Wednesday, September 15, 2010

அடுத்த ரவுண்ட் சண்டையும்,மன்னிப்பும்

கேபிள் சங்கர் ஒரு அருமையான படத்தை எடுத்து விட்டு எல்லா வினியோஸ்தர்களுக்கும் போட்டு காட்டுகிறார்.படம் நன்றாக இருந்தாலும் கவர்ச்சியா எதுவும் இல்லாத காரணத்தால் வாங்க மறுக்கிறார்கள். தயாரிப்பாளர் அப்படி ஒரு காட்சியை சேர்க்கச் சொல்லி நிர்பந்தம் செய்கிறார்.ஒரே நாளில் முடிக்கச் சொல்லி உத்தரவு. அவர் படத்தின் தொழில்நுட்ப உதவியாளர்கள் யாரும் வர முடியாத சூழ்நிலை. உதவிக்குப் பதிவர்கள் செல்கிறார்கள்.

சனிக்கிழமை மாலை

முதலில் லக்கியும், அதிஷாவும்

கேபிள் : லக்கி நீங்க தான் உதவி செய்யனும்.

(காட்சியை விளக்கிய உடன் லக்கியின் முகம் மாறுகிறது)

லக்கி : நான் இருபது நாட்களுக்கு ஒரு முறை தான் சண்டை போடுவேன்.போன மாசக் கோட்டா வினவு கூடச் சண்டை போட்டு முடிஞ்சு போச்சு.அடுத்த கோட்டா வர இன்னும் பத்து நாள் இருக்கு. இப்பத்தான் ஆபாசமா எழுதுறான்னு ஒரே சண்டை.இதுக்கும் உதவினா எனக்கு எதிர்வினை எழுதவே நேரம் பத்தாது.

கேபிள் : அப்ப அதிஷா நீங்க ?

அதிஷா : தோழர் இல்லாத இடத்துல எனக்கு என்ன வேலை.எவனாவது ஏதாவது எழுதினா அலங்கல் மாதிரி புது வார்த்தைகளைப் போட்டுப் பதிவு எழுதுவேன். நிறைய வேலை இருக்கு வரட்டுமா. லாலே லாலலி லாலே.

கேபிள் : அப்ப உதவி ?

லக்கி : இவன் தான் என் புது சிஷ்யன் அரவிந்த்.இவன் ஏதாவது செய்வான்.

அரவிந்தை ஏற இறங்க ஒரு கைப்புள்ளையைப் பார்ப்பதுப் போல் பார்கிறார் கேபிள் .

கேபிள் : சரி பிரபலப் பதிவர் லிஸ்ட எடு.

(அரவிந்த் எழுதி கொடுத்த பிறகு சரிப் பார்க்கப்படுகிறது.)

லிஸ்டில் இருந்து ஒவ்வொரு பெயராக வாசிக்கப்படுகிறது.

அரவிந்த் : பாஸ் வால்பையன் ?

கேபிள் : இப்போ வருவார்.படத்தை அவரிடம் காட்டக் கூடாது.இல்ல நம்ம படத்தப் பார்த்து உலக சினிமா என்று சொல்லி விமர்சனம் எழுதுவார். ஒருத்தன் பாக்க மாட்டான்.

வால்பையன் உள்ளே வரவும் சரக்கும்,ஊறுகாயும் கொடுத்து மட்டை ஆக்கப்படுகிறார்.

அரவிந்த் : நையாண்டி நைனா?

கேபிள் : வேண்டாம் உள்ளவே விடாதே.இந்தக் காட்சிய இப்படி எடுத்தா எப்படி இருக்கும் கேமிராவ நம்மப் பக்கமாத் திருப்பி வைச்சுருவான்.

அரவிந்த் : அப்ப குருஜி ?

கேபிள் : வேண்டவே வேண்டாம்.முத்தக் காட்சியையே நல்லா லைட் போட்டுக் காட்டுறான்.இந்த காட்சிய இருட்டுல எடுக்கலாமா என்று பதிவு போடுவார்.அத ஆதரிச்சோ எதிர்த்தோ பைத்தியக்காரன் பதிவுப் போடுவார்.அது அப்புறம் வளர்மதி வரைக்கும் போகும்.

அரவிந்த் : அப்ப குசும்பன் ?

