Tuesday, December 8, 2009

பிரபுதேவா பெஞ்சும்,லயன் தாராவும்

பத்தாவது ஒரு வழியாக முடித்தப் பிறகு நான் ஆவிச்சி பள்ளியில் சேர முடிவு செய்திருந்தேன்.பள்ளியின் முதல்வரும் திருநெல்வேலி என்பதால் ஊர் பாசத்தில் எப்போது வேண்டுமானாலும் சேர சொல்லியிருந்தார்.பள்ளியும் அரை நாள் தான்.ஏற்கனவே அங்கு நண்பர்கள் அடித்த கூத்துகளை சொல்லியிருந்ததால் நான் மானசீகமாக அந்த பள்ளியில் சேர முடிவு செய்திருந்தேன்.நிறைய நேரம் கிரிக்கெட்.நினைத்த நேரம் சினிமா.கொஞ்சம் படிப்பு இப்படி கனவிலே வாழ்ந்து வந்தேன்.

கனவில் குண்டு வீசும் அளவிற்கு அப்பா ஒரு திட்டம் வைத்திருப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.சென்னை வந்த புதிதில் பீச்சுக்குப் போகும் போதெல்லாம் அந்தப் பள்ளியைப் பார்த்து கொண்டே செல்வாராம்.அப்பவே முடிவு செய்து விட்டாராம் ஒருநாள் இல்லை ஒரு நாள் மகனை இந்த பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று.அந்த கனவை நான் பத்தாவது முடித்த உடன் சரியாக செயல்"படுத்தி"யும் விட்டார்.

நான் ஒரு அளவிற்கு நல்ல மதிப்பெண் என்றாலும் அந்த பள்ளியில் அது மிகவும் குறைவு.நான் 450,470,480 இப்படி ஒவ்வொருத்தனும் மார்க் சொல்லும் போது எனக்கு வயிற்றில் புளி தான்.என் மார்க்கை கேட்டு விட்டு இதுக்கு எப்படி சீட் குடுத்தாங்க என்று நக்கல் செய்வார்கள்.அங்கே எனக்கு விழுந்தது முதல் அடி.இப்படி சொல்லும் போதெல்லாம் அவன் மூக்கை உடைக்க கை வந்தாலும் முன்னர் படித்த பள்ளி அப்படி.பெயரை சொன்னாலே அலறுவார்கள்.ரவுடி என்று ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று பயந்து நானே ஒதுங்கி கொள்வேன்.நான் முன்னர் படித்த பள்ளியில் ஒரு முக்கியப்புள்ளி.இங்கே நான் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கி விட்டார்கள்.

படிப்பில் கவனம் செல்லவில்லை.ஆளுக்கு ஒரு குரூப்.எனக்கு யாரிடம் சேர்வது என்றே தெரியாது.முதல் தேர்வு பிசிக்ஸ் ஆறுபது மதிப்பெண் தேர்வில் நான் எடுத்தது இரண்டு.பழைய பள்ளியில் கணக்கில் தொடர்ந்து ஐந்து தடவை நூறு மதிப்பெண் எடுத்து ரெகார்ட் வைத்திருந்தேன்.இங்கே கணக்கில் அவுட்.ஒரு நாளைக்கு இரண்டு தேர்வு.இடைவேளைகளின் போது இன்று பதிவர்களின் கூடும் காந்தி சிலைக்கு அருகில் இருக்கும் புல்வெளியில் விளையாடிக் கொண்டிருப்பேன். நாங்கள் எல்லாம் பயாலஜி என்பதால் ரேங்க் கார்டு கொடுக்கும் போது அடி கிடையாது.இரண்டு பாடங்களுக்கு மேல் பெயில் என்றால் அப்பாவை கூப்பிட்டு வர வேண்டும்.இதுவரை எல்.கே.ஜி தவிர பெயில் ஆனதேயில்லை.வீட்டில் காட்ட பயம்.

முதல் பீரியட் வந்ததும் வேதியல் ஆசிரியர் முதலில் என்னை தான் தேடுவார்.உடனே வெளியே அனுப்பி விடுவார்.நான் அப்போது தான் ஒரு வழி கண்டுப்பிடித்தேன்.முதல் வகுப்பில் இருந்து தப்பித்து விட்டால் இந்த நாளை ஓட்டி விடலாம்.உடனே செயல் படுத்துவேன்.வெளியே போய் மயிலாபூர்,லஸ் கார்னர் என்று சுற்றித் திரிந்து விட்டு இரண்டாம் வகுப்பில் வந்து கலந்து விடுவது.இரண்டு வாரத்தில் அவரும் இதை கண்டுப்பிடித்து விட்டார்.அவர் நெருக்கடி தாங்காமல் நானும் போன் செய்து என் அப்பாவை வரவழைத்து பள்ளி முதல்வரைப் பார்த்து அவரிடம் கொடுத்து விட்டேன்.

