தம்பியிடம் இரண்டு விஷயங்கள் பேசவே கூடாது என்று பகீரத முயற்சி செய்தாலும் பேச்சு சுவாரஸ்யமான கட்டத்திற்கு இடம் மாறும் அதை தான் பேசுகிறோம்.முதலாவது பெண்கள்.இரண்டாவது சினிமா.
இதில் எதைப் பற்றி பேச ஆரம்பித்தாலும் எனக்கு முன்னாடியே தெரியும் என்கிறான்.மலீனா என்று படம் இருப்பது தெரியுமா என்று தெரியாமல் கேட்டு விட்டேன்."ம்ம்..அந்த படத்தின் அன் கட் வெர்ஷனை எங்கள் கல்லூரியிலே போட்டுக் காட்டினார்கள்.." என்று பதில் வருகிறது.
அவனும் நானும் இரு துருவம் தான்.ஏதாவது குடும்ப விஷேசத்தில் பெண்களுக்கு ஆடை தேர்வு செய்ய சொன்னால் நான் எடுக்கும் நேரம் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாக இருக்கும்.ஆனால் அவர்களுக்கு பிடிக்கும்.யாராவது வலிய வந்து எடுத்து கொடுக்க சொன்னால் மறுத்து விடுவேன்.எனக்கு செய்யணும் என்று தோன்றினால் செய்வேன்.இதுவே அவனாகயிருந்தால் பொறுமையாக செய்வான்.சலிப்படைய மாட்டான்.
அடுத்தது யாருக்கு என்ன பொருந்துமோ அதை தான் நான் வாங்குவேன்.அவன் மற்றவர்களின் பார்வையில் அது நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்வான்.உதாரணம் மாமா பெண்ணிற்கு குடை வாங்க வேண்டியதிருந்தது.அவன் போய் பிங்க் கலரில் குடை வாங்கி கொடுத்து விட்டான்.யாராவது இந்த கலரில் வாங்குவார்களா என்று கேட்டு விட்டேன்.ஒரு வாரம் கழித்து உனக்கே தெரியும் என்று சொன்னான்.
அவள் வகுப்பில் எல்லோரும் அந்த குடையைப் பற்றி கேட்டார்களாம்.அவளுக்கும் பிடித்து விட்டதாம்."எப்படி.." என்று என் வியப்பை வெளியே காட்டாமல் கேட்டேன்."சிம்பிள் எல்லா பெண்களுக்கும் பிங்க் கலர் பிடிக்கும் நமக்கு கறுப்பு பிடிப்பது மாதிரி..தவிர நீ ஏற்கனவே சொன்ன காரணமும் உண்டு" என்று சொன்னான்.நான் ரெண்டு விஷயங்களை மறந்திருப்பது தெரிந்தது - 1.அவன் வெப் டிஸைனர்.நான் வேலை செய்வது டேட்டாபேஸ். 2.அடுத்தவர்கள் வைத்திருக்கும் பொருட்களை தான் பெண்கள் விரும்புவார்கள் என்று நான் சொல்லியிருந்தேன்.அதை நானே மறந்து விட்டேன்.அவன் மறக்காமல் இருந்திருக்கிறான்.என்ன இருந்தாலும் என் அனுபவத்தையும் சேர்த்து கொண்டு வளர்ந்தவன் அல்லவா.
இன்னொரு உதாரணம்.ஒரு பெண் அவனிடம் எனக்கு சமைக்க தெரியாது என்று எத்தனை முறை சொன்னாலும் அவன் பதில் இதுதான்."கல்யாணத்திற்கு அப்புறம் கத்துகலாம்..".இதுவே நானாக இருந்தால் அவள் எததனை முறை அப்படி சொன்னாள் என்று எண்ணிக் கொண்டிருப்பேன்.அவள் மூன்றாவது முறை சொல்லியவுடன் எம்.ஜி.ஆர் பாணியில் அவள் மேல் பாய்ந்திருப்பேன்."நல்லா கொட்டிக்க தெரியுதுல..அப்புறம் என்ன சமைக்க தெரியாதா.." என்று ஆரம்பித்து அது சண்டையாக மாறும் வரை திட்டுதான்.அப்புறம் எங்கே நட்பு தொடரும்.நேரே எண்ட் கார்டு தான்.
சின்ன வயதில் என்னால் படிக்க முடியாத காமிக்ஸ் புத்தகத்தை அவன் படித்து விட்டான்.அவனே படித்து விட்டான் நானும் படித்து விட வேண்டும் வீம்பாக எடுத்து படித்தாலும் என்னால் முடியவில்லை.
தியேட்டரில் படம் பார்க்கும் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் சரி பாதியில் வந்ததே கிடையாது.ப்ளாக் எழுத ஆரம்பித்தப் பின் மொக்கை படத்திற்கு போவதேயில்லை.நேற்று ஒரு வாரம் கழித்து சாட்டில் வந்தான்.
அவன் - "என்ன பண்றே.."
நான் - "ரோட் படம் பாக்க முயற்சிக்கிறேன்..நீ என்ன படம் பாத்தே.."
அவன் -"எதுவும் நடக்கும்..படம் செம மொக்கை.."
நான் - "டெலிட் பண்ணிராத..நான் வரும் போது பாக்கணும்.."
அவன் - "முதல்ல வேட்டைக்காரனைப் பாத்து முடி..அப்புறம் இதை பாக்கலாம்.."
மனதுக்குள் நினைத்து கொண்டேன் - "என்னைக்கு நான் ப்ளாக் எழுதுறதை நிறுத்துறேனோ..அன்னிக்கி தான் வேட்டைக்காரனைப் பாக்க முடியும் போல..விஜய்க்காக இந்த தியாகத்தைக் கூட செய்ய மாட்டேனா என்ன..சீக்கிரம் வடை வாங்க வேண்டியது தான்.."
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
வடை வாங்குவதென்றால் என்ன?
வட போச்சே கதை தான் பத்மா மேடம்.அப்படி எழுதாமல் இருந்தால் பினா பானா ஆக முடியாதாம்.
ஐயோ ஒண்ணுமே புரியல
நல்லாருக்கு கத - பி ப ஆக வாழ்த்துகள் அரவிந்த்
நீங்க வட வாங்குவீங்களோ இல்ல விப்பீங்களோ சுறா படத்துக்கு விமர்சனம் எழுதிட்டு என்ன வேணாலும் செய்ங்க
பி.ப - இரண்டு அர்த்தம் இருக்கு...
பிரபல பதிவர்ன்னு சொல்லலாம்--- பிரச்சனைப் பதிவர்ன்னு சொல்லலாம்...
நீங்க எதுவா ஆக ஆசைப் படறீங்க..
//பிரச்சனைப் பதிவர்ன்னு சொல்லலாம்...
//
:-)))))))
//என்ன இருந்தாலும் என் அனுபவத்தையும் சேர்த்து கொண்டு வளர்ந்தவன் அல்லவா//
க்க்க்கும்
அப்போ நீங்களும் வேட்டைக்காரன் இன்னும் பார்க்கலையா ? விஜய் படங்கள் பார்க்ககூடாத லிஸ்ட்ல நான் முதல் இடம் அதுக்குத்தான் குடுத்துருக்கேன் .
Post a Comment