Thursday, August 27, 2009

காங்கிரஸில் விஜய் - தலைவர்கள் மற்றும் பதிவர்களின் பார்வையில்

காங்கிரஸில் விஜய் சேர்கிறார் என்றவுடன் தமிழகத்தில் ஒரு அலை அடிக்கிறது.அரசியல் தலைவர்கள்,பதிவர்கள் எல்லோரும் கருத்துக் கூறுகிறார்கள்.

கோபாலப்புரத்தில் - ( டெல்லியிடம்) அவர் தனித்தே நிற்கட்டும்.அப்படி நின்றால் தான் விஜயகாந்த் ஓட்டைப் பிரிப்பார்.வரும் தேர்தலை விஜயகாந்த் புறக்கணிப்பார்.

மதுரையில் - எடுத்தவரைக்கும் வேட்டைக்காரன் படத்தை சிடியில் போட்டு எல்லா வீட்டுக்கும் கொடுத்துட்டு வாங்க. இனிமே அரசியலுக்கு யார் வந்தாலும் இப்படி தான் நடக்கும்.

கொடநாட்டில் - அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் தீபாவளிக்கு வரும் வேட்டைக்காரன் படத்தைப் புறக்கணியுங்கள்.

தாயகத்தில் - நாம சொன்ன கேட்கிற மாதிரி தான்

காங்கரஸ் கட்சிகள் - சரி தமிழ்நாட்டுக்கு இன்னொரு தலைவர்.

தைலாபுரத்தில் - (காடுவெட்டி குருவிடம்) குரு, இந்த தடவை வேட்டைக்காரன் பெட்டித் தூக்கு.2002ல பாபா பெட்டியா தூக்கினோம்.2004ல தேர்தல வெற்றி.2009ல இந்த பெட்டிய தூக்குறோம் 2011ல ஆச்சியப் பிடிக்கிறோம்.

விவேக் - ஏல இத காரைக்குடி பக்கம் கேட்டா அவ்வளவு தான்.

தைலாபுரத்தில் - ஆச்சி இல்ல ஆட்சி

விவேக் - ஏல முதல்ல நீ என்ன சொன்னா?

தைலாபுரத்தில் - நாம தோத்தப் பிறகு இந்த காமெடி பீஸு எல்லாம் நக்கல் பண்ணுது.

பா.ஜ.க - அஜீத் கிட்ட பேசி நம்ம கட்சிக்கு கூப்பிடுவோமா?

வேளச்சேரியில் - பேசாம விஜயை வைத்து இன்னொரு படம் எடுக்கட்டுமா?.தரணி சும்மா தான் இருக்காரு.

சிவகங்கையில் - அப்பா நான் அரசியல வரவே முடியாதா?

இவ்வளவு பேர் சொல்லியும் பதிவுலகம் சூடாகாமல் இருக்கிறது.

சாருவிடம் கேட்கிறார்கள்.

சாரு -
திரைத்துறையில் நடந்த திடீர்ப் புரட்சியால் வாரிசுகளாக நுழைந்த நடிகர்களுக்கு வானளாவிய ஊதியம் கிடைக்க ஆரம்பித்தது. கோடி ரூபாய் சம்பளத்தை எட்டுவதற்கு 25 ஆண்டுகள் ஊழியம் செய்த ரஜினி எங்கே இரண்டாவது படத்திலே சம்பளமாகக் ஐந்து கோடி பெறும் வாரிசு எங்கே?

ஒரு நடிகனின் வாழ்வில் 16 ஆண்டுகள் நடிப்புக்கு செலவாகிறது. ஆனால் இந்தக் நடிப்பு அவனுக்கு என்ன கற்றுத் தருகிறது என்று பார்த்தால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. சுயமாக வாழ்வதற்கான எந்தத் தகுதியையும் இந்தக் நடிப்பு அவனுக்குக் கொடுப்பதில்லை. மாறாக, பணம் ஈட்டுவதற்கான ஒரு குறிப்பிட்ட தொழிலாக மட்டுமே கற்றுக் கொண்டு வெளி உலகத்திற்கு வருகிறான் அவன். அந்தத் நடிப்புக்கு மதிப்பு குறையும் போது அவனுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது.

