Friday, March 19, 2010

உறை கிழிக்கப்படாத காதல்

சொல்லப்பட்ட,சொல்லப்படாத காதல்கள்
கிழித்தெறிந்த தாள்களின்
கலைந்த வார்த்தைகளை
எல்லா வீட்டு கழிவறைகளும்
சுவைத்திருக்கிறது
இன்றும் உணவாகப் போகிறது
உறை கிழிக்கப்படாத
பழுப்பேறிய காகிதம் ஒன்று
வார்த்தை ஜாலங்கள் புரியாமலே
விவரணைகள் தெரியாமலே
மூழ்கடிக்கப்படலாம்
என் காதலாக இல்லாத பட்சத்தில்.

வீட்டிலிருக்கும் புத்தகங்களை எல்லாம்
துழாவினால் மறுதலிக்கப்பட்ட
காதல்கள் சிக்கலாம்
திரும்ப கொடுக்க நினைத்தாலும்
வார்த்தைகளின் மங்கிய வாசனை
நாசியின் குறுக்கே நடக்கிறது
தற்போதைய காதலின் மணம்
துர்கனவாகத் தெரியலாம்
எங்காவது புத்தகத்தைப்
புரட்டித் தேடும் யாருக்காவது.

4 comments:

Unknown said...

சரி இப்ப என்ன சொல்லவர்றீங்க.. :)))

♥Manny♥ said...

Nice lines

சங்கர் said...

தலைப்புல எதுவும் டபுள் மீனிங் இல்லையே :))

Niyaz said...

onnume pirillappa