கேபிள் : அடுத்தவங்களைக் கலாய்ச்சே 300 ஃபாலோயர் வைச்சு இருக்கார்.இப்போ இங்க வந்து ஐடியா எதுவும் கொடுத்து அப்புறம் அது அவர் படமா என் படமானு எனக்கே சந்தேகம் வந்துரும். ஏற்கனவே சேது படத்த நான் எடுக்க உதவினேன்னு பதிவு போட்டாரு.( மோகன் வைத்யாவிற்கு டி.வி.எஸ் 50 ஒட்ட சொல்லி கொடுத்தது நம்ம குசும்பன் தான்)

அரவிந்த் : அப்ப கார்க்கி ?

கேபிள் : கொத்துப் பரோட்டா எழுதும் போதே ஆபாசமா இருக்குனுப் பின்னூட்டம் போடுவார். இந்தக் காட்சியும்,நடிக்கப் போகும் வில்லனைப் பத்தி கேள்விப்பட்டா எல்லோரையும் மொக்கை போட்டேத் தொலைச்சுருவார்.

அரவிந்த் : அப்படி என்ன சீன் ?

கேபிள் : எல்லாம் ரேப் சீன் தான்.

அரவிந்த் : அப்ப நானு?

கேபிள் : நானு அப்படி ஒரு பதிவரா?. நான் கேள்விப்பட்டதே இல்லை.

அரவிந்த் (கோபமாக) : நான் என்னை சொன்னேன். பீ கேர்புல்.

கேபிள் : டேய் காமடி ஃபெல்லோ. உன்ன மைண்ட்ல வைச்சு இருக்கேன். அடுத்தப் படத்தில் யூஸ் பண்றேன்.

அரவிந்த் : முரளிக்கண்ணன்

(முரளிக்கண்ணனுக்குப் போன் போடுகிறார்.)

கேபிள் : (காட்சியை விளக்கி விட்டு) ஏதாவது சொல்லுங்

முரளி : ஐம் எ காம்பிளான் பாய்.

கேபிள் : இதுக்கு சொல்லுங்க.

முரளி : ரொம்ப நன்றி. பதிவுப் போட மேட்டர் இல்லாம இருந்தேன். தமிழ் படத்தில் வந்த ரேப்ப வைச்சு ஒரு பதிவு எழுதி கல்லாக் கட்டிருவேன்.

கேபிள் : நீ வந்த ராசி சரியில்லை வெளியே போய் நில்லு.யாரையும் உள்ளே விடாதே.

நர்சிம் வருகிறார். அவர் மேல் ஒரு தனிப்பட்ட பாசம் அரவிந்த் வைத்து இருப்பதால் அவருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படுகிறது.

கேபிள் : நீங்க இந்த காட்சிக்கு ஏதாவது சொல்லுங்க

நர்சிம் : மாறவர்மன்ல இருந்து ஒரு காட்சி. வில்லன் நாயகியைக் கெடுக்க முயற்சி செய்யும் பொழுது நாயகன் வந்து விடுகிறான்.

கேபிள் : இது தான் மாறவர்மனோட கடைசி எப்பிசோட்னு நினைக்கிறேன். அதுக்கு நான் தான் மாட்டுனேனா ?

நர்சிம் : இது ஒரு மாஸ்டர் பீஸ்.

கேபிள் : நீங்க என்ன ஒரு காமடி பீஸ் மாதிரியே டீல் பண்ணுறீங்க.இந்த அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு.

நர்சிம் சோகமாக வெளியே வருகிறார்.

அரவிந்த் : மீ த பர்ஸ்டா ?

நர்சிம் : ஆமா பதிவப் படிச்சுட்டுப் பின்னூட்டம் மட்டும் போடாத.(சிரிக்கிறார்) சும்மா சகா. மீ தெ செகண்டு.

இந்த காட்சிக்கு ஏது லாஜிக்.ஒன்லி மேஜிக்.இசையை முடிவு செய்வோம் என்று அரவிந்தை அழைக்கிறார்.

கேபிள் : இசைன்னா என்ன ?

அரவிந்த் : இசைன்னா இசை.

கேபிள் : இப்பவே கண்ண கட்டுதே. சரி விடு தண்டோரா எங்கே ?

அரவிந்த் : பாஸ் ஒரு சின்னத் தப்பு நடந்து போச்சு. பாலா வீட்டு முன்னால தண்டோரா போட சொன்னத தப்ப எடுத்துகிட்டு நம்ம பதிவர் தண்டோராவ தூக்கி போட்டு கால் உடைஞ்சு போச்சு.

கேபிள் : என்ன பண்ணாலாம் ?

அரவிந்த் : நாடோடி இலக்கியன்.

கேபிள் : இப்ப தான் சங்க கடிக்கிற மாதிரி யோசனை சொல்லி இருக்கே. பாரேன் உனக்கு உள்ளேயும் என்னமோ இருந்திருக்கு.

