Thursday, March 25, 2010

கிழிக்கப்பட்ட டைரியின் பக்கங்கங்களிலிருந்து

முதல் தடவை காலேஜ் போகும் போதுதான் பார்த்தேன்.டிபன் பாக்ஸை ஒரு ஐயர் பொண்ணைப் பிடிக்க சொல்லி விட்டு சிக்கனை வெளுத்து கொண்டிருந்தாள்.அவள் அளுமை எனக்கு பிடித்திருந்தது.கூடவே அவளையும்.அவ எனக்கு தான் என்று சொல்லும் அளவிற்கு எனக்கு வெளியுணர்வு கூட வேலை செய்யவில்லை.

எனக்கு அமீபா கூட ஒழுங்காக வரைய தெரியாது.அவளுக்கு இஞ்சினீரிங்க் டிராயிங்க் கூட அமீபா தான்.நான் அவளுடன் பேசிய வார்த்தையே "எனக்கும் வரைந்து தர முடியுமா.." என்று தான்.பின் கேட்காமலே எல்லா முறையும் வரைந்து தந்தது அவளுக்கும் என்னை பிடித்ததை காட்டியது.
அவ ஏரியாவுக்கு வீடு மாறியிருந்தேன்.அவளுக்காக மாறினேன் என்று அவள் நினைத்திருக்கலாம் என்று நான் நினைத்தேன்.வீட்டில் பொருள்களை அடுக்காமல் தப்பிக்க அவள் வீட்டுக்கு போனால் அவள் பாட்டிக்கு என்னை பிடிக்கவில்லை.முறைத்து கொண்டேயிருந்த காரணத்தால் அவளுக்கு குடுக்க வைத்திருந்த கேட்பரீஸ் சாக்லேடடி நான் சாப்பிட்டு விட்டு தாளை அங்கிருந்த புத்த்கத்தில் வைத்து விட்டேன்.அது இன்னமும் இருப்பதாக அவள் ஒருமுறை சொன்னதாக ஞாபகம்.

"எங்க அக்கா யாரையாவது அவ பிரெண்டை முன்னாடியே வீட்டுக்கு கூப்பிட்டு இருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது.." அவள் சொல்லி முடிக்கும் முன் நான் "நான் ஒண்ணும் உன் பாட்டியைக் கல்யாணம் செய்ய போவதில்லையே.." முடித்திருந்தேன்.

கைவளையம் அணிவது எனக்கு பிடிக்கும்.வீட்டில் அப்பாவுக்கு பிடிக்காது.அவ குடுத்த வெள்ளி கைவளையத்தை கல்லூரியில் மட்டும் அணிந்து கொள்வேன்.எனக்காக என் ஸ்டாப்பில் இறங்குவாள்.அங்கிருக்கும் சந்தில் பேசும் போது அப்பா பார்த்து விட்டு திட்டியதாக சொன்னாள்."முன்னாடி என் பின்னாடி வந்த பையனை அடித்து விட்டார் தெரியுமா.நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.." சொல்லும் போது கண் கலங்கியது."எவனாவது இளிச்சவாயன் கிடைச்சா ஏன் உங்க அப்பன் அடிக்க மாட்டான்..கை வச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்.." போபத்தில் உதடு துடிப்பது பார்த்து அவள் அழுதாள்.கொஞ்சம் சந்தோஷம் தான்.எனக்காக ஒரு பொண்ணு அதுவும் எனக்கு பிடிச்ச பொண்ணு அழும் போது எல்லா அப்பாகளையும் திட்டலாம்னு தோணிச்சி.துடைக்க முயற்சித்தேன்.முகத்தைத் திருப்பி கொண்டாள்.தெறித்த கண்ணீரின் சூடு இன்றும் அப்படியே இருக்கிறது.
அழுது கொண்டிருந்தவளை எப்படி சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை."எனக்காக அழுத பெண்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது.." மெதுவான குரலில் சொன்னேன்.

அழுகையை நிறுத்தியிருந்தாள்.கொஞ்ச நேரம் கழித்து "இதுக்கு முன்னாடி எத்தனை பேர் அழுதாங்க.." சஜக நிலைக்கு வந்திருந்தாலும் குரலில் தழுதழுப்பு மிச்சமிருந்தது.

"இதென்னடா புது வம்பு வருது.." என்று நினைத்தாலும் சுதாரித்து விட்டேன்."அப்படியெல்லாம் யாருமில்லை..நீ தான் முதல் பொண்ணு.."

"அப்புறம் எப்படி எண்ணிக்கையில் ஒண்ணு கூடும்.." பவுன்சர் கேள்வி முகத்தில் அறைந்தது.

