ஒரு முறை கல்லூரி உணவகத்தில் பெப்ஸி குடித்து கொண்டிருந்தோம்.எங்களுக்கு வேண்டாதவன் வந்ததைப் பார்த்து விட்டு பெப்ஸியில் தண்ணீர் ஊற்றினான்.நிறம் மாறி விட்டதால் சமன் செய்ய குடித்துக் கொண்டிருந்ததை அப்படியே துப்பி விட்டான்.வந்தவனும் எடுத்து குடித்து விட்டான்.காரணம் பெப்ஸி என்னும் பிராண்ட் நேம் மற்றும் நண்பர்கள் மீதிருந்த நம்பிக்கை.
இந்த முறையை தான் சினிமாவில் கடைப்பிடிக்கிறார்கள்.எச்சிலை தந்தாலும் பரவாயில்லை.என்னால் சொல்ல முடியாத ஒற்றை எழுத்து கழிவை பொட்டலமாக கட்டி கலர் தூவி ஜிகினா தாள்களில் தருகிறார்கள்.நம்பிக்கையால் நாமும் எடுத்து கொள்கிறோம்.பிறகு சிலாகிக்கிறோம்.அப்படி சொல்லாதவனை விமர்சிக்கிறோம்.
இருபது வருடங்களுக்கு முன் விக்ரமன்,செல்வமணி,உதயகுமார் எல்லாம் பிராண்ட் நேம் தான்.அவர்களும் அதை தான் செய்தார்கள்.காணாமல் போய் விட்டார்கள்.இன்று கௌதம் மேனன் என்ற ஜிகினா வேலை செய்து பிராண்ட் நேமாக மாறியிருக்கிறது.வி.தா.வவில் ஏ.ஆர்.ரகுமான் பாடலகள் எல்லாம் உலகத்தரம் என்று சொல்லும் போது எனக்கே அடக்க மாட்டாமல் சிரிப்பு வருகிறது.இந்தியில் ஏ.ஆர்.ரகுமான் அளவுக்கு இசையில் கலக்கும் எத்தனையோ பேர் உண்டு உண்டு.தெலுங்கில் மிக்கி.ஜெ.மேயர் பாடல்கள் எல்லாம் நாம் கேட்டிருக்க மாட்டோம்.அதுதான் இங்குள்ள பிரச்சனையே.
இரசிப்பதற்கும் திட்டுவதற்கும் நாம் இது மாதிரி பிராண்ட் நேம் பின்னால் தான் அலைகிறோம்.யோகியை காப்பியடித்து எடுத்தார் என்று அமீரை கிழித்து எறிந்த நாம் அதே டூட்ஸியைக் காப்பியடித்து பிப்ரவரி 26ம் தேதி வந்த அழுக்கன் படத்தை விட்டு விட்டோம்.காரணம் நாம் பிரபலத்துக்கு தான் பல்லாக்கு தூக்குவோம்.அழுக்கன் என்ற படம் வந்ததாவது தெரியுமா.
எத்தனையோ வெற்றி படங்கள் கொடுத்த இராம் கோபால் வர்மாவையே அவர் தோல்விகளை தழுவும் போது அடி வெளுக்கிறார்கள்.கிழித்து தோரணம் கட்டுகிறார்கள்.நாம் செய்கிறோமோ என்றால் இல்லை அதோடு மட்டுமில்லாமல் செய்பவனையும் சேர்த்தே தடுக்கிறோம்.
எப்படி இரட்டை வேஷம் போடுவோம் என்பதற்கு உதாரணம் ஆர்யா,பரத் என்று வளர்ந்து வரும் நடிகர்களை சாதாரணமாக அவன்,இவன் என்று பேசும் நாம் நேரில் பார்த்தால் சார்,மோர் என்று கும்பிடு போடுவோம்.இங்கே அப்படியெல்லாம் கிடையாது யாராகயிருந்தாலும் பெயர் சொல்லி தான் அழைக்கிறார்கள்.ஒரே மாதிரி எப்பவும் இருக்கிறார்கள்.