நாடோடி இலக்கியன் : இதுக்கு சங்கர் கணேஷ் படத்துல ஆடு சண்டை போடும் போது ஒரு இசை வரும்.அத போடுவோமா?

கேபிள் : என்ன வைச்சு காமடி கீமடி பண்ணல தானே ?
நாடோடி இலக்கியன் : சரி இன்னொரு சங்கர் கணேஷ் படத்துல...

கேபிள் : வேண்டாம் வலிக்குது.அழுதுருவேன். எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.ஆணியே இல்ல இசையே வேண்டாம்.

கேபிள் : ஆதிய கூப்பிடு

ஆதியை அழைக்கும் பொழுது அரவிந்த் ரமா அக்காக் கிட்ட உளறி மாட்டி கொள்கிறார்.கேபிளுக்கு போன் வருகிறது.

ஆதி : வீட்ல மாட்டிக்கிட்டேன்.குரல் கேட்கிறது " இதுக்குத் தான் காலையிலே இருந்து ஆங்கிள் பாக்குறேன்னு ஒரு வேலையும் பாக்கலையா ? ஒழுங்கா எல்லா வேலையும் முடிச்சுட்டு போங்க."

கேபிள் : யாரை கூப்பிடலாம்.

அரவிந்த் : ஜாக்கி சேகர்.

ஜாக்கிடம் காட்சியை சொல்லாமலே படம் எடுக்க சொல்லப்படுகிறது.

கேபிள் : வில்லன் ரெடியானு பாரு.

வில்லனை எதிர்பார்த்தால் சாரு வருகிறார் சட்டையை கழற்றி கொண்டே.

கேபிள் : எதுக்கு சட்டைய கழத்துறீங்க ?

சாரு : என் படத்தில் நான் ஆண்களைத் தான் இப்படிக் காட்டுவேன்.

கேபிள் : இது என்னோட படம்.

சாரு : அப்ப சரி.கேமிராவின் முன் என் முகத்தைக் காட்ட நான் சமரசம் செய்து கொள்வேன்.பேசினப்படி காசு கொடுக்கலைன்னா இந்த வார விகடனில் உங்க பேர் வரும்.

கேபிள் : அரவிந்த் நீ வெளியே போ. (நாயகிடம்) அந்த சேலையை கொஞ்சம் விலக்கு.கொஞ்சம் கிழி.

"பெண்ணே ஆடையைக் களையும் முன் சற்றே யோசி.." என்று குரல் வருகிறது.தேடி பார்த்தா நம்ம ஜாக்கி.

கேபிள் : ரேப்ல கிழியாத சேலை எங்கே இருக்கு சொல்லு ஜாக்கி.

ஜாக்கி : ஏற்கனவே என்ன பிட்டு படம் பாக்குறான்னு ஒரே சண்ட.இதையும் நான் செஞ்சா பிட்டுப் படம் எடுத்துட்டான்னு வந்துரும்.நான் வர்றேன்.

ஜாக்கி போனதோடு இல்லாமல் கூடவே அந்த பொண்ணையும் அழைத்துச் செல்கிறார்.

கேபிள் : பேக்கப்.

வெளியே வருகிறார்

அரவிந்த் : யூ த லாஸ்டா ?

ஆதியிடமிருந்து போன் வருகிறது.மணி காலை 6. சண்டே .

ஆதி : என்னை வீட்ல போட்டு கொடுத்ததே அந்த அரவிந்த் தான் அவன விடாதீங்க.

கேபிள் : அவன பிடிங்க.

அரவிந்தை பிடித்து கை,கால் எல்லாம் கட்டி 6.50 புரப்படும் தாதர் செல்லும் வண்டியின் அப்பர் பர்த்தில் போடப்படுகிறார்."ரேனிகுண்டா வந்தப் பிறகுக் கட்டை எடுத்து விடுங்கள்" என்று எச்சரிக்கை வேறு.
ரேனிகுண்டாவில் ஜெகநாதன் வருகிறார்.

அரவிந்த் : அண்ணே கட்ட அவுத்து விடுங்க.இதைச் செஞ்சா நான் உங்க காலடி நாய்.

ஜெகநாதன் : ஐயோ பாவம்னு பின்னூட்டம்,தமிழ்மண ஓட்டுப் போட்டா நீ எனக்குத் தெரியாம இவ்ளோ வேலை செஞ்சு இருக்க.

அரவிந்தின் வாயில் துணியை வைத்து அடைக்கிறார்.கடப்பா வந்தப் பிறகு எடுத்து விடுங்கள் என்ற கட்டளை வேறு.

