Thursday, August 13, 2009

கே.பாலசந்தர் செய்த தவறுகள் - விடுபட்டவை

போன பதிவில் நான் சரியாக அலசவில்லை,அழுக்குப் போகவில்லை என்று துபாய் ராஜா சொன்னவுடம் நான் சிரித்து விட்டேன்.குறும்பலூர் சரவணனும் இதையே சொன்னார். அவர்களுக்காக மேலும் ஒரு துவைப்பு,அலசல். இப்பவும் அழுக்குப் போகவில்லை என்று சொன்னால் நான் ஒரு பதிவு பார்த்தேன்.அதை உங்களுக்கு தருகிறேன்.அது பாமரன் பக்கங்கள் (துவைத்து சட்டையைக் கிழித்து விட்டார்).

பாலசந்தர் களத்தை,காலத்தை இரண்டாக பிரித்து விடலாம்.

அரங்கேற்றம் எடுப்பதற்கு முன்னால்,எடுத்ததற்கு பின்னால்.

அரங்கேற்றம் எடுப்பதற்கு முன்னால் நகைச்சுவை, குடும்பம்,சஸ்பென்ஸ் படங்களையே எடுத்தார்.

அரங்கேற்றம் படத்திற்கு பிறகு பெண்கள் சார்ந்த படங்களே நிறைய. அப்படி கொஞ்சம் அல்லது நிறைய வித்தியாசம் காட்டிய படங்கள் இங்கு.

நிழல் நிஜமாகிறது - ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் உள்ள ஈகோ பற்றிய கதை.கம்பன் ஏமாந்தான் என்ற அருமையான பாடல் உண்டு .

தப்புத்தாளங்கள் - ரவுடி ஒரு வேசியை திருமணம் செய்வது.

நினைத்தாலே இனிக்கும் - ரஜினி நகைச்சுவையில் கலக்கிய படம்.

தில்லு முல்லு ,47 நாட்கள்(சிவசங்கரி),உன்னால் முடியும் தம்பி(கணேஷ்) இந்த படத்தின் கதைகளை பாலசந்தர் பிறரிடம் எடுத்து அருமையான திரைக்கதை அமைத்தார்.

இது போல அவர் பிறரின் வித்தியாசமான கதைகளுக்குத் திரைக்கதை அமைக்காமல் ஒரு பெங்காலி படத்தின் கதையில் அவரின் வழக்கமான திரைக்கதையை வைத்தார் - பார்த்தாலே பரவசம்.

பெண்களுக்கானப் புரட்சிப் படம் எடுத்த காலத்தில் (1974-1990௦) பெண் சுதந்திரம் மிகக் குறைவாக இருந்தது. மக்களும் படத்தை ரசித்தார்கள். பாலச்சந்தரின் இரு கோடுகள் படத்தில் வரும் சின்னக்கோடு பெரிதாக மாறும். (1974-1990௦) சின்னக்கோடாக இருந்த பெண் சுதந்திரம் இப்பொழுது பெரியக்கோடாக மாறி வருகிறது.அனால் பாலச்சந்தர் மாறவில்லை. இதுவே அவர் செய்த தவறு.

அதைப் போல பார்வையாளர்களின் ரசனை மாறி கொண்டே இருக்கிறது.படைப்பாளிகளின் ரசனை ஒரு எல்லையோடு நிண்டு விடுகிறது.இதுவும் பாலச்சந்தருக்கு நேர்ந்தது.பாக்யராஜுக்கு நேர்ந்தது.பாலா மாறவில்லை என்றல் அவருக்கும் நேரும். பார்வையாளர்களின் ரசனைக் கோடுகள் வளர்கிறது.படைப்பாளிகளின் ரசனைக் கோடுகள் ஆரம்பம் முதல் ஒரே உயரத்தில் இருக்கிறது.

சரவணனின் அடுத்த பாயிண்ட்

நான் பாலாவையோ,பாக்யராஜையோ,சசிகுமரையோ நக்கல் செய்யவில்லை.

பாக்யராஜ் - இவரைப் பார்த்து மற்ற இயக்குனர்கள் நடிகர்கள் ஆனார்கள். (பாண்டியராஜன் ,பார்த்திபன்,டி.ராஜேந்தர் தொடங்கி சேரன்,மிஸ்கின் வரை நடிக்கிறார்கள்.)