பிறகு முதல் வகுப்பு செல்ல ஆரம்பித்தேன்."பெஞ்ச் ராசி அப்படி..பிரபு தேவா அந்த பெஞ்சில் தான் உக்காருவான்..அதான் அவனை மாதிரியே படிக்கிற..அவனுக்கு டான்ஸ் தெரியும்..உனக்கு என்ன தெரியும்..அவன் என் படிக்காத ஸ்டூடண்ட்..எனக்கு கொஞ்சம் கூட பெருமை இல்ல.." என்று சொல்லுவார்.நானும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் - "இது பிரபுதேவாவுக்கு தெரியுமா.." என்று சொல்லி விட்டேன்."படிக்கலைனாலும் திமிருக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.." என்று திட்டுவார்.

காலாண்டு தேர்வுல எஸ்.ஐ.இ.டி பெண்களை எல்லாம் பார்க்காமல் படித்தேன்.ஜி.கே மட்டும் அவுட்.இரண்டாவது இடை நிலை தேர்வு ஆங்கிலம் உள்பட நாலு பாடத்தில் காலி.திரும்பவும் வெளி நடப்பு.திரும்பவும் லஸ் கார்னர்.அப்பாவிடம் சொல்லவேயில்லை.அரையாண்டு தேர்வே முடிந்து விட்டது.ஆசிரியர் கெஞ்சி கூத்தாடி கையெழுத்து இல்லா விட்டாலும் பரவாயில்லை என்று வாங்கி விட்டார்.அரையாண்டுக்கும் சேர்த்து கொடுத்து விட்டார்.அப்பவும் காட்டவில்லை.வீட்டில் இருந்த சின்ன வில்லன் - "நான் படிக்கிறது டப்பா ஸ்கூல்..அங்கேயே ரேங்க் கார்டு கொடுத்து விட்டார்கள்.அண்ணனுக்கும் கொடுத்து இருப்பார்கள்.." என்று என் பையை திறந்து எடுத்து கொடுத்து விட்டான்.ஒரு அடி.ஒரு இடி.பள்ளி முதல்வர் அந்த கொக்குத் தலையன் தான் எகிறி விட்டான்."இப்படியே போனால் உங்க பையனுக்கு வேறு பள்ளி தான் பாக்க வேண்டும்.." என்று மிரட்டி விட்டான்.என்னை இல்லை என் அப்பாவை.ரெகார்ட் நோட்டில் கூட கையெழுத்து வாங்காதது நான் மட்டுமே.

அடுத்து மூன்றாம் இடை நிலை தேர்வு.அதிலும் காலி.உடனே அப்பா வந்து ஆசிரியரிடம் பையனை காமர்ஸ் குரூப்பிற்கு மாற்றப் போகிறேன் என்று சொல்ல.அவர் தடுத்து அவன் படிப்பான் என்று சொல்லி விட்டார்.அதிலும் காலியானால் நான் காலி என்பதால் முக்கி தக்கி படித்து ப்ளஸ் ஒன் ப்ளஸ் ஒன் அடுத்த கட்டம்.வகுப்பு மாற்றம்.திரும்பவும் பிரபுதேவா பென்ச் தான்.முதல் நிலை தேர்வு ஒரு பாடம் அவுட். அப்பா அடுத்த இன்னிங்க்ஸ்யா என்பது போய் பார்த்தார்.

காலாண்டு அதிலும் ஒரு பாடம் காலி.வீட்டில் சொல்ல பயந்து நானே கையெழுத்து போட்டு விட்டேன்.பிறகு ஒரு மன்னிப்பு கடிதம். அது இருக்கும் இடத்தை சொல்ல நண்பனை விட்டு போன்.ஒன்றும் சொல்லவில்லை.என் மாமா பெண் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே என் அம்மாவின் கையெழுத்தைப் போட்டு விட்டாள்.வகுப்பில் நடந்த சண்டையில் பிரபுதேவா பெஞ்சில் இருந்து என்னை மாற்றி விட்டார்கள்.

முதல் கதை எழுதினேன்.எனக்குள் இருந்த திறமையை நானே தெரிந்து கொண்டேன்.அந்த கதை மட்டும் ஆசிரியர்களிடம் மாட்டி இருந்தால் என் கதை அன்றே கடைசி ஆக இருந்திருக்கும்.ஒரே நாளில் பள்ளியில் பிரபலம்.அப்படி வந்த நெருக்கத்தில் தான் தெரிந்தது எல்லோரும் என்னை விட கழிசடைகள் என்று.லேப்பில் இருந்து மெர்குரி திருடுவது,ஆசிட் திருடி வீட்டில் பரிசோதனை செய்து பார்ப்பது என்று ஏதாவது செய்வது.என்னை யாரெல்லாம் போன வருடத்தில் மிதித்தார்களோ அவர்களை நான் மிதித்து வைத்தேன்.ஒரு கேள்விக்கு கூட பதில் தெரியாமல் இருந்த நான் அடுத்தவனுக்கு பேப்பர் காட்டும் அளவிற்கு தேறியிருந்தேன்.பொது தேர்வின் போதும் என்னை பார்த்து எழுதி என்னை விட அதிக மதிப்பெண் எடுத்து விட்டான்.

