Thursday, September 2, 2010

பஸ் - இது உங்கள் சொத்து

அமர் பப்பில் கோக் மட்டும் குடித்ததால் ரொம்ப நேரமாக நோட்டம் விட்ட பெண் இவன் அதுக்கு சரி வர மாட்டான் என்று மனதுக்குள் துப்பியிருப்பாள் என்று புலம்பிக் கொண்டிருந்தான். அவள் அமரிடம் பேசிய போது எழுந்த வாசனையை நுகர்ந்ததால் போதையாகி விட்டானோ என்று நொந்தபடியே ஆறுதல் சொன்னேன். என் மேல எல்லாம் நாலு நாளைக்கு முன்னால குடம் குடமா _____ எடுக்க பாத்தாங்க.உஷாரா இருந்தும் கொஞ்சம் மேல பட்டிருந்தாலும் ஒண்ணும் ஆகாத மாதிரியே நான் எல்லாம் சுத்தல என்று சொன்னதும் தான் தாமதம்.

உனக்கு பச்சை மிளகாயை வாயில் தேய்த்தாலும் அந்த எரிச்சலுடன் பூசணிக்காய் தான் சைசுல பெருசுன்னு உண்மையை சொல்லுவ.நீயும் நானும் ஒண்ணா என்று கேட்டு விட்டு திரும்ப புலம்ப ஆரம்பித்து விட்டான்.

அவன் புலம்பல்களைத் தான் கதையாக தட்டச்சு செய்கிறேன். என்ன தலைப்பு வைக்க போற என்று கேட்டான். தோழர் என்று சொன்னதும் நீ உருப்படியா செய்றது தலைப்பு வைக்கிறது மட்டும் தான்.தலைப்புக்காகவே சில பெயர் உள்ளே வருவாங்க. உனக்கு கவனத்தை ஈர்க்கத் தெரியுது.உனக்கு அவங்க மேல கோபம்.யூ ஆர் அட்டேன்ஷன் சீக்கிங் கைய் என்று சொல்லி விட்டு படுத்தவனிடம் சரிங்க தோழர் என்று நான் இந்தப்பக்கம் திரும்பி கொண்டேன்.

ஒரு நாள் வியட்நாம்,ரஷ்யா,சீனா தேசத்து மக்கள் இருந்த பப்புக்குப் போனதற்கே தோழராகி விடுவான் போல என்று நினைத்து கொண்டே கதையை தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன்.

தோழர்..

நையாண்டி,அரசியல்,நிகழ்வுகள்,மொக்கை..

நேற்று முந்தினம் வெற்றிகரமாக வேலை தோல்வியில் முடிந்ததால் அமரை இழுத்து கொண்டு பப்பிற்கு போக நண்பர் முடிவு செய்ய..

தொடரும்..

*******************************

நீயா நானாவில் கலந்து கொண்டிருந்தால் நிச்சயம் ப்ளாக்கர்களுக்கு எதிர் வரிசையில் அமர்ந்திருப்பேன்.

கற்றுக் கொடுத்த வித்தையை என்று தான் துரோணர்களிடம் காட்டுவது.

விஜயகாந்த் போல புள்ளிவிவரம் சொல்லி பாகிஸ்தானில் தான் அதிகம் பேர் இணையத்தில் தேடுகிறார்கள் என்று சொல்லியிருப்பேன்.எதையோ என்னத்தையோ.

ஒரு பாயிண்ட்டை சொல்லியிருக்கலாம்.எதிர் தரப்பில் இருந்து யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இணையத்தில் கும்மியடிப்போர் பக்கம் சேரலாம்.இந்த பக்கமிருந்து ஒரு போதும் சாத்தியமில்லை.ஆட்குட்டில் இருந்து பேஸ்புக்.ப்ளாக்கிலிருந்து டிவிட்டர்,பஸ் என்று மாறுகிறார்கள். மாற்றமில்லாத மாற்றம் இணையம்.

கோபிநாத் அதே நிகழ்ச்சியில் ராத்திரியில் கணினி பயன்படுத்தும் நண்பனை மூஞ்சிலே மிதிக்கலாம் போலிருக்கும் என்று சொன்னவரை அதே நண்பருக்கு அட்வைஸ் செய்ய சொன்னார். இதை வலுக்கட்டாயமாக எல்லோருமே மறந்து விட்டார்கள். கோபி நாத் இது போல செய்து நிறைய நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன்.

நாடோடிகள் அபிநயாவின் திறமையை நேரில் பார்த்தப்பின்னும் எந்த நம்பிக்கையில் என்று கேட்டாராம். என்ன கொடுமை இது.முதல் வாய்ப்பு தந்த சசிகுமார்,சமுத்திரகனியிடம் கேட்டது அவருடைய ஆச்சர்யத்தால் அல்ல எல்லோர் மனதிலும் பிரதிபலித்திருக்கும். படம் வெளி வரும் முன் அதை பப்ளிசிட்டிக்குப் பயன்படுத்தியிருந்தால் இது எப்படி சாத்தியம்,எந்த நம்பிக்கையில் என்ற கேள்வி எழுந்திருக்கும். அதை வெற்றிக்குப் பின்னும் கேட்ட கோபி நாத் குற்றவாளி தான்.முடியல சாமி.நம்மால் சாத்தியப்படாத ஒன்றை ஒருவன் கேட்கும் போது,செய்யும் போது அடி வெளுக்கிறோம்.

