Sunday, September 26, 2010

சீனப்புரட்சி

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாதாம்.ஆனால் யாரும் கடைப்பிடிப்பதில்லை. குழந்தைகளைப் பெற்று கொள்கிறார்கள்.முதல் குழந்தையைத் தவிர பிறக்கும் குழந்தைகளுக்கு பதிவதில்லை.அதனால் கல்வி கிடையாது.வேலை கிடையாது.சம்பாதிக்க வழி. கொஞ்சம் கொஞ்சமாக அரசு இதை புரிந்து கொண்டு இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

1989ல் நடந்த மாணவர் புரட்சியில் இறந்தவர்களின் எண்ணிக்கை என்று சொல்லப்படுவது - எண்ணிக்கையின்படி. அந்த புரட்சியை நசுக்க டாங்கைக் கொண்டு மாணவர்கள் மீது ஏற்றினார்கள்.இது பற்றி சீனாவில் எந்த இணையதளத்தில் தேடினாலும் கிடைக்காது.

கூகுள் கொண்டு வந்த ஆர்குட்,ப்ளாக் போன்ற சேவையினால் மக்கள் தங்கள் கருத்தை வெளியே சொல்வார்கள் என்று அது தடை செய்யப்பட்டது.

இது ஒரு பெரிய புரட்சி.கோ என்ற தமிழ்ப்படத்திற்கு சீனா செல்ல விசா கேட்டார்களாம்.நாயகன் ஜீவாவுக்கு மட்டும் அனுமதி வழங்கவில்லையாம்.காரணம் பாஸ்போர்ட்டில் அவர் பெயர் அமர் என்று இருந்ததாம்.அது ஒரு முஸ்லீம் பெயராம்.இதுவே இந்தியாவில் நடந்திருந்தால் ப்ளாக்கர்கள் பொங்கி எழுந்திருப்பார்கள்.அது சரி சீனாவில் தான் ப்ளாக் கிடையாதே.

தவிர பக்கத்து கிராமத்திற்கு போக வேண்டும் என்றாலும் விசா வேண்டும்.இன்னும் இத்யாதி இத்யாதி அனுமதி வேண்டும்.இதுவல்லவோ புரட்சி.

ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வெல்ல சின்ன வயதிலேயே குழந்தைகளைக் கண்டுப்பிடித்து பெற்றோர்களிடம் இருந்து பிரித்து பயிற்சி செய்ய மட்டும் சொல்லித் தருவார்களாம்.செக்குமாடு சுற்றி வருவது மாதிரி.

புரட்சி கல்யாணம் - இரண்டு விளையாட்டு வீரர்களை (ஆண் - பெண் தான்) திருமணம் செய்ய சொல்வார்களாம்.நீங்கள் திருமணம் செய்தால் உங்களுக்கு பிறக்கும் குழந்தை அதிக திறனுடன் பிறக்கும் என்று காரணம் சொல்வார்களாம்.இப்படி கட்டாயப்படுத்துவது புரட்சி திருமணத்தில் வரும் போல.

வட கொரியா கால்பந்து அணி உலகப்கோப்பையில் தோற்றவுடன் பயிற்சியாளர் சுரங்க வேலைக்கு அனுப்பப்பட்டாராம்.சீனா மாதிரி பிராக்டிஸ் கொடுங்கப்பா.

9 comments:

pichaikaaran said...

சீனா மீது ஏன் திடீர் கோபம்?

இரும்புத்திரை said...

ஒரு கோபமும் இல்ல.புரட்சி இப்படி எல்லாம் செய்யலாம் என்று சொல்ல வந்தேன்.

நீ தொடு வானம் said...

அமர் என்று பெயர் அடிக்கடி இரும்புத்திரையில் வருது.பாத்து விசா கிடைக்காது.

Unknown said...

:)))

செய்தி: சீனப்புரட்சி - அரவிந்த்
கருத்து: சீனா கம்யூனிச நாடே இல்லை..

செய்தி: கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ - கம்யூனிசம் இன்றைய சூழலுக்கு உகந்தது அல்ல..
கருத்து: கியூபாவும் கம்யூனிச நாடே அல்ல

குளிகன் said...

அட அட நான் சொல்லவந்ததை முகிலன் சரியாகச் சொல்லிவிட்டார்

சரி சொல்லாதது.

எதுங்க அப்ப கம்யூனிஸ நாடு..

பதில் - புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

ராவணன் said...

சீனாவில் இருந்து வந்த யாரும் சீனாவைப் பற்றிக் குறைகூறுவதே இல்லை.என்ன பயமோ?
நானும் பலதடவை முயன்று பல தகவல்களைப் பெற்றேன்.அதுவும் பலரிடமிருந்து.

அதையெல்லாம் சொன்னால் மாவோயிஸ்ட் என்று கூப்பாடு போடும் மருதய்யனின் வினவு கும்பல்,மருதய்யனை காயடித்து..என்னவெல்லாம் செய்வார்களோ?

அது சரி(18185106603874041862) said...

//

தவிர பக்கத்து கிராமத்திற்கு போக வேண்டும் என்றாலும் விசா வேண்டும்.இன்னும் இத்யாதி இத்யாதி அனுமதி வேண்டும்.இதுவல்லவோ புரட்சி.
//

ஆமா. இது தான் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசாங்கம். மயிரு!

கேட்டா இது தான் மக்கள் விருப்பம்னு சொல்லுவானுங்க. ம்ஹூம். மாவோ மனித குலத்தின் சாபக்கேடு.

அது சரி(18185106603874041862) said...

//

புரட்சி கல்யாணம் - இரண்டு விளையாட்டு வீரர்களை (ஆண் - பெண் தான்) திருமணம் செய்ய சொல்வார்களாம்.நீங்கள் திருமணம் செய்தால் உங்களுக்கு பிறக்கும் குழந்தை அதிக திறனுடன் பிறக்கும் என்று காரணம் சொல்வார்களாம்.இப்படி கட்டாயப்படுத்துவது புரட்சி திருமணத்தில் வரும் போல.
//

இந்த அபார கண்டுபிடிப்பு யாரோடது? மாவோ தானே ரூம் போட்டு சிந்திச்சாரா இல்லை மார்க்ஸும் லெனினும் சொன்னதை வாந்தி எடுத்ததா?

Unknown said...

நல்லா இருக்கு தல !
(http://last3rooms.blogspot.com)