நேரில் ஒரு மாதிரியும் பதிவுலகத்தில் ஒரு மாதிரியும் நடக்கிறோம்.அதற்கு உதாரணம் இட்லி வடையில் பெயரை மறைத்து கொண்டு நித்யானந்தர்,சாரு பற்றி எழுதிய ஏதோ ஒரு பிரபலம் என்று நினைத்து கொண்டிருக்கும் பிராபலம்.ஏன் பெயர் தெரிந்தால் பிராண்ட் நேம் காணாமல் போய்விடுமா என்ன.முகத்தை மறைத்து கொண்டு அனானியாக கருத்து சொல்வதை விட பொத்தி கொண்டு இருக்கலாம்.
மலையாள மேனியாவை தமிழ் சினிமாவில் திணிக்கும் மேனன் ஒரு படம் கூட அங்கு இயக்க மாட்டார்.காரணம் காசு கிடைக்காது.இந்த மாதிரி படங்கள் எல்லாம் அங்கு ஒரே நாளில் வெளுத்து விடுவார்கள்.படம் நன்றாக இல்லை என்றால் முதல் காட்சி பார்த்து விட்டு வருபவர்கள் அடுத்த காட்சிக்கு காத்து இருப்பர்களை கலைத்து விடுவார்கள்.நம் ஆள் தான் நீ சொன்னால் ஆச்சா நானும் பார்த்து விட்டு தான் சொல்வேன் என்று பார்த்து விட்டு ஆமாம் நல்லாயில்லை என்று சொல்வார்கள்.அதனால் தான் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் தமிழ் நாட்டிலும்,ஆந்திராவிலும் அதிகம் இருக்கிறார்கள்.கேரளாவில் பிரேம் நசீர் பப்பே வேகவில்லை.அரசியலில் சொல்கிறேன்.
பதிவுலகத்திலும் இது தான் நடக்கிறது.ஒரு வேளை எனக்கும் ஏதாவ்து பிராண்ட் நேமிருந்தால் அதில் தொய்வு வரும் போது நான் பதிவு எழுதவே மாட்டேன்.தொய்வுகள் ஏற்படாமல் இருக்கத்தான் மீள்பதிவுகள் இடுவதில்லை.
இரசிகர் மன்றமே வேண்டாம் என்று சொல்லும் பிரகாஷ்ராஜிற்கு நான் இரசிகன்.வெளிப்படையாக ஒரே மாதிரி இருக்கும் யாருக்கும் நான் இரசிகன் தான்.நான் ஏன் உன்னை காதலித்தேன் என்று நிஜ வாழ்க்கையில் ஒரு பெண்ணிடம் திரும்ப திரும்ப கேட்டால் சைக்கோ என்று சொல்லி விடுவார்கள்.
சொல்ல மறந்து விட்டேன்.எனக்கு பாக்ஸிங் தெரியும் என்று சொன்னவரை பள்ளியில் அவருடன் கூட படித்தவர் துரத்தி துரத்தி அடித்தது ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது.இதை சொல்வதற்கு சினிமாவை பார்த்து கற்பனையில் வாழாதீர்கள்.நம்மிடம் வம்பிழுக்கும் ஒருவனை கூட நம்மால் திருப்பி அடிக்க முடியாத கையாலாகாத சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் இங்கிருக்கும் எல்லோரும்.
Monday, March 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
:)
?? ஏன் இந்த கொலைவெறி சகா ??
உங்களோட பிராண்ட் நேமாக இருக்கிறது கோபம் தான்.அதை நீங்கள் சீக்கிரம் குறைத்து பதிவுலகை விட்டு காணாமல் போக வேண்டும் என்று எல்லாம் வல்ல ரஞ்சிதானந்தாவை கேட்டுக் கொள்கிறேன்.கனவில் வந்து தலைவரின் கோபத்தை அவர் குறைப்பார் என்று நினைக்கிறேன்.அப்படியே கனவில் முழுதாக அந்த படத்தை பார்த்து விட்டு விமர்சனம் எழுதவும்.
நன்றி வெள்ளி நிலா.
நன்றி ரோமியோ.எல்லாம் ஆனந்தமயம்.கணேஷ் பின்னூட்டம் படித்தவுடம் மூட் மாறி விட்டது.
