Saturday, August 15, 2009

சினிமாவில் கலையும் பிம்பங்கள்

உங்களுக்குப் பிடித்த நடிகை யார் என்று கேட்டால் நிறைய பேர் சொல்லும் பெயர்கள் - நதியா,ஷோபா.இந்த பெயர்கள் தான் அதிகம் இடம் பிடிக்கும் கருத்துக்கணிப்புகள் நடத்தினால் கூட. நதியாவை நம்பியே சமீபத்தில் ஒருப் படத்தை ஓட்ட முயற்சி செய்தார்கள்.(பட்டாளம்).இவர்கள் நடித்தப் பழைய படங்களின் பாடல்களை இப்பொழுது போட்டால் கூட மாற்றாமல் பார்க்க ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.காரணம் அவர்கள் தேர்ந்து எடுத்து படங்கள்.இந்த பிம்பங்கள் என்றுமே கலையாது.

இனி கலைந்தப் பிம்பங்களைப் பார்ப்போம் (எனக்கு,இன்னும் சிலருக்கும் இருக்கலாம்)

1. சேது படத்தில் விக்ரமின் அண்ணியாக வருவார்.விக்ரமை அடித்துப் போட்ட பிறகு அவரைப் பாண்டி மடத்தில் சேர்க்க ஆட்கள் வந்து தூக்கிக் கொண்டுப் போவார்கள்.
அந்த காட்சியில் விக்ரமின் வெட்டி விலகி இருக்கும், அதை சரிப்படுத்துவார். கிராமத்தில் இருக்கும் என் மதினிகள் என் நினைவில் வந்து போனார்கள்.இவர் உருவில் அவர்களைப் பார்த்தேன்.இதற்கு முன் கே.பாலசந்தரின் காசளவு நேசம் நாடகத்திலும் வருவார். பிறகு கோலங்கள் நாடகத்தில் ஆதியின் அம்மாவாக நடிக்கும் போது நான் எழுந்துப் போய் வேறு ஏதாவது வேலைப் பார்ப்பேன். பிறகு சேது படத்தில் இவரைப் பார்க்கும் பொழுது என் கிராமமே மறந்து விட்டது.கூடவே மதினிகளும் மறந்து விட்டார்கள்.இவர் கோலங்கள் நடிக்காமல் இருந்திருந்தால்............

2. ஆட்டோகிராப் படத்தில் கோபிகா வரும் காட்சிகளை மட்டும் நிறைய முறைப் பார்ப்பதுண்டு. நானும் என் கல்லூரி நண்பர்களும் கோபிகா ரசிகர்களாக மாறிய காலங்கள் அது. லத்திகா லத்திகா என்று புலம்பிக நாட்கள் நிறைய. "நினைவுகள் நெஞ்சில் புதைந்தனால்" - இந்த பாடல் மட்டும் விடிய விடிய என் கணினியில் ஓடிக் கொண்டிருக்கும். சேரன் அந்த பெண்ணை மறக்க முடியாமல் சிகரெட் பிடிப்பார். வீட்டில் தெரிந்தவுடம் விசாரித்துக் கொண்டிருப்பார்கள்.சேரனின் சித்தப்பா சொல்வார்."அண்ணே விடுங்க தண்ணியா அடிச்சான்..சிகரெட் தானே..".இதை சொல்லி முடிக்கும் முன் அடுத்தக் காட்சியில் சேரன் தண்ணி அடித்துக் கொண்டிருப்பார். சேரனோடு நாங்களும் புலம்பிய ஓலங்கள் நிறைய. அவளுக்காகத் தண்ணி என்ன விஷத்தையேக் குடிக்கலாம் என்று சொன்ன நாங்கள் கனா கண்டேன் படம் பார்த்த பிறகு அவளைப் பற்றிப் பேசுவதையே நிறுத்தி விட்டோம்.சமீபத்தில் ஒரு நண்பரோடுப் பேசிக் கொண்டிருந்தப் போது அவர் சொன்னது "கோபிகாவைப் பிடிக்காது".காரணம் கனா கண்டேன் படம் தானே என்று நான் கேட்டதும் அவர் கேட்ட கேள்வி "உங்களுக்குமா ?".கோபிகா இந்தப் படத்தை நடிக்காமல் இருந்திருந்தால்............

3.இந்த நடிகை ஒரு பாசக்கார அம்மா,சித்தி,அண்ணி போன்ற வேடங்களில் நடிப்பவர்.கில்லி படத்தில் விஜயின் அப்பாவி அம்மாவாக வருவார். இவர் வந்தக் காட்சிகள் மிக இயல்பாக இருந்தது. எல்லா வீட்டிலும் அம்மாக்கள் இப்படித் தான் பாசமாக இருப்பார்களா என்று நினைத்ததுண்டு.எல்லாம் அயன் படத்தில் இவர் சரக்கடிக்கும் காட்சியைப் பார்க்கும் வரைதான்.இவர் இந்த படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால்............

இவர்கள் மேலிருந்தப் பிம்பங்கள் உடைந்து இருக்காது.

கடைசி இரு பிம்பங்களையும் உடைத்தவர் கே.வி.ஆனந்த்.

