Wednesday, March 10, 2010

லீடர் தெலுங்கு பட விமர்சனம்

இந்த பதிவில் எந்த நேரத்தில் இப்படி சொன்னேனோ தெரியவில்லை.அது தான் நடந்திருக்கிறது.

லீடர் மொக்கையாக இருந்தால் ஜன நாதனை வெளுத்ததைப் போல இவரையும் வெளுக்கலாம்.ஆந்திராவில் ஆட்டோ பஞ்சமாம்.(சுமோ வருமா..)


சாதாரண அரசியல் கதை.வாரிசு உரிமையை நிலை நாட்டும் கதை.ரானா - வெங்கடேஷ்,நாக சைதன்யாவை அடுத்து களமிறங்கிருக்கும் வாரிசு.முதல் பந்தில் சிக்ஸ் அடிக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக ஓடியே மூன்று ரன் எடுத்துள்ளார்.காரணம் அவரை தவிர எல்லோரும் கொஞ்சம் திராபைகளாக தெரிந்தார்கள்.அழகான விக்கெட் கீப்பராக இரண்டாம் பாதியில் வரும் முதல் கதாநாயகி.ரன்னராக முதல் பாதியில் கோலோச்சும் இரண்டாம் நாயகி.சுமன்,கோட்டா சீனிவாசராவ்,சுஹாசினி என்று சீனியர்கள் இருந்தாலும் அடித்து ஆட நாயகனுக்கு மட்டும் தான் வாய்ப்பு.தோனி மாதிரி சச்சினுக்கு வாய்ப்பே கொடுக்காமல் வெளுத்து கட்டுகிறார்.

எப்படியும் நான் வெளுக்கத் தான் போகிறேன்.சின்ன வரியில் முடித்து விடுகிறேன்.சேகர் கம்மூலா நிறைய ஷங்கர் படம் பார்த்திருப்பார் போல.முதல்வன்,சிவாஜி என்று கலந்து கட்டி அடித்து இருந்தாலும் வலுவான் காட்சிகள் இல்லாத காரணத்தால் படம் தள்ளாடுகிறது.

படத்தின் ப்ளஸ்கள்

1.நாயகியை வைத்தே அரசியலில் காய் நகர்த்துவது.பெண்ணால் தான் சிம்மாசனங்கள் ஆட்டம் காண்பது என்பதை அப்படியே திருப்பி இருக்கிறார்கள்.

2.நீலக் கலர் சட்டை கொடுத்து சண்டைக்கும் பாட்டுக்கும் தனியே நேரம் எல்லாம் ஒதுக்கவில்லை.

3.யதார்த்தமான வசனங்கள்.(அவ கையில் நிறைய பூ) இதில் லூ சேர்த்து கிண்டல் அடிக்க முடியவில்லை.

4.சிவாஜியில் சேர்த்த கருப்பு பணத்தை ஏ.வி.எம் நிறுவனத்திடம் இருந்து பிடுங்கி படம் எடுத்தது.

5.சமகால அரசியல் நிகழ்வுகளை கொண்ட கதை.இன்னும் விளக்கமாக முன்பே காட்டியிருந்தால் ஜெகன் மோகன் ரொட்டி ஆட்சியைப் பிடித்து இருக்கலாம்.

6.நாயகி முத்தம் கேட்டும் கொடுக்காமல் இருந்த நாயகன் .

இனி மைனஸ்

1.படத்தின் லேசான திரைக்கதை,பார்த்த படங்களை நினைவு படுத்துவதால்.

2.இசை - அது போன படத்தையே கண் முன் காட்டியதால் (ஹேப்பி டேஸ்)

பாக்கலாம்.பாக்காமலும் இருக்கலாம்.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் யாரும் ரீமேக் செய்ய மாட்டார்கள்.நான் இன்னொரு காதல் படத்தை சேகர் கம்மூலாவிடம் கேட்கிறேன் தருவார் என்ற நம்பிக்கையில்.

2 comments:

Unknown said...

நல்ல விமர்சனம்.. அந்த ஜெநநாதன் தொடுப்பையும் பாத்துட்டு வர்றேன்.

நீ தொடு வானம் said...

இப்படி எல்லாம் எழுதினா வர்ற ரெண்டு பின்னூட்டமும் இல்லாம போயிரும்.கண்டபடி திட்டணும்.அது தான் உங்க ஸ்டைல்.