நித்யானந்தாவின் காலை கழுவி பின்னர் திருமணம் செய்து கொண்ட நண்பன் ஏதோ ஒரு ஆனந்தாவாக மாறியிருந்தான்.எனக்கு அப்பொதெல்லாம் வேலையே இருவரையும் கேலி செய்வது தான். கோபத்தில் முறைப்பான். நித்தி மாட்டியப்பின் அவன் ஆர்குட் பக்கம் முழுவதும் கேலிகளால் நிரம்பியிருந்தது. அவன் பழைய பெயருக்கு மாறி விட்டான். அந்த சமயத்தில் நித்தியின் ஆதரவாளர்கள் ஒருவரரையும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை. நித்தி செய்ய தவறுக்கு சாருவை அடித்தார்கள் அதிலாவது ஒரு நியாயமிருந்தது.அது தான் சாக்கு என்று சாருவின் ஆதரவாளர்களையும் வழக்கம் எல்லா நிகழ்வுக்கும் பொங்குமிடத்தில் அனானி மூலமாக வம்பிழுத்தார்கள். ஆனால் கோபி நாத் சாருவை மட்டும் தான் கேள்வி கேட்டார் என்று இந்த இடத்தில் சொல்லிக் கொள்கிறேன். அது சாரு - கோபி - ஆண்டனி - கோபி - சாரு அவர்கள் வெளுத்துக் கொள்வார்கள்.

விஜய் அசிங்கப்பட்டு விட்டார் என்று ரசிகர்கள் கொந்தளிப்பதைப் பார்த்தாலே விஜய் வித்தியாசமாக நடிக்க முடிவு எடுத்தாலும் அதை கை விட்டு விடுவார் என்பது சர்வ நிச்சயம். அடுத்து ஏதாவது படம் வந்து வெற்றி பெற்றால் அதே கோபிநாத் விஜய் கிட்டே வழிவார். வில்லு படம் வெற்றியடைய எல்லா சேனலுக்கும் விஜய் போனார்.அதே மாதிரி விஜய் திரும்பவும் போகலாம்.நாளையே இந்த இரண்டு பேரும் சேர்ந்து கொள்வார்கள்.ரசிகர்கள் அடுத்து யாராவது சொல்வார்களா என்று காத்திருக்க வேண்டியது தான்.

விஜய் ரசிகர்கள் இன்னும் பத்து வருடத்தில் யாராவது ஏதாவது சொன்னால் தீக்குளிக்காமலிருந்தால் ஆச்சர்யம் தான். என்ன இருந்தாலும் விஜய் ரசிகர்கள் செய்தது நியாயம் தான்.விஜய் கிட்ட போய் நல்லா நடிக்க சொன்னா ரசிகர்கள் கோபப்படத்தான் செய்வார்கள்.அவர் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றார்.இல்லாததை கேட்டால் கோபம் வரத்தான் செய்யும். நாளையே எந்த நடிகர் நன்றாக நடனம் ஆடுவார் என்று கேள்விக்கு விஜய் என்று பதில் வரலாம்.விஜய் பெயரை எப்படி விஜய் டிவி பயன்படுத்தலாம் என்று ரசிகர்கள் கொந்தளிக்காமலிருந்தால் சரி.காவல்காரன் அலைஸ் காவல் காதல் அலைஸ் காவலனை யாராவது புறக்கணியுங்களேன்.

***************************

5 comments:

இரும்புத்திரை said...

தற்போது விஜய்க்கு டைம் சரி இல்லை அவரின் கடைசி ஐந்து படங்களும் எங்கள் கையைக் கடித்துவிட்டது. இவருக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருந்தாலும், ஒரே மாதிரியான வேடத்தில் நடித்துவருவதால் அவரோடு சேர்ந்து அவரது தலைவலியை நாங்களும் பங்கு போட்டுக்கொள்கிறோம். இதை இவர் திருத்திக்கொள்ளாமல் போனால் அவரின் சினிமா எதிர்காலம் பிரகாசமாக இருக்குமா என்பது சந்தேகமே…! விஜயை போலவே அஜித்தின் நிலையும் ஒண்ணும் சொல்லிக்கொள்வதுபோல் இல்லை.

சொன்னது கலைபுலி சேகரன்.போன் போட்டு விஜய் ரசிகர்கள் திட்டுவாங்க பாருங்க.பண்ணினா தெரியும் யார் திட்டு வாங்குவாங்கன்னு.

விஜய் அடுத்த படம் வெற்றியாகும் வரை பேச மாட்டார்.சைலன்ஸ் பேசிக்கிட்டு இருக்கேன்ல இப்படி எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் ஒன்றுமே சொல்ல மாட்டார்கள்.

நீ தொடு வானம் said...

தலைப்பு ஈர்க்கவில்லையே.அமர் சொன்னதுக்காக இப்படியா மாறணும்.தோழராக மாறாமலிருந்தால் சரி.

இரும்புத்திரை said...

கவனத்தை ஈர்க்காமல் போகட்டும்.அப்புறம் சண்டைக்கு வந்தா பயந்துருவேன்.

ராவணன் said...

ஏன் பஸ் மட்டுமா?..
கார்..ரிக்க்ஷா,சைக்கில்..லாரி...
ஸ்கூட்டர்..எல்லாம் எங்கள் சொத்தில்லையா..?

ராஜவம்சம் said...

//உனக்கு பச்சை மிளகாயை வாயில் தேய்த்தாலும் அந்த எரிச்சலுடன் பூசணிக்காய் தான் சைசுல பெருசுன்னு உண்மையை சொல்லுவ.நீயும் நானும் ஒண்ணா என்று கேட்டு விட்டு திரும்ப புலம்ப ஆரம்பித்து விட்டான்.//

இந்த வரப்பு தகராரு எப்ப தீரும் சார்.