"ஜீரோவுல இருந்தது..இப்போ ஒண்ணு கூடியிருக்கு..அதான் அப்படி சொன்னேன்.."

"நல்லா பொணுங்களைக் கவுக்கற மாதிரி பேசுறடா..உன்னால நிறைய பேர் அழுதுருப்பாங்கடா.." சொல்லிக் கொண்டே கட்டிப் பிடித்தாள்.டாவினால் வந்த கொஞ்ச நஞ்ச கோபமும் அடுத்து வந்த முத்ததில் அடங்கியது.

கல்லூரியில் இரண்டாம் வருட பீஸிற்கு பேங்க் பேங்காக ஏறிக் கொண்டியிருந்தோம்.அலைய வைத்து கொண்டிருந்தார்கள்.போன் செய்து "எங்கப்பா ஒட்டியாணம் வாங்கி தந்திருக்கிறார்..ரொம்ப நல்லாயிருக்கு.." சொல்லும் போதே கோபம் தலைக்கேறியிருந்தது.

"இப்போ அங்க என்ன இருக்குன்னு ஒட்டியாணம்..உங்க அப்பனுக்கு தான் அறிவில்ல..உனக்குமா.."

"இப்போ ஏன் எங்க அப்பாவை திட்டுற.."

"உங்க அப்பனுக்கு எல்லாம் உங்க ஸ்டேட்ல வேலை கிடைக்காதா..இங்க வந்து எங்களுக்கு லோன் கொடுக்காம தாலிய அறுக்கிறான்.."

"எங்க அப்பாவா.."

"அவனை மாதிரியே ஒருத்தன்..எல்லோரும் உங்க அப்பன் மாதிரியே இருக்காங்க.."

இயலாமை அவள் மேல் வெடித்திருந்தது.லோன் கிடைக்கும் வரை அவளிடம் பேசவில்லை.கிடைத்த உடன் கோவிலுக்கு வர சொல்லியிருந்தாள்.ஆளே மாறியிருந்தாள்.நிறைய அழுதிருப்பாள் போல.

"உனக்கு எப்பவும் யார் மேலயாவது கோபப்படலைனா தூக்கம் வராதா..அதுவும் நான்,எங்க அப்பான்னா போதும்.."

"ஒட்டியாணம் நல்லாயிருக்கா.."

"பேச்ச மாத்தாதே.."

"எங்கூட ஓடி வரும் போது அந்த ஒட்டியாணம் எடுத்திட்டு வருவியா.."

"உனக்கு ரொமன்டிக்காவே பேச தெரியாதா..பாக்க தெரியாதா..எப்ப பாத்தாலும் யாரைடயாவது முறைக்கிறது.."

"ஆமா..அது ஒண்ணு தான் குறைச்சல் ரொமாண்டிக் லூக் விட்டா கவுண்டமணி மாதிரியே இருக்கும்.." நினைத்தை வெளியே சொல்லவில்லை.

"எங்க வீட்ல வி.சி.டி ப்ளேயர் வாங்கியிருக்கோம்..வீட்லையும் யாரும் இல்ல..ஒரு முக்கியமான சிடி இருக்கு..நீ வாயேன் சேர்ந்து பாக்கலாம்.."

"நீ எதுக்கோ அடி போடுற..திஸ் இஸ் நாட் ரொமாண்டிக்..நான் வர்றலப்பா இந்த ஆட்டதுக்கு.."

"பார்த்தா ரொமான்ஸ் என்ன எல்லாமே வரும்.."

"என்ன சிடி.."

"அதான் வரலன்னு சொல்லிட்ட..அப்புறம் என்ன.."

"என்ன சிடி.."

"உங்க மாமா,அத்தையோட கல்யாண சிடி.."

(தொடரும்..)

12 comments:

நீ தொடு வானம் said...

அபுனைவு - அப்ப இந்த கதை உண்மையா

இரும்புத்திரை said...

புனைவில் கூட சேர்த்தி இல்லை என்று சொல்ல வந்தேன். அது எவனோ ஒரு கிறுக்கனின் டைரியில் இருந்து திருடியது.நான் டைரி எழுதுவதில்லை.

Unknown said...

உங்களோட ஒரே குறிக்கோள் தினம் ஒரு பதிவு எழுதணும். அதாவது வருஷத்துக்கு 365 பதிவு போட்டு ஒரு சாதனை பண்ணணுங்கிறதுதான்.
டெய்லி கண்ட கண்ட பதிவு எழுதறதுக்கு பதிலா உருப்படியா சுவாரஸ்யமா எழுதலாமே..

