"அண்ணா போதும் விளையாடியது.." என்று சுபத்ரை குறுக்கே வர சண்டை முடிவுக்கு வருகிறது.

"என்ன விளையாட்டா..உன் விளையாட்டை என்னிடமும் ஆரம்பித்து விட்டாயா கிருஷ்ணா.." அர்ஜூனன் பொய்க்கோபத்துடன் கேட்கிறான்.

"அண்ணன் பலராமனிடமே விளையாடுபவன்..உன்னிடம் விளையாட மாட்டேனா.." கிருஷ்ணன் சிரிக்க

"எதற்காக இந்த சண்டை.."

"அர்ஜூனா இது வெறும் முன்னோட்டம்..நாளை நானே உன்னை எதிர்த்து நின்றாலும் நீ மனம் கலங்கி விடக்கூடாது..அதற்காகவே இந்த விளையாட்டு.."

"கிருஷ்ணா புரியவில்லையே.."

"புரியும்..நாளையே உன் உறவுகளை எதிர்த்து போர் புரிய வேண்டி வரும்..அதற்குத்தான் இந்த ஒத்திகை.."

விருந்துண்டு விட்டு நடந்த விளையாட்டு போரில் அர்ஜூனன் செய்த தவறுகளை பட்டியலிடும் கிருஷ்ணன் அப்படி பத்ம வியூகம் பற்றி சொல்கிறான். சுபத்ரை லேசாக கண்ணயர, அர்ஜூனன் அவளை எழுப்பாமலிருக்க வெளியே செல்ல முயல்கிறான்.

"அர்ஜூனா..எதையும் பாதி கதையில் விடக்கூடாது..முழுதாக கேள்.." கிருஷ்ணன் அர்ஜூனன் கையைப் பிடித்து இழுக்கிறான்.

"அவள் தூங்கட்டும்..பத்ம வியூகத்தை உடைக்க எனக்கு தெரியும் கிருஷ்ணா..வா வெளியே செல்லலாம்.." என்று கிருஷ்ணரை அழைத்து செல்கிறான்.

கிருஷ்ணன் புன்னகை செய்கிறான்."எதற்கும் தினமும் பயிற்சி எடு..ஒரு ஆண்டு காலம் வெளியே போய் வா..தவமிரு.."

"சுபத்ரா கர்ப்பமாகயிருக்கிறாள்..அவளை நான் விட்டு செல்வதா.." போக மறுக்கும் அர்ஜூனனிடம் "என் மருமகனை நான் பார்த்துக் கொள்கிறேன்..போய் வா.." என்று கிருஷ்ணன் சொல்ல போக அர்ஜூனன் மறுக்கிறான்.கிருஷ்ணன் விஷமமாக சிரிக்கிறான்.

தர்மர் சூதாட போகிறார்.எல்லாம் தோற்று காட்டிற்கு போகிறார்கள்.அர்ஜூனன் விடாமல் பயிற்சி எடுக்கிறான்.கர்ணனை நினைத்து கொள்கிறான்.இலக்கை அம்பால் அடிக்கும் போது இலக்கே இல்லாமல் செய்கிறான்.

சமாதானம் தோற்றுப் போய் மகாபாரத யுத்தம் தொடங்குகிறது. பீஷ்மர் தலைமையில் கௌரவ சேனை. அவருக்கு வலப்பக்கம் துரோணர்.இடப்பக்கம் கிருபர்.அர்ஜூனன் தயங்குகிறான். கர்ணன் பீஷ்மருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் பீஷ்மர் இருக்கும் வரை களமிறங்க மாட்டேன் என்று சபதம் எடுக்கிறான்.

"அர்ஜூனா அன்று நாம் செய்தோமே முன்னோட்டம் அதன் முடிவு தானிது..சண்டையிடு அர்ஜூனா.."

"என்னால் முடியாது கிருஷ்ணா..தாத்தா,குரு,நண்பர்கள்,சகோதரர்கள் எல்லோரும் இருக்கிறார்கள்.. என்னால் முடியாது.."

"அவர்கள் நீங்கள் துரியனின் அரசவையில் அவமானப்படும் போது எங்கே போனார்கள்..உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இடத்தை தர மறுத்த எங்கே போனார்கள்.சண்டையிடு அர்ஜூனா..நீ சண்டையிடாவிட்டால் உன் சகோதர்களும் தயங்குவார்கள்..முதல் அம்பை விடு" என்று கிருஷ்ணன் சொல்கிறான்.

"முடியாது கிருஷ்ணா..நீ எத்தனை சமாதானம் செய்தாலும் என் கால்களிலும்,கைகளிலும் பலமில்லை.." அம்பை நழுவ விடுகிறான்.

"இப்போது அங்கே பார்.." என்று எல்லோரும் கர்ணனாக தெரிகிறார்கள்.பீஷ்மர் வெண்தாடி கர்ணனாக, துரோணர் குடுமி வைத்த கர்ணனாக என்று எல்லோரும் கர்ணனாக தெரிகிறார்கள்.

"கிருஷ்ணா..உன் விளையாட்டை நிறுத்து..கர்ணன் பீஷ்மர் இருக்கும் வரை களமிறங்க மாட்டான்..அவன் பாசறையில் இருக்கிறான்.."

"நீ கர்ணனை காணாமல் தயங்குகிறாய்..அதனால் எல்லோரையும் கர்ணனாக காட்டினேன்..அம்பை விடு.." என்று கிருஷ்ணர் சொன்னதும் முதல் அம்பை விடுகிறான்.அது பீஷ்மர் காதோரமாக போய் வணக்கம் வைக்கிறது.

பத்தாம் நாள் முடிவில் பீஷ்மர் சாய்க்கப்படுகிறார்.கர்ணன் பீஷ்மரை காண போர்க்களத்திற்கு ஓடோடி வருகிறான்.

"நீ என்னை விட சிறந்த வீரன்..எப்படியும் துரியோதனன் தோற்று விடுவான்..எனக்கு பிறகு அவனை பாதுகாக்கவே உன்னிடம் வாக்குவாதம் செய்து உன்னை ஒதுங்க செய்தேன்..நீ தான் அவனை இனி காப்பாற்ற வேண்டும்.." என்று உறுதிமொழி வாங்குகிறார்.கர்ணன் களமிறங்குகிறான்.

பதிமூன்றாவது நாள் போர்.பத்ம வியூகம் அபிமன்யூ அதை உடைத்து பாதி வரை மீதி பாதியை உடைக்க முடியாமல் உள்ளேயே கௌரவ சேனையை கலங்கடித்து சூழ்ச்சியால் கொல்லப்படுகிறான். போர்க்களத்தின் வேறு மூலையில் இருக்கும் கிருஷ்ணன் சங்கேடுத்து ஊதுகிறான். அர்ஜூனன் அந்த சங்கின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு யார் என்று கேட்க கிருஷ்ணன் அர்ஜூனைப் பார்க்காமலே ஊதிக் கொண்டிருக்கிறான்.தோளைத் திருப்பினால் கிருஷ்ணனின் கண்கள் கலங்கியிருக்கிறது. "யார் அபிமன்யூவா.." என்று அர்ஜூனன் கேட்கிறான்.பேச முடியாமல் தலையை அசைக்கும் கிருஷ்ணனிடம் "நீ பார்த்துக் கொள்வாய் என்று நம்பினேனே..நான் ஒரு முட்டாள்.." என்று கிருஷ்ணனிடம் கோபம் கொள்ளும் அர்ஜூனனிடம் "உன் முட்டாள்தனத்தால் அபிமன்யூ இறந்தான்..நான் அன்றே சொன்னேனே..எதையும் முழுதாக கேள் என்று..இன்று பத்ம வியூகத்தில் சிக்கிக் கொண்டு அபிமன்யூ இறந்ததிற்கு நீ ஒரு காரணம் என்றால் ஜயத்ரதன் இன்னொரு காரணம்..இனி ஒரு முட்டாள்தனமும் செய்யாதே.." என்று சொல்லி முடிக்கும் முன் "நாளை சூரியன் மறைவதற்குள் ஜயத்ரதனை கொல்வேன்..இல்லை நாளை நெருப்பில் பாய்ந்து உயிரை விடுவேன்.." என்று சொல்லி மயக்கமாகிறான்.அர்ஜூனனின் மூடத்தனத்தை எண்ணி கிருஷ்ணன் திரும்ப சங்கேடுத்து ஊதுகிறான்.கண்கள் கலங்கியிருக்கிறது. பதிமூன்றாவது நாள் போர் முடிவடைகிறது

இந்த சங்கோலியைக் கேட்டு கௌரவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.ஜயத்ரதனை கௌரவர்கள் ஒளித்தாலும் கிருஷ்ணன் சூழ்ச்சியால் ஜயத்ரதன் மற்றும் அவனது தந்தையும் சாய்க்கப்படுகிறார்கள். கிருஷ்ணர் திரும்ப சங்கு ஊதிய காரணம் புரியாதவர்களுக்கு இரவு போரில் முடிவில் கடோத்கஜன் கொல்லப்பட்டதும் காரணம் புரிகிறது.கடோத்கஜனின் மரணத்தோடு அன்றைய போர் முடிவடைகிறது.அர்ஜூனை காக்க இன்னும் எத்தனை பேரை பலி வாங்குவானோ என்று நினைத்துக் கொண்டே சூரியன் உதிக்கிறான்.

Saturday, November 13, 2010

மைனாக்குஞ்சு

மைனா - ஜூராஸிக் பார்க் படத்தில் வேன் விபத்தில் சிக்கி முன் பக்க கண்ணாடியில் விழுந்து கிடக்கும் பெண்ணை காப்பாற்றும் போது கொஞ்சம் கொஞ்சமாக கீறல் விழும். கடைசியில் பையைப் பிடித்து தப்பி விடுவார். இந்த காட்சியை எல்லாம் சுந்தர்.சி சின்னா படத்தில் சுட்டு விட்டார்.பிரபு சாலமன் லேட்டஸ்டாக அதை சுட்டிருக்கிறார்.இதை உலக சினிமாவின் வரிசையில் கண்டிப்பாக சேர்த்து விட வேண்டும்.

பிரபு சாலமனின் வழக்கமான கிளிஷே தான் மைனா.கொக்கி,லீ,லாடம் என்ற அவர் முந்தைய படங்களில் படத்தின் இறுதி காட்சியில் கொத்து கொத்து ஆட்களை சாகடிப்பார்.இந்த படமும் விதிவிலக்கல்ல.

கொக்கி,லீ,லாடம் படம் எல்லாம் நான்கு முதல் அதிகபட்சமாக பதினாறு நாட்களிலேயே முடிந்து விடும்.இதிலும் அதே தான்.இரண்டு நாட்கள்.

