முதல் சம்பவம் - குர்லா ஸ்டேஷன் மும்பை இரவு 9.00 மணி
அங்கு மொபைல் திருடர்கள் ஜாஸ்தி.ஒரு முறை திருடி பெயர் எடுத்து விட்டால் பக்கத்து இடங்களில் வஸ்தாது என்று பெயரும்,லம்பாக பணமும் கிடைக்கும்.திருடுவது எப்படி என்று கவுரவ ஆசிரியர்களாகப் போய் பாடமும் எடுக்கலாம்.முடிந்தால் நடுவராக கலந்து கொண்டு தீர்ப்பு வழங்கலாம்.அது வரை உழைத்து பெயர் வாங்கிய ஒருவன் முதல் முறையாக திருடி மாட்டிக் கொண்டான்.அவனை அது வரை நல்லவன் என்று சொன்னவர்கள் கூட அடித்து மிதித்து துவைத்து விட்டார்கள்.கத்த கூட முடியாமல் சுருண்டு விட்டான்.முதல் முறை தானே திருடினான் என்று யாரும் பாவம் பார்க்கவில்லை. திருடனுக்கு தெரிந்தவர்,நன்றாக பழகியவர் வருகிறார்.அவர் வந்து வெளுத்து வாங்குகிறார்.அதுவரை அடித்தவர்கள் எல்லாம் விலகி வழி விட்டு பார்க்கிறார்கள்.காரணம் அவர் அடித்த பாணி.அடித்த நேர்த்தி.இது மாதிரி நம்மால் அடிக்க முடியவில்லையே என்று அடித்தவர்கள் எல்லாம் வெட்கம் அடைகிறார்கள்.
திரும்ப திரும்ப அவர் அடிக்கும் போது சொன்ன வாக்கியம் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது - "உன் மொபைல் போனைத் திருடி நான் என்னுடைய சிம் கார்டு போட்டு உபயோகம் செய்தால் ஒப்புக் கொள்வாயா..அப்பட்டமான திருட்டு.."
இரண்டாவது சம்பவம் - திலக் நகர் ஸ்டேஷன் மும்பை 9.20 மணி.
அவர் பாணியில் தான் இனி திருடனை அடிக்க வேண்டும் என்று அன்று பாடம் கற்றுக் கொண்டவர்கள் காத்திருக்கிறார்கள்.இந்த முறை திருடன் திருடி விட்டு ஒடுகிறான்.திருட்டுக் கொடுத்தவன் கத்தாமல் அவனை துரத்துகிறான்.அன்று அடி வெளுத்தவர் ஓடும் ரயிலில் இருந்து கை கொடுத்து திருடன் செய்த திருட்டு தெரிந்தோ தெரியாமலோ உள்ளே இழுத்து விடுகிறார்.அடிக்க துரத்தி வந்தவர்கள் எல்லாம் ஏமாற்றத்தோடு காத்திருக்கிறார்கள்.அந்த மொபைல் போன் உபயோகத்திற்கு வரும் போது அடி விழும்.அதே ரயில் நிலையத்தில் திருட்டுக் கொடுத்தவன் காத்து இருக்கிறான்.என்றாவது அடிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு.
முதலில் திருடியவனுக்கு மட்டும் தர்மயடி.இரண்டாவது திருடியவனுக்கு அது திருட்டு அல்ல பாராட்டு அது ஒரு பிழை என்று சொல்வார் என்று நினைத்தவர்களிடம் அது தொழில் நேர்த்தி என்று சொல்கிறார்.
டிஸ்கி :
இது வெறும் முன்னோட்டம் தான்.முழுப் படமும் இனி வரும்.
இது உண்மையாக நடந்த சம்பவம்.ஒப்பிட்ட சம்பவங்களும் உண்மையாக நடந்தது.எந்த சம்பவங்கள் என்று தெரிந்தவர்கள் சொல்லவும்.
Saturday, December 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அருமை ,கலக்கல்
// இது வெறும் முன்னோட்டம் தான்.முழுப் படமும் இனி வரும்.//
காத்திருக்கிறோம்...,
வணக்கம்
பிரியலை. சம்பவ பகிர்வு சரியா சேரலை தம்பி.
//இது உண்மையாக நடந்த சம்பவம்.ஒப்பிட்ட சம்பவங்களும் உண்மையாக நடந்தது.எந்த சம்பவங்கள் என்று தெரிந்தவர்கள் சொல்லவும். //
தெரியல சாமி..
Post a Comment