Sunday, September 5, 2010

ஏதோ ஒண்ணு

இப்போதெல்லாம் பாக்யராஜ் சொன்ன வெள்ளைக்காரன் மாதிரி பேச ஆரம்பித்து விட்டேன்.

பாக்யராஜ் சொன்ன உதாரணம். சுந்தர காண்டம்(இப்படி அர்த்தம் வரப்போவது என்று முன்னமே தெரிந்திருந்தால் வேறு பெயர் வைத்திருப்பார்கள்) படத்தில். முள் காலில் குத்தி விட்டது என்று சொல்லக்கூடாது.நான் முள்ளை காலில் ஏற்றிக் கொண்டேன் என்று சொல்ல வேண்டும். முள் உன் இடம் தேடி வந்த்தா.(சாமி முடியல இவ்வளவு லென்த்தா பேசணுமா)

அது மாதிரி நானும்..........

எனக்காக நிறைய பெண்கள் அழுதிருக்கிறார்கள். அதை என்னால் நிறைய பெண்கள் அழுதிருக்கிறார்கள். நான்(அகம்பாவம் பிடித்த சொல்லாகவே இருந்தாலும்) நிறைய பெண்களை அழ வைத்திருக்கிறேன் என்று சொன்னால் அர்த்தம் மாறுகிறதே.

பெண்களுக்கான நட்பில் நான் என்றுமே ஆதிக்கம் செலுத்துபவனாக இருந்திருக்கிறேன். அதை இப்படி சொன்னால் என்னிடம் ஆதிக்கம் செலுத்தும் பெண்களிடம் நான் நட்பே வைப்பதில்லை.

வெள்ளைக்காரன் மாதிரி மாற்றினால் நான் ஆணாதிக்கவாதி போல தெரிகிறது.இப்படி உண்மையை சொல்ல சொன்னதால் வெள்ளைக்காரன் தான் இன்று புறப்பட்ட இடத்திற்கே(லண்டனுக்கே) வந்து விட்டார்கள். நானும் புறப்பட்ட இடம் எது என்று பார்க்கிறேன். மாடு மேய்த்து கொண்டு ப்ளாக்,பஸ் என்று கும்மியடித்தால் எப்படியிருக்கும்.

****************************

பிரபலப்பதிவர் என்று எதை வைத்து எடை போடுபது.

விழும் ஓட்டுக்களை வைத்தா - அப்படியென்றால் அவர்கள் தான் பிரபலம்.

விழும் பின்னூட்டங்களை வைத்தா - அப்படியென்றால் அவர்கள் தான் பிரபலம்.

வாங்கும் உதைகளை வைத்தா - அப்படியென்றால் அவர்கள் தான் பிரபலம்.

கிழியும் உண்மையான முகங்களை வைத்தா - அப்படியென்றால் அவர்கள் தான் பிரபலம்.

தமிழ்மணம் பரிந்துரையில் ஏதோ சித்து வேலை செய்திருக்கிறது.வேடிக்கை பார்ப்போம்.

*****************************

விஜய் விருது வழங்கும் விழா 2008ம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா.

மேடையில் சிவக்குமார்,கமல்,சூர்யா,கார்த்தி என்று ஒரு கூட்டமேயிருந்தது.

சிவக்குமார் - என் தம்பி இருக்கும் வரை எந்த நடிகனுக்கும் சிறந்த நடிகன் விருது கிடைக்காது.

கமல் - என் அண்ணன் மகனுக்கு என் கையால் விருது தருவதில் மகிழச்சி.

2010 - அண்ணன் மகனான சூர்யா தம்பி மகளான சுருதியுடன் ஜோடியாக நடிக்கிறார்.இது தான் ஏழாம் அறிவா.

இது ஞாபகத்திற்கு வந்ததும் சுபாவின் முதல் நாவல் நினைவுக்கு வந்தது.பெரியம்மா பையன் சித்தி பெண்ணைக் காதலிப்பான்.அதற்கு அத்தை மகன் ஆதரவு.பெயர் தான் மறந்து விட்டது.

மயான என்று ஆரம்பிக்கும்.

**********************

சரோஜாதேவி படித்திருக்கிறாயா - இந்த தீடிர் கேள்வியில் கொஞ்சம் அதிர்ச்சி.

படித்ததில்லை பார்த்திருக்கிறேன் என்று சொன்னதும் நக்கல் இல்லாமல் உண்மையான பதில் வேண்டும் என்று கேட்டார்.

ஒரே ஒரு கதையை மட்டும் படித்தால் அது படித்ததில் வராது பார்த்ததில் தான் வரும் என்று சொன்னேன்.

ஏன் படிப்பதில்லை - பதிலிருந்து எத்தனை கேள்விகள் தான்.

முதன் முதலில்  ஒன்பதாவது படிக்கும் போது தான் கிடைத்தது.பாலகுமாரன் அதை விட நன்றாக எழுதுவார் என்று தோன்றியது.அதனால் பெரிய ஈர்ப்பில்லை என்று சொன்னேன்.

இப்போது பாலகுமாரன் படிப்பதில்லை என்று சொன்னாயே இன்னொரு முறை படிக்க கிடைத்தால்......  என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

சரோஜாதேவி விட அது மாதிரி தற்சமயம் நான் நன்றாக எழுதுவேன் என்று சொன்னப்பின் கேள்வியே வ்ரவில்லை.

இதே பதிலை ரமணிசந்திரன் விவாதத்தின் போதும் சொல்லி வைத்து வாங்கி கட்டிக் கொண்டேன்.

ரமணிசந்திரனை விட நீ நன்றாக எழுதுவாயா இனி உன் பேச்சுக்கா என்று சொல்லாத குறையாக போன் அறைந்து வைக்கப்பட்டது.

யோசித்து பார்க்கிறேன்.இரண்டுமே பெயர்கள் மட்டும் கதாபாத்திரங்கள் மட்டும் தான் வேறு.கதைக்களன் மற்றும் முடிவு எல்லாம்  டெம்பிளேட்களாகவே இருக்கிறது.

நாளை இதே பதிலை ஜெயமோகனுக்கு சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பதில் சொல்பவனுக்கு கோபம் வருவதேயில்லை.கேள்வி கேட்பனுக்கு தான் வரும்.அதுவும் உன்னிடம் கேட்டால் - இப்படி என்னிடம் சொன்ன எல்லா ஆசிரியர்களுக்கும் இன்று கனவில் நான் தெரிய வேண்டும்.

*******************

4 comments:

எறும்பு said...

//
2010 - அண்ணன் மகனான சூர்யா தம்பி மகளான சுருதியுடன் ஜோடியாக நடிக்கிறார்.இது தான் ஏழாம் அறிவா.//

Oh.. what a thinking..

:)

vijayakumar said...

"பதில் சொல்பவனுக்கு கோபம் வருவதேயில்லை.கேள்வி கேட்பனுக்கு தான் வரும்"

yes....its true...

பத்மா said...

குசும்பு

சங்கர் said...

//மயான என்று ஆரம்பிக்கும்.//

மயான பிரசவங்கள், எனக்கு அதில் வரும் நாயகன், நாயகி பெயர்கள் பிடிக்கும்,

வசு & ராதா