போன டிசம்பரில் எழுதியது மூன்று வருஷத்துக்கு ஒரு தடவை அதே சாயலில் இருக்கும் படங்களை எடுத்தால் மக்களுக்கே புரியாது.உதாரணத்திற்கு நாவரசு கொலையில் தண்டனை பெற்ற ஜான் டேவிட் எங்கே என்றால் தெரியாது.அந்த சமயத்தில் படம் சூடாக இருக்க வேண்டும்.புது மாதிரியான படம் என்று ஆதரவு தருவார்கள்.

உதாரணத்திற்கு ஆண்-பெண் இவர்களுக்கு நடுவில் இருக்கும் ஈகோ இதை வைத்து மூன்று வருடங்களுக்கு ஒரு முறை படம் எடுத்து வெற்றி பெறலாம்

2000 - விஜய்,ஜோதிகா நடித்த குஷி.ஸ்கீரின் இத்து போகும் அளவுக்கு எக்கோ இல்ல அகம் பிடிச்ச கழுத இல்ல ஏதோ ஒண்ணு.இதை நூல் பிடிச்சி எடுத்தது தான் அதற்கு பிறகு வந்த படங்கள்.

2003 - திருடா திருடி.

2005 கடைசியில் லைலா பிரசன்னா நடித்த கண்ட நாள் முதலாய்.

2009 தொடக்கத்தில் சிவா மனசுல சக்தி.

2012 இந்த உலகம் அழியும் முன்னாடி எந்த படம் வரும் என்று பார்ப்போம்.


இப்போதும் அதே மூன்று வருட இடைவெளி தான்.2007 - பருத்தி வீரன்.2010லில் - மைனா. கொஞ்சம் தான் வித்தியாசம் இங்கு நாயகிக்கு படிப்பு வருகிறது. இரண்டு குடும்பத்திற்கும் முதலிருந்தே பகையில்லை. ஆனால் ஒரு இத்துப் போன பிளாஷ்பேக் இருக்கிறது. இதற்கு எல்லாம் தீர்வாக 2013லில் மைனாவின் நீட்சியாக பருத்தி வீரனால் பாதிக்கப்பட்ட விஜய.டி.ராஜேந்தர் எடுக்கும் ஒரு தலை காதல் அல்லது கருப்பனின் காதலி இருக்கும்.அதோடு இந்த உலகம் அழிந்து விட வேண்டும்.

இப்படி எழுதி நண்பருக்கு எழுதி படித்து காட்டினால் "பருத்தி வீரன் படத்தில் தலையில் ஆணி பாயும்.இதில் காலில் பாய்ந்து விட்டது..அதுல ரேப்..இதுல அடி உதை ஆனா அதே நாலு பேர் எண்ணிக்கை என்று சொல்கிறார்.அடிங்க நீ எல்லாம் ஏண்டா விமர்சனம் எழுதாமல் இருக்கே.

இன்னும் டைனமோ வெளிச்சத்தில் படிப்பு,பூ மலர்வது எல்லாம் சொல்லணும்னு ஆசை தான்.வேணாம் எல்லோருக்கும் பிடிச்சதை பிடிக்கலைன்னு சொல்லக்கூடாதாம்.அதனால விட்டுருவோம்.

எனக்கு சினிமாவின் சூட்சுமம் தெரியவில்லை என்று சொல்லி என் அண்ணன் சினிமாவெல்லாம் உனக்கு லாயக்குப்படாது என்று சொல்லி விட்டார்.ப்ளீஸ் ஒரு உதவி இயக்குனர் சான்ஸ் கொடுங்க.நல்லா டி.வி.டி பார்த்து சினிமா எடுக்கிறது எப்படி என்று தெரிந்து கொள்கிறேன்.

நண்பர் ஒருத்தர் சாட்டில் வந்து ரஜினியே சொல்லி விட்டார்.இந்த படம் நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல பதிலுக்கு ரஜினி கேடி படத்தையும் அருமை என்று சொன்னவர் என்று நான் சொல்ல இன்னும் ஆளை காணவில்லை.கண்டுப்பிடித்து தருபவர்களுக்கு பிரபு சாலமனின் அடுத்த கதை என்னவாகயிருக்கும் என்று சரியாக சொல்லி விடுகிறேன்.

இந்த மாதிரி அசட்டுத்தனங்களையும் மீறி படம் பிடித்து விட ஒரு காரணம் போதும்.அது என்ன என்று யோசித்தால் எனக்கு தெரிந்த காரணம் மேக்கப் இல்லாமல் இயல்பான அழகோடு இருக்கும் நாயகிகளாக இருக்கலாம். பருத்திவீரன் பிரியாமணியும்,மைனாவின் அமலா பாலும் வசீகரிக்கிறார்கள். இன்னும் கருப்பனின் காதலி படத்தின் நாயகி மட்டும் தான் மிச்சம்.அதை எல்லாம் பார்க்கும் முன் இந்த உலகம் 2012லில் அழிந்து விட வேண்டும்.

Wednesday, November 10, 2010

அர்ஜூனனின் சந்தேகம்

"நாங்கள் ஐவரும் உனக்கு அத்தை மைந்தர்கள் தான்.ஏன் அவர்களை எல்லோரையும்  விட்டு விட்டு நீயும் நானுமே அதிகம் நட்பு பாராட்டுகிறோமே.உன் தங்கையின் கணவன் என்ற கூடுதல் சலுகையாலா.." என்று கிருஷ்ணருடன் அர்ஜுனன் கேட்கிறான்.

"ஒரு காரியம் நிறைவேறாமலே இருக்கிறது.அதை செய்யவே நீயும் நானும் இங்கு வந்திருக்கிறோம்.நீயும் நானும் ஒன்றே. நானில்லாமல் நீ ஒரு காரியமும் செய்ய முடியாது.." என்று கிருஷ்ணன் விஷமமாக சிரிக்கிறான்.

"நாம் எப்படி ஒன்று ஒரு உதாரணம் தர முடியுமா.."  என்று அர்ஜுனன்  கேட்க

"பெண்கள் விஷயம் ஒன்று போதாதா.." என்று கிருஷ்ணன் சொன்னதும் ஒவ்வொரு முறையும் பெண்கள் விஷயத்தில் காதலில் சிக்கும் பொது கிருஷ்ணன் தான் உதவியிருக்கிறான் என்று நினைத்து பார்க்கிறான். கிருஷ்ணனோ  வேறு கதையை நினைத்து கொண்டிருக்கிறான்.

கர்ணனின் கதையை நினைத்து கொள்கிறான். சஹஸ்ர கவசன் என்றொரு அசுரன் வழக்கம்போல் தவங்கள் செய்து தன் உடலை ஆயிரம் கவசங்கள் காக்கவேண்டும் எனக் கேட்க அவ்வாறே அவன் உடலுக்கு ஆயிரம் கவசங்கள் ஏற்பட்டன. அதனாலேயே அவனுடைய உண்மையான பெயர் நமக்கு இன்னும் தெரியவில்லை. சஹஸ்ர கவசன் என்ற பெயராலேயே தெரிந்து கொள்கின்றோம்.  ஆயிரம் கவசங்களைப் பெற்றது மட்டுமில்லாமல், தன்னை எவராலும் கொல்லவோ, வெல்லவோ முடியாது. கடுந்தவம் இயற்றிக் கொண்டு போர் புரிபவர் யாரோ அவர்கள் மட்டுமே கொல்ல முடியும், வெல்ல முடியும் என்றும் வரம் வாங்கிக் கொண்டு விட்டான். யாராலும் ஒன்று தவம் செய்யமுடியும், அல்லது போர் புரிய முடியும். இரண்டும் ஒருசேர யாரால் செய்ய இயலும்? அதுவும் ஒரே நபரிடத்தில்? இனி நம்மை வெல்ல இப்பூவுலகில் மட்டுமில்லை, ஈரேழு பதிநாலு லோகங்களிலும் யாரும் இல்லை என்று இறுமாப்புடன் இருந்தான் சஹஸ்ரகவசன்.

அனைவரும் காக்கும் கடவுள் ஆன மஹாவிஷ்ணு தான் இதற்கு உதவவேண்டும் என அவரை வேண்ட அவரும் தன்னை இருவேறு வடிவங்களாக மாற்றிக் கொண்டார். ஒரு வடிவம் நரன், மற்றொரு வடிவம் நாராயணன்.

நாராயணன் தவத்தில் ஆழ்ந்திருக்க, நர வடிவில் இருந்த விஷ்ணு சஹஸ்ர கவசனோடு சண்டை போடுவார். பின்னர் நரன் தவம் செய்ய ஆரம்பிக்கும்போது நாராயணன் சண்டை போடுவார்.  இப்படியே தவமும், போரும் மாறி மாறி நடந்து 999 கவசங்கள் எடுக்கப் பட்டுவிட்டன. கடைசியாய் ஒரு கவசமும், காது குண்டலங்கலும் இருந்தன. அப்போது நரன் போருக்கு வர, சஹஸ்ர கவசன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி சூரியனிடம் தஞ்சம் அடைந்தான்.  அவனின் உண்மையான எண்ணம் புரியாமல் சூரியன் அவனைக் காப்பதாய் வாக்களிக்கப்பின்னர் உண்மை தெரிந்து அவனிடம்,இப்போ உன்னை ஒப்புக் கொடுத்துவிட்டால் உன் உயிர் அணுக்களைப் பாதுகாத்துத் தக்க சமயத்தில் பூமியில் பிறக்க வைப்பேன் என்று சொல்வார். அந்த உயிர் அணுக்களோடு தன் சக்தியையும் சேர்த்தே குந்திக்குக் கொடுப்பதால் சூரிய அம்சமாகவே பிறப்பான் கர்ணன்.  தன்னுடைய பரிசாகக் அந்த குண்டலங்களையும் அளிக்கிறார். மிகுந்திருந்த இந்த கவசத்தோடும் குண்டலங்களோடும் குழந்தையாய்ப் பிறந்தவனே கர்ணன் ஆவான். நரன் அர்ஜுனன் ஆகவும், நாராயணன் கண்ணனாகவும் பிறந்தனர்.

மிச்சமிருந்த ஒரு கவசத்தையும் குண்டலத்தையும் இந்திரன் தந்திரமாக கர்ணனிடம் இருந்து பறித்து விடுகிறான்.

பதினேழாவது நாளின் போர் முடிவில் கர்ணன் சாய்க்கப்படுகிறான். பதினெட்டு நாள் போர் முடிந்ததும் தேரை விட்டு இறங்கி ஓட சொல்லும் கிருஷ்ணனை ஒன்றும் புரியாமல் பார்க்கிறான் அர்ஜூனன்.காண்டீபத்தை எல்லாம் எடுத்து கொண்டு வரும் பொது தேர் தீப்பிடித்து எரிகிறது.

