தமிழர்கள் சாப்பிடும் உணவுகளிலே வித்தியாசம் காட்டுபவர்கள். அவிச்சா இட்லி,மாவை ஊத்தித் திருப்பினா தோசை,திருப்பலைனா ஊத்தப்பம், பிழிந்து அவிச்சா இடியாப்பம்.இப்படி சாப்பிட்டவர்கள் இப்போ பீஸா,பர்கர்னு மாறிடாங்க.இன்னும் மாறாம ஒரே மாதிரி படத்தக் குடுத்தால் பிறகு ஓய்வு எடுக்க வேண்டியது தான்.
கே.பாலசந்தர் செய்த தவறும் இது தான்.அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர். புராணப் படங்களும்,சமூக படங்களும் ஆண்களை முன்னிறுத்தி வந்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் பெண்களை மையமாக வைத்து படம் எடுத்தவர். அதையே அவர் கடைசி வரை செய்தது தான் தவறுகளின் உச்சம்.
அப்படி அவரை ட்ரெண்ட் செட்டராக மாற்றிய படங்கள் - அவள் ஒரு தொடர்கதை,அபூர்வ ராகங்கள்,அவர்கள்
இந்த படங்கள் தான் இன்றைய மெகாத்தொடர்களின் தொடக்கம்.
தொலைக்காட்சி வந்தப் பிறகும் அதே பாணியில் அவர் எடுத்தப் படங்கள் - கல்கி,பார்த்தாலே பரவசம்,பொய்.
தமிழ் சினிமாவின் பிற ட்ரெண்ட் செட்டர்கள்.
பாரதிராஜா - சினிமாவை ஸ்டியோவில் இருந்து அவுட்டோருக்குக் கொண்டு சென்றவர்.
பாக்யராஜ் - நல்ல கதை இருந்தால் யார் நடித்தாலும் ஓடும் என்று நிருபித்தவர்.
மணிரத்னம் - ஒளிப்பதிவாளர்களுக்கு மக்கள் கைத் தட்ட தொடங்கியது இவர் மூலம் தான்.
பாலா - மனதில் படம் நிற்க இறுதியில் யாரையாவது சாகடிப்பது இவர் சேது மூலம் தொடங்கியது.
செல்வராகவன் - ரெயின்போ காலனிக்குப் பிறகு படுக்கையறைக் காட்சிகளோடு வந்த படங்கள் நிறைய.
சசிகுமார் - முதல் பட்த்திலேத் தயாரிப்பாளராக மாறியவர்.
கே.பாலசந்தரின் படத்தின் கதையின் மையக்கரு ஒன்றுப் போலவே இருக்கும்.உதாரணம் 1 ஆண் : 3 பெண், 3ஆண் : 1 பெண். நாயகனையோ, நாயகியையோ இரண்டு முதல் மூன்று நபர்கள் அவர்களை விரும்புவார்கள்.
1 ஆண் : 3 பெண் (சொல்லத்தான் நினைக்கிறேன், அழகன்,கல்கி,பார்த்தாலே பரவசம்)
3 ஆண் : 1 பெண் (மூன்று மூடிச்சு, அவர்கள்,டூயட்)
2 ஆண் : 1 பெண் (மனதில் உறுதி வேண்டும், அபூர்வ ராகங்கள்)
1 ஆண் : 2 பெண் (புது புது அர்த்தங்கள்,புன்னகை மன்னன்,இரு கோடுகள்,சிந்து பைரவி)
இப்படி கதைகளில் கோட்டை விட்டு விட்டு கதாப்பாத்திரத்தில் கொடியை நாடியவர். கோட்டை இல்லாமல் கொடியை வைத்து என்ன செய்ய முடியும்?
மேலும் அவரின் பெரும்பாலான படத்தில் ஏதாவது முக்கிய கதாப்பாத்திரம் தனியாக நிற்கும்.அவருடைய சிஷ்யர்கள் (வசந்த்,சரண்) இது போன்ற கதைகளைத் துவைத்துக் காயப் போட்டதும் அவருக்கு ஒரு மைனஸ்.
