அவள் பெயர் என்னடா இப்படி கேட்காத நண்பர்களும்,அவள் பெயர் என்று உச்சரிக்காத உதடுகளும் குறைவுதான்.அப்படி தலைப்பைப் பார்த்து மயங்கிய படங்களுள் இதுவும் ஒன்று.அவள் பெயர் தமிழரசி இதுவே போதையை தந்தது.அதற்குள் வயது 18 மாநிறம் என்று அடுத்த அட்டாக்.இந்த தலைப்பிலேயே இயக்குனர் இரசனையானவர் என்று தெரிகிறது.
பொதுவாக அறிமுக இயக்குனர்களின் படங்களை உடனே பார்ப்பதை அதுவும் ப்ளாக் எழுத ஆரம்பித்தப் பிறகு தவிர்க்க தொடங்கியிருக்கிறேன்.சும்மாவே கை ஏடாகூடமாக அடிக்காமல் இருக்காது.அதுவும் படம் பிடிக்காமல் போய் விட்டால்.கேட்கவே வேண்டாம்.
ஆதியின் பதிவில் அவள் பெயர் தமிழரசி வலைப்பூவிற்கு அதில் மீரா கதிரவனின் பேட்டி."1998ல் சென்னை வந்தேன்.அடுத்த ஐந்து வருடத்தில் இயக்குனராகி விட வேண்டும் என முடிவு செய்தேன்.ஆனால் என்னால் உதவி இயக்குனராகத் தான் முடிந்தது..".அந்த வார்த்தைகளில் ஒரு வலி இருந்தது.
ஆனால் போன வாரம் வந்த படத்தில் பாருங்கள்.கஷ்டமே படாமல் காக்க காக்க கேமராமேன் உதவியால் சினிமாவில் சேர்ந்து விடுவாராம்.எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு தெரியும்.தம்பியின் நண்பன் உதவி ஒளிப்பதிவாளராக சேர செல்லும் போது டீ வாங்கி கொடுக்க சொன்னார் அந்த மார்க்கட் போன ஒளிப்பதிவாளர்.இவன் அதிர்ச்சியில் அப்படியே நிற்க நாங்களும் இப்படித்தான் செய்து வந்திருக்கிறோம் என்று சொல்ல அடுத்த நாளிலிருந்து அவன் போகவில்லை.சினிமாவில் நான் சேர ஆசையிருந்த சமயம் அண்ணனிடம் போய் கேட்டேன்."உனக்கு இது சரிவராது..கோபம் அதிகமிருப்பதால் நீ இதற்குள் வராதே.." என்று சொல்லி விட்டார்.விஜய் டிவியில் தமிழ் எழுதி குடுக்க ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை.தமிழை ஒரு தமிழ் தெரியாதவனுக்கு எழுதி கொடுக்க வேண்டுமா என்ற கோபத்தில் அந்த வேலையும் பணால்.
பொதுவாக நான் ஒரு படம் பார்க்க முடிவு செய்தால் இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் குடுப்பேன்.
1.கொஞ்சம் ரிச்னெஸ் இருப்பது மாதிரி தெரியும் கதைகளில் வடிவேலு இருந்தால் போக மாட்டேன்.அந்த படம் எப்படி ஆனது என்பதற்கு உதாரணம் - சில்லுன்னு ஒரு காதல்.
2.படம் வெளியாக இரண்டு வாரங்கள் இருக்கும் போது இயக்குனரின் பேட்டி ஆனந்த விகடனில் வந்து இருந்தால் போக மாட்டேன்.(ஆனந்த விகடன் நான் படிப்பதில்லை.அதுவும் அந்த ப்ளாக்கில் தான் படித்த்
இது தவிர ஜெய் சொன்ன வார்த்தைகள்."வாமனன் தவிர எந்த படமும் ஓடாது.." இந்த திருவாசகமும் உறுத்த பாலா தவிர பாலு மகேந்திராவின் சிஷ்யர்கள் செய்யும் தவறே ஓடும் குதிரை பின்னால் ஓடுவது தான்.மீரா கதிரவன் - ஜெய்,ராம் - ஜீவா(ஈ படத்திற்கு பின்),சீனு இராமசாமி - பரத்.
இது தவிர காதலியைத் தேடி பயணிக்கும் அவரின் சகாவாக இருந்த ராம் படத்திலும் இரயில்,மகாராஷ்டிரா,தாடி,காதலி என்று இருக்கும்.போன வாரம் வந்த காதலைத் தேடி அமெரிக்கா சென்ற வி.தா.வ படமும் இதற்கு தடைக்கல்லாக இருக்கும்.
இனி அடுத்து சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்.ஆல்பம் தோல்விக்குப் பிறகு வசந்தபாலனும்,சாமிராய் தோல்விக்குப் பிறகு பாலாஜி சந்திவேலும் ஒரு மறக்க முடியாத படம் குடுத்தார்கள்.அதற்கு காரணம் இயல்பான நடிகர்களின் தேர்வு தான்.இதை கற்றது தமிழ் ராமும்,மீரா கதிரவனும்,சீனு இராமசாமியும் செய்வார்கள் என்பது உறுதி.
Saturday, March 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இது நேற்று வர வேண்டிய பதிவு.ஒரு ஆசாமியின் மந்திர சக்தியால் இது ஒரு நாள் தள்ளிப் போய் விட்டது.
நம்பினார் கைவிடப்படார்....
நிச்சயம் ஒரு நல்ல படத்தையாவது நானும் எதிர்பார்க்கிறேன்..
:)
யோவ், அவருக்கு காமிரா கண்ணிலிருந்து தப்பிக்கும் தந்திரமே தெரியல, மந்திரம் போடுறாரா?
//.ஒரு ஆசாமியின் மந்திர சக்தியால் இது ஒரு நாள் தள்ளிப் போய் விட்டது.//
)))))))))
Post a Comment