Monday, March 1, 2010

ஸ்ட்ரைக்கர் - இந்தி பட விமர்சனம்

1992ம் ஆண்டு கதை தொடங்குகிறது.பாபர் மசூதியை இடித்த சமயம்.வெளியூரில் இருந்து சித்தார்த் வருகிறார்.வீடு இருக்கும் சாலுக்குள் நுழைய முடியாதபடி போலீஸ் கெடுபிடி.கொஞ்சம் கொஞ்சமாக ப்ளாஷ்பேக் விரிகிறது.கதை அலைபாயுதே பாணியில் சொல்லப்படுகிறது.மால்வாணிக்கு அண்ணன்,அம்மா,அப்பா,இரண்டு சகோதிரிகளுடன் குடியேறுகிறார் சித்தார்த்.அண்ணன் ஒரு கேரம் ப்ளேயர்.மால்வாணியில் கேரம் பெட்டிங் நடத்தும் தாதா.தன் திறமை மீது இருக்கும் நம்பிக்கையால் இரண்டாயிரம் ரூபாய் பந்தயம் கட்ட தோற்று விட்டு தாதாவால் வெளியே அனுப்பப்படுகிறார்.பிறகு ஒருநாள் கடைவீதியில் தாதா சித்தார்த் அண்ணனை அடித்து அவமானப்படுத்த அவர் கேரம் விளையாடுவதை விட்டு விட்டு வேலைக்கு போகிறார்.உடம்பு சரியில்லாமல் பள்ளிக்கு போகாமல் இருக்கும் சித்தார்த்தின் ஒரே பொழுதுபோக்கே கேரம் விளையாடுவது தான்.அண்ணன் நுணுக்கங்களை சொல்லி தருகிறார்.கேரம் போட்டியில் ஜூனியர் லெவலில் சாதிக்கிறார் சித்தார்த்.இடையில் ஒரு அக்காவிற்கு திருமணம் நடக்கிறது.

அவருக்கு ஆசையே துபாய் செல்ல வேண்டும் என்பது தான்.துபாய் செல்ல பணம் கட்டுகிறார்.பள்ளியில் படித்த நெருக்கமான முஸ்லீம் நண்பனை பார்த்து அவருடன் சுற்றுகிறார்.பக்கத்து வீட்டில் குடியேறும் முஸ்லீம் பெண்ணுடன் காதல்.சகோதரியின் சீண்டல்கள்,கடித பறிமாற்றங்கள்,பார்வை பேச்சுகள் என்று தொடர்வது ஒரு ரயில் பயணத்தின் பெண்ணின் அப்பா பார்த்து விட அடுத்த நாள் குடும்பத்தோடு காணாமல் போகிறார்கள்.இதை பார்க்கும் போது மதம் தாண்டிய விண்ணைத் தாண்டி வருவாயா காதல் மற்றும் படத்தின் மேல் வெறுப்பு இன்னும் அதிகரித்தது.பூப்பூத்து உடனே வாடி விடுவது போல் ஒரு காதல்.காதல் தோல்வியில் தண்ணி எல்லாம் அடிக்காமல் நண்பனுடன் மட்டும் எப்போதாவாது அடிக்கிறார்.பத்மபிரியாவுக்கு சொந்தமான கடையில்.

ஏஜண்ட் பணத்தை ஏமாற்றி விட கோபத்தில் மிரட்டும் சித்தார்த் அதன் ரிஷி மூலம்,நதி மூலத்தைத் தேடினால் அந்த தாதா இருக்கிறான்.நண்பன் அவனிடம் வேலை செய்கிறான்.கேரம் விளையாட்டில் சித்தார்த் ஒரு நிபுணன் என்று நண்பன் சொல்ல ஒரு கேரம் எனக்காக ஆடிக் கொடு நான் பணம் தருகிறேன் என்று சொல்ல கோபம் வந்தாலும் வேறு வழியில்லாமல் ஆட ஒத்துக் கொள்கிறார்.பயிற்சி எடுக்கிறார்.போட்டியில் ஜெயிக்கும் சமயம் நண்பனும் பணத்தை வேறு வழியில் திருட போட்டியில் வென்று விட்டு பணத்டுடன் செல்ல,நண்பன் சூதாட்டத்தை போலீஸிடம் போட்டுக் கொடுக்க அனைவரையும் அள்ளிச் செல்கிறார்கள்.விசாரணை சித்தார்த் வரை வர சூதாடுவது வீட்டிற்கு தெரிந்து விடுகிறது.அண்ணன் எச்சரிக்கிறார்.சகோதரிக்கு நிச்சயம் செய்கிறார்கள்.