பாலா - சேது படத்தில் தொடங்கிய படலம் வெண்ணிலா கபடிக் குழு வரை தொடர்கிறது (இறுதியில் நாயகன் அல்லது நாயகியைக் கொன்று விடுவது).பாலாவின் நான்குப் படத்திலும் இது நடந்தது.

சசிகுமார் - இவர் முதல் படத்தை இவரே தயாரித்ததால் இன்று இவரை எல்லோருக்கும் தெரியும். அப்படி இல்லாதப் பட்சத்தில் இன்னும் இந்த கதையை வைத்து கொண்டு அலைந்திருப்பார். நமக்கு பசங்க,நாடோடிகள் எந்த படமும் கிடைத்து இருக்காது.

கே.எஸ்.ரவிக்குமார் தசாவதாரம் படத்தைத் தவிர மீதி எல்லா படத்துக்கும் அவர் தான் திரைக்கதை.இதில் சரவணனின் மூன்றாவது பாயிண்ட் அடி வாங்குகிறது.

டிஸ்கி : இனி தொடர்ந்து பாரதிராஜா,பாக்யராஜ்,பாலு மகேந்திரா போன்ற இயக்குனர்களின் ஷாட்ஸ் பற்றிய பதிவு வரும்.

6 comments:

Unknown said...

romba arumai

me the firsta

Nathanjagk said...

கேபி படங்களில் பிராமண படலம் படர்ந்திருக்கும். அது ஒரு ரசனையாக பதிவாக காணமுடியும். நாடக்திலிருந்து சினிமாவுக்கு வந்ததால், நாடகப்பாணியை suppress ​செய்து காட்சி அமைக்க வேண்டும் என்று நிறைய visual shots-களாய் காட்சியையே முடித்துவிடுவார். 80-களில் இது புதுமையாய் இருந்தது. அதுக்கப்பறம் புளிக்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் ஒரு காட்சிக்கு (வசனம், எக்ஸ்ப்ரஷன் தவிர்த்து) முக்கியத்துவம் ​கொடுக்கும் பாணியை ​தொடங்கி​வைத்தவர் ​கே.பி.

துபாய் ராஜா said...

நல்லாருக்கு.இன்னும் உங்ககிட்டே இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.

இந்த இரு பதிவுகளையும் முன்னோட்டம் மாதிரி வைத்துக்கொண்டு
கே.பி.யோட ஒவ்வொரு படமா எடுத்து அலசுங்க.இன்னும் சிறப்பா இருக்கும்.

//இனி தொடர்ந்து பாரதிராஜா,பாக்யராஜ்,பாலு மகேந்திரா போன்ற இயக்குனர்களின் ஷாட்ஸ் பற்றிய பதிவு வரும்//

நல்ல திட்டம்.பல தகவ்ல்களை எதிர்பார்க்கிறோம்.

வாழ்த்துக்கள்.

இரும்புத்திரை said...

nandri cibi

nandri jeganathan

nandri dubai raja

IKrishs said...

Late a indha padhivu paduchutu romaba neelamana pinnotam...
Balachander matravargal kadhai yai yeduthu direct panni irundhal nalla irundhu irukkum naanum ninachu dhundu..
Balachander padam pathi yenaku thonuna pala visyangala neengalum pathivu panni irukeenga...
Veetula Mootha pengal kasta paduratha pathi niraya padam panni irukkarau..
Arangetram,Aval oru thodarkathai,Manadhil urudhi vendum,premi[serial]...[Arangetram mattum vithiyasamana anugumurayil]...
yenaku romba pidicha padam "Manadhil urudhi vendum" .Manadhil urudhi vendum climax il suhasini sevai manapaanyodu S.P.B yai pinbatri irandavadhu thirumanathai thavirpaar...
Aanal irandavadhu kaadhalan kidney donation ku apparam "Sex life" la pirachanai varumo nu doctora kettathunala avangha feel panra madhiri kaati irupparu...
Adhe padathula "valkaiyila virakthi ,tholvi adaichavangha than indha "nurse" tholilukku varatha ninaiku raangha...Adhu thappu" nu dialogue vachu iruparu climaxla adhaiye than kaatuna madhiri iruku...Oru aann than sex life pathi kavalai paduratha yen thappana oru visayam madhiri kaatanum...Kadaisi kaatchigalla sridhar (irandavadhu kaadhalan) avara konjam kettavanattana kaati "Suhasini" ya thani aala aakura seyarkai thanam theriyum...

Balachander padangala nalla aalasi nirya padhivulai podungha...
-Krish

இரும்புத்திரை said...

kandippa krish neraiya pathivu poduren ithai paththi