Saturday, August 22, 2009

ஒரு வரி கதைகள்

நடிகர்கள்

ஏழையாக நடிக்க கேரவனில் தூங்கும் ஆத்மாக்கள்.

காதல்

வெற்றியின் கடைசிப்படி

கல்யாணம்

மருந்தான துளி விஷம்.

காத(லி)லன்

சந்தோஷ தொல்லைகள் தரும் கிச்சுகிச்சு

கணவன் மனைவி

விக்ஸ் சாப்பிட்டாலும் போகாத கிச்சுகிச்சு

கள்ளகாத(லி)லன்

கிச்சுகிச்சு இல்லாத நேரத்தில் சாப்பிடும் இஞ்சிமரப்பா.

மக்கள்

பிச்சை போடாமல் சேர்த்து வைத்த காசை நடிகனிடம் இறைப்பவர்கள்.

குழந்தை

எழுத தொடங்கிய சரித்தரத்தின் முதல் அத்தியாயம்

குப்பைத்தொட்டியில் குழந்தை

யார் வீட்டின் வரலாறோ?

புது கோணம்

கடைசி பக்கத்திலிருந்து வாசிக்கப்படும் நாவல்.

ஹிட்ஸ்,பதிவு,பின்னூட்டம்

தீராத அரிப்பு.

நீ

ஓரெழுத்து ஹைக்கூ.

நான்

இரண்டெழுத்து புதிர்.

அம்மா

மூன்றெழுத்து நாவல்.

13 comments:

Unknown said...

இரும்புத்திரை

திரை மறைவில் நடத்தும் கொலைவெறி தாக்குதல்.

துபாய் ராஜா said...

ஒரு வரி விளக்கங்கள் நல்லா இருக்கு.

//கல்யாணம்
மருந்தான துளி விஷம்.

காத(லி)லன்
சந்தோஷ தொல்லைகள் தரும் கிச்சுகிச்சு

கணவன் மனைவி
விக்ஸ் சாப்பிட்டாலும் போகாத கிச்சுகிச்சு

கள்ளகாத(லி)லன்
கிச்சுகிச்சு இல்லாத நேரத்தில் சாப்பிடும் இஞ்சிமரப்பா.

குப்பைத்தொட்டியில் குழந்தை
யார் வீட்டின் வரலாறோ? //

அனைத்தும் அருமை.

//ஹிட்ஸ்,பதிவு,பின்னூட்டம்
தீராத அரிப்பு.//

அனைத்திலும் அருமை.

நம்ம பங்குக்கும் கொஞ்சம் நல்லா சுகமா சொறிஞ்சுக்கோங்க... :))

Raju said...

நல்லாருக்கு பாஸ்.
ளாஸ்ட் ஒன் இஸ் சூப்பர்ப்.

ஈரோடு கதிர் said...

//குப்பைத்தொட்டியில் குழந்தை
யார் வீட்டின் வரலாறோ? //

ஆஹா.... என்ன சொல்லி பாராட்டுவது... போ நண்பா வார்த்தைகள் என்னிடம் இல்லை

அன்புடன் அருணா said...

அடடா கலக்கல்ஸ்!

நாஞ்சில் நாதம் said...

//குப்பைத்தொட்டியில் குழந்தை

யார் வீட்டின் வரலாறோ? //

இது ஒண்ணு தான் சூப்பர்

இரும்புத்திரை said...

நன்றி சிபி

நன்றி துபாய் ராஜா

நன்றி டக்ளஸ்

நன்றி கதிர் (முதல் பின்னூட்டம்)

நன்றி அருணா

நன்றி நாஞ்சில் நாதம்(இனிமே ஸ்மைலி கிடையாது போல)

நாடோடி இலக்கியன் said...

//குப்பைத்தொட்டியில் குழந்தை
யார் வீட்டின் வரலாறோ? //

அருமை.ரொம்பவும் வளமான சிந்தனை.

வாழ்த்துகள்.

இரும்புத்திரை said...

நன்றி நாடோடி இலக்கியன்

லோகு said...

எல்லாமே நல்லா இருக்குது.. எந்த ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சிங்க..

இரும்புத்திரை said...

நன்றி லோகு

வில்லங்கம் said...

அருமையான பதிவு, பரவால்ல நல்லாவே யோசிக்குறீங்க பாஸு

இரும்புத்திரை said...

நன்றி JK