முதல் பாகம் படிக்க..
திரட்டி ஒனராக அண்ணன் பைத்தியக்காரன்.
பைத்தியக்காரன் - "நிறைய ஹிட்ஸ் வரும் தானே நானே இந்த திரட்டியை வாங்கி இருக்கிறேன்..அப்படி ஒண்ணுமே இல்லையே.."
குருஜி - "இவங்க எல்லாம் எதிர்கவிதை எழுதுறவங்க..எப்படியும் மினிமம் பத்தாயிரம் ஹிட்ஸ் வரும்..என்னையே விட்டு வைக்க மாட்டாங்க.."
பைத்தியக்காரன் - "இவ்வளவு தானா..நான் ஐம்பதாயிரம் ஹிட்ஸ் வரும் அப்படியெல்லாம் கற்பனை பண்ணிக்கிட்டு இருந்தேன்.."
குருஜி - "அதெல்லாம் அனுஜன்யா எழுதும் போது..இப்ப அவர் எழுதுறதை விட்டு விட்டார்..அதான் குறைஞ்சு போச்சு.."
பைத்தியக்காரன் - "யார் இந்த யூத்து.."
நைனா - "ஒரு யூத்தே..
ஒரு யூத்தைப் பார்த்து..
யூத் என்று சொல்கிறதே.."
டக்ளஸ் - "நைனா..அடடே ஆச்சர்யக்குறிய விட்டுடீங்க.."
குருஜி - "ரெண்டு பேரும் வாங்க போறீங்க.."
குருஜி - "தெரியல..சொல்ல சொல்ல கேக்காம வேன்ல ஏறிட்டாரு.."
பைத்தியக்காரன் - "கவித எழுத தெரியுமா.."
கேபிள் - "வாண்டட்டா ஏறி வந்து இருக்கேன்..என்னப் போய்.."
பைத்தியக்காரன் - "உங்க வலைப்பூ முகவரி சொல்லுங்க.."
முகவரி வாங்கி பாத்து விட்டுஅதிர்ச்சியாகிறார்.
குருஜி - "இது வரைக்கும் ஒரு கவித கூட எழுதலையா.."
பைத்தியக்காரன் - "ரமேஷ் சார்,துரை,நான் தலைப்பு எல்லாம் விறைப்பா இருக்கு..உள்ள போனா கதையா இருக்கு.."
கேபிள் - "பில்டிங்கு ஸ்ராங்கு.."
பைத்தியக்காரன் - "பேஸ்மென்ட் வீக்கா..கவிதைப் பட்டறை செல்லில் போடுங்க.."
கவிதைப் பட்டறை செல்லில் தண்டோரா உண்மைத்தமிழனுக்கு கவிதை எழுத சொல்லித் தருகிறார்.நாலு வரியை தாண்டினால் இரும்புத் தடியால் கையில் அடிக்கிறார்.எட்டு வரியை தொட்டால் கையைப் பிடித்து தரையில் தேய்கிறார்.சின்னதாக எழுத சொல்லி துன்புறுத்துகிறார்.
உ.த - "என் ப்ளாக் மொத்தமும் போனது கூட வருத்தம் இல்ல.எப்படியும் இன்னும் நாலு நாள்ல எல்லா பதிவையும் எழுதி முடிச்சிருவேன்..கவிதை எழுத சொல்லி தர்றேன்னு கையை உடைச்சுட்டாங்களே..அப்பனே முருகா.."
கேபிள் - "ஏன் என் கையை அப்படி பாக்குறீங்க.."
தண்டோரா - "வேற எதுக்கு..கவிதை சொல்லி தரத்தான்..ரா..ரா.."
கேபிள் செல்லை விட்டு ஓடி வருகிறார்.
கேபிள் -" நான் இப்போ கவிதை எழுதுறேன்..பாருங்க.."
சுற்றி பார்க்கிறார்.எல்லோரும் இருக்கிறார்கள்.பேப்பரில் பிள்ளையார் சுழிப் போட்டு நிமிரவும் ஒருவரையும் காணவில்லை.
கேபிள் - "பிள்ளையார் சுழி போடும் போது இருந்தார்கள்..முடிக்கும் போது ஒருத்தரும் இல்லையே..முதல்ல இதை நோட் பண்ணனும்.."
கேபிள் கவிதை எழுதுகிறார்.அந்த கவிதை தான் இது..(இங்க எங்கே தேடுறீங்க..அது அண்ணன் பதிவுல இருக்கு..)
பைத்தியக்காரன் - "கவிதை எழுதியாச்சுல..முடிவு மார்ச் மாசம் சொல்றோம்.."