நடிக்கத் தெரியாது; உள்ளூர் சாலைகளில் நடக்கத் தெரியாது ஆனால் வெளிநாடுகளில் ஆடத் தெரியும்; தன் உணவைத் தானே சமைத்துக் கொள்ளத் தெரியாது. அடுத்த நடிகனோடு எப்படி அனுசரணையாக வாழ்வது என்று தெரியாது. ஒரு பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாது. ஏன், சரியாக படம் எடுப்பது எப்படி என்று கூடத் தெரியாது. அதற்காகத் தனியாக ஒரு டிவிடி. தினமும் இரண்டு மணி நேரம் படம் எடுப்பது எப்படி? என்று உலகப் படத்தை கட்டணம் கட்டிக் தரவிறக்கம் செய்து கற்றுக் கொள்கிறான் இன்றைய நடிகன். ஆனால் அரசியல் ஆசை மட்டும் வரும்.

ஒரு நதி எப்படித் தன் பாதையை வகுத்துக் கொள்கிறதோ அதைப் போலவே அமைகிறது 'நடிக்காத' அந்த நடிகர்களின் வாழ்க்கை.

நர்சிம் -

முதலிலேயே ஒன்று..நான் திரைத் துறையைச் சேர்ந்தவன் அல்ல.

உங்களின் கட்டுரை.. “நடிப்பது எப்படி?” மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.ஏனென்றால்... இளைய சமூகத்தின் நடவடிக்கைகளைக் கூர்ந்து அவதனித்து வருபவர் நீங்கள்.தவிர, வேறு கோணம் என்ற பதத்தை எல்லா விசயங்களிலும்,திரைப்பட விமர்சனம் முதற்கொண்டு, பார்ப்பவர் நீங்கள். நீங்களும் இப்படி சாடுவது சரியா?

ஆம்..நடிப்பு முறையில் லேசான மாற்றம் வேண்டும்.அல்லது எளிமைப் படுத்தப் படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

தாலி சென்டிமென்ட்டும்,காயாத தலையுமாக,விருதுக்கும் பாராட்டுக்கும் போரடிக்கொண்டிருந்த/இருக்கும் மொக்கை நடிகர்கள் தங்கள் திருடும் திறமையால் டிவிடி பார்த்து அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றது தவறா?

ஒரு கிழிந்து போன அல்லது கீழிருக்கும் நடிப்பு சூழலை மேலேற்றிய கூட்டம் அது. ‘சைக்கிள் கேப்பில் ’ என்ற வார்த்தையும் அந்த வாக்கியத்தில் ஏதாவ்து ஒரு இடத்தில் பொறுத்திக்கொள்ளலாம்.

அவர்களுக்கு கிடைத்ததெல்லாம், மது அருந்துகிறார்கள், மங்கையர்களோடு காரில் வலம்வருகிறார்கள், டிஸ்கொதே என்று.. பொறுப்பின்றி சுற்றுகிறார்கள் என்பவை மட்டுமே....

பொறுப்பில்லாமல் இருந்திருந்தால்,வெறும் ௦.5 விழுக்காடு மட்டுமே உள்ள அந்த திரைத் துறை கூட்டம் மற்ற பெரும்பான்மையோடு சாதரண வேலைகளில் இருந்திருக்குமே..ஏதோ மற்ற வேலைகளில் இருப்பவர்கள் பீர் பாட்டிலை வாங்கியவுடன் பெருமாள் கோயில் சுவற்றில் அடித்து உடைத்துவிடுவதைப் போல சமூகம் அந்தக் கூட்டத்தை சித்தரித்ததன் எச்சமே...உலக படங்கள் எடுப்பது நின்றவுடன் அக்கூட்டத்தின் மீதான சமூகக் கொக்கரிப்பு.

