Tuesday, August 4, 2009

ஹார்மோன் கோளாறு

அவன் தன் நண்பர்களிடம் கேட்டு கொண்டு இருந்தான்."எனக்கு ஏண்டா நான் பாக்குற ஒரு பொண்ணு கூட என்னை ஃப்ரெண்டா கூட ஏத்துக்க மாட்டேங்குது..."

"நான் பேசிக்கிட்டே இருக்கேன் யாராவது கேட்டு தொலைங்க..." என்று பொல்லாதவன் கருணாஸ் மாதிரி கதறி கொண்டு இருந்தவனை யாரும் கண்டு கொள்ளவே இல்லை.

காரணம் அவன் பார்க்கும்,பழக முயற்சிக்கும் பெண்கள் எல்லாம் அவனை விட ஒரு நாளாவது மூத்து தொலைத்திருந்தார்கள்.

அவர்களிடம் பழக ஆரம்பித்த உடன் சொல்லி வைத்தது போல் எல்லோரும் அவனை தம்பி என்றே அழைப்பார்கள்.

இப்படி அவனுக்கு கிடைத்த அக்காக்கள் நிறைய.

அவன் பத்து படிக்கும் பொழுது ஒரு ஒன்பதாவது படிக்கும் பெண்ணின் மீது ஈர்ப்பு வந்து விட்டது.
விசாரித்து பார்த்தால் அந்த பெண் அவனுடைய நண்பனின் தங்கை என்றும் இரண்டு வருடம் பெயிலாகி பின் தங்கி இருக்கிராள் என்றும் தெரிய வந்தது.

அதானே பார்த்தேன் நம்ம கணிப்பு மிஸ் ஆகாதே என்று பெருமை வேறு எருமைக்கு.

வழக்கம் போல அவன் ஒரு அக்காவைப் பார்த்து கொண்டு அலைய அந்த பெண்ணின் தங்கை அவன் பின்னால் திரிய அவனுடைய நண்பர்களோ "சேர்த்து வைக்கிறோம்" என்று தங்கையிடம் சொல்லி அவள் டீக்கடையைக் காலி செய்தார்கள்.

கல்லூரியில் படிக்கும் பொழுது ஒரு அக்கவிடம் பேச முதலில் அவளின் தோழியை மடக்க கடைசி வரை நட்பு தோழியோடு நின்று போய் விட்டது.

தம்பி என்று சொல்லாமல் அவனிடம் வேலை வாங்கிய அக்காக்கள் பட்டியலை எடுத்தால் அவன் வீடு மளிகைச் சாமான் பட்டியலை விட நிறைய வரும்.

அடிக்கடி அலுத்து கொள்வான்.என்னை சச்சின் மாதிரி சாதனை செய்ய விட மாட்டர்கள் என்று( விளையாட்டில் அல்ல வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதில்)

வேலைக்கு போன இடத்திலும் அவன் பார்த்த பெண்கள் அவனை விட வயது மூத்தவர்கள்.

சில வருடங்கள் கழித்து அவன் நண்பர்களைப் பார்க்க வந்திருந்தான்.

"மச்சான் எனக்கு கல்யாணம்.." என்று பத்திரிகை வைத்தான்.

பிரிக்காமலே பெண்ணின் வயதை பற்றி விசாரித்தார்கள்.

"என்னை விட இரண்டு வயது கம்மி" என்று சொன்னான்

இப்போ தாண்டா ஹார்மோன் கோளாறு (அப்பாடி தலைப்பு கிளைமாக்சுல எப்படியோ கொண்டு வந்துடேன்) போய் நீ சரியா இருக்கே என்று மகிழ்ச்சி கொண்டார்கள்.

"ஆனா அவளுக்கு ஒரு அக்கா இருக்குதுடா.அவ மேல.." என்று சொல்லி முடிக்கவும்

"திரும்ப திரும்ப பேசுர நீயி.." என்று நண்பர்கள் கோரசாக சொன்னார்கள்.

டிஸ்கி : நான் அவன் இல்லை.

போன பதிவில் பின்னுட்டம் போட்ட என் தம்பிக்காக ஒரு கவிதை.

பதின்ம வயதுகளின் வாய்ப்பாடே
காதல் * காதல் = காதல் தான்.
அதுவே கூப்பாடாக மாறுகிறது.
பிள்ளை பதின்மத்தின் படிகளை
கடக்கும் பொழுது.

(ஏன் இந்த கொலைவெறி)

3 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Nathanjagk said...

அட்டகாசம் அர்விந்து!!!! நல்ல ப்ளோ! உங்காளு ஒரு ஆண்டி-ஹீரோவா இருப்பாரு ​போல! // "சேர்த்து வைக்கிறோம்" என்று தங்கையிடம் சொல்லி அவள் டீக்கடையைக் காலி செய்தார்கள்// புச்சா கீதே! டீக்கடைன்னா இன்னாபா?

இரும்புத்திரை said...

nandri seidhivalaiyam

nandri jeganathan