Saturday, March 20, 2010

மங்கூஸ் பேட்,துரோகி ஹைடன்

ஐ.பி.எல் ஆரம்பித்த உடன் நான் திட்டிய ஒரே ஆள் என்றால் அது மாத்யூ ஹைடன் மட்டும் தான்.முதல் இரண்டு போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை.கில்கிறிஸ்ட்,ஹைடன்,சேவாக்,கெயில் இவர்கள் எல்லாம் அடித்து ஆடினால் எதிர் அணியில் எப்படி பந்து வீசினாலும் தோல்வி தான்.அதற்கு ஒரு சிறிய உதாரணம் தான் யூசுப் பதான்.நிறையவே அந்த அணி அவரை நம்பியிருக்கிறது.அதுதான் இது மாதிரி வீரர்களின் பலமும் பலவீனமும்.

நேற்று எப்படியும் தோற்று விடுவார்கள் என்று நினைத்து கொண்டேன்.ஹைடனை வேண்டிய அளவு திட்டி விட்டேன்.வீட்டிற்கு வந்து பார்த்தால் ஹைடன் இமாலய வெற்றி.நான் போட்டியைப் பார்த்தால் தோற்று விடுவார்கள் என்பதால் நிறைய போட்டி பார்க்கவே மாட்டேன்.அதுவும் நான் யாரையாவது திட்டினால் அவர் தான் அன்று போட்டியின் நாயகனாகி மற்றவர்களிடம் இருந்து எனக்கு திட்டு வாங்கி தருவார்கள்.

என் தம்பி சாட்டில் வந்து "மாட்ச் பாத்தியா.." என்று கேட்டான்.இல்ல என்று பதிலளித்தேன்.ஹைடன் மங்கூஸ் பேட் வைத்து விளையாடி சாவடி அடித்தான் என்றான்.மங்கூஸ் என்றால் அது பிரபலமான பட்டப்பெயர்.என்ன மங்கூஸ் பேட் என்று கேட்டதற்கு கூகுளில் பார் என்று சொல்லி விட்டான்.கூகிள்  மட்டும் இல்லை என்றால்....


கைப்பிடி வழக்கத்தை விட நீளம்(43%).அதற்கு ஏற்றார் போல் பிளேடின் அளவு குறைவு.என்னை கேட்டால் ஹைடன் போல மீன்பாடி(பெரிய பாடி) உள்ளவர்களுக்குத் தான் அது செட்டாகும்.நம்மவர்கள் யாராவது விளையாடினால் அது கைப்பிடியில் பட்டு கேட்சாகும்.இல்லை உடம்பில் காயம் படும்.

ஹைடன் மட்டும் அடிக்காமல் இருந்திருந்தால் நானே திட்டியிருப்பேன்.அந்த மங்கூஸ் மண்டையனுக்கு ஏன் இந்த வேலை என்று.வாழ்க மங்கூஸ்.நல்ல வேளை இதை அவர் ஆஸ்திரேலியாவுக்கு விளையாடும் போது உபயோகிக்கவில்லை.உபயோகித்திருந்தால் மனுஷன் இன்னும் ஆடிக்கொண்டிருப்பார்.

ஹைடன் எல்லாம் என்னங்க மங்கூஸ் பேட் உபயோகித்திருக்கிறார்.நான் எல்லாம் சின்ன வயதிலேயே அதில் விளையாடி இருக்கிறேன்.பிளேட் தேய்ந்து அது அப்படி தானிருக்கும்.என்ன ஒன்று அப்போது எங்களுக்கு பெயர் தெரியாத காரணத்தால் ஹைடன் பெயரைத் தட்டிச் சென்று விட்டார்.துரோகி ஹைடன்.எங்க வாழ்க்கையில் என் இப்படி விளையாடுகிறார்.நான் சொன்னதை தான் நேற்று சேவாக் சொல்லியிருப்பார்.அவர் அடித்த அடி யாருக்கும் நினைவில் இருக்காது.

கிரிக் இன்போவில் டோனி மோன்டனா என்ற போதைப் பொருள் கடத்தல்காரன் சாகும் தருவாயில் கூட வெளியே பாய்ந்து ஒரு சின்ன மெஷின் கன்னை வைத்து சுட்டாராம்.அப்போது அவர் சொன்ன பன்ச் தான் இது - "சே ஹலோ டூ மை லிட்டில் பிரெண்ட்..".படத்தில் கூட இந்த பன்ச் பட்டாசு கிளப்பியதாம்.பேசியவர் அல் பசினோ.அது மாதிரி ஹைடனும் சொல்லாமல் செய்திருக்கிறார்.

எங்க பாட்டி கூட மங்கூஸ் பேட் உபயோகித்திருக்கிறார்.போர்வையை வெளுக்க அதை வைத்து அடித்து துவைப்பார்.அதனால் ஹைடனுக்கு முன்னால் அதை உபயோகப்படுத்திய பெருமை நம்ம ஊர் அம்மணிகளுக்கே சேரும்.இதில் அடி வாங்கிய ரங்கமணிகளை நினைத்து பார்த்தேன்.என்னா வில்லத்தனம் என்று ஆதி சொல்வது இங்கு வரை கேட்கிறது.

4 comments:

இரும்புத்திரை said...

ரொம்ப நாளாய் என் மனதின் வருத்ததைப் புரிந்து கொண்டு மைனஸ் (தெரியாமல்) போட்ட தம்பி வாழ்க.நமக்கு நாமே திட்டம்.

Unknown said...

அய்யோ பாவம் மங்கூஸ்ல ஹைடன் அடிச்ச அடியப் பாக்கலையா??

மோனி said...

அத்த்த்து...
(அஜீத் மாதிரி படிங்கப்பா..)

Anonymous said...

மங்குஸ் என்ன கீரி பிள்ளை

பெரிய வால் சிறிய உடம்பு