Thursday, March 18, 2010

எல்லாமே டபுள் மீனிங் தான்

ஹூசைன் அந்த நிர்வாணப் படத்தை எந்த வருடம் வரைந்திருந்தாலும் அது நிறைய மக்களின் உணர்வுகளை காயப்படுத்தினால் அது தவறு என்று என்னை சொல்ல வைத்தது அவர் மதப்பெண்களுக்கு மட்டும் ஆடை உடுத்தி ஆழகுப் பார்த்தது தான்.அவர் நேர்மையான ஒவியராக இருந்தால் பாரபட்சமில்லாமல் கோடு இழுக்க வேண்டியது தானே(அட வரைவதை சொன்னேன்).அப்படி வரைந்திருந்தால் ஒத்துக் கொள்ளலாம்.அது சரி ஹிந்து கடவுளை வரைந்தால் வழக்கு தான் போடுவார்கள்.வேறு மதத்து பெண்களை வரைந்திருந்தால் வெடிகுண்டு போடுவார்கள் என்பது அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்.(சினிமாகாரர்களின் மீது வெடிகுண்டு வீச்சு எல்லாம் மணிரத்னம் எடுத்த பாம்பே படத்தின் விளைவு என்று சொன்னால் அது நடந்து பதினாறு வருடங்கள் ஆகிறது என்று யாரும் பின்னூட்டதில் சொல்ல வேண்டாம்).எதையும் இழுங்க.என்னமோ செய்ங்க.பெயர் மட்டும் சரஸ்வதி,பார்வதி என்று வைத்து விட்டு பிரச்சனை வந்ததும் எந்த நாட்டுக்காவது போய் குடியுரிமை வாங்கி கொண்டு அங்கேயும் போய் எதையாவது இழுத்துராதீங்க.அப்பால வேற நாட்டுக்கு போக முடியாது.அங்க இருப்பது எல்லாம் கட்டிங்கு மாஸ்டர்கள் தான்.

மருத்துவர் ருத்ரன் வந்து அது 1970லில் நடந்தது வழக்கு போட்டது 1996லில் என்று சொல்கிறார்.(1996லில் அந்த படங்களை ஒரு இந்தி பத்திரிக்கை வெளியிட்டது.அது வரை அது வெளியே தெரியவில்லை.ஆதாரம் 1991ம் ஆண்டு அவருக்கு கிடைத்த நாட்டின் பத்ம விருதுகளில் உயர்ந்த விருதான பத்மவிபூஷன்.இன்னும் தெரியாமல் அவர் பாரத ரத்னா ஆகியிருப்பார்.அவர் எடுத்த படத்தில் வந்த பாடலுக்கு அவர் மதத்தில் எதிர்ப்பு வந்த காரணத்தால் அடுத்த நாளே படம் திரையரங்கை விட்டு எடுக்கப்பட்டது.எடுக்காமல் விட்டிருந்தால் தெரிந்திருக்கும்) ஹிரோஷிமா,நாகசாகி தாக்குதல் கூட தான் நடந்து அறுபது வருடங்களுக்கு மேல் ஆகிறது ஏன் இத்தனை பீலிங் என்று நான் ஜப்பான் மக்களிடம் சொன்னால் நன்றாகவாயிருக்கும்.அப்படி பார்த்தால் 1984லில் பிறந்த நான் எல்லாம் அதற்கு முன்னாடி வந்த எந்த விஷயத்தையும் பேச முடியாது என்று நினைக்கிறேன்.அது மாதிரி யாராவது தெரிந்தப்பின் வழக்கு போட்டுயிருக்கலாம்.நானும் நிர்வாண ஒவியம் வரையலாம் ஏதாவது மதத்தை வம்பு இழுக்கலாம் தான் என்ன சிக்கல் என்றால் எனக்கு குடியுரிமை தர யாரும் தயாராக இல்லை.இதனால் நானும் இந்துத்துவா என்றால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.அவர் வரைவதில் காட்டும் பாரபட்சம் என் எழுத்தில் இருக்காது.ஹூசைனாகயிருந்தால் என்ன நானாகயிருந்தால் என்ன.இந்திய நாட்டை நிர்வாணமாக வரைந்து எதிர்ப்பு வந்தவுடன் அதை எடுத்து விட்டேன் எண்டு பெயருக்கு கண்காட்சியில் இருந்து எடுத்து விட்டு அவர் தளத்தில் ஏற்றினாரே அது மாதிரி கத்தார் நாட்டை வரைந்து விட வேண்டாம்.எந்த நாடாக இருந்தாலும் அதன் மீது பற்றுக் கொண்டவர்கள் கொஞ்சமாவது இருப்பார்கள்.

