வாலில்லாத பட்டம் பறப்பதைப் பார்க்கும் போதெல்லாம் நான் என்னையே அதில் உருவகப்படுத்திக் கொள்வேன்.பட்டம் அதுவும் மற்றவர்கள் விடும் போது மட்டும் நான் பொறாமையில் வைந்து சாவேன்.பட்டம் விடுவதற்கு மட்டுமல்ல பட்டம் பறக்கும் இடத்திற்கு கூட நான் போக முடியாத அளவிற்கு எனக்கு தடையுத்தரவு அமுலில் இருக்கும்.எனக்கு மட்டும்.
மாஞ்சா,இன்னும் இத்யாதி இத்யாதிகள் போட்டு பட்டம் மேலே பறக்கும் போது சமயத்தில் விடுபவனுக்கு லுங்கி அவிழ்ந்து விட்டால் என்னை பிடிக்க சொல்வார்கள்.ஆசையில் மனம் அடித்துக் கொண்டாலும் சரியாக நான் பிடிக்கும் சமயம் தான் யாராவது வருவார்கள்.பிறகு பட்டம் பறப்பதை அருகில் இருந்து பார்ப்பது கூட அரிதாகி விடும் என்பதால் பிடிக்கிறேன் பட்டத்தை அல்ல உன் லுங்கியை என்று சொல்லியிருக்கிறேன்.அவனும் தலையில் அடித்துக் கொண்டே ஏதாவது கம்பத்தில் கட்டு விட்டு லுங்கியை சரி செய்து கொள்வான்.
வால் கட்டுவார்கள் அதுவும் நீண்ட தூரம் பறக்க விடும் பட்டத்திற்கு அது நிச்சயமாகயிருக்கும்.காரணம் கேட்டால் சீராக பறக்க உதவுமாம்.தவிர ஜிகினா தாள்களில் வாலிருந்தால் அடையாளம் காண உதவுமாம்.அதனால் தான் என்றுமே எனக்கு கடிவாளமோ,வாலோ கட்டியதில்லை.மனதுக்கு ஏற்ப நடப்பேன் அப்படி நடந்தால் தான் என்னால் இயல்பாக இருக்க முடியும்.தவிர எதன் உதவியில்லாமல் அறுந்து விழுந்தாலும் திரும்ப அதே வேகத்தில் எழுந்து நடக்க எதுவாகயிருக்கும்.
கண்ணம்மாபேட்டை பசங்களுக்கும்,எங்களுக்கும் தான் போட்டியிருக்கும்.பட்டத்தை அறுத்து விளையாடுவதில் எல்லோரும் ஈடுப்பட்டிருக்க சந்தர்ப்பம் கிடைக்காமல் நான் மட்டும் தான் வேதனையோடு வேடிக்கை பார்ப்பேன்.அறுத்து விடும் போது நீளமான வால் போய் ஏதாவது உயரமான இடத்தில் சிக்கிக் கொள்ளும்.யாருக்கும் கிடைக்காது.அதிலிருந்து நான் வாலில்லாத பட்டமாக மாறி விட்டேன்.
இந்த தலைப்பை நான் திருடி விட்டேன்.காவலர் குடியிருப்பு படத்தின் பாடலில் இருந்து திருடி விட்டேன்.
வாலில்லாத பட்டம் போலவே நானும்
இன்று மாறிப் போன கோலம் நீயும் பாரடா
பார்வைவில் வான்மழை
ஈரமாக்கும் என் நாளை
காரணம் இப்படி காதல் சொறியும் வரிகள் இருக்கும் போது என்னால் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் பாடல்களை ரசிக்க முடியவில்லை.சொல்லி விட்டேன்.இதற்கும் என்னை அடிக்க வேண்டாம்.
முடிந்தால் எனக்கு யாராவது வால் கட்டி விடுங்களேன்.சீராக பறந்து சீராக எழுதி வி.தா.வ,ஆ.ஒ,பே என்று எல்லோருடன் ஒத்துப் போகிறேன்.இனி காரணம் சொல்லாமல் தான் எதன் மீதும் விமர்சனம் இருக்கும்.காரணம் சொன்னால் நாலு பதிவு எழுத வேண்டியுள்ளது.என் எழுத்தை வைத்து என்னை முடிவு செய்தால் நான் என்ன செய்ய முடியும்.சாட் திட்டுகளைத் தாங்க முடியாமல் தான் இந்த பதிவு.காரணம் சொல்லாமல் விட்டாலும் காரணம் கேட்கிறார்கள்.என்னை எந்த பக்கம் வந்தாலும் வெளுப்பதில் அப்படி என்ன சந்தோஷமோ.கடவுளே கடவுளே.
Tuesday, March 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அன்பின் அரவிந்த்
ந்ல்லாத்தானே இருந்தே ! என்ன ஆச்சு - வாலில்லாம கஷ்டப்படறியா - உன் லுங்கிய ஒருத்தணும் பிடிக்கலியா - கன்ணம்மா பேட்டியா - ஜமாய் ராஜா
நான் பட்டம் விட்டாதால் தானே என் லுங்கியை பிடிப்பார்கள்.நான் அந்த இடத்தில் சும்மா இருப்பது தான் என் வேலை.தவிர நான் லுங்கி கட்ட மாட்டேன்.எனக்கு கட்டத் தெரியாது.
அண்னே வால் பாவம்ணே, கழட்டி விடாதிங்க!
ஏற்கனவே வால் பிடித்தனால் தான் இன்னைக்கு உங்க பதிவில் அதுவும் வாலாகிய உங்களால் அடி விழுகிறது.அதனால் தான் வாலை கட் செய்து விடுகிறேன்.எனக்கு அடி விழாமல் இருக்க..உங்களை நான் கட் செய்ய மாட்டேன்.
\\சாட் திட்டுகளைத் தாங்க முடியாமல் தான் இந்த பதிவு//
நானும் ரெடியா இருக்கேன் சிக்கிரம் ஆன்லைன்ல வாங்க பாஸ். திட்டி ரொம்ப நாள் ஆச்சு .
காலங்கள் மாறுகின்றன , வாழ்க்கை முறையும் மனிதரின் ரசனையும் மாறுகின்றன . அந்த பாடல் வெளிவந்த காலத்தில் இருந்த மாதிரியேவா இப்பொழுதும் நம் வாழ்க்கை முறை இருக்கின்றது ? மாற்றங்கள் இயல்பானதே அதை ஏற்க்க மறுப்பது நம்முடைய மன வளர்ச்சியை காட்டுகின்றது .
ஒரு படத்தை பற்றிய கண்ணோட்டம் அவரவர் ரசனைக்கேற்ப மாறுபடும் . உங்களுக்கு வி .தா.வ. , ஆ .ஒ. பிடிக்கவில்லை என்றால் அது உங்க விருப்பம் . ஆங்கில , ஹிந்தி படங்களை ஆதரித்து விமர்சனம் பண்ணும் நீங்கள் தமிழ்பட விமர்சனத்தில் மட்டும் பின்னோக்கிய பார்வை ஏன்? அந்தக் கால படங்கள் நல்ல படங்களே . வாழ்க்கை முறையில் முன்னோக்கிய பார்வை கொண்ட நீங்கள் தமிழ் படங்களிலும் பாடல்களிலும் இன்னமும் காவலர் குடியிருப்பில் குடியிருப்பது சரியா ?
Post a Comment