Tuesday, December 15, 2009

பிய்யாத தோசை,கன்னிப் பெண்,அப்பாலிக்கா என்ன

சமையலறையில் காத்திருப்பு
பிய்யாத தோசை கிடைக்கும் வரை.
கடைக்காரனோடு சண்டை
உறை பிரித்த ஹீரோ பென்னிற்காக.
முகம் தூக்க்கிப் பிறகு கிடைத்த
வெட்டப்படாத கையளவு அழிரப்பர்
ஆயிரம் காலத்துப் பயிரை நினைத்து
பரிதவிப்பில் ஜோசியக்கார மாமா
சிரித்தப்படி தரையில் ஒரு ஜாதகம்

அப்பாலிக்கா என்ன எதிர்கவிதை தான்

வைன்ஷாப்பில் காத்திருப்பு
அதிகாலையில் இறங்கிய சரக்கிற்காக.
சிப்பந்தியுடன் சச்சரவு
பிரிக்கப்பட்ட மிக்ஸர் பொட்டலம்.
சட்டையைப் பிடித்தப் பிறகு
கிடைத்த அரிய ஓட்டை நாணயம்.
நானூறு வருடப் பழசை மறைத்து
பரிதவிக்கும் போதையில் நண்பன்
அடியில் தட்ட காத்திருக்கும் போத்தல்.

டிஸ்கி :

எனக்கு வேலை அதிகம் வரணும்,என் வலைப்பூவில் வைரஸ் வரணும் என்று சாபம் விட்ட நைனாவிற்கு இந்த கவிதைகள் சமர்ப்பணம்.ஒரு வட போச்சு. முடிந்தால் இரண்டு வடைக்கும் எதிர்வடை போடலாம்.

5 comments:

shortfilmindia.com said...

அப்பாலிக்கா என்ன?
கேபிள் சங்கர்

Raju said...

பஸ்ஸாடப்பில் காத்திருப்பு
காலையில் அவளின் வரவிற்காக‌
நண்பனோடு கைகலப்பு
அவளோடு பேசியதற்காக‌
அவனை அடித்த பிறகு,
நெற்றியின் ரத்தம் மறந்து
சிரிக்கிறான் அவன். என் பின்னால்
நொடியில் என்னை வெட்டக்
காத்திருக்கும் அவளின் காதலன்.

மேலே எழுதியிருக்குறதுக்கு பேரு கவிதைன்னா,
இதுக்கு பேர் எதிர்கவிதைதான்.
:)

Beski said...

பேனாவுக்கு ஏக்கம்
சுடாத தோசை
தடுக்கும் பேப்பர்.

அத்திரி said...

இந்த மாதிரி இன்னோருவாட்டி கவித எழுதுன கண்டிப்பா வைரஸ அனுப்புவேன்

துபாய் ராஜா said...

// ♠ ராஜு ♠ said...
பஸ்ஸாடப்பில் காத்திருப்பு
காலையில் அவளின் வரவிற்காக‌
நண்பனோடு கைகலப்பு
அவளோடு பேசியதற்காக‌
அவனை அடித்த பிறகு,
நெற்றியின் ரத்தம் மறந்து
சிரிக்கிறான் அவன். என் பின்னால்
நொடியில் என்னை வெட்டக்
காத்திருக்கும் அவளின் காதலன்.

மேலே எழுதியிருக்குறதுக்கு பேரு கவிதைன்னா,
இதுக்கு பேர் எதிர்கவிதைதான்.
:)//

அப்படி போடு சபாஷு. அரவிந்த்,நீ வில்லன்னா, தம்பி 'டக்ளஸூ' ராஜு வில்லாதி வில்லன்.... :))