பின்னூட்டங்களில் தனி மனித தாக்குதல் வேண்டாம் என்று நாம் சொல்லும் போது நம் சம்பந்தப்பட்டவர்களைத் தாக்கியிருக்கிறார்கள் என்பது பதிவுலக அரசியலில் இருக்கும் ஒன்று.நமக்கு வேண்டாதவர்களாயிருந்தால் நாமும் சேர்ந்து ஆதரிப்போம்.சொல்லாமலிருந்தால் அப்படித்தான் அர்த்தம்.அதனால் என் பதிவுகளில் என்னை கேட்டு விட்டு எனக்கு வேண்டாதவர்களை அடிக்கலாம்.கூகிள் மூலம் என் டவுசரை அவிழ்க்க யாராவது முயற்சித்தாலும் அதை இறுக்கிப் பிடித்துக் கொள்ள எனக்கு தெரியும்.கவலைப்படாமல் அடிக்கலாம்.நான் மட்டும் ஏன் தனி வழியில் போக வேண்டும்.

நானும் இனி ஒழுங்கா எழுதுறேன்,ரெண்டு வேளை பல் தேய்க்கிறேன்,மூணு வேளை குளிக்கிறேன்,குளிக்கும் போது ஷோப் போடுறேன் எனக்கு தமிழ்மணப் பரிந்துரை வேண்டும்.என் பதிவை ஏத்துங்க என்று எல்லாம் கேட்க மாட்டேன்.பிடிச்சா போடுங்க.பிடிக்கவில்லை என்றாலும் மைனஸ் போடுங்க.எனக்கு ஏன் நிறைய பின்னூட்டம் வரவில்லை என்று நண்பர் கேட்டார்.சாருவும்,எஸ்.ராமகிருஷ்ணனும் வாங்குவதில்லை என்று சொன்னேன்.சாரு அனுமதிப்பதில்லை என்று சொன்னார்.உசைன் போல்டுடன் ஓடாமல் நான் அவரை விட வேகமாக ஓடுவேன் என்று நான் சொல்வதண்டு என்று சொன்னேன்.அடுத்த சாட்டுக்கு இன்னும் ஆள் வரவில்லை.ஓடிப் போன நண்பர் சாறு பிழியப்பட்ட சங்கர் இல்லை என்பது மட்டும் உண்மை.

சிறுகதை தொகுப்பு சுற்றறிக்கை என்றால் கவிதை தொகுப்பு துண்டு பிரசுரமா தெரிந்தவர்கள் சொல்லவும்.ஆறாயிரம் கொடுத்தால் என் புத்தகம் வெளி வர வாய்ப்புள்ளது என்று கென் சொன்னார்.யாராவது அதை செய்து இந்த ஏழைப் பதிவனை(பரம ஏழையை விட்டு விட்டேனே) எழுத்தாளராக்கி அடுத்த கட்டத்தில் நகர்த்தாமல் தூக்கி வைக்கவும்.எல்லா சுற்றறிக்கையையும்,துண்டு பிரசுரங்களையும் அவரே எடுத்துக் கொள்ளலாம்.இனி நானும் ரைட்டர் இரும்புத்திரை என்ற பெயரில் எழுதப் போகிறேன்.அப்படி வைக்காதே பைட்டர் இரும்புத்திரை என்று வைத்து கொள்ள சொல்லி நிர்பந்தம்.எனக்கு சண்டை பிடிக்காது சொன்னால் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்.நாளை துண்டு பிரசுரம் வெளியாக இருக்கிறது.வெளியூரில் பம்மி விடவும்.

