Tuesday, March 9, 2010

நானும் மனுஷன் தான் - சாமியாரின் கவிதை

பெண் வாசனையில்லாத வீட்டில்
பிறந்தவனுக்கு தெரிந்ததெல்லாம்
சேலையும் தாவணியும் தான்
முப்பத்திரண்டு வருட
பிரம்மச்சர்யம் கலைக்க வந்தவளுக்கு
விதவிதமாக உடுத்தி தெளிந்தேன்
எல்லாம் முடிந்தவுடன்
என் ஆடைகளை அணிந்தாள்
ஆண் வாசனையில்லாத
வீட்டில் பிறந்தவளாம்
கடைசி வரை யாருக்குமே
தெரியாமலே போய் விட்டது
புதிய உடையின் பெயர்.

10 comments:

இரும்புத்திரை said...

இதுக்கும் இது என் கடமை,சட்டப்படி தான் செய்தேன் என்றவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Unknown said...

நல்லா இருக்கு இரும்புத்திரை.

இரும்புத்திரை said...

நன்றி தலைவரே.

அகல்விளக்கு said...

//இதுக்கும் இது என் கடமை,சட்டப்படி தான் செய்தேன் என்றவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.//

ஹிஹிஹி...
ரைட்டு...

வினோத் கெளதம் said...

என்னங்க இது VTVயை பற்றி எதுவும் சொல்லவில்லை ப்ளாக் மாத்தி வந்துட்டேனோ. ;)

மணிஜி said...

//புதிய உடையின் பெயர்.//

அது பிறந்த நாள் உடையப்பா !!!

லோகு said...

தலைப்புல சாமியார் வரலைன்னா, இந்த கவிதை அற்புதமா இருந்திருக்கும்.

சம்பந்தமே இல்லாம சாமியாரை சேர்த்ததுக்கு பேரும் பிராண்ட் நேம் தாக்கம் தானே..

இரும்புத்திரை said...

லோகு

நித்யானந்தா - ரஞ்சிதா கவிதை என்று வைத்திருந்தால் இந்த தழிலீஷில் சூடாக கவிதை கொதித்து கொண்டிருக்கும்.

இரும்புத்திரை said...

நன்றி அகல்விளக்கு.

நன்றி வினோத் எனக்கே மூச்சு முட்டுது

நன்றி அண்ணா.உங்க குறும்புக்கு அளவேயில்லை

லோகு said...

//கடைசி வரை யாருக்குமே
தெரியாமலே போய் விட்டது
புதிய உடையின் பெயர். //

கவலைப்படாதீங்க, உ(அவ)ங்களுக்கு பொண்ணு பிறந்தா விதவிதமா புது உடை வாங்கி கொடுங்க :)