எனக்கு இரண்டு வாரமாக தீராத தலைவலி.அதுவும் ஒற்றை தலைவலி.மனதிற்குள் யாரையும் நினைக்கவில்லை.நேற்று சரியாகி விடும் என்று எந்த பட்சியும் சொல்லவில்லை.இருந்தாலும் நேற்று முழுவதும் அதீத உணர்வில் மிதந்து கொண்டிருந்தேன்.எதுவோ எந்த ஜந்துவோ எனக்கு காட்சி தரப்போவது எனக்கு நிச்சயம் தெரிந்தது.பின் உச்சக்கட்ட தலைவலியில் எதை பார்த்தாலும் அப்படித்தான் தெரியும்.சாப்பிட்டு விட்டு யாராவது கிடைப்பார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.தலைவலியை அவர்களுக்கு கொடுத்து விட முடிவு செய்திருந்தேன் யாரும் சிக்கவில்லை.நித்யானந்தன் விஷயம் கேள்விப்பட்டு மேலே டிவி பார்க்கப் போனேன்.அதற்குள் முடிந்து விட்டது.இருபது நிமிடம் தலைவலியோடு காத்துக்கிடந்தேன்.மறு ஒளிபரப்பு.என்ன ஆச்சர்யம்.நித்யானந்தன் தொலைக்காட்சி வழியாக என் தலையில் இறங்கி தலைவலியை உருவிக் கொண்டு ஓடிவிட்டார்.(ஓடும் போது தான் கவனித்தேன் அவர் உடுப்பு இடுப்பு வரை ஏறிக்கிடந்தது).உடன் இருந்த நடிகை பிரபலம் என்பதால் பக்கத்தில் இருந்து சிகிச்சை தந்தார் என்று நினைத்து விட்டேன்.ஆனால் எல்லோரும் அதை இச்சை என்று கொச்சை செய்து விட்டார்கள்.
அலுவலகம் போய் சேர்ந்ததும் இணையத்தில் வந்த பதிவுகள் எல்லாம் அவரை தூற்ற,என் தலைவலியைத் தீர்த்தவருக்கு இப்படி ஒரு நிலையா என்று வருத்தப்பட்டு வருத்தப்பட்டு இன்னொரு பக்கம் தலைவலி வந்து விட்டது.அதையும் தீர்க்க எப்படியும் அவர் மீண்டும் வருவார் என்று எனக்குத் தெரியும்.ஆனால் செய்திகளில் அவர் ஹரித்துவார் ஓடி விட்டார் என்று சொன்னாலும் என் மனம் நம்பவில்லை.எப்படியும் சன் மூலமாக காட்சியளிப்பார் என்று தெரியும்.
தொலைக்காட்சி என் அறையில் கிடையாது.வைத்திருப்பவர் நேரம் தாழ்த்தி வந்தார். என் தலைவலி தீர நான் காத்துக் கிடந்தேன்.திரும்ப நேற்று முகம் மறைந்திருந்த நடிகை முகம் தெரிந்தே விட்டது (டி ஆர் பி ரேட்டிங்) நான் அதை கூட கவனிக்காமல் அவரையே பார்த்துக் கொண்டேயிருந்தேன்.என் நிலை புரிந்து துள்ளி எழுந்து என் தலைவலி தீர அவர் மாத்திரை எடுத்துக் கொள்ள அது என்ன மாயமோ தெரியவில்லை தலைவலியை காணோம்.திரும்ப ஏதாவது வலி இருந்தால் தான் அவர் வருவார் என்று தெரியும்.அதனால் காவல் நிலையத்தில் என் தலைவலியை காணோம் என்று புகார் செய்ய முடிவு செய்தேன்.
நிஜம் நிகழ்ச்சியில் சொன்னார்கள்.அது முப்பது நிமிடம் ஓடக் கூடிய படம் என்று.தயவு செய்து அதையும் காட்டி விடுங்கள்,என் உடம்பில் இன்னும் நிறைய இடத்தில் வலி இருக்கிறது.அது குணமாகட்டும்.என்ன ஒரு பிரச்சனை அவர் ஒவ்வொரு முறை என்னுள் புகுந்து வெளியேறும் போதும் துணியின் அளவு குறைந்து விடுகிறது.