அனானி வந்து திட்டினால் நீ அனானி தானே என்று பதில் கேள்வி வைக்கிறார்கள்.அதற்கு பதில் அந்த ஆப்ஷனையே எடுத்து விடலாம்.இது எப்படி இருக்கிறது என்றால் கூட்டத்தில் அரைகுறையாக ஆடை உடுத்தியிருக்கும் பெண்ணை பார்க்கவே கூடாது என்று கண்ணைப் பொத்துவது போல் உள்ளது.உடனே நான் அனானியா என்று கேட்க வேண்டாம்.சொந்த கோமணத்தோடு இல்ல முகத்தோடு வரும் தைரியம் எனக்கு இருக்கிறது.

பரிசலின் விண்ணைத் தாண்டி வருவாயா விமர்சனம் படித்து விட்டு அந்த படத்தின் மீது இன்னும் கொலைவெறி அதிகமானது.350 கிமீ பயணம் செய்து ஒரு காலத்தில் அவர் மேல் அன்பு செலுத்திய பெண்ணின் வாழ்க்கையில் குண்டு வைக்க போவதை தான் அந்த படம் சொல்லி தந்தால் வெரி ஸாரி.அதிலும் நான் சந்தோஷமாக வாழவில்லை என்று அந்த பெண் சொல்லவில்லையாம்.என்ன வருத்தம் அந்த நண்பருக்கு என்று நினைத்து கொண்டேன்.அந்த பெண்ணின் கணவர் சந்தேகப்படுபவராகயிருந்தால் இனிமேல் அடுத்த கௌதம் மேனன் படம் பார்த்து விட்டு அங்கு செல்லும் போது அந்த பெண் அவர் எதிர்பார்த்ததை சொல்லலாம்.

நான் அந்த பதிவு படித்து விட்டு வருத்தப்பட்டேன்.எனக்கு கல்யாணம் ஆகவில்லையே என்று.ஏன் என்ற கேட்ட நண்பனிடம் எவனாவது என் வீடு தேடி வந்தால் இருக்கும் ஒரு விரலையும் அறுத்து விட்டுத்தான் மறு வேலை என்று சொன்னேன்.

எப்பவுமே இரட்டை அர்த்தம் தானா என்று கேட்டவனிடம்.

உன் வலது கையில் இருக்கும் ஆள் காட்டி விரல் எத்தனை ஒண்ணு தானே இருக்கிறது அதை சொன்னேன் என்றாலும் நம்ப மறுக்கிறான்.ஒ மை ஹூசன் நீங்க ஒரு ஒவியம் வரைந்து காட்டுங்களேன்.அவன் நம்பட்டும்.நிர்வாணமாக வேண்டாம்.வித்தியாசம் தெரியாமல் டவுட் வலுத்து விடும்.

14 comments:

Ken said...

ஆறாயிரம் ரூபாயில் புத்தகம் போட பதிப்பகம் இருப்பதாய் சொன்னவர் நானில்லை அதிஷா # ட்வீட்டரில் .

வரலாறு முக்கியம் :)

இரும்புத்திரை said...

கென் எனக்கு சொன்னது நீங்க தான்.அதுக்கப்புறம் தான் டிவிட்டர் பக்கம் போனேன்.

Ken said...

ம்ம் நான் தான் உங்களுக்கு சொன்னேன் வருங்கால ரைட்டர் இரும்புத்திரை அவர்களே :))))))))

இரும்புத்திரை said...

வருங்காலமா என் நிகழ்காலமே ஆடிப் போய் இருக்கு ரைட்டர் கென்.எப்படியும் நீங்க தான் முதல்ல.

//ரைட்டர் இரும்புத்திரை//

இதுக்கு ரெண்டு மிதி மிதிச்சியிருக்கலாம்

நான் சுற்றறிக்கை விடப் போறேன் தெரிஞ்சவுடன் மங்கம்மா பதிப்பகத்தை மூடப் போறாங்களாம்.

