Friday, September 17, 2010

பு..................................................

ஒரு வேலை வெற்றிகரமாக தோல்வியில் முடிந்ததால் அமரும்,நண்பர் ஒருவரும் பப்பில் அமர்ந்திருந்தார்கள்.சுற்றிலும் வியட்நாம் பெண்கள்.கம்யூனிச நாட்டில் பெண்களின் நிலையை நினைத்தால் சரக்கு அடிக்காத அமரும் சரக்கடித்து விடுவான். வீட்டு வேலை செய்யப் போவதாக விசா எடுத்து விட்டு இங்கு வேறு வேலை செய்கிறார்கள்.கூடவே போதை பழக்கமும் உண்டு.

நண்பருக்கு தெரிந்த பப் போல.பெண்கள் நிறைய அவரிடம் சகோதரன்,மகன் என்று உறவு பாராட்டிக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல அமர் கோக் அடித்து கொண்டிருக்க யாரோ நண்பருக்கு தெரியாத பெண் போல. அமர் தான் எளிதான டார்கெட் என்று நினைத்து அவனிடம் பேச.கண்களை சந்திக்க முடியாமல் பரிதாபமாக நண்பரை பார்க்க அவளும் விடாமல் எந்த ஊர்.இந்த ஊரை சொல்லுங்கள் என்று நண்பர் சொல்ல சொல்ல அமர் பொய் சொல்ல தெரியாமல் இந்தியா என்று சொல்லி விட இன்னும் கண்களால் முதுகைத் துளைக்க ஆரம்பித்தாள்.

அமர் மனசில ராஜியை நினை ராஜியை நினை என்று நினைத்து கொண்டாலும் ராஜியின் முகம் ஞாபகம் வராத காரணத்தால் வலுக்கட்டாயமாக வேறு வழியேயில்லாமல் வெள்ளைக்காரனுடன் வந்திருந்த பெண்ணை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அந்த பெண் ஜெயபாரதி மாதிரி இருக்கிறாள் என்று நினைத்து கொண்டாலும் இவள் கண் பார்வை இன்னும் துளைக்க ஆரம்பித்தது. முகத்திலிருந்த மேக்கப்பில் அமரின் முகம் தெரிந்து விடும் போல.

இடதுக்கை ஆட்டக்காரர்களுக்கு திணரும் சச்சின் போல அமர் திணறிக் தத்தளித்தான். அமரின் நிலை கொள்ளாத்தவிப்பைப் பார்த்து ஆடைகளை கொஞ்சம் சரி செய்வது போல் ஒரு பவுண்சரை வீச கில்லி விஜய் போல எப்போ உன் கண் மேல நம்பிக்கை இல்லாம உன் டிரஸ்ல கை வைச்சியோ அப்பவே நீ தோத்துட்ட என்று நினைத்து கொண்டு அவளை கண்டுக் கொள்ளாமல் தமிழில் பேச ஆரம்பித்திருந்தார்கள்.

அவள் இன்னும் பக்கத்தில் இருந்தாலும் கண்டுக் கொள்ளாமல் பேசிக் கொண்டாலும் அவளை அனுப்ப வழியே இல்லாமல் நண்பர் அவளிடம் சொன்னார். அவன் ஆளு நீ பக்கத்தில் இருக்கிறதைப் பாத்தா உன்னை வெட்டியே போட்டுருவா என்று சொல்ல அமர் நினைத்து கொண்டாம் அவளை ஏன் வெட்ட போகிறாள்.என்னை வெட்டுவாள்.

அவள் போனதும் வீட்டிற்கு போகலாம் என்று அனத்த ஆரம்பித்த அமரை ஆச்சர்யமாக பார்த்த நண்பருக்கு தெரியாது அமருக்கு ராஜி முகம் ஞாபகத்திற்கு வந்தது.

#புண்ணாக்கு.

இதுக்கு மன்னிப்பு எல்லாம் கேக்க முடியாது.

7 comments:

நீ தொடு வானம் said...

நான் புனைவோன்னு நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி படிச்சிட்டேன்

இரும்புத்திரை said...

பூ என்று வர வேண்டியது.இப்போது இணையத்தில் டைப் அடித்து பழகுவதால் ஸ்பெல்லிங் தப்பாக வந்து விட்டது.எந்திரனைப் புறக்கணித்து தமிழ் கற்றுக் கொண்டு இருக்கிறேன்.

ILA (a) இளா said...

டாஆஆஆஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய், டூஊஊஊஊஊஊஊஊஊஉய், உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.

சும்மா பின்னூட்ட கயமைத்தனம்.

இரும்புத்திரை said...

@இளா - ஏன் இந்த மர்டர்வெறி.

அகல்விளக்கு said...

அடிச்ச பீரு கூட
பொரை ஏறிப்போச்சு தல....

இரும்புத்திரை said...

வட போச்சே.பின் நவீனத்துவம் என்றால் பின்னால் நவீனமாக அல்லது நளினமாக மிதிக்கிறதா அகல் விளக்கு.பீர் அடிச்சிருக்கறதால கேட்டேன்.

ராவணன் said...

வியட்னாம் பெண்களை இழிவுபடுத்திய இந்த இடுகைக்குக்கு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்.என் வியட்னாம் காதலி உங்கள் மீது கேஸ்போட உள்ளாள்.
உங்கள் போட்டோ,முகவரி அனைத்தையும் உடனே கொடுத்து வியட்னாமில் சரண்டர் ஆகவும்.
வியட்னாமா கொக்கா?அங்கே விஷ நரிகள் இல்லை!