Wednesday, September 1, 2010

தாக்கங்கள்

குமரனுக்கு வயது ஓட்டுப் போடும் வயது வந்து ஆறு மாதம் முடிந்திருந்தது.எல்லா தேர்வுக்கும் விடுதியில் அறை எடுப்பது வழக்கம்.வீட்டில் மூன்றாம் செமஸ்டர் தேர்வுக்காக அதே விடுதியில் அறை எடுத்துக் கொள்ள முடிவு செய்தார்கள்.முதல் மூன்று நாட்கள் ஒழுங்காகக் கடந்தது.சாப்பிடச் செல்லும் சமயம் இருவர் பேசிக் கொண்டது காதில் விழுந்தது."நூறு ரூபாய் தான்..அந்த பெருக்கிறப் பொண்ணு வந்துரும்..".கேட்டதில் இருந்து மனம் குரங்காய் ஆடியது.கிளை விட்டுத் தாவியது.

மறுநாள் அந்தப் பெண் அறைக்கு வந்ததும் கை அனிச்சையாய் சட்டைப் பையைத் தடவியது.நூறு ரூபாய் இருந்தது.இருந்தாலும் ஒரு பயம்.அவளைப் பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டான்(கஷ்டப்பட்டு).அடுத்து அவள் வரும் நாட்களில் எல்லை மீற வாய்ப்பு இருந்ததால் அவள் வரும் நேரத்தில் தூங்குவான்..குளிப்பான்..சாப்பிடப் போவான்..பெருக்காமல் அறை முழுவதும் குப்பை..
அப்பா வந்தார்.அறை முழுக்க தூசி.."என்ன அவ வர்றதே இல்லையா.." என்று கோபத்தில் கத்தினார்.

"ம்..ம்..இல்ல.." "அவ வந்தா மனசு முழுக்க தூசி..அழுக்கு.." என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

அவள் வந்து போனப் பிறகு குரங்கு மனம் மரம் ஏறியது குமரனுக்கு.சொல்லாமல் கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்தான்..

வீட்டில் "என்னடா இந்தியா விளையாடினா இருப்பு கொள்ளாதே..வந்துருவியே..என்னமோ பண்ணித் தொலை.." என்று திட்டு.

பொழுது போகாமல் சேனல் மாற்றி தெலுங்கு படம் பார்த்தால் வேலைக்காரியிடம் வம்பு பண்ணி துடைப்பத்தால் ஒரு சிறுவன் அடி வாங்கி கொண்டு இருந்தான்.

"அடிக்குத் திட்டு பரவாயில்ல.." என்று நினைத்து கொண்டவன் தூங்கிப் போனான்.கனவில் துடைப்பம்..அழுக்கு..தூசி..

மறுவருடம் திருப்பதி போய் விட்டு வரும் வழியில் ஒரு பெண்.தெலுங்கு மொழி பேசிக் கொண்டு இருந்தாள்.குமரனைப் பார்த்து சைகை செய்தாள்.நிச்சயம் நமக்கு இல்லை இந்த கையாட்டல் என்று நினைத்துக் கொண்டான் குமரன்.திரும்பவும் கையாட்ட மனசு கொஞ்சம் சலனப்பட்டது
குமரனுக்கு..சேலை விலகி லேசான நியான் வெளிச்சத்தில் சலனப்படுத்தியது.உறங்க நினைத்தாலும் மனம் வரவில்லை.

"இக்கட ரா தொகுனேன கொடுக்கு.." என்று அழைத்தாள் ஒரு நிறுத்தத்தில்.

போக நினைத்தாலும் பயம் காரணமாக அவளைப் பார்க்காமல் படுத்துக் கொண்டான் குமரன்.நல்ல தூக்கம்.கனவில் அவளா..சரியாகத் தெரியவில்லை..தமிழக எல்லையில் முழிப்பு வந்து அவளைத் தேடினால் அவள் இறங்கியிருந்தாள்.

கிடைத்தச் சந்தர்ப்பத்தை விட்டு விட்டோமே என்று விதியை நொந்துக் கொண்டு தூக்கம் வராமல் தவித்தான்.வீட்டிற்கு வரும் போது மணி 12.

வந்ததும் திரும்ப ஒரு படம்..கமல் நடித்த சிகப்பு ரோஜாக்கள்..கமலை வழிய வைத்து வலிய வரவழைத்து அடி வாங்கி தந்தாள் ஒரு பெண்..பூஜையறை படத்தில் தெரிந்த பாலாஜிக்கு நன்றி சொல்லிக் கொண்டான்.(விளையாடுவதே அவன் தான் என்று புரியாமல்)

வேலைக்கு சேர்ந்தப் பிறகு தண்ணியடிக்க போகலாம் என்று ஒரு இடத்திற்கு முதல் தடவையாக நண்பர்களுடன் போனான். அது வேறு மாதிரியான இடம்.சுற்றிலும் பெண்கள்.யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை. ஒரு பெண் ரொம்ப பிடித்திருந்தது.பாலாஜி என்று பெயர் காட்டி அலைபேசி அழைத்தது..எதோ புரிந்தது போல் இருந்தது..இதையே காட்டி வெளியே வந்தான்.அடுத்த ஐந்து நிமிடத்தில் பரபரப்பு."அந்த" பெண்கள் சந்தில் நுழைந்து சடுதியில் மறைந்தார்கள்.நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள்.

ஒரு நண்பன் கோவமாக கத்தினான்.."நீ இருந்திருந்தா இப்படி எல்லாம் நடக்குமா.."

குமரன் அமைதியாக சொன்னான். "நான் இருந்தால் நான் மட்டும் மாட்டி இருப்பேன்.."

இன்னொரு நண்பன் "அப்போ நாங்க மாட்டுனா பரவாயில்லையா.."

குமரன் "நுங்கு தின்னவன் மாட்ட மாட்டான்.ஆனா நொண்டி தின்னவன்..இதெல்லாம் உனக்குப் புரியாது.." சொல்லி விட்டு தொலைக்காட்சியைப் போட்டால் "சித்திரம் பேசுதடி படம்.."

நரேனை அடித்து இழுத்து வந்தார்கள் ஜட்டியோடு.பாவனாவைக் காட்ட, கரண்ட் போனது.குமரனுக்குப் பிடித்தப் பெண்ணும் ஒரு மல்லு தான்..

****************

சில வருடங்கள் கழித்து..

தியேட்டரில் விஜய் படம்..

விஜய் பீர் பாட்டிலை எடுத்து வில்லனின் தலையில் உடைப்பதைப் பார்த்த விசிலடிச்சான் குஞ்சு ஒன்னு "இது மாதிரி தாண்டா நானும் எவன் தலையிலையாவது உடைக்கணும்.."

குமரன் மனதுக்குள் நினைத்து கொண்டான்."நெஜத்துல நீ அடித்தான் வாங்குவ..எல்லாம் சினிமாவோட தாக்கம் தான்.."

****************

2 comments:

நீ தொடு வானம் said...

வீக்கங்கள்

இரும்புத்திரை said...

இது ஒரு பழைய கதை.மீள் பதிவு.சோ நோ வீக்கங்கள்.ஒன்லி ஏக்கங்கள்.