Wednesday, August 5, 2009

நண்பர்களிடம் பிடிக்காத பத்து

1. தண்ணியடிச்சு பழக்கமில்லைன்னு சொன்னா காசு கொடுத்து வாங்கி கொடுத்துட்டு இதை எல்லாம் இல்லன்னா என்ன மனுஷன் இப்படி ஏத்தி விட்டே கத்து கொடுத்திட்டு நீங்க தெளிவா எப்பவாது அடிக்கிறீங்க.ஒருநாள் அடிக்காம விட்டாலும் கை நடுங்குது.ஏண்டா இப்படி கெட்டு போறீங்கன்னு அட்வைஸ் வேற

2. அப்பா அம்மா அந்த பையன் கூட சேராத சொன்னா கேட்காத நீங்க இதே வார்த்தைய ஒரு பொண்ணு சொன்னா மட்டும் எப்படி உடனே கேட்டு அத அப்படியே செய்றீங்க

3.ஏதாவது பிகர கஷ்டப்பட்டு பிக்கப் பண்ணி இருப்போம் இது கூடவா சுத்துறன்னு கெடுத்து விடறது இதுவே உங்க பிகர பத்தி சொன்னா சட்டைய பிடிக்கிறது .

4.பிகர் மாட்டுற வரைக்கும் கூடவே சுத்துறது பிக்கப் ஆனா வீட்டுக்கு வழியே தெரியாது. அந்த டாட்டா காட்டிட்டு அமெரிக்கா போச்சுனா அவ ரொம்ப மோசம்ன்னு புலம்புறது (அப்ப நீ என்று கேட்க வாய் வரைக்கும் வரும் ஆனா வராது)

5.எக்ஸாம் டைம்ல நீ கடைசி நிமிஷத்துல படிக்கிறது என்னனு கேட்டா இது எல்லாம் வராது வந்தாலும் சாய்ஸ்ல விடுறா அப்படின்னு சொல்றவன் நான் படிக்கிறத மட்டும் துருவி துருவி கேட்குறது.

6.எங்க பக்கத்து வீட்ல எதாவது புது பிகர் வந்தா இன்ரோ கொடுக்க சொல்ற நீ உங்க பக்கத்து வீட்ல வர்ற பிகர் பத்தி மூச்சு கூட உட மாட்டீங்களே.கேட்டா எங்க பேமிலி ப்ரெண்டுன்னு அடிச்சு விடுறது.

7.எக்ஸாம்ல என்னை பார்த்து காப்பி அடிச்சுட்டு என்னை விட நிறைய மார்க் எடுக்கிறது கேட்டா திருத்தியவன் சரி இல்லை எங்கிட்டோ இருக்கும் அப்பாவி மேல பழி போடுறது.

8. எவனாவது உன்னை திட்டி இருப்பான் அவன அடிக்க முடியாம மச்சான் உன்னை பத்தி அசிங்கமா சொன்னான் இல்லாது பொல்லாது சொல்லி குடுத்து அவன் கிட்ட சண்டைக்கு போக சொல்றது .

9.நல்லா ஓடுற படத்தை எல்லாம் பாக்காம ஏதாவது மொக்க படத்த ஆகா ஓகோ அப்படி சொல்லி பக்க வைக்கிறது (சரியா சொன்னா மட்டும் ஏதோ கேக்கிற மாதிரி தான்)

10.சும்மா போற நாய் மேல சொல்ல சொல்ல கேட்காம கல்ல தூக்கி போடுறது அது போட்டவனை கண்டுக்காம பக்கத்தில் இருக்கிற என்னை கடிக்க வர்றது (நான் கல்ல தூக்கி போட்டாலும் அது என்னை தான் விரட்டுது) கேட்டா நாய்க்கு நல்லவன பார்த்தா தெரியும்ன்னு தத்துவம் பேசுறது.

டிஸ்கி : இப்படி என்ன பண்ணினாலும்,எவ்வளவு தான் வாங்கி கட்டி இருந்தாலும் எங்கியாவது பார்த்து பழச நினைச்சி சிரிக்கும் போது எல்லாம் மறைஞ்சி போகுது.

"ஏ ஜலசா பண்ணுங்கடா... குஜாலா ஜில்பா காட்டுங்கடா" - நண்பர்கள் தினப்பதிவு

5 comments:

Unknown said...

பறவைகள் பலவிதம்; சிலது போடும் முட்டைகள்; பலது போடுகின்றன விட்டைகள்:( வாழ்க நட்பு.. வளர்க நண்பர்கள்..

Nathanjagk said...

பதினாறு வயதினிலேயே டென்ட் ​போட்டு தங்கிட்டிங்க ​போல! படிக்கும் போது பத்தாம் வகுப்பு நினைவுகள் படர்கின்றன! அருமை அரவிந்த்!

Suresh Kumar said...

ஒரே பத்து பத்து தான் இன்னும் சீசன் தீரலியா ?

நல்லா இருக்கு

நாடோடி இலக்கியன் said...

நல்லா எழுதியிருக்கீங்க.

ஃபிகருங்க மேட்டரையே சுத்தி சுத்தி யோசிச்சிருக்கிற மாதிரி ஒரு சின்ன ஃபீல்.அதையும் தாண்டி கொஞ்சம் வெளியில வாங்க நண்பா.நல்ல நகைச்சுவையுணர்வு இருக்கு வேற மாதிரி யூஸ் பண்ணுங்க.

இரும்புத்திரை said...

nandri cibi

nandri jeganathan

nandri suresh kumar

nandri naadody ilakkiyan