சங்கர் said...

//அப்பால வேற நாட்டுக்கு போக முடியாது.//

ஏன் கவலை? உங்க குரு நாதர் அல்பேனியா கூட்டிட்டு போவாரு

Paleo God said...

:))

Unknown said...

“ஒரு” பிரிவினரைப் பத்தி திட்டி எழுதுங்க.. இஸ்ரேல்ல இடம் குடுப்பான்..

பொன் மாலை பொழுது said...

முற்றிலும் வழி மொழிகிறேன். ஹுசைனின் நோக்கமும் அதன் வெளிப்பாடுகளும் வக்ரமானவைதான்.
இது போன்ற செயல்கள் இங்கு மட்டுமே சத்தியம். ஏனெனில் இங்கு எல்லாம் ஓட்டு மயம் .

ஹுசைன் இந்தியாவில் இல்லை என்றால் ஒன்றும் குறைந்து போய்விடாது. சர்சைகலாவது குறையும்
இஸ்லாமியர்களே அவரை ஆதரிக்க வில்லை. இந்த போலிகளுக்கு என்ன இந்த ஆட்டம்?

அது சரி(18185106603874041862) said...

//
அப்பால வேற நாட்டுக்கு போக முடியாது.அங்க இருப்பது எல்லாம் கட்டிங்கு மாஸ்டர்கள் தான்.
//

இது டாப்பு :0)))))

அது சரி(18185106603874041862) said...

//
பரிசலின் விண்ணைத் தாண்டி வருவாயா விமர்சனம் படித்து விட்டு அந்த படத்தின் மீது இன்னும் கொலைவெறி அதிகமானது
//

அப்படி எதுவும் படிக்காமலேயே எனக்கு கொலைவெறி வந்து விட்டது...இன்னமும் அப்படியே இருக்கிறது...

(படமா அது?? ய்ய்யால...எருமை சாணி போட்டு அது மேலயே பொரண்டுகிட்டு இருக்க மாதிரி...)

அது சரி(18185106603874041862) said...

//
சாருவும்,எஸ்.ராமகிருஷ்ணனும் வாங்குவதில்லை என்று சொன்னேன்.சாரு அனுமதிப்பதில்லை என்று சொன்னார்.
//

கைப்புள்ள: இன்னுமா சாருவை இந்த் ஒலகம் நம்புது...

கைப்புள்ளயின் அ.கை: அது அவய்ங்க விதி...

hiuhiuw said...

//உடனே நான் அனானியா என்று கேட்க வேண்டாம்.சொந்த கோமணத்தோடு இல்ல முகத்தோடு வரும் தைரியம் எனக்கு இருக்கிறது.//

நீங்க இரும்புத் திரையாச்சே !

hiuhiuw said...

//அதை எடுத்து விட்டேன் எண்டு பெயருக்கு கண்காட்சியில் இருந்து எடுத்து விட்டு அவர் தளத்தில் ஏற்றினாரே அது மாதிரி கத்தார் நாட்டை வரைந்து விட வேண்டாம்.எந்த நாடாக இருந்தாலும் அதன் மீது பற்றுக் கொண்டவர்கள் கொஞ்சமாவது இருப்பார்கள்.//

ஒரு வேளை வெட்டி விளம்பரத்துக்காகவே அவர் இதெல்லாம் பன்றாருன்னு வெச்சு கிட்டா.... எதுக்கு தல நீங்களே அதப் பெருசு பண்ணி அவர் ஆசப் பட்ட விளம்பரத்த ஏற்படுத்தித் தரீங்க ! இங்க இருக்கற அரசியல் வாதிகள் கொடி ஏத்தும் போது ஏற்படும் அவமானத்தை விடவா பெரிய விஷயம் இதெல்லாம் இந்தியாவுக்கு

hiuhiuw said...

நாட்டத் தாயா பாக்கறதும் நாயாப் பாக்கறதும் போதும் ! பாத்து பாத்து தான முக்காவாசிப் பேர சோத்துக்கு வக்கத்து உக்கார வெச்சு இருக்கோம் !