கேபிள் - "அதுவரைக்கும் என்ன பண்றது.."
பைத்தியக்காரன் - "அரவிந்த் பதிவுல வேட்டைக்காரன் ட்ரைலர் பாத்து கதை சொல்ற போட்டி இருக்கு..அதுல கலந்துக்கோங்க.."
கேபிள் - " ரூல்ஸ் போட்டு இருக்காங்க..நான் கலந்துக்க கூடாதுன்னு..குருவி பார்ட் டூ மாதிரி இருக்கு..அதுவும் அருவியில் குதித்து நனையாம மீனை வேட்டை ஆடிகிறார்..முடியல..இத வேற பாக்கனும்..பாத்துட்டு விமர்சனம் வேற எழுதனும்..என்ன கொடுமைடா சாமி.."
ஆதி பிரதாபன் - "அண்ணே கதை ரொம்ப நல்லாயிருக்கு..போட்டிக்கு இது சரியா வரும்மான்னு எங்க ஆசானைக் கேட்டு சொல்றேன்.."
கேபிள் - "கதையா..நீ இப்போ சொல்லிட்டு போனா..போட்டி முடிவு அறிவிச்சப் பிறகு தானே வருவ.."
ஆதி பிரதாபன் - "அடுத்த கட்டம் என்னண்ணா.."
கேபிள் - "கவிதையை ஒரு கை பாத்தாச்சு..இனி ஒவியம் தான்..நானும் ஒவியர் தான்..நானும் ஒவியர் தான்..நானும் ஒவியர் தான்.."
தற்காலிகமாக ஒவியம் வரைவதை நிறுத்தி இருக்கும் ஒவியர் ஆதி வீட்டுக்கு போய் அவரிடம் இருக்கும் காலி பேப்பர்களை அடிமாட்டு விலையில் வாங்க செல்கிறார்.
டிஸ்கி :
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் - இப்படி சொன்னது சின்ன வயசுல எனக்கு ஒன்னு விட்ட பாட்டி.
தல சாரு புண்ணியத்தில் நம்ம வீட்டு பக்கம் காத்து கூரையைப் பிய்க்கும் அளவுக்கு அடித்தால் மானாவாரியாக பதிவுகள் வந்தது.மத்தபடி ஐம் வெரி பசி சாரி பிஸி.காத்து இன்று கரை கடந்து தண்டோரா பக்கம் சூழ்ந்துள்ளது.இனி அடுத்த காத்து வீசும் வரை ஒரு பதிவு தான் வரும் என்று உத்திரவாதம் தரப்படுகிறது.
கேபிள் அண்ணா நீங்க சொன்ன மாதிரியே உங்க கவிதைக்கு விளம்பரம் கொடுத்தாச்சு.நான் கேட்டு கொண்ட மாதிரி நீங்கள் எனக்கு லிங்க் கொடுக்கவும்.காத்து தென்றலாக மாறி விட்டது.மனசு வைங்க..
நான் தற்போது விஜய் ரசிகனாக இருப்பதால் கேபிள் அண்ணன் பேசிய வசனங்களுக்கு நான் பொறுப்பு அல்ல.அது அந்த சமயம் வந்த அன்னியன் எழுதிய வசனங்கள்.
வேட்டைகாரன் ட்ரைலர் பாத்து கதை சொல்லும் போட்டி..(வேட்டை,காரன் இந்த இரண்டு வார்த்தைகளுக்கு மத்தியில் "க்" வரும் என்று யாராவது சொன்னால் அவர்கள் வேட்டையாடப்படுவார்கள்.)
Friday, December 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
:-)
உண்மையிலேயே இன்னிக்கு சாரு புண்ணியம்தான்..
என்னது வேட்டைக்காரன் பட கதை எழுதணுமா..? எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்
சாரு ஒழிக.. இப்ப்ப ஏதாவது சொன்னா நம்மளை திட்டி ஒரு பதிவாவது போட மாட்டாறா..?
ஓடு..ஒடு..ஒடு..ஓ..டு..ஒ.......டு
வர்றான் பாரு வர்றான் பாரு அரவிந்த்.
மிக ரசித்தேன்..
நல்ல நையாண்டி...
அதிலும் ‘உ.த-தண்டோரா’ எபிசோட்’ சூப்பரப்பு...
கலக்கல் கலாய்ப்பு
// சாரு ஒழிக.. இப்ப்ப ஏதாவது சொன்னா நம்மளை திட்டி ஒரு பதிவாவது போட மாட்டாறா..? //
என்ன ஒரு வில்ல தனம்..,
Post a Comment