Friday, March 12, 2010

எனக்கு பிடித்த பெண்கள்

அகல்விளக்கு எனக்கு பிடித்த பெண்கள் தொடர் பதிவு எழுத அழைத்து விட்டு யார் அந்த பெண்கள் யாரு என்று வட்டத்தில் கேட்டிருந்தார்.எப்படியும் சொந்தமில்லாத பத்துப் பெண்கள் நம் வாழ்வில் இல்லாமலா போய் விடுவார்கள்.அடித்து விடலாம் என்று பார்த்தால்

தொடர்பதிவின் நிபந்தனைகள் தடுக்கிறது

உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.

வரிசை முக்கியம் இல்லை.

ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.

1.இராஜேஸ்வரி

இவங்க தான் எனக்கு படிப்பு சொல்லி குடுத்தாங்க.எனக்கு தான் படிப்பு ஏறல.உடனே சி பிரிவுக்கு மாத்தி விட நான் அழுது அடம் பிடித்து அவங்க வகுப்பில் திரும்ப சேர்ந்தேன்.அதனால் சி பிரிவு ஆசிரியைக்கு என் மேல் கோபம்.ஒரு ஐந்து வயசு பையனுக்கு இவ்வளவு அடமா என்று.என் நேரம் அடுத்த வருசம் அவங்க என் க்ளாஸ் டீச்சரா வந்தாங்க.இராஜேஸ்வரி மிஸ் ரொம்ப தைரியமாய் தலைமை ஆசிரியரை எதிர்த்ததில் இன்னும் பிடித்து போனது.

2.நதியா

இன்னமும் ஏனோ பிடித்திருக்கிறது.பத்ரியின் படத்தின் நீட்சியான எம்.குமரன் படம் ஓடியதே இவருக்காகத் தான் என்றால் அது ஆச்சர்யமேயில்லை.நதியா கம்மல்,வளையல் என்று ஒரு டிரெண்ட் செட்டராக இருந்த பெண்.அந்த படத்தில் அசின் இறந்திருந்தால் கூட நான் வருத்தப் பட்டிருக்க மாட்டேன்.

3.குந்தவை நாச்சியார்

இராஜ ராஜ சோழனுக்காக அண்ணையே கொன்றர் என்ற சர்ச்சைகள் இருந்தாலும் இவரை பிடிக்க காரணம் காதல். பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகன் அது நிச்சயம் வந்தியத்தேவன் தான்.நந்தினி,நண்பனின் தங்கை என்று பலர் வந்தியத்தேவனை விரும்பினாலும் குந்தவையின் காதலில் தான் ஒரு அழுத்தம் தெரிந்தது.

4.ஷோபா டே

அறுவது வயதிலும் இளமையாக எழுதும் எழுத்தாளர்.கங்குலி சட்டை அவிழ்ப்பு சாகசத்தைப் பற்றி இவரிடம் கேட்டப் பொழுது கங்குலிக்கு உடம்பு பத்தாது என்று சாதாரணமாக சொன்ன பெண்மணி.சொந்த வாழ்வின் தோல்விகள் எல்லாம் அவரின் எழுத்துகளுக்கு உரமாக அமைந்தது என்றே நான் நினைக்கிறேன்.

5.ஸ்டெபி க்ராப்

எத்தனை எத்தனை டென்னிஸ் வெற்றிகள்,எத்தனை எத்தனை காதல் தோல்விகள்.இவருடன் யார் மோதினாலும் அவர்கள் தோற்றுப் போக வேண்டும் என்று வேண்டி கொள்வது உண்டு.மார்டினா ஹிங்கிஸ் அதிரடியாக நுழைந்து இவருக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.குதிரை வால் கொண்டையைப் பார்க்கும் போதெல்லாம் ஸ்டெபி க்ராப் ஆடுகளத்தில் ஓடி விளையாடுவது ஞாபகம் வரும்.

6.ஜென்னி

காரல் மார்க்ஸை விட வயது அதிகம்.அந்த காலத்திலேயே ஒரு விண்ணைத் தாண்டி வருவாயா காதல்.இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன் அந்த படம் பிடிக்காமல் போனதற்கு.வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் காதல் எப்படி எல்லாம் ஆட்டிவித்தது என்றும் அதனால் மார்க்ஸின் கனவிற்கு எந்த பங்கமும் வராமல் வறுமையில் வாழ்ந்த இரும்பு பெண்மணி.

