Wednesday, March 3, 2010

போலி கம்பவுண்டர்,சாரு,பதிவர்கள்

நித்தியானந்தா முதல் லேயர் என்றால் சாரு இரண்டாது லேயரில் வருவார்.சாருவுக்கு ஆதரவாக இருந்த பதிவர்கள் மூன்றாவது லேயரில் வருவார்கள்.நல்ல வேளை நித்தியானந்தா மாட்டிக் கொண்டார்.அதுவே மூன்றாவது லேயரில் இருக்கும் பதிவர்கள் சட்டை காலரைப் பிடித்து உதைக்க வேண்டும் என்று போலி கம்பவுண்டர் சொல்லிக் கொண்டு திரிகிறது.இதுவே சாரு எதிலாவது மாட்டியிருந்தால் சாரு முதல் லேயருக்கும் பதிவர்கள் இரண்டாவது லேயரிலும் வந்திருப்பார்கள்.உடனே போலி கம்பவுண்டர் வந்து சாருவை தாங்கிப் பிடிக்கும் பதிவர்களை தூக்கில் இட வேண்டும் என்று பிளிறியிருக்கும்.(பிளிறியிருப்பார் என்று சொல்ல ஆசை தான் அனானி போர்வையில் வந்து பின்னூட்டம் இடும் நபர்களுக்கு இதுவே ஜாஸ்தி)

போலி கம்பவுண்டரின் வேலையே பதிவு பதிவாக மேய்ந்து காய்ந்து யார் என்ன சொன்னார்கள் என்று காத்திருந்து பொறுத்திருந்து அதை கட் காப்பி செய்து வினவு தளத்தில் பேஸ்ட் செய்வது தான் வேலை.உதாரணம் தான் வினவு எழுதிய விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் இந்த பதிவு.அதற்கு முத்து உதிர்ப்பு என்று பெயர் வைத்திருக்கிறது.அவர்களாவது சொந்தப் பெயரில் முத்து உதிர்க்கிறார்கள்.இது - ?????.விண்ணைத் தாண்டி வருவாயா பதிவிலேயே நர்சிம்,கேபிள் என்று இழுக்கப்பட்டிருந்தது.அது இந்த முறை முழுமையாக நிறைவேறியிருக்கிறது.

நாளையே இப்படி சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.அனுமானம் தான்.வைத்துக் கொள்வோம் என்பதை சரியாக படிக்கவும்.சாருவுக்கு வேண்டிய நபர்கள் தான் இந்த விடியோவை எடுத்து வெளியிட்டது என்று சொன்னால் போலி கம்பவுண்டர் இழுக்க முயன்ற காலர்களை என்ன செய்வார்.

எனக்கும் பெரிய காலர் உள்ள சட்டை போடத்தான் பிடிக்கும்.காலரை பிடிக்க வரும் போதாவது உண்மை முகத்தோடு போலி கம்பவுண்டர் வருமா.இல்லை போர்வையைப் போர்த்திக் கொண்டு திரியுமா.

வினவிற்கு ஒரே ஒரு கேள்வி தான் - ஒரு பெரிய நடிகரோ அல்லது அரசியல்வாதியோ இப்படி சிக்கும் போது அவரின் ரசிகர்களை அல்லது தொண்டர்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்வது சரியாகுமா.உங்களால் நோவின் பின்னூட்டத்தை நீக்க முடியுமானால் ஏன் போலி கம்பவுண்டரின் பின்னூட்டத்தை நீக்கவில்லை.(ரியல் எண்கவுண்டர் என்பது மதிப்பான பதம் - அதை இது போல காமெடி பீஸ்கள் போலி பெயரில் மறைந்திருக்க உதவுகிறது.)

நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம்.வினவு குழுமத்தில் யாராவது மாட்டினால் நாங்கள் போலி கம்பவுண்டரின் சட்டைக் காலரைப் பிடித்து கேட்கலாமா.

5 comments:

அத்திரி said...

நல்லா கேக்குறாங்கய்யா கேள்விய........

நீயும் ரவுடி ஜீப்புல ஏறிட்ட போல

வெற்றி said...

பாக்கலாம்..அவங்க என்ன சொல்றாங்கன்னு..

ஏழர said...

///நோவின் பின்னூட்டத்தை நீக்க முடியுமானால் ஏன் போலி கம்பவுண்டரின் பின்னூட்டத்தை நீக்கவில்லை///

இரும்பு அந்தாளு NO சொல்றத நம்பி எழுதிட்டீங்களே, NO வோட பின்னூட்டம் பத்திரமா வினவுலதான் இருக்கு

இரும்புத்திரை said...

நான் பார்த்த்ப்போது நோவின் பின்னூட்டமில்லை.பார்க்கும் போது மணி ஏழே முக்கால்..

Bharathi said...

//வினவு குழுமத்தில் யாராவது மாட்டினால் நாங்கள் போலி கம்பவுண்டரின் சட்டைக் காலரைப் பிடித்து கேட்கலாமா//

Well Said.....