Thursday, March 11, 2010

பின்னூட்ட அரசியல்

பொதுவாக நான் பின்னூட்டம் இடுவதை விட நிறைய படிப்பது தான் வழக்கம்.காரணம் எல்லா பதிவுகளும் ரீடடில் தான் படிப்பேன்.வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதை விட நிறைய பதிவுகள் எழுதுவது தான் வழக்கம்.காரணம் நான் ஒரு முக்கா சோம்பேறி. தப்பித் தவறி ஏதாவது பின்னூட்டம் இட்டால் அது டிவிட்டர் வரை கொண்டு செல்லப்பட்டு மிதி விழுகிறது.பின்னூட்டம் அரசியலை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அருமை,சூப்பர்,ஸ்மைலி,மீ த பர்ஸ்டு என்று இருக்கும்.அது வந்து போனதற்கு அடையாளம் என்று தெரிந்து கொண்டேன்.யாராவது பெரிய பதிவர்கள் உங்கள் பதிவை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போது தான் மீ த பர்ஸ்டு அருமை தெரியும்.

பதிவுகளில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாமல் இருந்தாலும் ஏதாவது எதிர்கருத்து வரும் போது பாய்ந்து பதில் சொல்வது வழக்கம்.மற்றவர்கள் தப்பாக எடுத்து கொண்டால் என்ன செய்வது இருக்கவே இருக்கு நன்றி என்று போட்டு விட்டு அவருக்கு விரிவாக பதில் சொல்லி அடித்து கொள்வது உண்டு.நான் மட்டும் தான் இப்படி இருக்கிறேனோ என்ற சந்தேகம் இல்லை எல்லோருமே இப்படி தான் இருக்கிறார்கள் என்று உற்றுக் கவனித்து தெரிந்து கொண்டேன்.

முதல் ஐந்து இடத்தில் வரும் பின்னூட்டங்கள் தான் ஆதாரமாக இருக்கும் அடுத்து வரும் எல்லா பின்னூட்டங்களுக்கும்.ரீடரில் காலையிலே பதிவு படித்து விட்டு பின்னூட்டம் யோகித்து வைத்து இருப்பேன்.எனக்கு முன் யாராவது சொல்லி இருப்பார்கள்.சோர்வுடன் போடாமலே திரும்பி விடுவது வழக்கம்.

கமெண்ட் மாடரேஷன் வைப்பதில்லை.அதை படித்து ரீலிஸ் பண்ண சோம்பேறித்தனம் தான் காரணம்.அப்படி இருக்கும் போய் என்னுடைய பின்னூட்டம் எங்கே காக்கா தூக்கிப் போய் விட்டதா என்று சண்டை போடுவார்கள்.சமீபத்தில் அப்படி சண்டையின் முடிவில் பார்த்தால் அவர் வேறு பதிவில் போட்டு விட்டு இந்த பதிவில் கேட்டுயிருக்கிறார்.

நல்ல பதிவுகள் என்று நான் நினைத்திருக்கும் பதிவுகள் எல்லாம் காத்தாடும்.தம்பியிடம் குடுத்து படித்து பின்னூட்டம் போடு என்று சொன்னதில் இருந்து அவன் நிறைய படிப்பதேயில்லை போலும்.உடனே அடுத்த பதிவே யாராவது இயக்குனரை பிடித்து வம்புக்கு இழுத்தால் காலர் கிழியும் அளவிற்கு பின்னூட்ட அடிகள் விழும்.

பஸ்ஸில் ஏறியிருக்கும் எல்லோரும் ஓடி வாங்க.பின்னூட்டம் போட ஆள் கம்மியாக இருக்கு.டெம்ப்ளேர் பின்னூட்டம் போடவே மாட்டேன்.வேண்டும் என்றால் சொல் என்று சொல்லியே எனக்கு டெம்ப்ளேட் பின்னூட்டம் மேல் வெறுப்பு வருமாறு செய்த நாடோடி இலக்கியன் சீக்கிரம் பதிவு போட வேண்டும்.நான் போய் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட வேண்டும்.இது தான் என்னுடைய ஆசை.

மீ த பர்ஸ்டு

:-))))))))))))))

:-((((((((((((

அருமை

இது கட் காப்பி அடிப்பவர்களுக்கு உதவியாக இருக்கட்டும்.

18 comments:

ஈரோடு கதிர் said...

மீ த பர்ஸ்டு

ஈரோடு கதிர் said...