தன்னை வருத்தி,வெளியே இரவா பகலா மழையா வெயிலா என ஒரு இழவும் தெரியாமல், மந்தைகளாக கற்ற நடிப்பை மடிக்கணிணியிலோ டேபிள்டாப்பிலோ பார்த்து, சப்டைட்டில் இல்லாமல் முட்டி பெயர்ந்த நிலையில் தனக்கான வடிகாலாக குழுக்களின் பால் சென்றது அக்கூட்டம் என்றாலும் தங்களின் கடமையில் இருந்து தவறவில்லை அல்லது அவர்களை தவற விடவில்லை வாரிசுகளின் அப்பாக்கள் .ஏனெனில் நஷ்டம் இயக்கும் தந்தைகளை விட படம் பார்க்கும் மக்களுக்குத் தான் அதிகம் என தெரியுமென்பதால்.

யுவகிருஷ்ணா -

நடிப்பது எப்படி? கட்டுரையை அவர் திரைத்துறைத் தொழிலாளர்களுக்கு எதிரானதாக எப்படி, எந்த வரிகளில் எடுத்துக் கொண்டிருக்கிறார். தங்களுடைய கட்டுரையின் அடிநாதம் இயல்பான வாழ்க்கையை வலியுறுத்துவதாக இருக்கும் நிலையில், ஒரு உதாரணத்துக்காக நடிகர்களை எடுத்துக் கையாண்டிருக்கிறீர்கள். மாதம் 6 கோடி ரூபாய் சம்பாதிக்கும் யாரையும் (தெலுங்கு நடிகனையும்) அந்த உதாரணத்தோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் என்பது ஏன் நர்சிம்முக்கு புரியவில்லை என்பதே எனக்குப் புரியவில்லை.

கட்டுரையில் ஆரம்பத்தில் சில பத்திகள் மட்டுமே இதை மிகவும் லேசான போக்கில் விவாதித்து விட்டு, நம் நடிகனின் நடிப்பு போதாமையை சுட்டிக்காட்ட விரைகிறது.

கட்டுரையின் அடிநாதத்தை கண்டுகொள்ளாமல், ஓரிரு வார்த்தைகளுக்காக நர்சிம் அவசர அவசரமாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார் என்று கருதுகிறேன். அவரே ஒப்புக்கொள்ளும் வகையில் வெறும் .06 சதவிகிதம் தான் (உண்மையில் .05௦ ௦சதவிகிதம் தான் இருப்பார்கள்) நடிகர்கள் என்று எடுத்துக் கொண்டாலும், அவர்களால் ஏற்பட்டிருக்கும் கலாச்சார எதிர்மறை அதிர்வுகள் சமூகத்தில் எந்த அளவுக்கு ஆழ ஊடுருவியிருக்கிறது என்பதைப் பற்றியும் நர்சிம் எதிர்வினையில் நியாயமாக ஒப்புக் கொண்டிருக்க வேண்டும் என்பதே என் எதிர்ப்பார்ப்பு. இன்று காடுவெட்டி குரு போன்ற சினிமா அடிப்படைவாதிகள் நடிப்புக் காவலர் முகமூடி அணிந்து சமூகத்தில் வெறியாட்டம் ஆடுவதற்கு(பெட்டியைக் கடத்துவதற்கு) நடிகர்களும் ஒரு காரணமாக அமைந்து விட்டார்கள் என்பது நர்சிம் ஒப்புக்கொள்ளா விட்டாலும் உண்மைதானே?

பதிவர்கள் பின்னூட்டத்தில் கும்மி அடிக்கிறார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகர் - இந்த பதிவர்களின் தொல்லை தாங்க முடியலை.நான் உண்ணாவிரதம் இருக்கப் போறேன். அப்படியே மறக்காம பிரியாணி கொண்டு வாங்க..

அரவிந்த் : எதுக்கு

எஸ்.ஏ.சந்திரசேகர் - உண்ணாவிரதம் முடிந்த பிறகு சாப்பிடத் தான்..

அதிஷா : நர்சிம் பதிவுல வந்த பின்னூட்டத்த விட்டுட்ட.படிக்கலையா ?

விஜய் : நான் அரசியலுக்கு வர மாட்டேன்.

எஸ்.ஏ.சந்திரசேகர் - நீ வரலைனா போ.என் பேரன மட்டும் என்கிட்டே குடுத்திரு நான் அவன பெரியத் தலைவரா ஆக்குறேன்.