எப்படி இப்படி ஆனது என்று கேட்கும் அர்ஜூனனிடம் கர்ணன்,பீஷ்மர், துரோணர் எல்லாம் உன்னை விட வில் வித்தையில் சிறந்தவர்கள்.நானும் அனுமனும் உன் தேரில் இல்லாமலிருந்தால் அவர்கள் விட்ட அம்பு எல்லாம் தேரை  எரிந்திருக்கும் என்று சொல்ல அர்ஜூனனால் நம்ப முடியவில்லை.

காந்தாரியின் சாபத்தாலும்,துர்வாசரின் சாபத்தாலும் துவாரை எரிகிறது.எல்லோரும் அடித்து கொள்கிறார்கள். கிருஷ்ணன் அமைதியாக காட்டில் படுத்திருக்கிறான்.வேடன் மான் என்று நினைத்து அம்பு விடுகிறான். அர்ஜூனன் துவாரகையின் பெண்களை அழைத்து செல்ல வருகிறான். வரும் வழியில் மாடுகளையும் பெண்களையும் திருடர்கள் கவர காண்டீபத்தைக் காட்டி அவர்களை மிரட்டுகிறான்.அவர்கள் அவனை பொருட்படுத்தாமல் போக சண்டை நடக்கிறது.கிருஷ்ணன் இறந்து விட்டதால் காண்டீபம் வேலை செய்யவில்லை.மிக எளிதாக அர்ஜூனன் தோற்கடிக்கப் படுகிறான். கிருஷ்ணன் போன்ற உற்ற நண்பன் இறப்பையும் தாண்டி தோல்வி அவனுக்கு கிருஷ்ணன் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ற  உண்மையை உரைக்கிறது.அச்தினாப்புரம் வந்து சேர்கிறான்.இந்த உலகத்தை விட்டு போக வேண்டிய நாள் வந்து விட்டது என்று இமயமலை நோக்கி பாண்டவர்களும் திரௌபதியும் நடக்கிறார்கள். கூடவே ஒரு நாயும் சேர்ந்து கொள்கிறது.அது தர்மனின் தந்தையான யமதேவன்.

Tuesday, November 9, 2010

கண்ணில் தெரிந்த(தெறித்த) வானம் - எட்டு

விடியகாலை ஆறு மணிக்கே மொபைல் அடித்து தள்ளியது.ஆறு முறை எடுக்காமல் அமர்த்தி விட்டேன். இது இடைவெளி குறைகின்ற தருணம் என்ற ரிங்டோனிற்கு ஏற்ப ஒரு வழியாக இடைவெளியை குறைத்து கண்ணைத் திறக்காமலே எடுத்து பேசி விட்டேன்.
 
"காலங்காத்தாலே எதுக்குடா என் உயிரை வாங்குறீங்க.." கத்தினால் "உன்னை உடனே பாக்கணும் வா.. கோவிலுக்கு வா.." பதிலுக்கு ஒரு கத்தல்.
 
செமஸ்டர் ரிசல்ட் எதுவும் வந்து விட்டதா அரியர் எதுவும் விழுந்து விட்டதா என்று வயிற்றில் லேசாக புளியைக் கரைத்தது.
 
யாருக்கும் தெரியாமல் தொண்ணூறுகளின் மிச்சமான டிவிஎஸ் சுசூகியை நகர்த்தினால் "என்ன ஆறு மணிக்கே வண்டி எடுக்கிற..ரிசல்ட் வந்துரிச்சா.." உள்ளே இருந்து குரல் வருகிறது.
 
"இல்ல பால் வாங்கிட்டு வர்றேன்.." என்று பதிலுக்கு காத்திருக்காமல் வண்டியை எடுத்தால் "அரியர் வைச்சிட்டு ரீ வால்யூவேஷன் காசு வாங்க எங்கிட்ட வராதே.."
 
"அட ராமா..சும்மாயிருங்க..நேத்து தான் எக்சாம் எழுதியிருக்கிறேன்..அதுக்குள்ள ரிசல்ட் வந்துரப் போகுது.."
 
அங்கே போய் கோவில் வாசலில் பிங்க் கலர் சுடிதாரில் நிற்கும் பிகரை சைட் அடித்து கொண்டிருந்தால் "கூப்பிட்டது நான்..பாக்குறது அங்கேயா.." குரல் கேட்டது.
 
"அதெல்லாம் இல்லயே.." மேலும்கீழுமாய் ஒரு மாதிரி தலையை ஆட்டி சைட் அடித்ததை உறுதி படுத்தினேன்.
 
"சரி இன்னைக்கு என்ன நாள்.."
 
"சனிக்கிழமை..இது கேக்கத்தான் வர சொன்னியா.."
 
"வேற ஒரு நாளும் இல்லையா.."
 
"இல்லையே..என்ன நாள்.."
 
"என் பிறந்த நாள்..ஒரு கிப்ட் தான் தரல..போன் பண்ணி சொன்னாத்தான் என்ன கேடு.." கோவில் அர்ச்சனையும் மீறி இவ அர்ச்சனை தான் காதில் நிரம்பி வழிந்தது.
 
"சொல்லவேயில்ல.."
 
"சரி வர சொன்னா..நேத்து போட்ட ஷாட்ஸ்,சட்டையில பட்டன் இல்ல..குளிக்கல சரி அட்லீஸ்ட் மூஞ்சு கழுவிட்டு வந்தா தான் என்ன.."
 
"நீ தானே அவசரமா வர சொன்ன.."
 
"இதெல்லாம் நல்லா சமாளி..பிறந்தநாள்னு சொன்னப்பின்னாடியும் வாயைத் திறந்து பதில் ஹேப்பி பர்த்டேன்னு சொல்ல மாட்டியா..எல்லாம் கேட்டு வாங்கணுமா.."
 
"பல்லு தேய்க்கலையேன்னு பாத்தேன்.."
 
"நீ எல்லாம் வேஸ்ட்..என் ஸ்கூல் பிரண்டு பனிரெண்டு மணிக்கு போன் பண்ணி சொன்னான் தெரியுமா.."
 
"சரி நான் வேஸ்ட் தான் விடு.."
 
"கோபம் மட்டும் பொத்துக்கிட்டு வந்துரும்..அவன் கிப்ட் எல்லாம் தந்தான் தெரியுமா.."
 
சும்மாவே நாக்குல சனி புட் போர்ட்ல டிராவல் பண்ணும்.பல்லு வேற தேய்க்கலையா சம்மணம் போட்டு உட்கார
 
"போய் அவனையே கல்யாணம் பண்ணு..என்னை ஆளை விடு.."
 
கோபத்துல இந்த பொண்ணுங்களுக்கு எப்படித்தான் இங்கீலிஸ் வருமோ தெரியல.என்ன என்னமோ திட்டிட்டு கடைசியா மூணு வார்த்தை சொன்னா.
 
"என் மூஞ்சிலே முழிக்காதே.."
 
"சரி.."  என்று சொன்னதும் கோபித்து கொண்டே போனவளிடம் குடுக்க வைத்திருந்த கிப்டை தேடினால் காணவில்லை.
 
கொஞ்ச நேரம் கழித்து இது இடைவெளி குறைகின்ற தருணம் என்று மொலைல் சிணுங்க வண்டியோட்டிக் கொண்டே எடுத்தால் "ஐ ஹேட் யூ.." என்று போனில் கத்துகிறாள்.

தொடரும்..

Sunday, October 31, 2010

மச்சான் தயவிருந்தால்

காந்தாரி பத்து மாதத்திற்கும் மேலாக கர்ப்பமாக இருக்கிறாள்.ஆனால் குந்திக்கு தர்மன் பிறந்து விடுகிறான். ஆத்திரத்தில் வயிற்றில் குத்திக் கொண்டதால் பிண்டமாக குழந்தை பிறக்கிறது.வியாசர் உதவியினால் அதை நூறு துண்டுகளாக வெட்டி நூறு தங்க குடத்தில் ஈடுகிறார்கள். கொஞ்சம் மிச்சமிருக்கும் துண்டை இன்னொரு குடத்தில் இடுகிறார்கள். பீமன் பிறந்து கொஞ்ச நேரத்தில் (அது மணியாக அ நாட்களாக இருக்கலாம்) கழுதை மாதிரி கத்திக் கொண்டு துரியோதனன் பிறக்கிறான். கொஞ்ச கொஞ்ச இடைவெளிகளில் துச்சாதனன் என்று ஆரம்பித்து கடைசியாக துச்சலை பிறக்கிறாள். மத்த கதை நமக்கெதுக்கு.இந்த கதையின் நாயகி துச்சலை தான்.

துச்சலை ஜயத்ரதனை திருமணம் செய்கிறாள்.பதிமூன்றாவது நாளின் போரின் பத்ம வியூகத்தில் அபிமன்யூவை மட்டும் உள்ளே விட்டு தர்மன்,பீமன் போன்றவர்கள் உள்ளே விடாமல் தேக்கி வைக்கிறான். அபிமன்யூ கொல்லப்பட்டதும் புத்திர சோகத்தில் நாளை சூரியன் மறையும் முன் ஜயத்ரதனை நான் கொல்வேன் இல்லை தற்கொலை செய்து கொள்வேன் என்று காண்டீபத்தின் மீது சத்தியம் செய்கிறான். கௌரவர்களுக்கு சந்தோஷம் தான்.அடுத்த நாள் ஜயத்ரதனை சுற்றி நின்றே போர் புரிகிறார்கள்.அர்ஜூனனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அர்ஜூனன் மீதிருக்கும் இயல்பான பாசத்தால் சூரியனை மறைக்கும் கிருஷ்ணனால் வெளியே வருகிறான் ஜயத்ரதன். இருளை நீக்கியவுடன் அர்ஜூனன் ஜயத்ரதனை கொல்கிறான்.(இங்கே இன்னொரு பிரச்சனையிருக்கிறது.ஜயத்ரதனின் தந்தை ஒரு வரம் வாங்கி வைத்திருக்கிறான்.ஜயத்ரதனின் தலையை எவன் கீழே தள்ளுகிறானோ அவன் தலை வெடிக்க வேண்டும் என்று.ஸ்பீடி மேத்மெடிக்ஸில் ஒரு வார்த்தை உண்டு கேரி ஃபார்வர்ட்.கிருஷ்ணன் அந்த தலையை தவம் செய்து கொண்டிருக்கும் ஜயத்ரதனின் தந்தையின் குகைக்கு கேரி ஃபார்வேட் செய்ய,கையில் ஏதோ தட்டுப்படுகிறதே என்று கண் விழித்து பார்த்தால் மகனின் தலை.வாங்கிய வரம் நினைவுக்கு வரும் முன்னே தலையைக் கீழே தள்ள ஒரே கல்லிலே இரண்டு மாங்காய் கதை தான். இதற்கு காரணம் புத்திர சோகத்தில் அவன் ஏதாவது சபதம் எடுத்து விடக்கூடாதே).இருள் ஆனப்பின்னும் சண்டை போட்டார்கள் என்ற காரணத்தால் அன்று இரவும் சண்டை நடக்கிறது.கடோத்கஜனைக் கொன்றப்பின் தான் போர் நிற்கிறது.