அரவிந்த் (கண்ணாலே): யூ டூ காலடி...

ஜெகநாதன் : யா மீ டூ...

கடப்பா வந்தா யார் வந்து என்ன செய்யப் போகிறார்கள் என்ற பயத்துடன் பயணம் தொடர்கிறது.

சென்னையில் தயாரிப்புத் தரப்பில் அந்தக் காட்சியை எடுக்க வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள்.

16 comments:

இரும்புத்திரை said...

இதில் யாருக்காவது கோபமிருந்தால் இல்லை யாரையாவது நான் கேள்வி கேட்டால் போன வருடம் வந்த இந்த பதிவு தான் காரணம் என்று சொல்லலாம்.நான் மன்னிப்பு கேட்கிறேன்.

நீ தொடு வானம் said...

வம்பு இழுக்கணும் முன்னாடி வந்த பதிவோட லேபிள்ல புனைவுன்னு இருக்கு

வால்பையன் said...

யோவ்!

படத்தை காட்டிட்டு அப்புறமா மட்டை ஆக்குங்கய்யா!

இரும்புத்திரை said...

அண்ணன் இணை இயக்குனராக வேலை செய்யும் படத்தில் அந்த காட்சி உண்டு.சரக்கும் உண்டு.

வால்பையன் கிட்ட இந்த வாரத்தில் ரெண்டாவது மன்னிப்பு.விஜயகாந்துக்கு தெரிஞ்சா நான் கட்சியில இல்லனாலும் நீக்கிப் போடுவாரே.

மதுரை சரவணன் said...

செம கலக்கல்... வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

எதுக்கு ஓய் சண்டை?

பாருமேன் எவ்வளவு லக்ஷ்மிகடாட்ஷம் (ஸ்பெல்லிங் சரிதானா?) சிரிப்பில்!

ஃபூல், ஃபூல்! ( அக்கன்னாவை எடுத்துப் புடாதீர்) :-)

ஜாலி ஃபெல்லோ!( இதில் நீர் அக்கன்னாவை எடுத்தாலும் கொல பாதகமில்லை) :-))

உடன்பிறப்பு said...

தயாரிப்பாளர் அப்படி ஒரு காட்சியை சேர்க்கச் சொல்லி நிர்பந்தம் செய்கிறார்

/\*/\

தயாரிப்பாளர் யாருங்க "பாஸ்"?

இரும்புத்திரை said...

அடுத்து ஒரு பஞ்சாயத்தா.அவங்க பாலிடால் குடிச்சிருவாங்க.

கார்க்கிபவா said...

ennathaa sagaa achu?

avlothaana ?

மார்கண்டேயன் said...

அப்பிடியே, கடப்பா தாண்டி மும்பை போயிடுங்க, ஒருத்தராவது காப்பாத்திற மாட்டாங்களா . . .

பஞ்சாயத்து நடத்துங்க அரவிந்த், யாரும் பாலிடால் குடிச்சு பாத்ததில்ல . . .
ஆனா, ஒரு லெவலுக்கு மேல கலக்குறீங்க . . . வாழ்த்துகள்,

Unknown said...

ரெண்டு தடவை மன்னிப்பு கேட்டுட்டான்.. நாங்க ரெண்டு தடவை ஜெயிச்சிட்டோம்..

இன்னொரு தடவை மன்னிப்பு கேட்டுட்டா முக்கா முக்கா மூணு தடவை.

எல் கே said...

inthap padathil mukilan illai. atharkku mannipu kelungal

அலைகள் பாலா said...

///ஃபூல், ஃபூல்! ( அக்கன்னாவை எடுத்துப் புடாதீர்) :-)////

ஹா ஹா ஹா.

கோவி.கண்ணன் said...

//படம் நன்றாக இருந்தாலும் கவர்ச்சியா எதுவும் இல்லாத காரணத்தால் வாங்க மறுக்கிறார்கள்.//

படத்துல பாண்டி பஜாரில் ஒரு சேசிங் சீன் வச்சு, நாயுடு ஹால் எதிரில் மடக்கிற மாதிரி வச்சிருந்தால் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காதுன்னு கேபிளுக்கு தெரியாதா ?
:)

Jackiesekar said...

ஜாக்கி போனதோடு அந்த பெண்ணையும் அழைத்து போகின்றார்...தம்பி நல்லா இரு..ஏதோ ஒன்னால முடிஞ்சது..

இரும்புத்திரை said...

ஜாக்கி அண்ணே நீங்க காப்பாத்தி கூட்டிக்கிட்டு போறீங்க