எஸ்.ஏ.சந்திரசேகர் அந்தப்புரம் பிரகாஷ்ராஜ் போல அங்கும் இங்கும் அலைகிறார்.

22 comments:

தினேஷ் said...

கிளம்பிட்டங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா...

தினேஷ் said...

//கோபாலப்புரத்தில் - ( டெல்லியிடம்) அவர் தனித்தே நிற்கட்டும்.அப்படி நின்றால் தான் விஜயகாந்த் ஓட்டைப் பிரிப்பார்.வரும் தேர்தலை விஜயகாந்த் புறக்கணிப்பார்.
//

யாரு வீட்டு ஓட்டை?

தினேஷ் said...

/மதுரையில் - எடுத்தவரைக்கும் வேட்டைக்காரன் படத்தை சிடியில் போட்டு எல்லா வீட்டுக்கும் கொடுத்துட்டு வாங்க. இனிமே அரசியலுக்கு யார் வந்தாலும் இப்படி தான் நடக்கும். //

ஏற்கனவே நெட்ல வந்த வேட்டைக்காரன் கிளிப்ஸ சிடி போட்டு கொடுத்தாலே போதும் மக்கள் மயக்கமாயிருவாய்ங்க.

தினேஷ் said...

//கொடநாட்டில் - அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் தீபாவளிக்கு வரும் வேட்டைக்காரன் படத்தைப் புறக்கணியுங்கள்.
//

புறக்கணிப்பே கட்சி கொள்கையா மாறிருமோ ?

தினேஷ் said...

//தாயகத்தில் - நாம சொன்ன கேட்கிற மாதிரி தான் //

சொல்றதுக்கு யாராச்சும் இருந்தாதானே..

தினேஷ் said...

//காங்கரஸ் கட்சிகள் - சரி தமிழ்நாட்டுக்கு இன்னொரு தலைவர். //

செம்மறிஆட்டு மந்தையிலே இன்னொன்னு பாவம் ராகுலுக்கு தான் மொத்த மந்தையையும் ஒரு பக்கமா ஓட்டுறதுக்குள்ளே தாவு தீர்ந்திரும்

தினேஷ் said...

/தைலாபுரத்தில் - (காடுவெட்டி குருவிடம்) குரு, இந்த தடவை வேட்டைக்காரன் பெட்டித் தூக்கு.2002ல பாபா பெட்டியா தூக்கினோம்.2004ல தேர்தல வெற்றி.2009ல இந்த பெட்டிய தூக்குறோம் 2011ல ஆச்சியப் பிடிக்கிறோம்.
//

ஏற்கனவே ஜெ கொடுத்த பெட்டி மகன் அடிச்ச பெட்டி என்னாச்சு?

வால்பையன் said...

வரும் உரையாடல்களை அறியும் பொருட்டு!

தினேஷ் said...

/பா.ஜ.க - அஜீத் கிட்ட பேசி நம்ம கட்சிக்கு கூப்பிடுவோமா? //

இதேமாதிரி யாரையாச்சும் கூப்பிட்டுட்டே இருக்குறதுதான் முழு நேர வேலையோ?
ஒருத்தனாச்சும் மதிக்கனுமே

தினேஷ் said...

//வேளச்சேரியில் - பேசாம விஜயை வைத்து இன்னொரு படம் எடுக்கட்டுமா?.தரணி சும்மா தான் இருக்காரு.//

அவ்ரும் நடிக்க போறாரமே குருவிக்கு போட்டியா பருந்துனு?

தினேஷ் said...

/அப்பா நான் அரசியல வரவே முடியாதா? //

யாருப்பா இது ?

தினேஷ் said...

//ஒரு நதி எப்படித் தன் பாதையை வகுத்துக் கொள்கிறதோ அதைப் போலவே அமைகிறது 'நடிக்காத' அந்த நடிகர்களின் வாழ்க்கை//

எப்ப தண்ணி வரும் எப்ப வெள்ளம் வரும்னே தெரியாது..

Raju said...