பதினெழாவது நாள் யுத்தத்தின் முடிவில் கர்ணன் சாய்க்கப்படுகிறான். காந்தாரி துரியோதனின் கூடாத்திற்கு வருகிறாள்.அவனுக்கு எங்கு அடிப்பட்டாலும் ஒன்றும் ஆகாமல் இருக்க முதல் முறையாக கண்கட்டை எடுக்க முடிவு செய்கிறாள்.ஆற்றில் நீராடி விட்டு துணியில்லாமல் வருமாறு சொல்கிறாள். விஷயம் தெரிந்த கிருஷ்ணன் துச்சலையிடம் போய் இந்த பிரச்சனைக்கு காரணம் சகுனி தான்.இன்னும் பிரச்சனை வராமலிருக்க சகுனியின் பகடைக்காய்களை ஆற்றில் எறிந்து விட சொல்ல அவளும் செய்ய போகிறாள்.நடுவில் ஒரு வாழைத்தோப்பு. எதிரில் துரியோதனன் ஒன்றுமில்லாமல் வர தங்கையைப் பார்த்து ஒரு வாழையிலையை எடுத்து மறைத்து கொள்கிறான்.அவள் பகடையை ஆற்றில் எறிய மனித எலும்புகளால் செய்யப்பட்ட பகடைகள் சிரிக்கிறது.துரியோதனன் வந்ததும் கண்கட்டை அவிழ்த்து அவனை உற்று நோக்கும் காந்தாரி இடையில் இருக்கும் வாழையிலையால் அதிர்ச்சி அடைகிறாள். பதினெட்டாவது நாள் போரின் முடிவில் துரியோதனன் தொடையில் அடித்து கொல்கிறான் பீமன்.அது கதை யுத்தத்தின் அதர்மம்.அசுவாத்தாமாவை படைத்தலைவனாக ஆக்கி விட்டு இறந்து போகிறான்.

இதில் அதிர்ச்சியான டிவிஸ்ட்.கௌரவர்கள் ஆசைப்படும் பெண்களை எல்லாம் பாண்டவர்கள் தான் தட்டுகிறார்கள்.திரௌபதி,சுபத்ரா,பலராமன் மகள் செல்வி(அபிமன்யூ).ஆனால் அதிர்ச்சிகரமாக துச்சலையின் ஒரே மகளான கலந்தாரியை கைப்பிடிப்பது அல்லியின் மகனான புலந்திரன்.கலந்தாரியயை துரியோதனன் சிறையில் அடைக்க அல்லியின் உதவியால் சிறைக்கு செல்லும் புலந்திரனால் கர்ப்பமடையும் கலந்தாரியயைத் தீயிட்டு கொளுத்த முடிவு செய்கிறான். அல்லி பெரும் மழை வரவழைத்து அவளை காப்பாற்றுகிறார்கள்.குழந்தை பிறந்ததும் அர்ஜூனனிடம் பவளத்தேர் கேட்கிறான் புலந்திரன்.பேரனுக்கு தேர் வாங்க போன கேப்பில் பவளக்கொடி என்று பெண்ணை அர்ஜூனன் திருமணம் செய்ய கோபத்தில் அல்லி படையெடுக்க கிருஷ்ணன் விளையாட அடப்போங்கடா மாமனுக்கும் மச்சானுக்கும் வேறு வேலையே கிடையாதா.

Friday, October 22, 2010

ஒன் டவுன் மேஜிக் - பத்ம வியூகம்

பழைய போர்களின் போது தினம் ஒரு வியூகம் வைத்து போரிடுவார்களாம்.பீஷ்மர் வீழ்ந்தப்பின் துரோணர் கௌரவப்படைகளின் தலைமை ஏற்கிறார்.பதிமூன்றாவது நாள் போர் நடக்கும் போது பத்மவியூகம் அமைக்கிறார் துரோணர்.அர்ஜூனை வேறு பக்கம் திசைத்திருப்பி விடுகிறார்கள். பாண்டவர்கள் பக்கம் பத்ம வியூகத்தை உடைக்க தெரிந்தவர்கள் இரண்டே பேர் தான்.அர்ஜூனனும் கிருஷ்ணனும் இருவரும் வேறு பக்கமிருக்கிறார்கள்.யாரை வைத்து பத்ம வியூகத்தை உடைக்கலாம் என்று யோசித்தால் அபிமன்யூ முன்னால் வந்து நிற்கிறான்.சுபத்ரையின் கர்ப்பத்திலிருக்கும் போது அர்ஜூனனும் கிருஷ்ணரும் பத்ம வியூகத்தை உடைப்பதைப் பற்றி பேசுகிறார்கள். நடுவில் சுபத்ரை தூங்கி விட கர்ப்பத்திருக்கும் அபிமன்யூவும் தூங்கி விடுகிறான்.பத்ம வியூகத்தை உடைத்து நுழைவது பற்றி மட்டுமே தெரிந்திருக்கிறது.வெளியே வரத்தெரியாது.தர்மன் அதனால் யோசிக்க அபிமன்யூ உடைக்கும் போது உள்ளே நுழைந்து விட முடிவு செய்கிறார்கள்.பத்ம வியூகத்தின் முகப்பில் துரோணர் நடுவில் துரியோதனன்.அபிமன்யூ உள்ளே நுழைந்ததும் கூடவே வரும் தர்ம,பீம சகோதரர்கள் ஜயந்திரனால் நிறுத்தப்படுகிறார்கள்.முடிவில் கௌரவப்படைக்கு சேதமானாலும் அபிமன்யூ கொல்லப்படுகிறான்.இறுதி வெற்றி பாண்டவர்களுக்கே கிடைக்கிறது.

ஒரு பெரிய ஸ்கோர் சேஸ் செய்யும் போது அது ஒரு சக்கர வியூகம் தான்.அதுவும் இந்திய அணியை பொறுத்த வரை பெரிய ஸ்கோரை உடைக்க முடியாத பத்ம வியூகம்.வரிசை அப்படி.அதற்கு ஏற்ற மாதிரி எவனாவது ஜயந்திரன் மாதிரி எல்லோரையும் அணைப்போட்டு நிறுத்துவான்.சில கட்டத்தில் அபிமன்யூ மாதிரி ஒருத்தனைப் பலி கொடுத்தாவது போட்டியை வெல்வார்கள்.அப்படி அபிமன்யூ முதல் முதலாக உருவாக்கப்பட்டவர் ஜவகல் ஸ்ரீநாத்.தீடிரென ஒன் டவுனில் இறக்கப்பட்டார்.ஒரு பிப்டி அடித்தார். அதோடு சரி.அதற்குப்பின் எனக்கு தெரிந்து ஸ்ரீநாத் வரவில்லை.முன்னாள் கேப்டன்கள் எடுத்த சில முடிவு வெற்றி பெறும் போது அதை சீரான இடைவெளி விட்டு அடுத்து வரும் கேப்டன்கள் உபயோகிப்பார்கள்.ஆச்சர்யமான விஷயம் என்றால் அது பெரிதாக எல்லோரும் முயற்சிக்கும் முன் அதை செய்தது சச்சின் தான்.தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஸ்ரீநாத் இறங்கிய சமயம் சச்சின் தான் கேப்டன். என்ன செய்ய தலைவருக்கு அது மட்டும் தான் இன்னும் கை வராத கலை.கேப்டன்ஷிப் போனப்பின் அசார் வருகிறார்.

பங்களாதேஷில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டி.பெஸ்ட் ஆப் த்ரி.ஆளுக்கு ஒரு பைனல் ஜெயித்தாகி விட்டது.மூன்றாவது போட்டி பாகிஸ்தான் பேட்டிங்.அன்வரும்,இஜாஸ் அகமதுவும் சதம் அடிக்கிறார்கள்.பத்து வருடங்களுக்கு முன் சேஸ் செய்ய முடியாத ஸ்கோர்.சச்சின் அடித்தளம் அமைக்க சச்சின் அவுட் ஆனதும் எல்லோரும் சித்துவை தான் வருவார் என்று நினைத்தால் ராபின் சிங்.கங்குலியும் ராபினும் ஜெயிக்கும் அளவிற்கு கொண்டு சென்று வெளியேறினால் வழக்கம் போல நம்ம ஆளுங்க கதகளி ஆடி ஒரு வழியாக கனிட்கர் என்று பத்து மாதம் இந்திய அணியில் இடம் பெற்ற நாயகனால் காப்பாற்றப்படுகிறார்கள்.

அதற்குப்பின் கங்குலி வந்ததும் சச்சினுக்கு எதிராகவே வளர்த்து விட சேவக் என்று கொம்பு சீவி விட்டாலும் அவர் கண்டுப்பிடித்த ஆயுதம் தான் தோனி.என்ன செய்ய அந்த ஆயுதமே அவரை உரசிப்பார்த்தது தனிக்கதை.பாகிஸ்தானிற்கு எதிராக தோனி ஒன் டவுனில் இறங்குகிறார். சதமடித்து ஒரு நாள் அணியில் நங்கூரம் பாய்ச்சுகிறார்.

அடுத்து டிராவிட்.ஸ்ரீலங்கா போட்டியில் சங்ககாரா சதம் அடித்து டார்கெட் மூன்னூறு வைக்கிறார்கள். அதிலும் தோனி ஒன் டவுனில் இறங்குகிறார்.அதிரடி ஆட்டக்காரர்.அவருக்கு மாற்றாகயிருந்த தினேஷ் கார்த்திக்,பர்தீவ் பட்டேல் எல்லோரும் தானாக விலக்கப்படுகிறார்கள்.விலகுகிறார்கள்.

தோனி கேப்டன் ஆனப்பின் இந்திய அணியில் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த கம்பீர், ரெய்னா,கோலி,ரோகித் சர்மா எல்லோருக்கும் அந்த ஒன் டவுன் இடம் தரப்படுகிறது.சதம் அடிக்கிறார்கள். இந்திய அணியிலும் நிலையான இடம் கிடைக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டியில் டிராவிட் இடத்தில் புஜாரா இறங்குகிறார்.

