Monday, March 1, 2010

துவையல் - இரசனை ஸ்பெஷல்

விண்ணைத் தாண்டி வருவாயா படம் பிடிக்காதவர்களின் பெயரை எல்லாம் பதிவுலக டெலிபோன் பூத் (யூத்) லிஸ்ட்டில் இருந்து எடுக்கிறார்களாம்.படம் பிடிக்காதவர்களுக்கு இரசனை வேறு இல்லையாம்.அதுவும் விஜய் ரசிகர்கள் அதை சொல்ல வேண்டாம் என்கிறார்கள்.இன்னும் சாரு மட்டும் தான் பாக்கி.அவரும் இந்த டெலிபோன் பூத் லிஸ்ட்டில் சேர இந்த படம் அப்படி இப்படி என்று விமர்சனம் எழுதாமல் இருக்க வேண்டும்.இந்த படத்தை மலையாளத்தில் எடுத்து இருந்தால் முதல் நாளே அடித்து வெளுத்திருப்பார்கள்.அதான் கௌதம் மேனன் புத்திசாலி ஆயிற்றே.தமிழில் தான் எடுப்பார்.ஒரே பாணியில் படம் எடுப்பதை நிறுத்தி கொண்டால் இன்னும் நிறைய வருடங்கள் இங்கு இருக்கலாம்.இல்லை விக்ரமன்,உதயகுமார் நிலைமை என்ன ஆனது என்று கொஞ்சம் திரும்பி பார்த்தால் நல்லது.நான் எனக்கு சொன்னேன்.

வி.சி.குகநாதனுக்கு மனக்கசப்பு தீர்ந்து விட்டது.அதுவும் அஜித்,ரஜினி மேல் இருந்த வெறுப்பு ஒரே நாளில் அதுவும் ஒரே அறிவிக்கையில் முடிந்து விட்டது.அப்படியே ஜாக்குவார் தங்கம்.திருமாவளவன் இவர்களுக்கும் தீர்ந்து விட்டதா இல்லை தனித்தனியாக அறிவிக்கை விட வேண்டுமா தெரியவில்லை.இப்படி ஜால்ரா தட்டுறவங்க சினிமாவில் பெருகி விட்டதால் தான் பாராட்டு விழா எடுத்து அரைகுறையாக ஆட விட்டு மக்கள் இரசனையின் மீது தண்ணிலாரி விட்டு ஏத்துகிறார்கள்.

பேராண்மை,ஆயிரத்தில் ஒருவன்,விண்ணைத் தாண்டி வருவாயா இப்படி தொடந்து எனக்கு பிடிக்காதப் படங்களுக்கு விமர்சனம் எழுதி நிறைய திட்டுகளுக்கு ஆளாகி என் இரசனை மீது நானே தீ வைத்து கொள்கிறேன் என்று நெருங்கிய நண்பன் கிண்டல் செய்கிறான்.என்ன செய்யலாம்.முதல் இரண்டு படமாவது அடுத்த மொழியில் இருந்து தான் அடித்தார்கள்.கௌதம் மேனன் சொந்த படத்திலே உருவி எடுக்கிறார்.மின்னலே,வாரணம் ஆயிரம் எல்லாம் நினைவு படுத்தும் பொது எரிச்சல் வருகிறது.அது எழுத்தாக மாறி படிப்பவர்களையும் எரிச்சல் கொள்ள செய்கிறது.அவர்களோடு ஒத்துப் போனால் மட்டும் பாராட்டுபவர்கள் மாற்று கருத்து வைத்தால் மட்டும் பாய்ந்து அடிக்கிறார்கள்.சில சமயம் அது பதிவுலகத்தை விட்டு விலகும்படியும் ஆகி விடுகிறது.

இது அடுத்த கெஸ்.காவலர் குடியிருப்பு பாடல்கள் எனக்கு பிடித்திருக்கிறது.விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்களை விட அருமை.நம் இரசனை அப்படி ஆகி விட்டது.பிராண்ட் நேம் பின்னாடி போய் எனக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச இரசனையும் இழக்க நான் விரும்பவில்லை.காவலர் குடியிருப்பு படத்தின் புகைப்படங்களும் அருமை.படம் ஓடுகிறதோ இல்லையோ எனக்கு அது வித்தியாசமான அனுபவம் தரும் என்பது உண்மை.படம் பெரிய அளவில் போனாலும் போகாவிட்டாலும் நன்றாக பேசப்படுவது உறுதி.பாடல்கள் கேட்டுப் பாருங்கள்.

கீழே விழுந்த கர்சீப் எடுத்து தந்தாள் உடனே காதல் தான் என்று கற்றுத் தந்த படங்கள் இனி வயது மூத்தப் பெண்ணை காதலிக்க கற்றுத் தரும்.இந்த கூத்தை எல்லாம் பார்க்கும் போது கல்லூரியில் என் ஜூனியர் என்னுடன் படித்த ஒரு பெண்ணை காதலித்தான்.அவள் நிராகரித்த காரணம் வயது மற்றும் உயரம்.அவன் சொன்ன பதில் "நான் வேணா மாத்திரை போட்டு உன் உயரத்திற்கு வந்து விடுகிறேன்.." என்று சொல்ல அவனை பார்க்கும் போதெல்லாம் "டேய் நாங்களே அந்த பொண்ணு கிட்ட மூணு அடித் தள்ளி இருந்து தான் பேசுவோம்..உன் இரசனை ஏன்டா இப்படி இருக்கு.." என்று கிண்டல் செய்வோம்.விண்ணைத் தாண்டி வருவாயா நிச்சயம் பார்த்திருப்பான்.அவனுடைய காதல் கதை மாதிரி இருக்கு என்று அவன் இரசனையின் அளவுகோலை காட்ட எங்களைத் தேடுவான்.அவன் கண்ணில் சிக்கவே கூடாது.அவன் இரசனையின் அளவுகோலை காட்டுவான்.

சண்டையின் போது அடிக்கும் முதல் அடி போல் ஆகி விட்டது விமர்சனங்களும்.அதனால் தான் ஜாக்குவார் தங்கம்,குகநாதன்,திருமாவளவன் போன்றோர்கள் முதலில் ஓடி வருகிறார்கள்.சிகரெட்,மது - அன்புமணியின் ஆயுதம்.அது மாதிரி தான் பதிவில் எல்லோருக்கும் தெரியும் பதிவர் இடும் பின்னூட்டத்தை சார்ந்தே நிறைய பின்னூட்டங்கள் இருக்கும்.புரியாவிட்டால் கூட அருமை என்று சொல்வது இதன் தாக்கத்தில் தான் என்பது என் கணிப்பு.யாருக்காகவும் சமரசம் செய்யாதீர்கள்.நான் படம் நல்லாயில்லை என்று சொன்னாலும் போய் பார்த்து விட்டு நான் பெற்ற தண்டனைகளை நீங்களும் அனுபவிக்க வேண்டும்.சொன்னால் மட்டும் கேட்கவா போறீங்க.

4 comments:

DHANS said...

enakkum pudikalanu sonna pathivulaga vittu thalli vachuduvangalonu bayama iruku

வெள்ளிநிலா said...

its all in the game

ram said...

படம் இவ்வளவு குப்பையா இருக்கும் என்று நினைக்கவில்லை.நூறு ரூபாய் தண்டம்.

மணிப்பக்கம் said...

படம் நல்லாதான் இருக்கு தல! :)