யப்பா சாமி...

ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப நாள் கழிச்சு பின்னூட்டம் போட்டிருக்கேன்

செக் அனுப்பாட்டியும் பரவாயில்ல.. ஆன்லைன் ட்ரான்ஸ்பர் பண்ணினாக்கூட போதும்

ஆமா.. பாரிக்கு என்ன ஆச்சு... ஏன் எழுதறதேயில்ல..

இரும்புத்திரை said...

தெரியல..அவருக்கு மெயில் அனுப்ப வேண்டும்.

gulf-tamilan said...

:-))))))))))))))

:-((((((((((((

அருமை
தேங்க்ஸ்!!!

Raghu said...

ரைட்டு

இத‌ விட்டுட்டீங்க‌ளே:)

vasu balaji said...

வாவ். டெம்ப்ளேட்ல வராதுங்களா?

அகல்விளக்கு said...

//:-))))))))))))))

:-((((((((((((

அருமை//

அருமை... அற்புதம்... அபாரம்...

சங்கர் said...

//யாராவது பெரிய பதிவர்கள் உங்கள் பதிவை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போது தான் மீ த பர்ஸ்டு அருமை தெரியும்//

எதை வைத்து பெரிய பதிவர் சின்ன பதிவர் என்று அறுதியிடுகிறீர்கள், நீங்கள் யார் அதை சொல்ல


//ஏதாவது எதிர்கருத்து வரும் போது பாய்ந்து பதில் சொல்வது வழக்கம்.//

அது பெரும்பாலும் அடுத்த பதிவாகத் இருக்கும்

//எல்லோருமே இப்படி தான் இருக்கிறார்கள் என்று உற்றுக் கவனித்து தெரிந்து கொண்டேன்//

"பெரும்பாலும்" என்று சொன்னால் பரவாயில்லை, "எல்லாரும்" என்று எப்படி பொதுப்படுத்தலாம், அந்த வார்த்தையை நீக்க/மாற்ற வேண்டும்


//என்னுடைய பின்னூட்டம் எங்கே காக்கா தூக்கிப் போய் விட்டதா என்று சண்டை போடுவார்கள்.சமீபத்தில் அப்படி சண்டையின் முடிவில்//

இந்த சண்டை எப்போ நடந்தது? லிங்க் கிடைக்குமா

இவ்வளவு போதுமா இல்ல வேறெதுவும் வேணுமா

Unknown said...

ம்

hiuhiuw said...

அருமை / நன்று / சூப்பர் /

Anonymous said...

அண்ணே அசத்திட்டீங்கண்ணே என்று உங்களை நான் விடாது துரத்துவேன்

வால்பையன் said...

பின்னூட்டம் போட நேரமில்லாதவர்கள் பின்னூட்டம்/ஓட்டு எதிர்பார்க்காமல் இருப்பதே சரி என்பது என் தாழ்மையான கருத்து!

Unknown said...

:-))))))))))))))

:-((((((((((((

அருமை

க.பாலாசி said...

நடக்கட்டும்...

மோனி said...

மீ த 13

:-))))))))))))))

:-((((((((((((

அருமை

மோனி said...

மீ த 14

:-))))))))))))))

:-((((((((((((

அருமை

போட்டோ மாத்திட்டு டெஸ்ட் செஞ்சி பாத்தேன்..
ஹி.. ஹி..

Anonymous said...

//.நான் மட்டும் தான் இப்படி இருக்கிறேனோ என்ற சந்தேகம் இல்லை எல்லோருமே இப்படி தான் இருக்கிறார்கள் என்று உற்றுக் கவனித்து தெரிந்து கொண்டேன்.//
இதுக்காக புலனாய்வு எல்லாம் பண்ணியிருக்கீங்களா தம்பி...சீக்கிரமே நீங்க பெரிய பெரிய பதிவரா வருவீங்க ராசா..இது பதிவுசாமி மேல சத்தியம் கண்ணு

Anonymous said...

//:-))))))))))))))

:-((((((((((((

அருமை
தேங்க்ஸ்!!!//
இது காடு கரையெல்லாம் சுத்திட்டு எல்லா பதிவையும் மேஞ்ச்சுட்டு கடைசியா அலுப்புல உங்க தோட்டத்துக்கு வர்ற பசங்க..களைப்பா போடுற கையெழுத்துப்பா..அத தப்பா நினைக்கலாமா