இந்திய அணி இதை ஒரு முறை ராபின் சிங்கை வைத்து பரிசோதனை செய்த நாட்களில் தென் ஆப்பிரிக்கா நிக்கி போஜே வைத்து செய்து வெற்றியும் பட்டார்கள். ரிக்கி பாண்டிங் அந்த இடத்திற்கு டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டியில் வந்தப்பின் தான் இத்தனை சதங்களும் கேப்டன் பதவியும்.ரிக்கி இல்லாத சமயம் அந்த இடத்தில் கிளார்க்.

தோனிக்குப்பின் கேப்டன் பொறுப்பேற்க ரெய்னாவும்,கோலியும் தான் போட்டிப் போடுவார்கள்.தோனி கண்டுப்பிடித்த கத்திகள் எப்படி பாயப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.சுதாரிக்காமலிருக்க தோனி கங்குலி இல்லை என்று நினைக்கிறேன்.

தோனி,ராபின் சிங்,கம்பீர்,ரெய்னா,கோலி,ரோகித்,புஜாரா எல்லோரும் பத்ம வியூகமான பெரிய ஸ்கோரை உடைக்க போகும் போது பின்னால் நாங்களிருக்கிறோம்,அடிக்கவில்லை என்றாலும் இன்னும் சில ஆட்டங்கள் நீயிருப்பாய் என்று சொல்லப்பட்ட நம்பிக்கையான் வார்த்தைகள் தான் நவீன அபிமன்யூக்கள் சாகாமல் தப்பியிருக்க காரணம்.சச்சின்,ஷேவாக்,கம்பீர் வந்தப்பின் தான் தெரியும் எத்தனை அபிமன்யூவின் பிரதிகள் வாய்ப்பளிக்கபடாமலே பின்னாலிருந்து சாய்க்கப்படுவார்கள் என்று தெரியும்.

Tuesday, October 19, 2010

சல்லிய புக்கனன்

அது என்ன சல்லிய புக்கனன் என்று ஒரு தலைப்பு.ஆஸ்திரேலியாவின் முன்னாள் கோச் ஜான் புக்கனனை சல்லிப்பயல் என்று திட்டி விட்டேன் என்று டிவிட்டரில் யாரும் போட்டுக் கொடுத்து விட வேண்டாம். நான் வேறு அந்த ஊருக்கு தான் போக போகிறேன். ஆஸ்திரேலிய இங்கிலாந்து கிரிக்கெட் யுத்தமான ஆஷஸ் தொடரையும் மகாபாரதம் இதிகாசத்தையும் ஏதாவது ஒரு புள்ளியில் நிறுத்தி விட முடியும் என்பதன் முயற்சி தான்.

சல்லியன் - யார் இந்த சல்லியன்.நகுல,சகாதேவனின் தாய்மாமா.மாத்ரியின் அண்ணன்.போர் தொடங்க போகிறது.பெரும்படையைத் திரட்டிக் கொண்டு சல்லியன் தர்மனின் சேனையில் சேர புறப்பட்டு வருகிறான். வழியில் உணவு மற்றும் தண்ணீர் பந்தலமைத்து துரியோதனன் மூளை காத்திருக்கிறது. நிறைய இடத்தில் கிடைத்த கவனிப்பால் "உன் மன்னனிடம் சொல்.அவன் தலைமையின் கீழ் என் படை வீரர்கள் போர் புரிவார்கள் என்று சொல்." என்று உற்சாக மிகுதியில் வாக்குத்தர சரி மன்னர் துரியோதனிடம் சொல்கிறேன் என்று அந்த வீரன் பதில் சொல்லும் போது தான் தெரிகிறது. அது துரியோதனன் செய்த ஏற்பாடு என்று.தர்மரிடம் போய் வருத்தப்பட்டு நின்றால் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வரும்.அதில் நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கிறான். முதல் பத்து நாள் பீஷ்மர் தலைமையிலும் அடுத்த ஐந்து நாள் துரோணர் தலைமையிலும் கௌரவர்கள் சண்டையிடுகிறார்கள். தில்லுமுல்லு இரண்டு பக்கமும் செய்கிறார்கள்.பாண்டவர்கள் பீஷ்மரையும், துரோணரையும் சாய்த்தால் அந்த பக்கமிருந்து அபிமன்யு மற்றும் கடோத்கஜனை சாய்க்கிறார்கள். பதினாறாவது நாள் கௌரவ சேனைக்கு கர்ணன் தலைமை தாங்க கிருஷ்ணர் அளவிற்கு தேரோட்டும் திறமை சல்லியனுக்கு மட்டும் தான் உண்டு.அவர் தேரோட்டினால் அர்ஜூனனை வெல்ல வாய்ப்பு உண்டு என்று கர்ணன் விதியோடு கட்டிப்பிடித்து உருள்கிறான்.தர்மனின் வேண்டுகோளின்படி கர்ணனின் முடிவிற்கு மாற்றுக்கருத்துகள் சொல்ல ஆரம்பிக்கிறான்.நாகாஸ்திரத்தை அர்ஜூனன் கழுத்திற்கு கர்ணன் குறி வைத்தால் சல்லியன் மார்பிற்கு குறி வைக்க சொல்கிறார்.கர்ணன் கேட்காமல் அம்பை விட கிருஷ்ணரின் பாத அழுத்தத்தால் அது கிரீடத்தைப் பெயர்த்து எடுக்கிறது.சல்லியன் மார்பிற்கு குறி வைத்திருந்தால் இப்படி நடக்குமா என்று கேட்க வாக்குவாதம் முற்றி தேர் ஓட்டும் வேலையை மட்டும் பாருங்கள் என்று கர்ணன் சொல்ல நான் ஒன்றும் தேரோட்டியும் அல்ல தேரோட்டி மகனும் அல்ல மன்னன் என்று சேற்றில் தேரை இறக்கி விட்டு விட்டு சல்லியன் சென்று விட கர்ணன் தேரை வெளியே எடுக்க முயற்சிக்கும் போது அர்ஜூனனால் கொல்லப்படுகிறான்.பதினெட்டாவது நாள் சல்லியன் தலைமையில் கௌரவப்படைகள் களமிறங்க தர்மன் சல்லியனை ஈட்டியால் துளைத்தெடுக்கிறான்.

அதே பாணியில் ஆஷஸ் தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தர்மர் வேஷத்தில் ரிக்கி பாண்டிங்.போரில் தோற்றால் நாடு கிடைக்காது அதே மாதிரி இந்த முறையும் ஆஷஸ் தொடரை இழந்தால் கேப்டன் பதவியைப் பறித்து விடுவார்கள். சல்லியனான புக்கனன் இந்த முறை இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இருக்கிறார்.தென் ஆப்பிரிக்க வீரர்களான ஜோனதன் டிராட்,கெவின் பீட்டர்சன் போன்ற வெளி நாட்டு வீரர்களை வைத்தே தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஷஸ் தொடரில் இரண்டு முறை ஆஸ்திரேலியாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்கிறார்கள்.ஏற்கனவே இந்தியாவில் முதுகெலும்பை உடைத்து விட்டார்கள்.இதிலும் தோற்றால் மூன்றாவது ஆஷஸ் தொடரை இழந்த கேப்டன் என்ற பெயர் ரிக்கி பாண்டிங்கிற்கு வந்து சேரும். அதனால் அவர்கள் குறியே டிவிட்டர் புகழ் கெவின் பீட்டர்சன் தான்.கெவின் பீட்டர்சன் தான் இங்கிலாந்து அணியின் பலவீனம் என்று மாப்பிள்ளை பாண்டிங்கும்,இங்கிலாந்து அணியின் பக்கமிருக்கும் மாமா புக்கனனும் சொல்கிறார்கள். பாண்டிங் மேலும் காலிங்வுட்,அலிஸ்டர் குக் பேட்டிங் சரியில்லை என்று அடித்து ஆடுகிறார்.இது எல்லா தொடருக்கும் முன்னால் ஆஸ்திரேலியா செய்யும் உத்தி.இந்தியாவுடனும் அதை செய்திருப்பார்கள். இப்போது இந்தியாவில் சேவக்,ஹர்பஜன் என்று ஆஸ்திரேலியாவை விட ஐந்து மடங்கு அதிகம் பேசுவார்கள்.அதனால் அதை கையாளவில்லை.புக்கனன் ஏறுக்குமாறாக யோசனை சொல்லி பாதி தொடரில் அத்துக்கொண்டு போகாமலிருந்தால் அதுவே இங்கிலாந்திற்கு பாதி வெற்றி தான்.இங்கிலாந்து வென்றால் மைக் கேட்டிங்கிற்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ஜெயித்த பெருமை இந்த அணிக்கு கிடைக்கும்.ஆஸ்திரேலிய அணியில் போன முறை இருந்த மெக்ராத்,வார்னே இருவரும் இல்லை. ஏற்கனவே டிவிட்டரில் கிடைத்த உதைகளுக்கு வார்னே மருந்திட இந்த தொடருக்குத்தான் காத்திருக்கிறார்.இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுக்கு காயம்.புக்கனன் ஒரு உள் காயம். காத்திருக்கிறேன் இன்னொரு பதினெட்டு நாள் யுத்த முடிவிற்கு.

தர்ம சேனை என்று ஆஸ்திரேலியாவை சொன்னது நியாயமில்லை என்று யாருக்காவது தோன்றினாலும் அப்படித்தான் சொல்ல வேண்டியுள்ளது.காரணம் இனி ஆஸ்திரேலியா என் தாய் நாடுகளில் ஒன்று. இங்கிலாந்து போனால் இங்கிலாந்து என் தாய் நாடு என்று சொல்ல வேண்டியது தான்.

Thursday, October 14, 2010

டோளேண்டா - அர்த்தம் தெரியட்டும்

டோளர்கள் அவர்களுக்கு தேவையானதை மட்டும் தான் அதாவது அடுத்தவன் திட்டியதை மட்டும் தான் எடுத்து போடுவார்கள்.முழுசா சொல்லணும்.அப்புறம் தான் தெரியும். போரத்தில் சவடால் விட வேண்டியது யாராவது கேட்டால் போரத்தை விட்டு போறேன்னு சொன்னாலும் பரவாயில்லை.என் ஐடியை எடுத்து விடுங்கள்.அன்சப்ஸ்கிரைப் செய்தால் போச்சு.செய்வதற்கு எல்லாம் எனக்கு நேரமில்லையே.ஆமாம் பதிவு எழுத மட்டும் தான் நேரம் உண்டு.

