Wednesday, September 8, 2010

பாலசந்தர்,ஷங்கர் பாணியில்

பாலசந்தர்,ஷங்கர் படம் பார்த்திருந்தால் சில விஷயங்கள் பளிச்சென்று என்று தெரியும்.புரட்சிப்பெண் - இது எங்கு இருந்து ஆரம்பித்தது.அரங்கேற்றம் - இதிலிருந்து தான் தொடங்கியது என்று நினைக்கிறேன். கல்கி வரை புரட்சிப்பெண் தொடர்ந்து வந்தது.

ஷங்கர் படத்திலும் பிரச்சனைக்கே போகாத ஒருவன் அதாவது யாருக்கு என்ன தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்காத நாயகன் அவனுக்கு ஒரு பிரச்சனை வந்தப்பின் பொங்கி எழுந்து தட்டிக் கேட்பான்.ஜெண்டில் மேன்,இந்தியன்,முதல்வன்,சிவாஜி எல்லாம் இதில் அடங்கும்.

அது மாதிரி எப்போ நான் கதை எழுதினாலும் ஏன் பாதியிலே நிறுத்தி விடுகிறேன்.எனக்கும் அதை தாண்டி யோசிக்க முடியவில்லையா.குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகிறேனா.நான் என்ன பிரகாஷ்ராஜா. காதல் தோற்பதில்லை.காதலிப்பவர்கள் தான் தோற்கிறார்கள் என்று அடுத்த விஷயத்திற்கு போக.நான் அடுத்த படத்தை சொன்னேன்.  இருக்கிறது ஒண்ணே ஒண்ணு.அதை வைத்து தான் பில்டப் விடணும்.

காதல் தோல்விகளையோ வெற்றிகளையோ(சிங்குலரில் வாசிக்கவும் வெற்றியையோ தோல்வியையோ) நண்பர்களிடன் சொல்வதில்லை.இரண்டு சந்தர்ப்பங்களிலும் வா மச்சான் தண்ணியடிக்கப் போகலாம் என்கிறார்கள்.அதனால் அவர்களிடம் சொல்வதில்லை.

பெண்களிடன் பாதி சொல்வதுண்டு.பாதிக்கு மேல் சொல்லாமல் நிறுத்தி விடுவேன்.காதல் தோல்வி என்று பெண்களிடன் புலம்புவதே அவர்களைக் கவரத்தான் என்று அடிக்கடி சொல்லி வருபவன் நான். அதே மாதிரி நான் மகான் அல்ல படத்திலும் வந்து தொலைத்தால் இனிமேல் இவர்களிடமும் சொல்லக்கூடாது. பசங்க கேட்பது மாதிரி நடிப்பார்கள்.பெண்கள் சுவாரஸ்யமாக கேட்கிறார்கள். பாதியில் அந்த சுவாரஸ்யத்தைக் கெடுப்பது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. ஏதாவது காரணம் சொல்ல வேண்டுமே. இப்படி கொஞ்ச வருடங்களுக்கு முன் அக்காவிடம் ஸ்கீரின் ப்ளேவோடு விவரித்துக் கொண்டிருந்தேன்.

முதல் முறை சரியாக கதை பாதியில் நிற்கும் போது ஒன்றும் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தால் நீங்க கேக்குறீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்.ஊம் கொட்ட வேண்டியது தானே.எனக்கு சொல்ல இஷ்டமில்லை என்று பாதியில் நிறுத்தி விட்டேன்.

இரண்டாவது முறை சரி ஊம் கொட்டிக் கொண்டே கேட்கிறேன் முழுசா சொல்லணும் என்று சொல்லியபடியே கேட்கத் தயாரானார்கள்.மறுபடியும் முதலிருந்து கதையை ஆரம்பித்தேன்.ஊம் பலமாக இருந்தது. சரியாக பாதியில் நிறுத்தி விட்டு அடுத்தவன் கதையில் என்ன இவ்வளவு ஆர்வம்.சொல்ல முடியாது என்று சொல்லி விட்டேன்.

எரிச்சலில் அவர்களும் - இவ்வளவு நாள் நீதான் ஏமாந்து விட்டேன் என்று நினைத்து விட்டேன்.நல்ல வேளை அந்த பொண்ணு உங்கிட்ட இருந்து தப்பிட்டா.கதை சொல்றானாம் கதை. ஒழுங்கா ஓடிப் போயிரு மவனே.இவனுக்கு வர்ற பொண்ணுக்கிட்ட இந்த கதையை சொல்லியே சாவடிப்பானே.எந்த பொண்ணு இவன் கிட்ட மாட்டப் போகுதோ.

அடுத்த முறையும் கதை சொல்ல ஆர்வம்.என்ன காரணம் சொல்லி பாதியில் நிறுத்துவது என்று தெரியவில்லை. ஒரு கதையைப் பாதியில் விட்டால் இவ்வளவு கோபம் ஆகாது.பசங்க மாதிரி இருங்க. ஒரு குவாட்டர் இல்ல ஒரு கட்டிங் வாங்கித் தர்றேன்னு சொன்னா போது எவ்வளவு நேரம் அனத்தினாலும் பொருத்துப்பாங்க.ஆனா இதுவரைக்கும் அந்த கதையோட முடிவு என்ன என்று எனக்கே தெரியவில்லை. எனக்கு தெரிஞ்சா நான் சொல்ல மாட்டேன்னா என்ன.என் தொல்லை பொறுக்க முடியாமல் சொந்த காசில் சரக்கடிக்கிறாங்க பசங்க.

ரசிக்கிற வரைக்கும் பாலசந்தர்,ஷங்கர் மாதிரி அடிச்சி விடுவோம்.அதுக்குள்ள(படிக்கிறவங்க சுதாரிக்கிறது முன்னாடி) மிச்சப்பாதி சிக்கிரும்னு நினைக்கிறேன்.எப்படியும் இன்னைக்கு உஷார் ஆயிருவாங்க.