நவீன் பிரகாஷ், "என் டைரி உங்கள் ரசிகன்" பிரகாஷ், வேலன், கேபிள் சங்கர், நர்சிம் இன்னும் எத்தனை எத்தனையோ பதிவர்கள் எவ்ளோ அழகா ரசிக்கும் படி எழுதுறாங்க..

நீங்க மட்டும் ஏன் ஓலப்பயில ஒண்ணுக்கு போன மாதிரி
எதையாவது டெய்லி எழுதணும்'ங்கிறதுக்காக ஏன் எழுதறீங்க? நீங்க எழுதறதுல எதாவது பிரயோஜனமான விஷயம் இருக்கா?

எவனாவது உங்க பதிவை மதிச்சு கமெண்ட் போடுறானா? அவன் அவன் பிளாக்ல 30 கமெண்ட், 40 கமெண்ட்'ன்னு எவ்ளோ கமெண்ட்ஸ். உங்க பிளாக்ல அப்படி எதையாவது பார்க்க முடியுதா?
கமெண்ட் கிடைச்சாதான் அது நல்ல பதிவுன்னு அர்த்தம் இல்லை. உங்க பதிவுல யாருமே தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்காதப்போ எதுக்கு நீங்க எழுதணும்?


இருக்கிற இவ்ளோ டைரக்டர்கள்'ல சில டைரக்டர்கள்'ல நீங்க சில பேரை குறை சொல்றீங்க. இருக்கிற இவ்ளோ பதிவர்கள்'ல நீங்க என்ன சாதிச்சிட்டிங்க? எவ்ளோ பதிவர்கள் எவ்ளோ திறமையா இருக்காங்க. புத்தகம் எழுதறாங்க. கவிதை தொகுப்பு வெளியிடுறாங்க. ஆனா நீங்க என்ன சாதிச்சு இருக்கீங்க?


எத்தனை பதிவு எழுதறோங்கிறதை விட என்ன எழுதறோங்கிறது தான் முக்கியம். quantity'யை விட quality ரொம்ப முக்கியம். இதை ஒரு நல்ல எண்ணத்துலதான் சொல்றேன். இதை நீங்க எப்படி எடுத்துகிட்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை. இல்ல இதுக்கும் சேர்த்து வேலை வெட்டி இல்லாம ஒரு பதிவு எழுதினீங்கன்னா.. கடவுள்தான் உங்களை காப்பாற்றணும். அழகா ரசனையோட எழுதுங்க.. ஒரு வாட்டி படிச்சவன் அடுத்த வாட்டியும் வந்து படிக்கிறமாதிரி எழுதுங்க.

சுடுதண்ணி said...

திரு. ஜேம்ஸ், இது இரும்புத்திரைக்குச் சொந்தமான ப்ளாக், அவர் தினம் எத்தனை போடாரு, எப்படி போடாருன்றது விட (பதிவு..பதிவு) அவருக்குத் திருப்தியா போடுறதுக்குத் தான் இந்த பதிவு. மற்றவர்களுடன் ஒப்பிடுவது ஒருவரைச் சிறுமைப்படுத்துவது மாதிரி. உங்களுக்கு ஓலப்பாய் சங்கதியா தெரிவது சில பேருக்கு குற்றாலமாகத் தெரியலாம். காயப்படுத்தாம விமர்சனம் வைத்து ஊக்குவிக்கவும் முடிந்தால் பாசிமணியும் சேர்த்து விக்க முயற்சிக்கவும்.


கருத்துக்களைப் பகிர்ந்துக்காமல், பலர் தினமும் குளியலாட வருவதால் குற்றாலத்தை நிறுத்தாமல் பொழியவும் @ இரும்புத்திரை :).

இரும்புத்திரை said...

ஜேம்ஸ்,

நீங்க சொல்வதை வைத்து பார்த்தால் அடிக்கடி இங்கே வந்து காய்வது மட்டும் தெரிகிறது.நர்சிம்,கேபிள் சங்கர் மாதிரி எழுத நான் எதுக்கு.அதுதான் அவங்க எழுதுறாங்க தானே.இங்க ஓலைப்பாய் ஒண்ணுக்கு தான் கிடைக்கும்.அடுத்தவங்க எனக்கு பின்னூட்டம் போட்டாலும் சரி போடா விட்டாலும் சரி எனக்கு பிரச்சனை இல்ல.நான் அப்படியே நாற்பது பின்னூட்டம் வாங்கணும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தா நீங்களே அத்தனையும் போடலாம்.நான் இந்த எண்ணிக்கையில் போனால் அது நாளுக்கு ஒன்றை தாண்டி விடும் என்று தெரியாமலா எழுதி கிழிக்கிறேன்.நான் என் நேரத்தை கொல்ல தான் எழுதுகிறேன்.உங்களுக்கு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தோன்றினால் இந்தி ஓலைப்பாய் பதிவுக்கு எல்லாம் வரவேண்டாம்.பாருங்க உங்களால என் பதிவுல ரென்று பின்னூட்டம் கூடியிருக்கு.அப்புறம் எனக்கு பிரபல போதை பிடித்து ஆட்டும்.