7.கோல்டா மேயர்

இஸ்ரேல் நாட்டின் பிரதமர்.மூனிச் ஒலிம்பிக் கொலைகளுக்குப் பிறகு அவர் எடுத்த நடவடிக்கை நிச்சயம் தடாலடி தான்.மூனிச் படத்தில் பிரதமராக நடித்த பெண்ணின் நடிப்பைப் பார்த்து கொஞ்சம் மிரண்டு தான் போனேன்.எப்படி அந்த சமயத்தில் இருந்திருப்பார் என்பது கொஞ்சம் கண் கூடாகவே தெரிந்தது.

8.கர்ணம் மல்லேஸ்வரி

சிட்னி ஒலிம்பிக்கில் கொஞ்சமாக இருந்த மானத்தையும் காற்றில் பறந்து விடாமல் காப்பாற்றியவர்.அவரை அந்த போட்டிக்கு தேர்வு செய்யும் போது தான் எத்தனை விமர்சனங்கள்.வெங்கலப் பதக்கத்தைக் கொண்டு வாயை அடைத்தவர்.

9.மேரி க்யூரி

போலானியம் கண்டுப்பிடித்த பிறகு சொந்த வாழ்வில் வந்த சரிவால் எல்லோராலும் விமர்சிக்கப் பட்டாலும் அடுத்த நோபல் வாங்கி விமர்சனங்களை விமர்சித்தவர்.ரேடியத்தின் கதிர்வீச்சின் பாதிப்புகளால் இறந்து போன,நாம் இழந்த திறமைசாலி

10.ஜெயலலிதா

எந்த அளவுக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு பிடிக்கவும் செய்யாது.ஓட்டுக்காக அவர் அடித்த பல்டிகள் அவர் போட்ட சட்டமான ஆடு வெட்ட கூடாது என்று சொல்லி விட்டு பின் மாறியது கொஞ்சம் அதிகமாகவே இடித்தது.தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனால் அது அசட்டுத் தைரியம் என்று நிரூபிக்கும் போது தான் கோபம் வரும்.

நான் அழைக்கும் நபர்கள்

சங்கர்

ஜெகநாதன்

அதி பிரதாபன்

லோகு

10 comments:

நீ தொடு வானம் said...

இந்த பதிவுக்கு இப்படி தலைப்பு வைத்தால் யார் வருவா..

இரும்புத்திரை said...

பதிவை படிக்க சொன்னா இப்படி தலைப்பை மட்டும் படிக்க கூடாது

நீ தொடு வானம் said...

போன பதிவை கிராஸ் செக் பண்ணிப் பார்த்தேன்.

Anonymous said...

தலைப்பின் மூலம் அந்தப் பெண்மனிகளுக்கு நல்ல அவமானம் தேடித்தந்திருக்கிறீர்கள்.

இரும்புத்திரை said...

அண்ணாச்சி அது சும்மா விளையாட்டுக்கு வச்சது.கோபப்பட வேண்டாம்.மாத்தி விட்டேன்.இனி அப்படி தவறு நடக்காது.

பொன் மாலை பொழுது said...

அந்த பழைய தலைப்பு என்னாங்கண்ணா?

பொன் மாலை பொழுது said...

அந்த பழைய தலைப்பு என்னாங்கண்ணா?

womanizer:


wom·an·ize [wmmə nz]
(past wom·an·ized, past participle wom·an·ized, present participle wom·an·iz·ing, 3rd person present singular wom·an·iz·es)
vi

constantly look for sex: to be constantly in search of casual sex with women (disapproving) (refers to men)

-wom·an·iz·er, n
Microsoft® Encarta® Reference Library 2004. © 1993-2003 Microsoft Corporation. All rights reserved.

இரும்புத்திரை said...

எனக்கு உடம்பு சரியில்லை.அடி எல்லாம் இன்னொரு நாள் வாங்கி கொள்ளலாம்.அதான் பழசை எரித்து விட்டேன்.

தலைவரே நீங்க ஒருத்தர் போதும் நான் அடி வாங்க.

நீ தொடு வானம் said...

உங்க ரூல் படி

//
முதல் ஐந்து இடத்தில் வரும் பின்னூட்டங்கள் தான் ஆதாரமாக இருக்கும் அடுத்து வரும் எல்லா பின்னூட்டங்களுக்கும்.
//

அண்ணாச்சியின் குட்டு

Nathanjagk said...

இரும்புத்திரையின் அழைப்பை மறுக்க முடியுமா? ​பெண்கள் பற்றி​வேறு.. விட முடியுமா? ​கண்டிப்பா எழுதணும்.
நன்றி அரவிந்த்!

பி.கு.:
ஊருக்குச் செல்வதால் பதிவெழுத தாமதமாகும். வரும் வெள்ளி நம் இடுகையை வெளியிட்டு விடலாம்.