என்னை துகிலுரிந்து விட்டார்கள் என்று கத்திய சைக்கோ எல்லா ஆதாரமும் இருக்கிறது கேஸ் போடுவேன் என்று சொல்லி விட்டு எல்லா ஆதாரங்களையும் வைத்ததும் அடுத்தவர் மனைவி,தாய் பற்றி எழுதி இப்படித்தான் நியாயம் கேட்க வேண்டும் சொன்னால் அது நியாயம். அதை எடுத்து முகிலன் போரமில் பகிர்ந்து இதை நாடோடி தட்டிக் கேட்பாரா என்று சொன்னதும் தான் தாமதம்.நான் எந்த பதிவுமே படிப்பதில்லை,எழுத நேரமில்லை என்னை தட்டிக் கேட்க சொன்னால் எப்படி என்று சப்பைக்கட்டு கட்டுபவர் தான் இந்த புதிய டோளன்.அதை விட நான் கேட்க மாட்டேன் என்று சொல்ல வேண்டியது தானே.அந்த சைக்கோவிடன் அதி புத்திசாலி ஏழர சொல்கிறார். எதை செய்தாலும் வினவு, ஸ்டீபனிடம் கேளுங்கள் என்று மெயில் செய்கிறார்.அதில் புதிய டோளரின் மெயில் ஐடி சிசியில் இருக்கிறது. அதனால் இவருக்கு தெரியாமல் அது வந்திருக்காது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அந்த ஸ்கீரின்ஷாட்டின் சாராம்சம் பார்க்க



From: arul stephen
முகில‌ன் அவ‌ர்க‌ளே... என்ன‌ பிர‌ச்ச‌னை உங்க‌ளுக்கு?..
என்னிட‌ம் ச‌ண்டை போட‌ வேண்டும் என்று நினைத்தால் க‌ண்டிப்பாக‌ தொட‌ர‌லாம்..
இந்த‌ போர‌த்தில் ப‌தில் அளிக்க‌ என‌க்கு விருப்ப‌ம் இல்லை.. என்னுடைய‌ மெயில்
ஐடி உள்ள‌து அத‌ற்கு தாராள‌மாக‌ அனுப்ப‌லாம்..
உல‌க‌த்தில் என்ன‌ பிர‌ச்ச‌னை ந‌ட‌ந்தாலும் என்னுடைய‌ க‌ருத்து கேட்பீர்க‌ளா?..

இவர் எதிலும் சம்பந்தமில்லாதவராக இருந்தால் நான் ஏன் இவர்கிட்ட சும்மா சண்டைக்கு போக போகிறேன்.எது செய்தாலும் வினவு,ஸ்டீபனிடம் கேட்டு செய்யுங்கள் என்று ஏழர சொல்கிறார் என்றால் இவருக்கு நிச்சயம் தொடர்புயிருக்கிறது.

அதனால் அதை நான் காப்பி செய்து போது விட்டு சொம்புத்தூக்கி என்று சொன்னேன்.அதற்கு பதில் சொல்லாமல் நான் சொம்புத்தூக்கி என்று சொன்னது தான் தப்பு என்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.எல்லா விஷயத்திலும் கூட்டுக் களவாணியாக இருந்து விட்டு எனக்கு தெரியவே தெரியாது என்றால் அதனால் திரும்பவும் சொன்னேன்.

ini enkeyum unga sombai thookittu varaatheenga appuram ethaavathu naanum solven.appuram ungalukkum enakkum enna pirachanai endru ketpen .

உடனே ஸ்டீபன் சொல்கிறார். - ஏன் முகில‌ன், என்றைக்கு நான் ஆபாச‌ம் என்று சொன்னேன்?..
ரெம்ப‌ காமெடியா இருக்கு...
க‌வுண்ட‌ம‌ணி போல் தான் சொல்ல‌னும் போலா...
இவ்வ‌ள‌வு பேரு இருக்கும் போது என்ன‌ பார்த்து ம‌ட்டும் ஏன் கேட்டீங்க‌னு... .
:)
என‌க்கும் அத‌ற்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?..

ஊருக்கு கிளம்பும் பிசியில் நான் சொன்னதை பார்க்கவில்லை போலும்.

mela naan athaaram thanthu irukken sombu thooki.antha buzzkku kopam vanthaa ithukku kopam varalaam

உடனே சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்து விட்டார்.அவர் பெயர் தான் தெளிவாக ஏழரையால் குறிப்பிடப்பட்டுள்ளதே.

அர‌விந்த் உன‌க்கும் என‌க்கும் என்ன‌ பிர‌ச்ச‌னை, உன்னை நான் எங்காவ‌து ஏதாவ‌து எழுதி இருக்கேனா?...

ellorum pesi thaane ellaam seireenga appuram enna.ini engayaavathu ponnunu vantha sombu thooki raasa appuram irukku

நான் அதற்கு பதில் சொல்கிறேன்.அதாவது சொம்புத்தூக்கி என்று சொல்கிறேன்.சாதாரணமாக சொம்புத் தூக்கி என்று சொல்வது தான் என் வழக்கம்.

உடனே இவர் பொங்குகிறார்.உண்மையான பெயரை சொல்லி விட்டேன் போல.

உன்னால‌ ஆன‌த‌ பாருடா... வெத்துவேட்டு..
சும்மா குரைக்காதே....
என்னை ப‌ற்றியும் நாற்ப‌து ப‌திவு எழுது (ஏற்க‌ன‌வே நாலு ப‌திவு
எழுதியிருக்கிறே..)..
என‌க்கு ச‌ந்தோச‌ம் தான்.. விள‌ம்ப‌ர‌ம் கொடுத்திட்டு லிங்க் அனுப்பி வை..
வ‌ந்து ர‌சிக்கிறேன்..

இப்படி சொன்னதால் நானும் திட்டினேன்.அதாவது வெத்து வேட்டு,நாய் அப்படி சொன்னா எல்லாம் கோபமே வரக்கூடாது. நியாயமானவர் எல்லாத்தையும் குடுக்க வேண்டியது தானே.ஏன் தரல.பேசி வச்சிக்கிட்டு செய்ய நான் என்ன சொம்புத்தூக்கியா.

இதை போய் யாருக்கு தேவையோ அவங்க படிக்கலாம்.

http://groups.google.co.in/group/tamizhbloggersforum/browse_thread/thread/7228370630a6c932

இந்த பிரச்சனை முடிந்ததும் நல்லவர் மாதிரி எனக்கு நேரமே இல்லை.நான் எதையும் படிப்பதேயில்லை என்று ஒரு விளக்கம் வேறு.

அவர் இப்படி  சொன்னதற்கு பிறகு நான் போரத்தில் ஒரு திரி ஆரம்பித்தேன்.
இதை ஏன் தட்டிக்கேட்கவில்லை என்று முகிலன் கேட்டால் நான் ஊருக்கு போகவதால் இரண்டு வாரமாக எதையும் படிக்கவில்லை என்று சொல்கிறார் ஸ்டீபன்.சரி படிக்கவில்லை என்று வைத்து கொண்டாலும் இதில் ஸ்டீபன் என்று போட்டதும் அதிலிருக்கும் ஸ்கீரின் ஷாட்டை கூட பார்க்காமல் (பார்க்காத மாதிரி நடித்து விட்டு) நான் எப்படி கேட்க முடியும் என்று சொல்வதை விட இந்த விஷயத்திற்கு நான் பொங்க மாட்டேன் என்று அவர் சொன்னால் ஒரு பிரச்சனையுமில்லை.அதை விட்டு விட்டு சொம்புத்தூக்கி என்று சொன்னது அவருக்கு கோபம் வந்து விட்டதாம்.ஆமா ஆயிரம் முறை சொல்வேன் சொம்புத்தூக்கி  சொம்புத்தூக்கி விஷயமே தெரியாமல் வந்து சொம்பைத் தூக்கினால் அப்படி தான் சொல்வேன்.உடனே இவர் ரொம்ப மரியாதையாக பேசுகிறார்.சும்மா குறைக்காதடா.என்னையும் வைத்து எழுது என்று சொன்னால். ஏற்கனவே நாலு பதிவு எழுதியிருக்கிறாய் என்று சொல்கிறார். இரண்டு வாரமாக படிக்காத இவருக்கு நான் நாலு பதிவு எழுதினேன் என்று எப்படி தெரியும்.அப்படி சொல்லும் போது கோபத்தில் இருக்கும் நான் செருப்பால் அடிப்பேன்.வா வந்து குனி என்று திட்டினேன். எல்லாம் படித்து விட்டு எனக்கு ஒண்ணுமே தெரியாது என்று சொன்னால் நம்ப நான் என்ன இன்னொரு சொம்புத்தூக்கியா.திருவாளர் ஏழர சொல்கிறார்.எதை செய்தாலும் ஸ்டீபன்,வினவிடம் கேட்டு செய்யுங்கள் என்று.அதற்கு ஆதாரம் இருக்கிறது.எல்லா விஷயத்திலும் பொங்கினால் எனக்கு பிரச்சனையில்லை.ஆள் பாத்து பொங்கினால் சொம்புத்தூக்கி,செருப்பால் அடிப்பேன் என்று இனியும் சொல்வேன்.

இது ஏன் வெளியே வரல.மறுபடி பொதுவாக ஒரு விவாதம் வருகிறது.உடனே இவர் பாய்ந்து வருகிறார்.

//ஏம்மா உன‌க்கு கொஞ்ச‌ம் கூட‌ சென்ஸ் கிடையாதா?...
உன்னிட‌ம் விவாத‌ம் செய்ய‌ விருப்ப‌ம் இல்லை என்று சொல்லிவிட்டேன்...
அப்புற‌ம் திரும்ப‌ திரும்ப‌ என்னிட‌ம் வ‌ந்து கைய‌ புடிச்சி இழுத்தியா, கையை
புடிச்சி இழுத்தியா? என்று கேட்டால் என்ன‌ அர்த்த‌ம்...
.
.வேறு வேலைக‌ள் இருந்தால் போய் பாருங்க‌... திரும்ப‌வும் என்னை வ‌ந்து
சீண்டினால் விளைவு மோச‌மாக‌ இருக்கும்..
//

இவர் இப்படி பொண்ணுக்கிட்ட பேசலாமாம்.ஆனா வேற யாராவது பேசினா டோளராக மாறிடுறாங்க. அப்படி சொல்லிட்டு போய் ஒரு பதிவும் போட்டாச்சி.
பதிலுக்கு நான் இப்படி சொன்னேன்.