எனக்கு இந்த கவிதை தொகுப்பு,புத்தக வெளியீடு எல்லாம் வேண்டாம்.நான் இப்படியே இருந்துட்டு போறேன்.நான் எதையாவது சாதிச்சேன் என்று சொல்லியிருக்கேனா.

இப்படியெல்லாம் சொல்லத்தான் ஆசை.

ஆனால் நான் சொல்ல விரும்புவது - :-)))))))))))))))))

இரும்புத்திரை said...

@சுடுதண்ணி அவரை விடுங்க . பாவம் நர்சும் அளவுக்கு சொல்லும் போதே தெரியுது.நெடு நாள் வாசகர் போல. இன்னுமா.இந்த உலகம் என்னை நம்புது.

இரும்புத்திரை said...

ஜேம்ஸ் ,

அடுத்தவன் மேல ஒண்ணுக்கு போகும் பொது ஜிப்பைக் கசட்டி விட்டு போகணும்.அப்ப தான் அவன் மேல தெறிக்கும்.இல்ல உங்க பேன்ட் நாறிடும்.(புரியலையா உங்க சொந்த பெயர்ல வந்து கருத்தை சொல்லுங்க அப்ப பார்க்கலாம்)

பதிவு அடிக்கிற நேரத்தைப் பின்னூட்டத்துக்கு செலவு பண்ண வைக்கிறாங்களே.இன்னைக்கு அடுத்த பதிவு இருக்கு அங்கேயும் வந்து இப்படி எல்லாம் பேச வேண்டாம்.நான் புத்தகம் வெளியிடனும் என்ன சரியா என் நேரத்தை வீணாக்க வேண்டாம்.என் டிவிட்டர் முகவரியில் பொய் பார்த்துக்கோங்க நான் பின்னூட்டங்களுக்கு என்ன சொல்லி இருக்கேன் என்று.என்ன உங்களுக்கு தனி பதிவா - உங்க காமெடிக்கு அளவே இல்ல.ரெண்டு பின்னூட்டத்தை வேஸ்ட் பண்ண சோகத்துல நான் இருக்கேன்.

அப்புறம் நரசிம் பதிவுலையாவது சொந்த முகத்தோடு போங்க.எப்படியாது இன்னைக்கு பத்து பின்னூட்டமாவது தேத்தணும்.

சங்கர் said...

அரவிந்து, இப்பவே சொல்லிட்டேன், அந்த ஜேம்ஸு நான் இல்ல, தனியா பஸ்சுல திட்டாதே :)

சங்கர் said...

//இருக்கிற இவ்ளோ டைரக்டர்கள்'ல சில டைரக்டர்கள்'ல நீங்க சில பேரை குறை சொல்றீங்க. இருக்கிற இவ்ளோ பதிவர்கள்'ல நீங்க என்ன சாதிச்சிட்டிங்க? எவ்ளோ பதிவர்கள் எவ்ளோ திறமையா இருக்காங்க. புத்தகம் எழுதறாங்க. கவிதை தொகுப்பு வெளியிடுறாங்க. ஆனா நீங்க என்ன சாதிச்சு இருக்கீங்க? //

கரெக்ட்டு தானே, நானும் கேட்கிறேன்,

இரும்புத்திரையின் பின்னே நிற்கும் அரவிந்தே, நான் கேட்கிறேன், "விண்ணை தாண்டி வருவாயா" படத்தை திட்டுவதற்கு முன் "பன்னை தின்ன வருவாயா" என்று ஒரு குறும்படமாவது எடுத்திருக்கிறாயா

சங்கர் said...

// இரும்புத்திரை said...

அடுத்தவன் மேல ஒண்ணுக்கு போகும் பொது ஜிப்பைக் கசட்டி விட்டு போகணும்.அப்ப தான் அவன் மேல தெறிக்கும்.இல்ல உங்க பேன்ட் நாறிடும்.//

அவரு பேன்ட் போடுவாரா இல்லியான்னு உனக்கு எப்படி தெரியும் ??

சங்கர் said...

இது பதினொன்னுப்பா

Romeoboy said...

\\ இன்னுமா.இந்த உலகம் என்னை நம்புது. //

டயலாக் மாத்து சகா .. இது ஓல்ட் ஒன்