Thursday, August 6, 2009

சினிமாவில் எனக்கு பிடித்த கண்கள்

எனக்கு இந்த நடிகையின் பெயர் தெரியவில்லை (தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில் சொல்லவும்). ஜானி படத்தில் "ஆசைய காத்துல தூது விட்டு" பாடலில் மட்டும் வருவார்.ரஜினியை அவர் பார்க்கும் பார்வையில் காமமும்,காதலும் மாறி மாறி தெரியும் கூடவே அக்கறையும். ரஜினி மண்ணு மாதிரி இருப்பார் அந்த பாடல் முழுவதும். நான் இது போல படத்தை எடுத்து இருந்தால் (ரொம்ப ஒவர்டா டேய் அடங்கு..) ஸ்ரீதேவியிடம் சேர்க்காமல் அந்த பெண்ணிடம் சேர்த்து வைத்து இருப்பேன்.(ஆனா மகேந்திரன் சார் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு).இந்த பாடலை இளையராஜா பாலு மகேந்திராவின் தெலுங்கு படத்தில் போட்டு இருப்பார்.படமும் மொக்கை பாட்டும் மொக்கை.

வெயில் படத்தில் வரும் பிரியங்கா. கண்களில் தெரிந்த குறும்பும்,காதலும் பசுபதியை மட்டும் அல்ல படம் பார்ப்பவர்களையும் வசியம் செய்தது.குடுத்த காசு அந்த பெண்ணின் கண்களுக்கே சரியா போச்சு என்று சொன்ன நண்பர்கள் நிறைய. பசுபதி பேசும் பல வசனங்கள் வசந்தபாலன் ஆல்பம் படம் தோல்வி அடைந்த பிறகு அவர் நிஜத்தில் பேசிய வார்த்தைகள் தான்.

சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த சுவாதி. இவரும் ஜெய்யும் கண்களால் பேசிய காட்சிகளும்,கண்கள் இரண்டால் பாடலும் முதல் பாதி தொய்வில்லாமல் நகர உதவி புரிந்தது. ஜெய் கொல்லப்பட்ட பிறகு சசிகுமார் சுவாதியின் கண்களை கத்தியால் குத்தி விடுவார் இந்த காட்சியை மட்டும் படத்தில் இருந்து நீக்காமல் இருந்து இருந்தால் படம் இன்னும் பெரிய வெற்றி பெற்று இருக்கும்.

இந்த மூவருக்கும் ஒப்பனிங் நல்லா இருந்தது ஆனா பினிஷிங் சரியில்லை.

இனி வரும் மூவர் சினிவாவில் வெறும் கவர்ச்சியாக நடிக்க மட்டுமே பயன் படுத்தப்பட்டார்கள் என்பது பெரிய அபத்தம்.

சில்க் ஸ்மிதா - ஒரு காலத்தில் இவர் இல்லாத படத்தை வாங்கவே தயங்குவார்களாம் .காமம் அருவியாக ஒடிய கண்களுக்கு சொந்தக்காரர் . ஒரு உதாரணம் என்றால் மூன்றம் பிறை படமும்,அதில் வரும் பாடலும். நர்சிம் மூன்றாம் பிறையில் வரும் அந்த பாடலை பற்றி ஒரு பதிவில் எழுதி இருந்தார்.(அப்புறம் நான் என்ன எழுத)

தீபா - ஜானி படத்தில் இவர் அப்பாவியாக வந்து அடப்பாவியாக மாறுவார்.ஆரம்ப காட்சிகளில் தெரியும் கண்களில் தெரியும் குழந்தைத்தனமும், பிறகு ரஜினியிடம் மாட்டி கொண்ட பிறகு கண்களில் தெரியும் பயமும், பார்க்கும் சேலையை எல்லாம் எடுக்கும் பொழுது கண்களில் ஆசை தெரியும்.

புவனேஸ்வரி - பாய்ஸ் படத்திலும் ,இன்னும் சில படத்திலும் வந்து போவார். நல்ல காந்தக் கண்கள். பூனைக் கண்ணழகி என்ற பெயரும் உண்டு.

டிஸ்கி : ஒரு கவிதை சின்ன வயதில் எழுதியது

தூசு விழுந்தால் கூட
கண்களை கசக்குவதில்லை
காரணம் உன் பிம்பம்
கலைந்து விட கூடும் என!

(அடடே ஆச்சர்யக் குறி )

இந்த கவிதையை ஒரு பெண்ணிடம் படிக்க குடுத்த பொழுது என்னை திட்டி விட்டாள். நான் சொன்னேன் "பிடிச்சா பிடிச்சுருக்குன்னு சொல்லு இல்லை பிடிக்கலைன்னு சொல்லு அத விட்டு போட்டு சின்னப் பிள்ள மாதிரி திட்டுற.."

அவளுக்கு நான் வைத்த பட்டப்பெயர் "கண்". இப்பொழுதும் அவளை அப்படித்தான் கூப்பிடுகிறார்கள்.

8 comments:

Rajaraman said...

ஜானியில் நடித்த அந்த நடிகையின் பெயர் சுபாஷினி. நடிகை ஜெயசுதாவின் தங்கை என்று நினைக்கிறேன்.

சங்கணேசன் said...

ஜானி நடிகையின் பெயர் - 'சுபாஷினி' என்று நினக்கிறேன். நடிகை சாந்தி கிருஷ்ணாவின் தங்கை என்றும் ஞாபகம்

சங்கணேசன் said...

ராஜாராமன் சொன்னது சரிதான்

நர்சிம் said...

நல்ல ஆராய்ச்சி அர்விந்.

அந்தக் கவிதையும் அதனடுத்த ஆச்சர்யக்குறியும் அற்புதம்.

வில்லங்கம் said...

ரொம்ப அருமையான ஆராய்ச்சி.... தோல் பொருள் ஆராய்ச்சியில் உங்களுக்கு " கம்பவுண்டர்" பட்டம் கிடைக்க வாய்ப்பிருக்கு சகா !!!

Nathanjagk said...

நல்லா போயிட்டிருந்த கண் வரிசையில குறுக்கே பூனை புகுந்த மாதிரி, ஒரு கண்ணை எழுதிட்டீங்களே அர்விந்த்?? சரி விடுங்க; ப்புவனேஸ்வரி கிட்ட உங்களுக்குப் பிடிச்சது கண்ணுதான் ​போலிருக்கு!

அமுதா கிருஷ்ணா said...

ராஜாராமன் சொன்னது சரி

இரும்புத்திரை said...

nandri rajaraman

nandri snganesan

nandri narsim

nandri jk

nandri thala

nandri aumutha krishna

nandri tamilcinema