நன்றி கணேஷ்.எதுக்கு ரெண்டு முறை பின்னூட்டம்.என்னை விட அந்த அம்மணி உங்களை அதிகம் பாதித்திருக்கிறார் போல.இனி கோபம் பற்றிய உங்கள் கருத்தை தொடர்ந்து இனி வரும் ஒரிரண்டு பின்னூட்டமும் அதையே பிரதிபலிக்கும் என்று நினைக்கிறேன்.
\\ஒரு முறை கல்லூரி உணவகத்தில் பெப்ஸி குடித்து கொண்டிருந்தோம்.எங்களுக்கு வேண்டாதவன் வந்ததைப் பார்த்து விட்டு பெப்ஸியில் தண்ணீர் ஊற்றினான்.நிறம் மாறி விட்டதால் சமன் செய்ய குடித்துக் கொண்டிருந்ததை அப்படியே துப்பி விட்டான்.வந்தவனும் எடுத்து குடித்து விட்டான்.காரணம் பெப்ஸி என்னும் பிராண்ட் நேம் மற்றும் நண்பர்கள் மீதிருந்த நம்பிக்கை.\\
நண்பரின் அதீத ஆசையென்றும் ரசிப்புத்தன்மையுமென்றும் இங்கே சொல்லலாமே..!
\\இந்த முறையை தான் சினிமாவில் கடைப்பிடிக்கிறார்கள்.எச்சிலை தந்தாலும் பரவாயில்லை.என்னால் சொல்ல முடியாத ஒற்றை எழுத்து கழிவை பொட்டலமாக கட்டி கலர் தூவி ஜிகினா தாள்களில் தருகிறார்கள்.\\
குறைந்தபட்சம் “என்னைபொறுத்த வரை” என்று சேர்த்திருக்கலாம். ஏனெனில் யாராவது குசும்பு பிடித்தவர்கள் “அதைச்சொல்ல நீங்கள் யார்..?” எனக் கேட்கக் கூடும்..!
\\பிறகு சிலாகிக்கிறோம்.அப்படி சொல்லாதவனை விமர்சிக்கிறோம்.\\
எல்லோரும் அப்பிடிச் செய்வதில்லையே ஸார்..!”
\\இரசிப்பதற்கும் திட்டுவதற்கும் நாம் இது மாதிரி பிராண்ட் நேம் பின்னால் தான் அலைகிறோம்.\\
இதற்கு முந்தைய பத்தியில் பிராண்ட் நேம்களை ரசிப்பதற்கு ரகுமானை உதாரணம் கூறிய மாதிரி, இங்கே நாம் திட்டிக் கொண்டிருக்கும் பிராண்ட் நேமாக நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பவரையும் அல்லது அவர்களில் ஒருவரையும் குறிப்பிட்டிருக்கலாம்.
\\எத்தனையோ வெற்றி படங்கள் கொடுத்த இராம் கோபால் வர்மாவையே அவர் தோல்விகளை தழுவும் போது அடி வெளுக்கிறார்கள்.கிழித்து தோரணம் கட்டுகிறார்கள்.நாம் செய்கிறோமோ என்றால் இல்லை அதோடு மட்டுமில்லாமல் செய்பவனையும் சேர்த்தே தடுக்கிறோம்.\\
ஏன் இது “கண்களால் கைது செய்,பொம்மலாட்டம்” எடுத்த பாரதிராசாவுக்கும் “ஆறுமுகம்” எடுத்த சுரேஷ்கண்ணாவுக்கும் பொருந்தாது...?
மக்கள் அந்தப்படங்களை ஃபிளாப்பாக்கினரே..!
\\எப்படி இரட்டை வேஷம் போடுவோம் என்பதற்கு உதாரணம் ஆர்யா,பரத் என்று வளர்ந்து வரும் நடிகர்களை சாதாரணமாக அவன்,இவன் என்று பேசும் நாம் நேரில் பார்த்தால் சார்,மோர் என்று கும்பிடு போடுவோம்.இங்கே அப்படியெல்லாம் கிடையாது யாராகயிருந்தாலும் பெயர் சொல்லி தான் அழைக்கிறார்கள்.ஒரே மாதிரி எப்பவும் இருக்கிறார்கள்.\\
இவ்விரு விடயங்களுக்கும் எங்கிருந்து யாரை பிரதிநிதியாக எடுத்துக் கொண்டு சொல்கின்றீர்..? நானும் வட இந்தியாவில்தான் இருக்கின்றேனய்யா.
