Wednesday, March 24, 2010

எதிர்வினைக்கு ராமின் பதில்களும்,சில விளக்கங்களும்

http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_19.html

ராம் அவர்களுக்கு, எதிர்வினை எழுதியிருந்தாலும் எனக்கு அவருடைய பதிலை தெரிந்து கொள்ள ஆசை.விளைவு அதிகாலை மூன்று மணிக்கு அவருக்கு ஒரு கடிதம்.

தலைப்பு - ராம் நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளர் கிடையாது....

ராம்,

முதலில் ஒரு வேண்டுகோள் காட்சி என்பதை கற்றது தமிழ் ராம் என்று மாற்றிக் கொள்ளுங்கள்.நிறைய பேர்களுக்கு அது கொண்டு சேர்க்கும்.

அடுத்தது ஒரு அவதானிப்பு.நிச்சயம் நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளர் கிடையாது(இப்படி சொல்வதை விட நீங்கள் என்னை ஈர்க்கவில்லை என்று வைத்து கொள்ளலாம்).அதே சமயம் திறமையான பேச்சாளர் என்பதில் எனக்கு துளியளவிற்கு கூட சந்தேகமில்லை.

பின் குறிப்பு : உங்களை இப்படி விமர்சனம் செய்ய நான் சிறந்த பேச்சாளனாகவோ,எழுத்தாளனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

நான் உங்களிடம் பேச அழைப்பு விடுத்துள்ளேன்.உங்களுக்கு விருப்பமிருந்தால் நாளையோ அல்லது என்றாவது நாம் பேசலாம்.

ஒரு எதிர்வினை எழுதியுள்ளேன்.நீங்கள் படித்து விட்டு என்னிடம் விவாதம் செய்யலாம்.நான் சமரசம் அடையும் வரை நான் விவாதிக்க விரும்புகிறேன்.

http://irumbuthirai.blogspot.com/2010/03/blog-post_9172.html

************************

அதற்கு ராமின் பதில் என்னுடைய பதிவில் பின்னூட்டமாக.


வணக்கம் தோழர்களே.


1.நீங்கள் என் உதவியாளரிடமும், இயக்குநர் வெற்றிமாறனிடமும் கேட்க வேண்டிய கிசுகிசுவிற்கான பதிலை என்னிடம் கேட்கிறீர்கள்.


2.இறுதி யுத்தம் நடந்த கணத்தில் என் சாட்சியத்தைப் பதிவு செய்து குழப்பத்தைக் கூட்ட வேண்டாம் என்பதே அப்போது எழுதாத காரணம்.யாராலாவது எவ்வித உதவியாது கிடைக்காத என ஈழம் தவித்திருந்த போது குழப்பத்தை ஏற்படுத்துதல் என்பது முட்டாள்தனம் என நான் நினைத்தேன்.


3. இறுதி யுத்தத்திற்குப் பின் எனக்கு ஏற்பட்ட மனப்பிறழ்வு, குழப்பங்கள், அப்போது தமிழ் இனம் இருந்த உணர்ச்சிவசப்பட்ட மனநிலை, ஆகியவை எழுதவிடாமல் தடுத்தன.


4.சமீபத்தில் மீனகம்.com ல் திரு.இராவணண், தோழர்.வன்னியரசு அவர்களின் கட்டுரைகளைப் படித்த பின் எனக்குத் தெரிந்த விடயங்களை     பதிவு செய்வதை இப்போது விட்டாமல் பதிய இயலாமலெயே போய் விடும் என்று தோன்ற பதிவு செய்தேன்.


5.வரலாற்றில் பதிவு செய்வது என்பது யாரையும் குற்றம் சாட்டவோ, அவர்களின் இத்தனை வருட காலத்து அர்ப்பணிப்புகளை கேள்விக்குள்ளாக்கவோ இல்லை. வரலாற்றில் பதிவு செய்வது என்பது நீதி வழங்குவதற்காய் இல்லை. என் சாட்சியம் மட்டும்மே வரலாறாய் ஆக முடியாது. என் கட்டுரையின் முதல் பாராவைப் படிக்கவும் -

"முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்."


6. யாரையும் வழிமுறைப்படுத்தும் அளவிற்கோ, வழி நடத்திற்கும் அளவிற்கோ பக்குவமும்,ஞானமும் பொறுமையும்  தலைமைப் பண்பும்  அற்றவன் நான். பெரும் சுயநலவாதி.


8.முத்துக்குமரன் வரலாறு இவற்றின் முன்னால் நான் ஒரு தமிழன். திரைப்பட இயக்கம் என்பது என் தொழில். நீங்கள் என்னை இயக்குநராய்ப் பார்ப்பது என்பது உங்களுடைய பார்வை. என் தொழிலை நான் செய்வது என்பது என் அகப் பொருளாதார வாழ்க்கைக்கு முக்யம்.நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.உங்க வேலையை பாருங்க இதெல்லாம் எதுக்கு எழுதறீங்கன்னு நான் கேக்கவோ சொல்லவோ மாட்டேன். உங்களின் சமூக உணர்வே உங்களை எழுத வைக்கிறது.


9.நான் வெறும் ஒரு தமிழன்.என் பெயர் ராம்.என்னை ஒரு இயக்குநர் என்று பார்க்காதீர்கள். நானெ அவ்விருக்கையைப் பொருட்படுத்தாமால் உங்களிடம் உரையாடும் போது நீங்கள் ஏன் அதை நினைவில் கொள்கிறீர்கள். சைக்கிளுக்குப் பஞ்சர் போடுவதைப் போல் ஒரு தொழில் திரைப்பட இயக்கம். அவ்வளவே.