இந்த அனுபத்தை வெளியே சொன்னால் சிரிப்பார்கள்.அவர்களுக்கு தெரியுமா.அவர் என்னை போல ஒட்டுமொத்த நலவிரும்பிகளின் வலியை குணமாக்கவே டிவியில் தோன்றினார் என்று.எல்லாருடைய வலியையும் எடுத்து விட்டு அவர் வலிக்கு மாத்திரை எடுத்துக் கொண்டார்.இதுதான் அமிர்தத்தை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு அவர் விஷத்தை உட்கொள்வதா.
பிறகு ஏன் அந்த நடிகை என்று கேட்டால் ...........................(இருங்க யோசித்து சொல்கிறேன்) அவர் இனி கொஞ்ச நாள் களி கிண்ட போனாலும் போய் விடுவார்.யாருக்காவது சிகிச்சை தேவைப்பட்டால் இப்படி செய்ய வேண்டும் சொல்லாமல் செய்தே காட்டி விட்டார்.ஏன் அந்த லைட்டை அணைத்தார் என்று கேட்டால் (பயபிள்ளைங்க எப்படியெல்லாம் கேக்குது) தொழில் இரகசியம் வெளியே தெரியாமல் இருக்கத்தான்.அவர் உங்களுக்கு தந்த வலி நிவாரணத்தையும் வெளியே சொல்லுங்கள்.எப்படியும் நாலு மாதத்தில் சரியாகி விடும்.அப்புறம் என்ன பழையபடி பஜனை தான்.(நான் பூஜையை சொன்னேன்).அதுவரைக்கும் இந்த தலைவலி தீர்க்கும் வீடியோ பார்த்து மகிழுங்கள்.வயிற்றுவலிக்கு அடுத்த வீடியோ தயாராகிக் கொண்டிக்கிறது.என்ன கழுத்து வலிக்கும்,முதுகு வலிக்கும் வேணுமா.ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் வீடியோ நடித்தால் என்னாவது.பொன்முட்டை இடும் வாத்தின் வயிற்றை அறுக்க வேண்டாம்.மீறி அறுத்தால் அடுத்த வேளைக்கு முட்டை மட்டுமல்ல விட்டை கூட தேறாது.
Thursday, March 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//அது முப்பது நிமிடம் ஓடக் கூடிய படம் என்று.தயவு செய்து அதையும் காட்டி விடுங்கள்//
ரொம்ப ஓவரா ஆசைப்படுறீயே
//,என் உடம்பில் இன்னும் நிறைய இடத்தில் வலி இருக்கிறது//
முதல்ல உங்க வீட்ல சொல்லனும்டே.....அப்பதான் நீ அடங்குவ
அய்யா, சாமியார்களுக்கு பொதுவாகவே இந்திரியம் அதிகமாம். அதுவும், 32 வயதான ராஜசேகரனுக்கு சும்மா நெருப்பாகவே இருக்க வாய்ப்பு அதிகம். மேலும், அந்த வீடியோ பார்த்தீங்கன்னா, அம்மணி எதோ மாத்திரை குடுக்குறாங்க, அத்தை அவுரு நாக்கு கீழே வெச்சிட்டு உடனடியா தன வேட்டிக்குள்ள கை விட்டு செக் பண்ணிக்கிறாரு. அப்பால கச முசா தான்... இதெல்லாம் கன்சிடர் பண்ணி அம்மணி அவுரு கிட்ட விழுந்திருக்கணும்?
எழுத்தில் சாருவின் பாதிப்பு தெரிகிறது!
வால்பையன் said...
எழுத்தில் சாருவின் பாதிப்பு தெரிகிறது!
ஹிஹிஹி...
அதேதான்...
\\.நித்யானந்தன் தொலைக்காட்சி வழியாக என் தலையில் இறங்கி தலைவலியை உருவிக் கொண்டு ஓடிவிட்டார்//
எங்க போய் இருப்பார்ன்னு கரெக்டா சொல்லுங்க சகா , இங்க நிறையபேரு அவர மோத்துறதுக்கு ரெடியா இருக்கோம்
Post a Comment