Tuesday, August 25, 2009

கிராமத்தில் புழங்கும் சுவாரஸ்யமான பட்டப்பெயர்கள்.

சமீபத்தில் பட்டப்பெயர்களை பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம். பட்டப்பெயர்களினால் கிராமத்தில் கலவரமே உண்டான கதைகளும் உண்டு. நேரம் போகாத வெட்டி ஆபீசர்கள் ஒருநாள் ஊரில் இருக்கும் எல்லாருடைய பட்டப்பெயர்களையும் எழுதி விளையாடி இருக்கிறார்கள். சங்கம் கலைந்த பிறகு அந்த பேப்பர் பஞ்சாயத்து அறையில் ஓட்டப்பட்டதாம். மறுநாள் காலை ஊரே கொலைவெறியோடு திரிந்து சந்தேகம் வந்தவர்கள்,வாராதவர்கள் மீது விசாரணை கமிஷன் போட்டுள்ளார்கள்.

அப்படி வந்த ஊரில் புழங்கிய சில பட்டப்பெயர்கள்.

காக்காப்பண்ண

அவன் பிறக்கும் போதே அட்டக்கருப்பு.அதனால அவன் பாட்டி ஒரு பண்ண காக்கா சேர்ந்தா தான் இவன் நிறத்துக்கு வரும் என்று சொல்லி இந்த பெயர் வைத்தார்.அவர் உண்மையான பெயர் யாருக்குமே தெரியாது.

கிணத்துமூடி

ஆச்சியிடம் கோவித்துக் கொண்ட ஒரு பெண் "நான் கிணற்றில் விழுந்து சாகப் போகிறேன்.." என்று மிரட்டவும் அவள் ஆச்சி "நீ விழப் போற கிணத்துகெல்லாம் முதல்ல மூடி போடணும்" அதிலிருந்து அவள் பெயர் கிணத்துமூடி.

மங்கி

அந்த பெண்ணின் பெயர் மங்கை. என்னவோ வாங்க என் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.என் தாத்தா வெளியே இருந்து "மங்கி வந்திருக்குப் பார்.." என்று கத்தவும், என்ன நம்ம ஊர்ல குரங்கா,தாத்தா இங்கீலிசு எல்லாம் பேசுறாரே என்று நினைத்து கொண்டே வெளியே வந்தால் இந்த பெண் திருதிருவென முழித்து கொண்டு நிற்கிறாள்."துரை இங்கீலிசு எல்லாம் பேசுது.." இந்த வசனத்தை கேட்டால் என்னை அறியாமல் சிரிப்பேன்.காரணம் என் தாத்தாவின் செல்லப்பெயர் துரை.

சீலயக்கி..பி

ஒரு மழைநாளில் ஏதோ வீட்டின் முன்னே நின்று கொண்டு கதையடித்துக் கொண்டிருந்தோம். அந்த வீட்டு கிழவி திட்ட, பதிலுக்கு நாங்களும் திட்ட அது சேலையை மடித்து கொண்டு எங்களைத் துரத்த பின்னே உதயமானது தான் இந்த பெயர்.

ரீ என்ட்ரி

ஊரில் திருமணம்,திருவிழா,மஞ்சள் நீராட்டு விழா நடக்கும் போது திரைக் கட்டி படம் போடுவார்கள். எவனாவது அந்த படத்தை ஏற்கனவே பார்த்து இருப்பான்.அவன் பக்கத்தில் மட்டும் உக்கார கூடாது.கதை சொல்லி சாகயடிப்பான். அப்படி ஒருவனிடம் ஒருநாள் மாட்டிக் கொண்டோம். கதையை சொல்லிக் கொண்டே வந்தான்.ஒரு கட்டத்தில் "இப்போ அந்த நபர் ரீ என்ட்ரி கொடுப்பார்.." என்று சொல்லவும் உடனே நான் "டேய் ரீ என்ட்ரி நீ கொஞ்சம் பொத்திக்கிட்டு இரு.." என்று சொன்னேன். அதிலிருந்து அவனை பார்க்கும் போதெல்லாம் "ரீ என்ட்ரி" என்றே அழைப்போம்.

______ ஆச்சி

எங்களுக்கும்,பெரியத் தாத்தா வீட்டிற்கும் ஆகாது.அவர்கள் வீட்டில் ஒரு ஆடு குட்டிப் போட்டு இருந்தது.குட்டியைப் பிடித்து அது ஆணா,பெண்ணா என்று ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருந்தோம் நானும்,என் தம்பியும். அதைப் பார்த்த அந்த ஆச்சி "டேய் ஆட்ட விடுங்க..இல்ல ______ நறுக்கிருவேன்.." என்று ஓடி வந்தார்.

டிஸ்கி :

நானாவது பெயர் தான் வைப்பேன்.நான் பிறப்பதற்கு இருபது வருடங்களுக்கு முன்பே என் பெயருக்குப் பாட்டு எழுதி வைத்திருந்தார்கள். அவன் மட்டும் என் கையிலே கிடச்சான்...............

13 comments:

Raju said...

யப்பா சாமீ..!
துரையெல்லாம் வம்புக்கு இழுக்கிறீங்களே.
வரு யாரு தெரியுமா..?
மதுரைப்பக்கம் வாங்க பாஸு தெரியும்.
அவரும் இங்லீஸ்தான் டிஜிட்டல் போர்டு வைப்பாப்ல.
:)

ஈரோடு கதிர் said...

//வீட்டு கிழவி திட்ட, பதிலுக்கு நாங்களும் திட்ட//

அரவிந்த அந்த பாட்டிக்கு பேத்தி யாரும் இல்லையா?

அது கூட சண்ட போடலாமா?

மணிஜி said...

எங்க ராஜேந்திரன் என்பவனுக்கு “முளைக்குச்சி” என்ற பட்டபெயர் உண்டு
காரணம் கொஞ்சம் ஆபாசமாக இருக்கும்.சொல்லவா?

நாடோடி இலக்கியன் said...

காக்காப்பண்ண பெயர் காரணம் சூப்பர்.

நாஞ்சில் நாதம் said...

நல்லா வைக்கிறாங்க பேரு

இரும்புத்திரை said...

நன்றி டக்ளஸ் எதுலயாவது கோர்த்து விடலைனா தூக்கம் வராதே

நன்றி கதிர் பேத்தி இல்ல

நன்றி தண்டோரோ அண்ணே காரணம் சொல்லுங்க

நன்றி நாடோடி இலக்கியன் அவன் தம்பி பேரு வாஜ்பாய்

நன்றி நாஞ்சில் நாதம் இன்னும் இருக்கு வேணுமா

துபாய் ராஜா said...

நம்மூர்ல தான் பட்டப்பேரு வைக்கிறதுல பட்டையை கெளப்பிடுவாங்களே...

எங்க குரூப்ல ஒல்லியா இருக்கவனை ஒட்லி'ன்னும்,டேய்,அண்டர்வெயிட்டு, அடங்குடான்னும் கலாய்ப்போம். :))

லோகு said...

நல்லா வைக்குராங்கப்பா பேரு..

இரும்புத்திரை said...

நன்றி துபாய் ராஜா

நன்றி லோகு

வால்பையன் said...

கொஞ்சம் அப்படியே நகரத்துக்கு பக்கம் வந்து பீட்டர் பேர்ல வரிசை படுத்தி ஒரு பாட்டு பாடுங்க!

இரும்புத்திரை said...

நன்றி வால்பையன் பாட்டு தானே போட்டுருவோம்

Hindu Marriages In India said...

சூப்பர்

இரும்புத்திரை said...

நன்றி Hindu Marriages In India