Monday, March 15, 2010

துவையல் - ஓட்டு ஸ்பெஷல்

திரட்டி ஆரம்பித்த காலத்தில் நிறைய பதிவர்கள் கிடையாது.திரட்டியில் பதிவுகளும் நிறைய நேரம் நிற்கும்.பிறகு என்னை மாதிரி தினமும் எழுதி மொக்கை போடும் பதிவர்கள் வந்தப் பிறகு பதிவுகள் நிறைய திரட்டியின் முதல் பக்கத்தில் நிற்க பரிந்துரை வந்தது.அதிலும் சில பிரச்சனைகள்.சில பதிவுகள் ஒரு ஓட்டினால் பரிந்துரைக்கு வராமல் போவதுண்டு.அதற்கும் ஒரு வழி கண்டுப்பிடித்து விட்டேன்.நேற்று ஒரு பதிவு போட்டால் அதில் ஒரு ஓட்டு போட்டு விட்டு அடுத்த நாள் ஓட்டுப் போட முயற்சி செய்தால் அதிலும் ஓட்டு விழும்.இரண்டு ஓட்டு நீங்களே போடலாம்.என்ஜாய் பண்ணுங்க.அடுத்த ஆராய்ச்சி நானே ஏழு ஓட்டுப் போடுவது எப்படி என்று தான்.அதிலும் வெற்றி அடைந்து விட்டால் நான் சொல்லித் தருகிறேன்.பிறகு எல்லோரும் பரிந்துரையில் நின்று நிறைய எழுதி பரிந்துரையில் நின்று கும்மி அடிக்கலாம்.இதை ஏற்கனவே கோல்மால் ஸ்பெஷலில் சொல்லியிருக்கிறேன்.

விஜய் இரசிகர்களின் தொல்லை தாங்க முடியவில்லை.விஜய் நடித்த சிறந்த ஐம்பது படங்களை ஓட்டுப் போட்டு தேர்வு செய்யவும் என்று மெயில் செய்கிறார்கள்.ஐம்பதாவது படம் இன்னும் வரவில்லை என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளவும்.தவிர ஐம்பது படத்தில் நடித்தார் என்பது தான் கொஞ்சம் இடிக்கிறது.

சாருவின் பதிவுகள் இப்பொழுது சங்கமத்தில் வருகிறது.தமிழ்மணம் திரட்டியில் வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தேன்.மைனஸ் ஓட்டுகள் குமியும் என்பதை நினைத்து பார்க்கும் போதே கொஞ்சம் சிரிப்பு வந்தது.எனக்கு மைனஸ் குத்திக் கொண்டிருந்த ஒருவரும் அவர் பெயரை சொன்னவுடன் காணாமல் போய் விட்டார்.இனிமே சொல்ல மாட்டேன் வந்து மைனஸ் போடுங்க பாஸ்.

பெண்ணாகரம் தேர்தலில் பா.ம.கவும் காசு கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.சேர்த்து வைச்ச காசை கொஞ்சமாவது கொடுங்கள்.தி.மு.கவும் வில்பூட்டாக நிற்கிறார்கள்.அ.தி.மு.க ஜெயித்தாலும் பரவாயில்லை பா.ம.க ஜெயித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.அப்படியென்றால் அவர்கள் ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுக்க இருக்கிறார்களோ.பா.ம.கவின் அஸ்தியை ஒகேனேகலில் கலக்க வேண்டும் என்று துரைமுருகன் சொல்லியுள்ளார்.அப்படி தான் அடிச்சி ஆடுங்க.தப்பு பெருசா இந்த பேண்ட் பெருசா நான் பார்த்தே ஆகணும்.அஸ்தியை கரைக்க வேண்டுமென்றால் வரும் தேர்தலில் இரண்டு பக்கமும் சேர்க்காமல் இருந்தாலே போதும்.இப்படி அடிக்கடி தேர்தல் நடந்தால் மைனாரிட்டி மெஜாரிட்டி ஆகி விடும் என்று நினைக்கிறேன்.

விஜயகாந்த் நீங்க எந்த தேர்தலில் பணம் தருவீர்கள்.தந்தால் உங்களுக்கும் அடுத்த ஓட்டு அல்லது ஒட்டு ஸ்பெஷலில் இடம் உண்டு.

3 comments:

சங்கர் said...

ரெண்டு பதிவுக்கு ஒருதடவை குரு வணக்கம் சொல்லலைனா, தூக்கம் வராதோ ?

இரும்புத்திரை said...

நன்றி சாறு சங்கர்

இளந்தமிழன் said...

//ஐம்பது படத்தில் நடித்தார் என்பது தான் கொஞ்சம் இடிக்கிறது.//
சூப்பர் !!!! எனக்கு நிறையவே இடிக்கிறது.

//விஜயகாந்த் நீங்க எந்த தேர்தலில் பணம் தருவீர்கள்.தந்தால் உங்களுக்கும் அடுத்த ஓட்டு அல்லது ஒட்டு ஸ்பெஷலில் இடம் உண்டு.//
அவர் ஒருத்தராவது ஒழுங்கா இருக்கட்டும்!!!!!!!

துவையல் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்திருக்கலாம் !!!!!

இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.