Monday, December 21, 2009

துவையல் - அலம்பல் ஸ்பெஷல்

ராமராஜனுக்கு ரசிகர்கள் அதிகம் என்று நான் ஒத்துக் கொள்கிறேன்.நெக்ஸ்ட் மீட் பண்றேன்.இதுக்கும் கட்டையைத் தூக்கி என் காலில் போடாதீங்க. சண்டையில் கிழியாத சட்டை கிடைக்குமிடம் தெரியுமா. அவசரமாக தேவைப்படுது.மேதை படம் நிச்சயம் ஓடி விடும் என்று எனக்கு நம்பிக்கை வந்து இருக்கிறது.விஜய் பற்றிய பதிவு போட்டதை விட ராமராஜனுக்கு அதிக கூட்டம்.வாழ்க மக்கள் நாயகன். இத்தனை ராமராஜன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிய நான் ஒரு காரணமாகி விட்டேன் என்பதில் எனக்கு சந்தோஷம்.விஜய்யும்,ராமராஜனும் ஒன்றா என்று கேட்டவர்கள் அதிகம். அதனால் காசை சேமித்து வைத்து மேதை படம் பாருங்கள். முடிந்தால் அந்த படம் வெளி வருவதற்கும் பணம் போடுங்கள்.சுறா பார்க்க வேண்டாம்.

தம்பி லோகுவுக்கு ஒரு வேண்டுகோள். குறள் போடும் கூடவே விளக்கமும் போட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.அதை எழுதியது திருவள்ளூவர் என்று போட வேண்டாம்.அப்புறம் நைனா பார்த்தால் அதற்கும் எதிர்குறள் போடுவார். இனி தம்பி பேச்சை கேட்க முடிவு செய்து விட்டேன். அதனால் நாளை வெளியாக வேண்டிய சுறா விமர்சனப் பதிவு இன்னும் ஐந்து மாதங்கள் கழித்து வெளியாகும்.பதிவு எழுத நேரம் இருக்கிறது எண்டி சொல்ல வேண்டாம்.மூன்று நாட்களாக மெகா சைஸ் ஆணிகள்.

நிறைய பேருக்கு தமிழ்மணத்தில் ஓட்டுப் போடத் தெரியவில்லை என்பதை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது.அதுவும் என் பதிவில் மட்டும் தான் இப்படி குத்துகிறார்கள். இடது பக்க மூலையில் இருப்பதில் குத்த வேண்டும் என்று தெரியாமல் வலது பக்கம் குத்தி விட்டார்கள். இந்த ஒரு வாரத்தில் அதிகமான குத்து வாங்கியது நானாகத்தான் இருக்கும் என்பதில் பெரு மகிழ்ச்சி. பெயர் வெளியே தெரிந்தால் போடுவார்களா என்று எனக்கு சந்தேகம்.அதை தமிழ்மணம் நிவர்த்தி செய்ய வேண்டும்.

இந்த வாரம் வலைச்சரத்தில் தண்டோரா அண்ணன் கையால் அறிமுகம்.மோதிரக்கை குட்டு.அதை தக்க வைத்து கொள்ள இதுவரை பயங்கரமாக மொக்கை போட்டு வந்த நான் இனி மொக்கை பயங்கரமாக போடுகிறேன். நல்லவேளை ஊருக்கு போய் விட்டார் என்று நினைக்கிறேன். அவரும் மக்கள் நாயகனின் ரசிகராக் இருப்பாரோ நினைத்தாலே உடம்பு ஜெர்க் ஆகுது.

எனக்கு டிரெண்ட் செட்டர்களை தான் பிடிக்கும். தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்பது சேது வந்தப் பிறகு தான் அதிகமானது.அதனால் பாலா மீது என்றுமே ஒரு தீராத ஆச்சர்யம் உண்டு. சேது படத்தின் யதார்த்தம் தாக்கிய அளவுக்கு எனக்கு பருத்தி வீரன் படமோ,சுப்ரமணியபுரம் படமோ ஈர்க்கவில்லை. காரணம் அதே மாதிரி இறுதியில் நாயகன் அல்லது நாயகியின் சாவு.பாலாவின் நாலு படத்திலும் இறுதி காட்சி இப்படி தான் இருக்கும். அந்த தாக்கம் ரேனிகுண்டா வரை தொடர்கிறது.அதை விட எனக்கு கடந்த இரண்டு வருடத்தில் எனக்கு பிடித்தப் படங்கள். அஞ்சாதே,பசங்க, சிந்தனை செய்,ஈரம்.அதனால் ரசனை வேறுபாடு (நான் அப்படி தான் சொல்வேன்) தானே ஒழிய தம்பி சொல்வது மாதிரி இது ரசனை குறைபாடு அல்ல.சசிகுமாரையும் எனக்கு பிடிக்கும்,தயாரிப்பாளர் என்ற டிரெண்ட் செட்டராக.நானும் ஒரு டிரெண்ட் செட்டர் ஆகலாம் என்று முயற்சி செய்ய நினைத்தேன் கடந்த வெள்ளிக்கிழமை வரை.(சிரித்தது ஒரு தப்பா..)

நல்லவேளை தம்பி டக்ளஸ் என் பழைய பதிவுகளை எல்லாம் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.டி.ராஜேந்தரும்,நாடோடிகளும் ஒரே பதிவில் வெளுக்கப்பட்டுள்ளது. இது தம்பிக்கு நான் தரும் இன்னொரு எதிர்வடை.