ஊருக்கு போற பிசி.பசி பாருங்க நான் நேத்து பதிவே எழுதல.ஆனா என் பெயர் வந்தா போதும்ன்னு சண்டைக்கு போவேன்.அப்புறம் யாராவது சொம்வுத்தூக்கின்னு சொன்னா முடிஞ்சா சண்டை போடுவேன்.முடியலையா போரம் அட்மின் கிட்ட கதறி அழுவேன்.சரி அடிக்காதீங்க அவர் சொன்னதும் ஊருக்கு போற வேலையை விட்டு பதிவு போடுவேன்.அப்புறம் யாராவது பொதுவா சொன்னா போதும் என்னை ஏன் "நீ" சொல்ற நான் "உன்னை" பத்தி பேசுறேனா இனியும் பேசினா விபரீதமாயிரும்னு சவுண்ட் விடுவேன்.ஏன்னா நான் டோளேண்டா.

பேசவே விரும்பாத ஆள் கிட்ட நீ வா போ உன்னை,குலை, எனக்கு விளம்பரம் தா,டா இதெல்லாம் மரியாதை லிஸ்டல வரும் போது பதில் மரியாதை கிடைக்கும்.

நான் ஒத்துக்கிறேன்பா.நீங்க நல்லவங்க தான்.ஆனா நேர்மையானவங்களா இருந்தா முழுசா போடணும்.மத்ததுக்கு எல்லாம் லிங்க் குடுக்க தெரிஞ்ச நீங்க ஏன் இதுக்கு மட்டும் தரல.ஆனா நான் தருவேன்.ஏன்னா நான் டோளன் இல்லை.சண்டை நடந்து ரெண்டு நாள் கழிச்சி பதிவு வருது. ஏன்னா டிஸ்கஷ்சன் செய்து தான் பதிவு போடணும்.எனக்கு எழுதி தர யாரும் வேண்டாம்.

டீச்சர் அவன் என்னை அடிச்சிட்டான்.

நீ என்னடா பண்ணுன.

அவன் தான் என்னை அடிச்சான்.

சும்மாவா அடிப்பான்.நீ என்ன பண்ணுன.

நான் லேசா ஒரு கடி கடிச்சேன்.

அதான் வாயில ரத்தமா.

Monday, October 11, 2010

வாங்கினது பத்தலை போல - சரி இன்னும் கொடுக்கிறேன்

பண்புடன் போரம் என்று நினைக்கிறேன்.அதில் தான் முதல் பிரச்சனை எரிய ஆரம்பித்தது. அதில் வாங்கிய உதைகளில் தான் புத்தி பேதலித்து போய் கிடக்கிறது.அது பற்றி புனைவு புகழ் புரளி வாயாலே கேப்போம்.இலங்கைத்தமிழர்கள் பற்றி பேசி உதை வாங்கி விட்டு இப்போ என்ன வெளியே சொல்றதுன்னா நான் ஐ.டி.சி போறேன்.அவங்களுக்கு உதவுறேன் இப்படி பீலா விட வேண்டியது. என்னைக்கும் நாம செஞ்சதை அடுத்தவன் தான் பேசணும்.அப்படி யாராவது பேசிட்டா தண்ணிக்கு என்னமா ஜால்ரா அடிக்கிறாங்கன்னு புரளி கிளப்பி விட வேண்டியது தான் வேலை.

jmms: these things shd make one strong
srilankan issue la naan vaangatha thittey kidayathu.
me: when
jmms: Im totally against LTTE tigers
a7 their atrocities
sply with kids in armies
me: m
jmms: in many tamil grps
last year
me: oh
jmms: but I stayed strong
me: thats gud
jmms: ella ketta vaarthaiyum solvaanga
me: ve should overcome
jmms: but i never use bad words to defend myself
i was slow to getting agnry

ஆமா ஆமா கோபம் ரொம்ப மெதுவா தான் வரும்.மூணு வருசத்துக்கு முன்னாடி உள்ளதே இப்போ வருதுன்னா எங்களுக்கு எதிரா ஒரு மாசத்துலேயே கோபம் வந்தது ரெகார்ட் பிரேக்.லிம்கா புத்தகத்தில் இடம் பெற போராடணும்.அப்புறம் கெட்ட வார்த்தைகள் எல்லாம் உபயோகிக்க மாட்டாங்களாம். ஆமா ஊருக்குள்ள அப்படித்தான் பேசிக்கிறாங்க.

me: k
may be
jmms: those who dont hv points will start insulting or using bad words.
i know these pshychology.:))

அடக்கிரகமே சைக்காலஜி பத்தி யார் பேசுறது.ஆரம்பத்தில் இது மாதிரி பஸ் வந்திருந்தால் சரி கோபத்தில் வந்தது என்று வைத்து கொள்ளலாம்.அப்புறம் ஆதாரம் கேட்டே மிதி வாங்கியதும் தான் வாதாட எந்த பாயிண்டும் இல்லை போல உடனே இவங்க உபயோகிச்சிட்டாங்க.எனக்கும் வாதாட எதுவும் இல்லாத போது நானும் இதே லாஜிக்கை உபயோகித்து அசிங்க அசிங்கமாக மூணு தலைமுறையும் இழுத்து திட்டுவேன்.அப்ப எந்த நாயாவது வந்து தண்ணிக் குடிக்க வந்தேன்.சொம்புல தண்ணி வைக்கலைன்னு வந்தான் செருப்பால அடிப்பேன்.இன்னும் எங்கிட்ட நிறைய ஆதாரம் இருக்கு. அதனால கூலாயிருக்கலாம்.திட்டுக்கு நாளிருக்கு.அப்படி ஒரு அறுப்பை வாழ் நாளில் எவனும் வாங்கிருக்க மாட்டான்.எவளும் என்றும் வைத்து கொள்ளலாம்.

jmms: ok bk
maniji
he came & talked
appo he told unga mokkai mailbox nirayuthunu
i layghed & said
11:11 PM atha neena solreengala nu
then immdtly he got angry
me: M
jmms: & said " திருடி தன் அடுத்த்வளை திருடி னு சொல்வாள் "
me: Y
jmms: so y shd he say abt me then
:))
11:13 PM avar sonna thirudi illa
nama pathil sonna nama thirudi yam
:))))))))))
male chavanist
:))
ellam low class
and that too film industry la irukuravanga kitta romba careful la irukanum
ethukum anjathavanga
me: enna panraar
jmms: vilambaramam
me: oh
jmms: school thandathavanga la irukkanum jockey also
me: athukku en thailaand
jmms: athunala than vulgar jokes solli polappa otturanga
me: m

சினிமாவுல இருக்கிறவங்க எல்லாம் லோ கிளாஸாம்.அவங்க கூட இப்படி பேச மாட்டாங்க.இந்த ஹை கிளாஸ் பேசுற பேச்சைப் பார்த்தால் நாங்க எல்லாம் லோ கிளாஸாவே இருந்துட்டு போறோம். படிக்காதவங்க நையாண்டி வேற.எதையுமே தெரியாம பேசுறது.ஜாக்கி கரஸில் மாஸ்டர் டிகிரி முடிச்சியிருக்கார்.எதை எழுதினாலும் அங்க போய் காத்துக்கிடக்கிறது.அப்புறம் அதை எழுதினான் இதை எழுதினான்னு சொல்றது.

jmms: true
enakku cinema karanga mela avlo nalla impression ilkla surya
like jockey , cable
they want to get fame with sex jokes

கேபிள் மேல நல்ல இம்பிரஷன் இல்லையாம்.அப்புறம் ஏன் என்னை துகிலுரிஞ்சப்போ அவர் கேக்கலைன்னு கத்தணும்.ஆள் பத்தலையா.வினவு கிட்ட போகுறதுக்கு முன்னாடி சூர்யா கிட்ட போய் ஸ்ப்போர்ட் கேட்டது எங்களுக்கு தெரியாதா என்ன.

jmms: ivingka
மட்டும் என்னவேணா பேசுவாங்களாம்
ஆனா நாம பேசினா
பொத்துகிட்டு வருமாம் கோபம்
நர்சிம் வந்ததும் கவிதை எழுதியிருக்கத பாருங்க
இவிங்க
வட்டமே காமம் மட்டும்தான்
எழுத்தில் செய்யும் விபச்சாரம் இவையெல்லம்
என்பது ஏன் தெரியவில்லை?
me: m
jmms: முத்தத்தை பகிர்ந்துகொள்வதை
விலாவாரியா விள்க்கணுமா
இப்படி எழுதிதான் இவங்க பிரபலமானது போல
விசா
யாரு?
அவன் கேர்ள் பிரண்ட் ஸ்மோக் பண்றதை
பெருமையா சொல்றான்
காடஹ்ல் கடிதத்தை பகிர்ந்துக்குவாளாம்
இதெல்லாம் மெச்சூரிட்டியாம்

கண்ராவி
me: s

நர்சிம் எழுத வந்த உடனே போய் படிக்கிறது அப்புறம் அது நொள்ளை இது நொள்ளைன்னு சொன்னா இதுக்கு முன்னாடி எங்கிட்ட தண்டோரா கடன் பத்தி போரம்ல பேசினார்.எனக்கு அதனால பிடிக்கலன்னு சொல்லிட்டு கடன் பத்தி வெளியே சொல்லலாமாம்.அதாவது நாம எப்படி இருக்கோமோ அதே மாதிரி தான் அடுத்தவங்களுக்கும் இருப்பாங்கன்னு எல்லாருக்கும் ஒரு நினைப்பு.முதல்ல நாய் சொன்னவங்களுக்கு வயசு நாப்பதுக்கு மேல.அதுல தான் நாய் குணம் வரும்.இப்ப இப்படி சொல்லியிருக்காங்க.ஒருவேளை அவங்க குடும்பமே அப்படியிருக்கலாம் அதனால எல்லோரும் அப்படித்தான்னு சொன்னா தான் மனசு அடங்கும்னா தாராளமா சொல்லலாம்.

jmms: but this time i intentionally did
bcos
they shdnt think im a ordinary women
im more than a man
nama achieve panninathai sollanumnu ninachen
appo namma kitta nerunga bayam irukkum
we r not like those girls who expose thro nightie or sexy kavithai
we r different
ivanga laam summa velila than pen urimai pesuvaanga veetukkulla
wife a adachi veppanga
like cable sankar
maniji

கேபிளும்,மணிஜீயும் வீட்டில் மனைவியை அடைத்து வைத்திருந்தார்கள்.இவங்க போய் தான் காப்பாத்துன்னாங்க.அவங்க ஆம்பிள்ளையை விட மேலாம்.அப்போ இதுக்கு மேல மரியாதை வேண்டாம்.

jmms: see this also ma
http://pithatralkal.blogspot.com/2010/08/blog-post_11.html
ivanunga kids wife na
video pidichu poduvaanga
me: m video parthen
jmms: atha ellorum rasikkanum
aanaa mathavanaga ethachum sonna sorithal nu punaivu eluthuvaanga
kekka aal illati ipadithaan
namakku ipdi kettu kettu palakiduchu
epdithaan wife nightie yoda irupathai ellam public aa poda mudiyutho?
ulagam full aa paarkumey
ithuthaan usa palakkam pola
aanaa mathavangalai sorithal nu sollumpothu ithellam thona mattenguthu

அவர் குழந்தை வீடியோ போட்டால் நைட்டி தெரியுமாம்.ஆனா இவங்க ஒரு பதிவரோட நைட்டி புகைப்படத்தை ஊர் முழுக்க அனுப்புவாங்களாம்.இவங்க செய்யறது எல்லாம் சேவை.மத்தவன் செஞ்சா சுயசொறிதல்.முதல்ல அங்க இருக்கிற அழுக்கை தொடச்சிட்டு வரட்டும்.அப்புறம் என்னை பத்தி பேசலாம்.இன்னும் மிச்சமிருக்கு.இதையெல்லாம் சொன்னதும் ஆரம்பத்துல சொன்ன அவங்க சைக்காலஜிலேயே தெரியுது.மன நிலை சரியில்லாதவங்கன்னு. வீட்ல பிரச்சனையிருந்தா எவனை பார்த்தாலும் இப்படித்தான் பாயணும்னு தோணும்.