எனக்கு ஒரே ஒரு வருத்தம் கடைசி வரை பிரபுதேவா பெஞ்சில் உக்கார முடியவில்லை.உக்கார்ந்திருந்தால் ஒருவேளை நானும் பிரபலம் ஆகியிருப்பேன்.பாதியிலே எழுந்து வந்ததால் ஒரு பிராபலம் ஆகி விட்டேன்.அப்புறம் ஒரு வழியாக படித்து முடித்து இப்போ உங்க உயிரை வாங்குகிறேன்.

டிஸ்கி :

பிரபுதேவா பாதியில் பள்ளியை விட்டு சென்று விட்டார்.அவர் ஒரு பிரபலம் ஆகி விட்டார்.அது மாதிரி என் செட்டில் இருந்து பாதியில் சென்ற பிராபலம்.அவருக்கும் பிரபுதேவாவுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை - தலைப்பில் இருக்கும் பெயர் தான்.

என்னை பிரபுதேவா பெஞ்சில் இருந்து பாதியில் துரத்தி அடித்த் "கெமிஸ்ட்ரி" சார் ஒழிக.வகுப்பில் சரக்கு காய்ச்ச சொல்லி தந்த பிசிக்ஸ் சார் வாழ்க.

12 comments:

நையாண்டி நைனா said...

/*முதல் பீரியட் வந்ததும் வேதியல் ஆசிரியர் முதலில் என்னை தான் தேடுவார்.உடனே வெளியே அனுப்பி விடுவார்.*/

மஞ்சத் தண்ணி ஊத்துனாங்களா?

Raju said...

அது ஏங்க ஸ்கூல்,காலேஜுல அழிச்சாட்டியம் பண்றவங்க மட்டுமே பிளாக் எழுதுறாங்க.. நான் உட்பட.

angel said...

nan raju sir karuthai othukren ana illa bcoz nan la rombah nala pilai nambungaaaaaaaaaa

.நான் முன்னர் படித்த பள்ளியில் ஒரு முக்கியப்புள்ளி

ela eduthalyum oru pulli than undu i mean full stop athu ena mukiya puli?

Unknown said...

//வகுப்பில் சரக்கு காய்ச்ச சொல்லி தந்த பிசிக்ஸ் சார் வாழ்க.
//

என்ன ஒரு பைனல் டச்..., கலக்கிடீங்க போங்க..,

புலவன் புலிகேசி said...

நல்ல அனுபவம்...?????

Unknown said...

Santhome School Mylapore ...

I am an alumnai ..

துபாய் ராஜா said...

அரவிந்து தம்பி, அப்படியே அடிச்சு ஆடி இந்த வருஷத்துக்குள்ள 200 பதிவு எழுதிடுங்க.மத்ததெல்லாம் படிக்கிறவங்க பாடு.... :))

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்ல நினைவுகளின் பகிர்வு...

Nathanjagk said...

அட்டகாசம் அர்விந்த்!
//வீட்டில் இருந்த சின்ன வில்லன் // ஹிஹி... எப்ப அவரு பிளாக் ஆரம்பிக்க ​போறாரு.. ​பெரிய வில்லன் கதைகள் ​கேட்க ஆவல்!

//முதல் கதை எழுதினேன்.எனக்குள் இருந்த திறமையை நானே தெரிந்து கொண்டேன்.அந்த கதை மட்டும் ஆசிரியர்களிடம் மாட்டி இருந்தால் என் கதை அன்றே கடைசி ஆக இருந்திருக்கும்.//

இது மாதிரி தருணங்களில்தான் சில பள்ளிகள், ஆசிரியர்கள் ​மேல் மரியாதை பெஞ்ச் மேல் ஏறி நிற்கிறது!

வெண்ணிற இரவுகள்....! said...

அந்த மாணவர் சிம்புவா ஹ ஹ ஹ ....
அரவிந்த் நீயும் பெரிய ஆள் தான்....

லெமூரியன்... said...

\\அது ஏங்க ஸ்கூல்,காலேஜுல அழிச்சாட்டியம் பண்றவங்க மட்டுமே பிளாக் எழுதுறாங்க.. நான் உட்பட....//

ரிப்பீட்டு...!

அதுலயும் வலையுலகில் நெல்லைக் கூட்டம் ரொம்ப இருக்குமோனு தோணுது...??!!!

மதார் said...

location ல எதாவது ஒன்னு போடுங்க சார் , india map மாதிரி இருக்கு . நானும் அப்படியே உணர்கிறேன் நெல்லைக்காரர்கள் தான் நிறைய இருப்பது மாதிரி . Location la நெல்லைன்னு போட்ட எவ்ளோ நல்லா இருக்கும் . ஏன் எல்லாரும் பிழைக்க வந்த ஊர போடுறாங்கன்னு தெரியல . பிறந்த மண் வாசனை எழுத்து நடையிலே தெரியும்போது ஏன் இந்த ஊர்பெயர் மாற்றம் ?