நையாண்டி நைனா என்று தமிழில் டைப் செய்து கூகிளில் தேடினால் முதலில் வரும் பதிவு அவருடையது அல்ல.என்னுடையது.அது போல இனி அத்திரி என்று தேடினால் என் பெயர் வருமாறு செய்யலாம் என்று இருக்கிறேன்.அதுவும் வெற்றி பெற்று விட்டால் கடைசியாக கேபிள் இணைப்பு பெறலாம் என்று இருக்கிறேன்.

டிஸ்கி :

இப்போ தான் புரியுது ஏன் ஆப்பிரிக்க இசையைப் பற்றி எழுதுகிறார் என்று.அதனால் இனி வரும் நாட்களில் ஒரிய மொழி நடிகர்களை வைத்து ஏதாவது பதிவு எழுதுகிறேன்.யாராவது ஒரிய மொழி படம் பார்த்தால் இப்படி யோசித்தாலே கொஞ்சம் வோரியாக இருக்கிறது.

இவ்வளவு களேபரத்திலும் பிரசாந்த் ரசிகர்கள் என்னை ஒண்ணும் சொல்லவில்லை.(நானே வாய விட்டுட்டேனே..)

6 comments:

Unknown said...

//இவ்வளவு களேபரத்திலும் பிரசாந்த் ரசிகர்கள் என்னை ஒண்ணும் சொல்லவில்லை.(நானே வாய விட்டுட்டேனே..)// நாளை பிரசாந்த் ரசிகர்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்நடைபெறும்..,

Raju said...

கடுக்காயையை நன்கு அம்மிக்கல்லில் அரைத்து, அதில் சிற்தே சிற்து அரளிக்காய் சேர்த்து
அரைத்து கொஞ்சமாக உப்பு, சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் வெல்லம் சேர்த்து, பத்தியமாக
சுமார் ஒரு வாரம் அல்லது ஏழு நாட்கள் பல்லில் படாமல் நாக்கைத் தொடாமல் சாப்பிட்டு வர
இந்த நோய் ,லிப்ட்டுலிப்ட்டாய் குறையாவிடினும் படிப்படியாய் குறையுமென்று ஒரு முறை
ஸ்ரீலஸ்ரீவிருச்சிககாந்தாநந்தசுவாமியோசுவாமிகள் ஒரு முறை அண்டார்டிகா சென்ற போது விளம்பியதாக அடியேனுக்கு நினைவு.

Have a Try Aravind Anne...!

Raju said...

லோகு, உங்களுக்கு ஓவர்..அடுத்தது வாங்க பாரி அண்ணே...!

லோகு said...
This comment has been removed by the author.
துபாய் ராஜா said...

இந்த பி.னா ப.னா மோகம் எப்படியெல்லாம் படுத்துது பாருங்க மக்களே.....

இப்படி தினமும் ஒரு கடிதம் எழுத வச்சுட்டிய புள்ளி (விவர) ராசா...

உன்னோட பி.னா ப.னா போதைக்கு எங்களை பின்னூட்ட ஊறுகாய் ஆக்கிட்டியே ஆராய்ச்சி மணி....

பிரச்சினை இல்லாமல் எழுதி பெயர் வாங்குபவர்கள் ஒரு ரகம். பிரச்சினையாக எழுதி (கெட்ட) பெயர் வாங்குபவர்கள் ஒரு ரகம். தம்பி நீ எந்த ரகம்....

இதுக்கு ஒரு மருந்து.ஒரே ஒரு மருந்து.அதுவும் அருமருந்து... தம்பி ராஜூ சொன்னதுதான்....
(யோவ்,ராஜூ, வாய் மட்டுமில்லை
உடம்புல இருக்கிற எல்லா பாகமும் நினைச்சு,நினைச்சு சிரிக்குதுய்யா... (பல்,நாக்கு,நாக்கு,மூக்கு,மனசை சொன்னேன்...) :))

அதுசரி,அரவிந்து... என்னோட சவாலுக்கு பதில் என்ன...
(சவால் என்னான்னு தெரியாதவங்க தம்பியின் முந்தைய மொக்கை பதிவின் பின்னூட்டம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்)

யோவ் லோகு, இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே உடம்பை ரணகளமா ஆக்குறேங்களேய்யா... சண்டையில் சட்டை கிழிஞ்சாலும் மாத்துசட்டை தம்பிகிட்ட நிறைய இருக்கு... :))

இம்புட்டு ஆணியிலயும் எம்புட்டு சிந்திக்கிறாரு... ஆணியே இல்லைன்னா நம்ம கதி... மணிக்கு 60 ஆராய்ச்சி பதிவு போட்டு அகில உலகத்தையும் அதகளம் பண்ணிடுவார்.

லாஸ்ட் பட் லீஸ்ட்: அரவிந்து தம்பி, எம்புட்டு பேரு,எவ்வளவு நேரம், எப்படி அடிச்சாலும் தாங்குறேய்யா. ஒத்துக்குறேன். நீ ரொம்ப நல்லவன்கிறதை மறுபடியும் நான் ஒத்துக்கிறேன்... :))

துபாய் ராஜா said...

கவுண்டிங் ஸ்டார்ட்....

இன்னைக்கு காலையிலதான் போன பதிவுபின்னூட்டத்துல 133ன்னேன். அதுக்குள்ள ஒண்ணு குறைஞ்சு 132 ஆயிடுச்சே...

நீங்க பதிவு போடுற வேகத்தை மிஞ்சி
இப்படி எகிறி குதித்து ஓடும்
ஃபாலோயர்ஸ்க்கு ஏதும் எதிர்வினை பதிவு அல்லது புள்ளி விவர ஆராய்ச்சி பதிவு உண்டா தம்பி.... :))