\\நம் ஆள் தான் நீ சொன்னால் ஆச்சா நானும் பார்த்து விட்டு தான் சொல்வேன் என்று பார்த்து விட்டு ஆமாம் நல்லாயில்லை என்று சொல்வார்கள்\\
இது ரசனை சார்ந்த விஷயம் பாஸ்.
\\சொல்ல மறந்து விட்டேன்.எனக்கு பாக்ஸிங் தெரியும் என்று சொன்னவரை பள்ளியில் அவருடன் கூட படித்தவர் துரத்தி துரத்தி அடித்தது ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது.\\
கிட்டத்தட்ட இது வேண்டாத பொண்டாட்டி கதை.உணமையையும் பிம்பத்தையும் போட்டு குழப்பிக் கொள்கிறீர்கள்.இது சினிமாவின் கிளிஷேக்களில் ஒன்று..!
\\நம்மிடம் வம்பிழுக்கும் ஒருவனை கூட நம்மால் திருப்பி அடிக்க முடியாத கையாலாகாத சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் இங்கிருக்கும் எல்லோரும்.\\
உண்மை எனினும், உங்கள் வாசகர்கள் மத்தியில் நீங்கள் வன்முறையைத் தூண்டுகிறீர்கள் என சிலர் நினக்கலாம், அந்தச் சிலரில் சத்தியமாக நான் ஒருவனில்லை.
யோவ் ராஜூ நூறு ஆயுசு தான் உங்களுக்கு.இப்ப தான் நினைத்து கொண்டிருந்தேன்.எதிர்பதிவு போட ஆளில்லையே.எதிர் பின்னூட்டமா.ஆனாலும் எல்லாம் சொல்லி விட்டு கடைசியில் வைத்த நான் அவன் இல்லை டிவிஸ்டை ரசித்தேன்.
அதெல்லாம் சரி.. இதை ரசி.. இதை ரசிக்காதேன்னு நாங்கதானே பாஸ் முடிவு பண்ணனும். உங்களுக்கு பிடிக்கலைன்னா விட்டுடுங்க. திட்டுங்க, கிழிங்க..
ஆனா உங்களுக்கு பிடிக்காததை ரசிக்கிறவர்களை ஏன் எதையோ தின்கிறோம்னு திட்டறீங்க..
நான் எப்போ அப்படி சொன்னேன் லோகு.அவன் குடுப்பது எனக்கு அப்படி தெரிந்தது.உங்களுக்கு வேறு மாதிரி தெரிகிறது.கூல்.
பதிவுலகமா? அப்டின்னா என்ன? கவுதம் மேனனா? யாரு அவரு? விதாவ-னு ஒரு படம் வந்திருக்கா?
யோவ் ஐடியா மணி சங்கரு..இது மாதிரி எழுதுங்கன்னு வட தந்துட்டு என்னை மட்டும் தனியா அடி வாங்க விட்டா எப்படி.
அட விடுங்க பாஸ், இவுங்க எப்பவுமே இப்படிதான் அடிச்சிக்கிட்டே இருப்பாங்க, இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா?
கெளதம், ரெஹ்மான் இந்த இருவருமே கூட இந்த படத்தை பற்றி மறந்திருப்பார்கள்..
பெயர் சொல்லக்கூட தைரியமில்லாமல் பின்னூட்டம் மட்டும் போடும் ஆளுங்கள என்ன செய்ய ?
உங்கள் பார்வை, என் பார்வையும் கூட !
///எனக்கு பாக்ஸிங் தெரியும் என்று சொன்னவரை பள்ளியில் அவருடன் கூட படித்தவர் துரத்தி துரத்தி அடித்தது ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது///
யாருங்க அது..? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.
///நம்மிடம் வம்பிழுக்கும் ஒருவனை கூட நம்மால் திருப்பி அடிக்க முடியாத கையாலாகாத சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் இங்கிருக்கும் எல்லோரும்.///
இது தான் மாமு நெசம். கேட்டா அன்பு, கட்டுப்பாடு, சட்டம்னு கதை உட்ரானுங்க கம்...டி பசங்க...! (வன்முறைய தூண்டுற மாதிரி ஏதும் சொல்லிபுட்டனா இரும்பு..?)
Post a Comment