அப்புறம் இவ்வுண்மைகளை அப்போதே தெரிந்திருந்தால் நீங்கள் அல்லது நம் இனம் என்ன செய்திருப்பீர்கள் எனச் சொல்லுங்கள்?
இவ்வுண்மைகளை விட பேர் உண்மைகளும் வலிகளும் நம் முகத்தில் அறைந்த அக்காலத்தில் நாம் என்ன செய்தோம்? அல்லது செய்ய முடிந்தது. ஏன் உங்கள் யரையும் நாங்கள் புழல் சிறையில் இருந்த தருணங்களில் சந்திக்க வில்லை? அல்லது தஞ்சாவூர் விமானப்படைத்தள முற்றுகையில் அல்லது வடபழனி போராட்டத்தில் அல்லது எதாவது ஒரு போராட்டத்தில் ஒருவேளை சந்தித்து இருந்தால் நேரில் நிறைய பேசி இருக்கலாம்?


நன்றி

***********************

ராம்,

அன்புள்ள ராம்,

1.அது கிசுகிசு என்றும் நீங்கள் அதில் இருக்க மாட்டீர்கள் என்றும் நான் சொல்லியிருக்கிறேன்.

2 மற்றும் 3வதில் நீங்கள் சொன்னதை  நான் ஏற்றுக் கொள்கிறேன்.

4.ராவணன்,தோழர் வன்னியரசு எழுதியதால் தான் எழுதினேன் என்று சொல்வது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் முதல் சாட்சியமே உங்களுடையதாகயிருந்தால் அது இன்னும் பலமாகவும்,வேகமாக சென்றடைந்திருக்கும் என்பது தான் என்னுடைய எதிர்பார்ப்பு.அவர்கள் எழுதாமலிருந்திருந்தால் என்று கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.இதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

5.அதில் நீங்கள் யாரையும் குற்றம் சாற்றாமல் இருந்தாலும் அவர்கள் முகத்திரை தான் அந்த பதிவில் கிழிந்து விட்டதே.சாயமும் வெளுத்து விட்டதே.

6.யாரையும் நீங்கள் வழி நடத்த வேண்டாம்.உங்களுடைய நேற்றைய பதிவு படித்தவுடன் மாரி செல்வராஜ் மாதிரி இன்னும் நிறைய இயக்குனர்களை உருவாக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன்.

8.நான் உங்களை இயக்குனர் என்ற கோணத்திலேயே பார்த்து விட்டேன்.கணினித் துறையில் இருந்தாலும் கற்றது தமிழ் வைத்த குற்றச்சாட்டுகளின் போது சிரித்துக் கொண்டு தான் இருந்தேன்.

9.நான் ஏன் உங்களுடைய இயக்குனர்  என்ற பார்வையிலேயே உரையாடுகிறேன் இது நல்ல கேள்வி.எனக்கு நீங்கள் அளித்த பதிலிலும் ராம் என்று தான் இருக்கிறது.என்னுடைய கடிதத்திலும் அப்படிதான் எழுதியிருக்கிறேன்.பிறகு அந்த பார்வைக் கோணம் மாறுகிறது என்றால் உங்களுடைய ஒவ்வொரு பதிவின் தலைப்பிலும் இயக்குனர் ராம் என்றே வருகிறது.அதனால் அந்த தாக்கம் வந்திருக்கலாம்.

//அப்புறம் இவ்வுண்மைகளை அப்போதே தெரிந்திருந்தால் நீங்கள் அல்லது நம் இனம் என்ன செய்திருப்பீர்கள் எனச் சொல்லுங்கள்?

இவ்வுண்மைகளை விட பேர் உண்மைகளும் வலிகளும் நம் முகத்தில் அறைந்த அக்காலத்தில் நாம் என்ன செய்தோம்? //

இந்த கேள்வி என்னை மட்டும் அல்ல நிறைய பேரை பகடி செய்கிறது.நான் என்ன செய்தேன் நாடாளுமன்றத் தேர்தலின் போது.என் கட்சி சார்பை உதிர்த்து விட்டு சுயேட்ச்சை வேட்பாளருக்கு ஓட்டு போட முடிவு செய்தேன்.என் குடும்பத்தினரையும் அதையே செய்ய சொன்னேன்.நண்பர்களையும் கேட்டுக் கொண்டேன்.அப்போது இந்த பதிவு வந்திருந்தால் நிறைய பேர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்திருக்கலாம்.

நிச்சயம் ஒரு நாள் நேரில் சந்திப்போம் ராம்.உங்களுடைய தங்க மீன் படமும் உங்கள் உதவியாளர்களின் படமும் வெற்றி அடையட்டும்.நிறைய விவாதிப்போம்.

வாழ்த்துக்கள் ராம்.

2 comments:

butterfly Surya said...

சைக்கிளுக்குப் பஞ்சர் போடுவதைப் போல் ஒரு தொழில் திரைப்பட இயக்கம். அவ்வளவே.////

ரசித்தேன் ராம்.

நண்பர் மணிஜீ உங்களை பற்றி சொல்லியிருக்கிறார்.

வாழ்த்துகள்.

Raju said...

\\சில விளக்கங்களும்"\\

இதற்கு நியாயம் செய்யவில்லை உங்கள் பதிவு..!
என்ன விளக்கம் கொடுத்துள்ளீர் என்பதை நீங்களே ஒரு முறை மீண்டும் படிக்க..! புரியலாம்.