இதில் இருந்து நிஜ வாழ்கையில் கல்லூரி நண்பர்களின் பிம்பங்கள் உடைந்தப் போது மிக எளிதாக எடுத்துக் கொள்ளப் பழகி இருந்தேன். நானும் என் பிம்பத்தை முடிந்த வரை காப்பற்ற முயற்சித்து வருகிறேன்.கலையும் பிம்பங்களைக் கண்டுக்கொள்ளாமல் என் பிம்பம் கலந்து விடாமல் பார்த்து கொள்கிறேன்.

6 comments:

துபாய் ராஜா said...

உண்மைதான்.நதியாவிற்கு M.குமரன் சன் ஆப் மகாலட்சுமி,தாமிரபரணி படங்களில் நல்ல கதாபாத்திரங்களே.
கடைசியாக சுந்தர்.C யுடன் நடித்த படத்தில் கூட கதாநாயகியை விட அவருக்கே முதன்மை.

இந்த ஆதி அம்மா ரொம்ப வருஷம் முன்னாடி நல்லதொரு தூர்தர்சன் தொலைக்காட்சி தொடரில் அழகான இளம்பத்திரிக்கையாளரா,சிவக்குமாருக்குஜோடியா நடித்திருந்தார். கோலங்களில் அவரை பார்க்கவே பயமாத்தான் இருக்கும்.

கோபிகா கோலிக்குண்டு கண்ணு, கோவைப்பழ உதடு....ன்னு பல சிறப்புகள் இருந்தாலும் கதைதேர்வு இல்லாததால் தனியிடம் பிடிக்க தவறி விட்டார்.

'கில்லி' அம்மா ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய் அம்மாவாக, எஸ்.வி.சேகர் ஜோடியாக இயல்பான நகச்சுவையில் கலக்கியிருப்பார். நல்லவேளை அயன் படம் பார்க்கவில்லை.

//கிராமத்தில் இருக்கும் என் மதினிகள் என் நினைவில் வந்து போனார்கள்.//

உண்மைதான். நமது கிராமத்து மதினிகள் எல்லாம் என்றென்றும் மறக்கமுடியாதவர்கள்.

manjoorraja said...

திரையில் நடிக்கும் நடிகர் அல்லது நடிகையர்கள் அந்தப் படத்தில் அவர்களுக்கு கொடுக்கும் பாத்திரத்தைப் பொருத்துதான் நடிப்பார்கள். ஒரு சிலருக்கு மட்டுமே நிரந்தர நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் அந்த பிம்பங்களை பிம்பங்களாக நினைத்து விடுவதே இதற்கு பரிகாரம்.

Nathanjagk said...

இருக்கு.. அர்விந்த் கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு! எனக்குப் பிடிச்ச நடிகைகள் (மற்றும் சதைகள் என்றால்) அது ​பெரிய்ய்ய்ய லிஸ்ட்..! ​சேது படத்து அண்ணி ​லெவலுக்கு இறங்கித் தீவிரமாக ​யோசித்ததுக்கு என் பாராட்டுகள்! மூணாவதா குறிப்பிட்ட நடிகை ​பேரு சுஜாதா. இவங்க ஒரு தீவிர நவீன நாடக கலைஞர். நிஜத்தில் சரக்கடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பர்ஸனல் ​லைப்ல ஒரு ஆர்டிஸ்ட் எப்படியிருக்காருங்கிறதயே நாம கண்டுக்க கூடாது, யோசிக்கக் கூடாது. ஸ்க்ரீன்ல எப்படி நடிச்சாதான் என்ன? அதுக்காக ஒருத்தரை பிடிக்காம ​போயிடுமா என்ன? ​​கோபிகா பாவம்,, ​சேட்டான்களோட பீடி நாத்தம் தாங்காம இங்க வந்து பொழப்பு ஓட்டலாம்னு பாத்தா, இப்படி லந்து பண்றீயளே? (இதுக்கும் முல்லைப் ​பெரியாறு பிரச்சனைக்கும் சம்பந்தம்... இல்லை)

Nathanjagk said...

ஓ மை காட்!! நீங்க 3வதா குறிப்பிட்டிருக்கும் நபர், கில்லியில் விஜய்யின் அம்மாவா?? ஸாரி.. நான் குறிப்பிட்டது ​வேறொருவர்.. அவர்தான் அயன் படத்தில் ஒரு ஸீனில் வருவார் (கூட இரண்டு ​பெண்கள் - ஒருவள் சூர்யாவுக்கு பால் ​கொடுக்க டிரை பண்ணுவார்) முதல்வன் படத்தில் அர்ஜுன் அம்மாவாக வந்தவர். அவர்தான் சுஜாதா! யப்பா சாமி, ​லைட்டா டங் சிலிப் ஆயிடுச்சு!

வில்லங்கம் said...

அபிதானு ஒரு டிக்கட்டு சேது படம் வந்தப்ப எங்களுக்கு ஒருவித கிறக்கமா இருந்தது.... அடுத்த படமே ஒரு சீன் படம்.... வெறும் தொடைல நூல் திரிக்குறாப்ல ஒரு பட போஸ்டர்ல பாத்துட்டு மாத்தி மாத்தி................................ அசட்டு சிரிப்பு சிரிச்சுகிட்டோம்!!

இரும்புத்திரை said...

nandri dubai raja

nandri manjoor raja

nandri thala

nandri jk