யப்பா ஆதி அங்கிளு,
இதுதான எதிர்பார்த்தீங்க நீங்க..
சும்மா போன‌வன சொறிஞ்சு வுட்டு,
இப்ப பாருங்க ரத்தம் கொட்டு கொட்டுனு கொட்டுது.
:)

ஆனா, அரவிந்த். நீங்க‌ சாருவை ,சகபதிவர்ன்னு சொன்ன நுண்ணரசியலை
நான் ரசித்தேன்.வாழ்க.ஹலோ,அரவிந்த் அண்ணனுக்கு ஒரு ஸ்பெஷ‌ல் கருடபுராணம் பார்ர்ர்ர்ர்சல்ல்ல்ல்...!

ஆனா, மறுபடியும் வடைய மிஸ் பண்ணீட்டீங்களே, உங்களுக்கு எத்தன தடவ சொல்றது..?
பரவாலல, விஜயே பெரிய வடைதான்.

தினேஷ் said...

/நர்சிம் -

முதலிலேயே ஒன்று..//

ஹ ஹ ஹ ..

Unknown said...

////கோபாலப்புரத்தில் - ( டெல்லியிடம்) அவர் தனித்தே நிற்கட்டும்.அப்படி நின்றால் தான் விஜயகாந்த் ஓட்டைப் பிரிப்பார்.வரும் தேர்தலை விஜயகாந்த் புறக்கணிப்பார்.
//

யாரு வீட்டு ஓட்டை?

//

sangavi veetu ottai

குசும்பன் said...

//மதுரையில் - எடுத்தவரைக்கும் வேட்டைக்காரன் படத்தை சிடியில் போட்டு எல்லா வீட்டுக்கும் கொடுத்துட்டு வாங்க. இனிமே அரசியலுக்கு யார் வந்தாலும் இப்படி தான் நடக்கும்.//

ஏன் இப்படி ஒரு மர்டர் வெறி, மக்கள் உயிரோட இருந்தால் தான் தலைவர்களுக்கு மதிப்பு:)))

குசும்பன் said...

//குரு, இந்த தடவை வேட்டைக்காரன் பெட்டித் தூக்கு.2002ல பாபா பெட்டியா தூக்கினோம்//

இவிங்களுக்கு ஓடாத பட பொட்டிய தூக்கிக்கிட்டு ஓடுவதே வேலையா போச்சு:)

நர்சிம் said...

அருமை..மிக ரசித்தேன்..

கலக்குங்க.
//
டக்ளஸ்... said...
யப்பா ஆதி அங்கிளு,
இதுதான எதிர்பார்த்தீங்க நீங்க..
சும்மா போன‌வன சொறிஞ்சு வுட்டு,
இப்ப பாருங்க ரத்தம் கொட்டு கொட்டுனு கொட்டுது.
:)

ஆனா, அரவிந்த். நீங்க‌ சாருவை ,சகபதிவர்ன்னு சொன்ன நுண்ணரசியலை
நான் ரசித்தேன்.வாழ்க.ஹலோ,அரவிந்த் அண்ணனுக்கு ஒரு ஸ்பெஷ‌ல் கருடபுராணம் பார்ர்ர்ர்ர்சல்ல்ல்ல்...!
//

பின்னீட்டிங்க டக்ளஸ்.

நாடோடி இலக்கியன் said...

//ஓடாத பட பொட்டிய தூக்கிக்கிட்டு ஓடுவதே //

மொத்ததில் எப்படியோ ஓடிடுதுன்றீங்க.

ஈரோடு கதிர் said...

//தைலாபுரத்தில் - நாம தோத்தப் பிறகு இந்த காமெடி பீஸு எல்லாம் நக்கல் பண்ணுது//

இதுதான் செம காமெடி

நீண்ட நேரம் சிரித்தேன்ன்ன்ன்ன்ன்ன்

துபாய் ராஜா said...

கலக்கல் பதிவு கலக்கல்.

ஆமா,விஜயகாந்த் கமெண்ட் காணோம்.

இரும்புத்திரை said...

நன்றி சூரியன்(12)

நன்றி வால்பையன்

நன்றி டக்ளஸ்

நன்றி சிபி

நன்றி குசும்பன்

நன்றி நர்சிம்

நன்றி நாடோடி இலக்கியன்

நன்றி கதிர் - ஈரோடு

நன்றி துபாய் ராஜா