ஆடிய காலும்,பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல ஆயிரம் ரூபாய் முதல் பார்ப்பவர்களிடம் எல்லாம் ஆடுகிறார்கள்.ஐம்பதாயிரம் ரூபாய் நண்பன் தர, தாதா நடத்தும் போட்டியில் ஜெயிக்கிறார்.சகோதரிக்கு நகையும்,கடனையும் அடைக்க இதை வைத்து உதவலாம் என்று நினைக்க இரயிலில் செல்லும் போது பணம் அடிக்கப்படுகிறது.இதற்கும் காரணம் அதே ரிஷிமூலம் தான்.வீட்டில் பிரச்சனையாக தண்ணியடித்து தெருவில் கிடக்கும் சித்தார்த்தை பத்மபிரியா கடையில் தங்க வைக்கிறார்.அங்கே பிராக்டிஸ் செய்கிறார்.திரும்ப பணமேயில்லாமல் இரண்டு லட்சத்திற்கு சூது ஆட செல்ல வரும் வழியில் ஹெராயின் அடித்து விட்டு வரும் நண்பன் உளறிக் கொட்ட தோல்வியின் விளிம்பில் இருக்கும் போது தப்பித்து வரும் வழியில் போதைப் பொருளால் நண்பனால் ஓட முடியாமல் போக,டாக்ஸி எடுத்து விட்டு திரும்ப வரும் போது நண்பனை காணவில்லை.தினமும் லேட்டாக வரும் போது பத்மபிரியா சண்டை போட கோபத்தில் எல்லை மீறி விடுகிறார் சித்தார்த்.இடையில் நண்பன் கொல்லப்பட மால்வாணிக்கு போக முடியாமல் இங்கே இருக்கும் சித்தார்த்தால் சகோதரியின் திருமணத்தைப் பார்க்க முடியாமல் போகிறது.

இன்ஸ்பெக்டர் அனுபம் கேர் எடுக்கும் முயற்சியில் மால்வாணிக்கு திரும்பும் சித்தார்த் வேலைக்கு போய் கொண்டே கேரம் ஆடுகிறார் நேஷனல் லெவலில்.பத்மபிரியாவை திருமணம் செய்து கொள்கிறார்.கேரம் போட்டியில் வென்று விட்டு வரும் போது பாபர் மசூதி இடிப்பு.மால்வாணிக்கும் நுழைய முடியாத அளவிற்கு பிரச்சனை.காரணம் மால்வாணி 90 சதவீதம் முஸ்லீம் மீதம் இந்து மக்களையும் கொண்டது.தடைகளைத் தாண்டி வீட்டிற்கு வரும் சித்தார்த் அக்கா மற்றும் அத்தான் கொல்லப்பட்டதைப் பார்த்து அங்கிருக்கும் முஸ்லீம் மீது பாய்கிறார்.ஒரு பையன் யார் வந்தது என்று சாட்சி சொல்ல போய் தாதாவை கொன்று விடுகிறார்.அக்காவின் சிதைக்கு தீ வைப்பதோடு முடிகிறது.

படம் - எ க்ளீன் நாரேஷன்.கௌதன் மேனன் படத்திற்கு நூறு மடங்கு சிறந்தது.காதல் என்ற மாயையில் நாம் இருக்கிறோம்.அதுதான் அந்த படத்தைக் கொண்டாடுகிறோம்.இன்றைய இளைய தலைமுறையின் காதல் எப்படி பூத்து உடனே உதிர்வதை இதில் பார்க்கலாம்.ஏ.ஆர்.ரகுமான்,கௌதம் மேனன் என்று பிராண்ட் நேம் பின்னால் ஓடுகிறோம்.அது தான் நம் பிரச்சனையே.நன்றாக இல்லாவிட்டாலும் அருமை என்று சொல்வோம்.அது தான் வி.தா.வ படத்திலும் பாடலிலும் பிரதிப்பலிக்கிறது.ஒரு மாற்றுக்கு இந்த படத்தையும் காவலர் குடியிருப்பு பாடல்களையும் கேட்டுப் பாருங்கள்.

3 comments:

வினோத் கெளதம் said...

VTVயை எதாவது காரணம் காட்டி குறை சொல்லவேண்டும் என்பதற்காகவே அவசர அவசரமா எழுதுன விமர்சனம் மாதிரி இருக்குங்க..
ஆனா Striker நல்ல படம்னு தான் நினைக்கிறேன்.

Bharathi said...

விமர்சனம் னு டைட்டில் வெச்சுட்டு , "படம் - எ க்ளீன் நாரேஷன்." னு ஒரு வரிய தவிர எங்கயுமே இது பட விமர்சனம் மாதிரி இல்லையே.

Narrating the entire story or sequence of scenes from movie is not film review .For a good review one has to understand the nuances of the story and making of the movie.

Also is the comparison of movies from 2 diiferent genre required here ?
Striker is more a action drama kind of movie unlike VTV which falls under love genre.

You can criticze a movie by pointing out its plus and minus and not by making such inappropriate comparisons....

Romeoboy said...

\\ காவலர் குடியிருப்பு//

அந்த அளவுக்கு என்னை கவரவில்லை சகா.