அப்புறம் நான் ஆஸ்திரேலியா போறேன்.வேலை வாங்கி தர்றதே ஸ்கூல் பிரண்டு தான்.பொண்ணு தான். அவளையும் வைச்சி ஏதாவது எழுது.படிச்சிட்டு செருப்பாலே அடிப்பா.ஏற்கனவே இப்படித்தான் ஒரு பொண்ணு பத்தி பேசி வாங்கி கட்டிய கதை எல்லாம் இருக்கு.

சைக்கோ சைக்கோ.இனியாவது மனம் நலம் பெறட்டும்.அப்புறம் இயேசு பார்த்துப்பார் டயலாக் எல்லாம் வந்துச்சி.அவர் தான் இப்படி எழுத சொன்னாரா.சைக்காலஜி பத்தி இதெல்லாம் பேசுது.என்ன கொடுமை இது.

சொம்பு (அ) ஜக்கு பையன்





Thursday, October 7, 2010

துவையல் - குஷி ஸ்பெஷல்

தாஸ் படத்தில் வடிவேலு மதுரைக்கு புதிதாக வருவார்.டீக்கடையில் அமர்ந்திருக்கும் முரட்டு மனிதரிடம் சின்னப்பையன் வம்பிழுப்பான்."டேய் தடிமாட்டுப்பயலே ஒத்தைக்கு ஒத்த வாடா.." என்று பேசி பொறுமை இழந்து பன்னை எல்லாம் எடுத்து அடிப்பான். வடிவேலு கோபத்தில் சொம்பை பழக்க தோஷம் டீ கிளாசை வைத்து விட்டு பொங்குவார். அந்த முரட்டு ஆசாமியும் தடுத்துப்பார்த்தும் முடியாத காரணத்தால் விட்டு விடுவார்.வடிவேலு அவனை அடிக்க ஓடுவார்.கடைசியில் கிட்னி போய் விடும்.அடி வாங்கியவன் சும்மா தானிருப்பான்.புதுசா வந்தவன் குதிக்கத்தான் செய்வான்.இன்னும் கைவசம் ஐம்பது பன் இருக்கே எடுத்து அடிக்கலாம்னா நெருக்கமானவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று தடுக்கிறார்கள்.அதுவும் சரிதான்.ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க.நாயை அடிப்பானேன் ____ அள்ளி ஏன் சுமக்கணும்.நாய்னு புனைவு எழுதிட்டான்னு எச்சில் துப்ப வர வேண்டாம்.டேக் டைவர்சன்.

இனி ஆஸ்திரேலியாவும் என் தாய் நாடுகளில் ஒன்று.கிரிக்கெட்டில் தோற்று விட்டதால் சொல்லவில்லை. இனி ஆஷஸ் பார்க்கலாம்.டீவியில் இல்லை நேரிலேயே பார்க்கலாம்.வெள்ளைக்காரப் பெண்களுடன் மேட்ச் பாக்கலாம்.உடனே செல்லமே படத்திலிருந்து வெள்ளைக்கார முத்தம் பாட்டு கேட்க வேண்டும் போலிருந்தது.ஆஷஸ் பை தி ஆஸிஸ்,பார் த ஆஸிஸ்,டூ த ஆஸிஸ்.இப்படி ஆஸிக்கு வார்த்தைக்கு வார்த்தை ஆதரவு தெரிவிப்பதால் அதுவும் எந்த ஆதாரமும்,முகாந்திரமும் இல்லாத காரணத்தால் எனக்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டாலும் அதற்கு காரணம் அமெரிக்காவிலிருக்கும் ஒசாமா தான் காரணம்.

காமன்வெல்த் ஆண்களுக்கிடையில் நடந்த தொடர் நீச்சல் போட்டியைப் பார்த்தேன். இந்தியா, ஆஸ்திரேலியா,இங்கிலாந்து,தென் ஆப்பிரிக்கா,கனடா என்று "பலம்" வாய்ந்த அணிகள். வழக்கம் போல ஆஸ்திரேலியா மேல பெட் கட்டினேன்.கடைசி ரவுண்டில் ஆஸியை முந்தி இங்கிலாந்து வீரர் வர அப்படியும் ஜெயித்தது ஆஸி வீரர்கள் தான். அவர்கள் நாலாவது ரவுண்ட் முடிக்கும் போது இந்திய வீரர்கள் மூன்றாவது ரவுண்ட் முடித்து செம லீடிங்கில் இருந்தார்கள்.இந்தியா இத்தனை வருடத்தில் இத்தனை தங்கம் வெல்வது முதல் முறை.

விக்கி தி ரோபோட் தொடர் பார்த்து இருக்கிறீர்களா.1985-1989 வரை நான்கு வருடங்கள் ஒரு வருடத்திற்கு தலா இருபத்தி நாலு எபிஸோட். எந்திரன் எல்லாம் அது முன்னாடி பிச்சை வாங்கணும். காதல்,மனித உணர்வு, கண்ணீர்,சோகம்,பாசம் என்று கலந்து கட்டி அடித்த குழந்தை ரோபோட் நாடகம். விஜய் டிவியில் திரும்ப போட்டார்கள்.அதில் நடித்த யாருமே அதன் பின் பெரிதாக சோபிக்கவில்லை. முக்கியமாக விக்கியாக நடித்த பெண் அடுத்த இரண்டே வருடத்தில் நடிப்பிற்கு முழுக்கு.இவ்வளவு பெரிய பட்ஜெட்டிற்கு இன்னும் விளையாடியிருக்கலாம்.குழந்தை நட்சத்திரமாக இருந்து பெரிய நடிகனாக வருவான் என்று எதிர் பார்க்கப்படுபவர்கள் எல்லாம் பின்னாளில் பல்ப் வாங்கியிருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் கமல் குறத்தி மகன் படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் வருபவருக்கு பின்னால் கோஷம் போட்டுக் கொண்டிருப்பார்.அவரிடம் கேட்டால் அந்த படம் எல்லாம் அவர் நடித்ததாகவே சொல்ல மாட்டார்.அதில் தம்பியாக நடித்தவர் அதற்குப்பின் எத்தனை படம் நடித்தார் என்று யாருக்குமே தெரியாது.அவமானம் தான் மிகப்பெரிய போட்டியாளன் என்பது எவ்வளவு நிஜம்.

நாம் எப்படி இருக்கிறோமோ அதே மாதிரி தான் உலகமும் நமக்கு தெரியும்.துரியோதனன் நாட்டை சுத்தி பார்த்து விட்டு ஒரு நல்லவன் கூட இல்லையே என்று சொன்னானாம்.தர்மன் நாட்டை சுத்தி பார்த்து விட்டு என்ன இந்த நாட்டில் கெட்டவர்களே இல்லை என்று சொன்னாராம்.நாம எப்படி நடந்துகிறோமோ அதே பாணியில் தான் மற்றவர்களும் நம்மிடம் நடந்து கொள்வார்கள்.புனைவுன்னே வைச்சுக்கலாம். மகாபாரதம் புனைவு தானே.

சிவாஜி படம் பார்க்கும் போது "தலைவா.." என்று நானும் கத்தியிருக்கிறேன்.மும்பை அரோரா தியேட்டரின் அமைதியை உடைக்க கலாட்டாவிற்கு செய்திருந்தேன்.எந்திரன் பார்க்கும் ஒரு கைத்தட்டல் கூட என்னிடமிருந்து எழவில்லை. உள்ளுக்குள் இருந்த கலாட்டா செய்பவன் செத்து விட்டானா.தம்பி அந்த சமயத்தில் ஏதோ ஒரு நிறுவனத்தில் நாலாயிரம் ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் போகவில்லை என்றாலும் சம்பளத்தில் வெட்டுவார்கள்.அதையும் மீறி அவன் படம் பார்க்க போய் விட்டான்.நான் ஒரு பக்கத்திற்கு அவனுக்கு மெயில் அனுப்பியிருந்தேன்.அது தான் என்னுடைய முதலும் கடைசியுமான _______ இருந்திருக்கும். இந்த முறை அவன் எந்திரன் பார்க்கவில்லை. அவனுக்குள் இருந்த முதல் நாள் முதல் காட்சி பார்ப்பவன் மாறி விட்டானா.இது இரண்டிற்கும் பதில் குசேலன் என்ற புள்ளியில் பெட்முடா முக்கோணமாக மாறி வேடிக்கை காட்டுகிறது.ஒரு பத்து தியேட்டர் இருக்குமா பெங்களூரில்.அதில் குசேலன் படம் ஓட மன்னிப்பு எல்லாம் கேட்டது காரணமாக தெரிந்தாலும் உண்மையான காரணம் பெர்முடா முக்கோணமாக இருந்து பால் தாக்கரே என் கடவுள் என்று சொன்னதும் கோபம் கட்டமாக செவ்வகமாக வேகமாக வளர்கிறது.அது நேரத்திற்கு தகுந்த மாதிரி இடத்திற்கு தகுந்த மாதிரி பேசுவது.இந்த காரணத்தால் இரண்டு ஆட்சி,அதிகாரம் எல்லாம் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை. நல்லவேலை எட்டாமல் போனது என்று இன்று சந்தோஷமாக இருக்கிறது.நேரத்திற்கு தகுந்த மாதிரி பேசுவதால் சில பேரை அடிக்கடி வெளுக்க வேண்டியுள்ளது.