அதை விட கொடுமை சிந்து பைரவி படத்தின் இரண்டாம் பாகத்தைச் சஹானா என்று ஒரு தொடராக எடுத்து மக்களை ராவு ராவு என ராவியது. இப்படி கொடுமைப்படுத்துவதற்கு முன் தான் கையளவு மனசு,காசளவு நேசம்,ஜன்னல் போல நல்லத் தொடர்களைக் கொடுத்தார்.
இன்னொருக் குறை முப்பது வருடங்களுக்கு பிறகு வந்து வெற்றி பெற்ற "நான் அவனில்லை" மக்கள் புரிந்து கொள்ளாத 1974ம் ஆண்டு எடுத்தது.
இப்படி எடுத்தக் கதையையே எடுத்து பாலசந்தருடன் இணைந்தவர்கள் பாக்யராஜ்,பாலு மகேந்திரா, மகேந்திரன், பாண்டியராஜன்,கங்கை அமரன்,உதய குமார்,விக்ரமன்.
இணைய இருப்பவர்கள் - பாலா,ஷங்கர்,சேரன்,மிஷ்கின்,பாலாஜி சக்திவேல்,செல்வராகவன்.
இணையாமல் இருக்க பாரதிராஜா, மணிரத்னம்,கே.எஸ்.ரவிக்குமார் போல அடுத்தவர்களிடம் கதையை வாங்கி திரைக்கதையில் விளையாட வேண்டும்.
Tuesday, August 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
Nalla kummi.
I think KB was a bit ahead of his time. Ediroli, Manmada Leelai are other examples.
KB, like the others you have listed, was not shy of shamelessly lifting not so well known western artsy movies. adhanala thappu adigam illai - avar eduththirukkaa vitta namakku therinju irukkathu - enna solli irukkalam, avvalavu thaan.
KB, sridhar and balu mahendra brought in recognition for cinematography way before manirathnam did (i never understood how manirathnam became so successful - his films seem to be average at best).
ஆமாம்..பெண்கள் என்றாலே திமிர் பிடித்தவள் போன்று பேசுவது தான் இவர் படங்களில் அதிகம்
இறுதியில பாத்தா திரு.அரவிந்த் மட்டும்தான் திரைத்துறைக்கு வந்து ரொம்ப நல்ல படங்கள கொடுக்கபோறார் போல -:)
சன் டிவி பாணியில்
நல்ல அலசல்.ஆனா அழுக்கு போகலை
:))
இணையாமல் இருக்க பாரதிராஜா, மணிரத்னம்,கே.எஸ்.ரவிக்குமார் போல அடுத்தவர்களிடம் கதையை வாங்கி திரைக்கதையில் விளையாட வேண்டும்
Naanum ippadi ninachadhundu..
பாலச்சந்தர் பற்றிய உங்கள் அனலிசிஸ் ரொம்ப சிறப்பாக இருக்கிறது.
http://kgjawarlal.wordpress.com
Innum deep.a alasanum,
1.balachandaroda innum evvalavo best movies irukku.
2. bala,bagyaraj,sasi ivangala nakkal pandra mathiri irukku.
3.k.s.ravikumara ithula saekkave koodathu,(only direction pandra evvalavo peru inrukkanga)ivaru commercial.
ok. best of luck.
saravanan,
kurumbalur.
Everyone has their own peak performance period. KB tried even after that. Wonderful post on analysing his works. Thanks.
-Film4thwall.blogspot.com
ELLA PADANGALILUM NAYAKIYIN KULIYAL OR SELAI MATRUM SCENE KANDIPPAGA UNDU.NEWS READER FATHIMA BABU(KALKI)ULPADA
thanks appathurai,amutha krishnan,
pi-th-tha-n,dubai raja,um,jawarlal,
director,toto,sankar
/மணிரத்னம் - ஒளிப்பதிவாளர்களுக்கு மக்கள் கைத் தட்ட தொடங்கியது இவர் மூலம் தான்.
/
No. It started from Aabavaanan's Oomai Vizhigal film.
Post a Comment