என்னறைக்கு வந்த பஸ்ஸில் திருடியது.மக்கா கடைசி வரைக்கும் வாங்க,கடைசியில் தான் நான் சொல்லப் போவது இருக்கு.அன்று அதில் நான் கலந்து கொள்ளவில்லை வெறும் வேடிக்கை தான் பார்த்தேன்.
Jaganathan K - Sujatha’s tips for new Writers: How to write Fiction?
1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். ‘துருவனும் குகனும்’ என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, ‘போலீஸ் செய்தி‘க்கு அனுப்பாதீர்கள்.
2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். ‘பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்’ என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.
3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி…
4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.
5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். ‘உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.’ என்று சொல்வதை விட ‘துப்பினான்’ என்பது மேல்.
6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். ‘அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்… இத்தியாத்திக்குப் பதிலாக, ‘அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.
7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதைமாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.
8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட ‘போனான்’ என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக ‘னான்’ என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.
9. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.
*
தோரணத்து மாவிலைகள். சுஜாதா. விசா பப்ளிகேஷன்ஸ்
நன்றி: 10hot (http://10hot.wordpress.com/2009/08/11/sujathas-tips-for-new-writers-how-to-write-fiction/))
Jaganathan K - 1) உங்களைப் படிக்கப்போகும் அந்த முகம் தெரியாத அந்நியர், உங்களைப் படித்ததால் நேரம் வீணாகிவிட்டதாக வருத்தப்படாத அளவிற்கு எழுதுங்கள். வாசகரின் நேரத்தை நீங்கள் மதிப்பது மிக முக்கியம்!
2) கதையின் ஒரு பாத்திரத்துடனாவது வாசகர் தன்னைத் தொடர்பு படுத்திக்கொள்ள முடிவதாக இருக்க வேண்டும்.
3) ஒவ்வொரு கதாபாத்திரமும் எதையாவது ஒன்றை விரும்ப வேண்டும் - குறைந்தபட்சம் ஒரு கோப்பைத் தண்ணீரையாவது!
4) ஒவ்வொரு வாக்கியமும் பின்வரும் இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் - பாத்திரத்தை வெளிப்படுத்துதல், கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துதல்!
5) முடிவிற்கு எவ்வளவு அருகில் முடியுமோ அவ்வளவு அருகில் கதையை ஆரம்பியுங்கள்!
6) குரூர மனப்பான்மை கொண்டவராக இருங்கள். உங்கள் கதாபாத்திரங்கள் எவ்வளவு இனிமையான அப்பாவிகளாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்கு வாழ்வில் மிக மோசமான விஷயங்கள் நடைபெறட்டும்!
7) ஒருவரை மட்டுமே மகிழ்விப்பதற்காக எழுதுங்கள். உலகத்திலிருக்கும் அத்தனை பேரையும் திருப்திப் படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் உங்கள் கதைக்கும் விஷக்காய்ச்சலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது!
8) உங்கள் வாசகர்களுக்கு எவ்வளவு விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுங்கள். சஸ்பென்ஸைத் தூக்கிக் குப்பையில் போடவும்! கதையைத் தாங்களே முடிக்குமளவிற்கு வாசகர்களுக்கு என்ன, எங்கே, எப்படி நடந்ததென்று கதை புரிந்திருக்க வேண்டும். கடைசிப் பக்கங்களை கரையான்கள் தின்னட்டும்!
- Kurt Vonnegut
நன்றி: திண்ணை (http://www.thinnai.com/?module=displaystory&story_id=60601277&format=html)
Jaganathan K - அவங்க சொல்லாம விட்ட விதிகள்:
1. டிரான்ஸலேஷனும் ஒரு படைப்பிலக்கியம்தான்.. மூல (பைல்ஸ் இல்ல) ஆசிரியர் பேர்
போடாம எழுதறது கள்ள இலக்கியம்
Jaganathan K - 2. தினமும் 10 தப்படியாவது வீட்டுக்கு வெளியில நடங்க. இல்ல பழைய நண்பருக்கு
செல்பேசுக.. அட்லீஸ்ட் ஒரு ராங் நம்பருக்காவது போன்போட்டு 'அலோவ் சாரு சங்கரான்னு'
கேட்டுட்டு டக்னு கட் பண்ணுங்க. ப்ரெஷ்ஷான மனசு எழுதறதுக்கு மிக முக்கியம்.
Jaganathan K - 3. பிளாக் எழுதறது உசிதம். நல்ல ப்ராக்டிஸ் தளம்.
பேப்பர் பேனா கவர் போஸ்ட்பாக்ஸ் இம்சை இல்லை.
முக்கியமா மனைவிக்கு நீங்க இப்படி ஒரு எழுத்தாளரா
பரிணமித்துக் கொண்டு வருவதை பொத்திப் பாதுகாக்கலாம்.
3.5. அதிமுக்கியமா ஆபிஸிலியே நீங்க சிறுகதைகளா
வெளுத்து வாங்கலாம். (மானேஜரைப் பார்த்துக் கொண்டே
விமர்சித்து எழுதும் பாக்கியம் வேறு தலைமுறை
எழுத்தாளர்களுக்கு இருந்ததில்லை)
sankaranarayanan venkatesan - தல(சுஜாதா) சொல்லியிருக்காரு , சம்பவங்களும் பாத்திரங்களும் நிறைய இருக்கக் கூடாதாம்
இரும்புத்திரை - முதலில் ஒன் லைன் எழுதி பாருங்கள்.அது வித்தியாசமாக இருக்கவே கூடாது.சமீபத்தில் நான் எழுதிய கதைக்கு(அதுக்கு தானே இந்த பில்டப்..சொல்லித் தொலை) ஒன் லைன் அமைத்த போது இப்படித்தான் வந்தது.காதலியிடன் தகாத வார்த்தை சொன்ன காதலன்(ஆரம்பம்) அவளை விட்டுத் தருகிறான்(முடிவு).அவ்வளவு தான் நடுவில் நம் கைங்கரியம் தான்.
மேலே இருக்கும் விதி முறைகளை எதையும் படித்து விட்டு முயற்சிக்க வேண்டாம்.உங்கள் பாணியில் கதை எழுத இருக்கும் வாய்ப்பையும் அது தராது.
விடுபட்டவை - சுஜாதா பாலகுமாரனிடம் சொன்ன சிறுகதை எழுதுவது எப்படி என்பதின் ரகசியம் ரொம்ப சிம்பிள் தான்.முதல் வரியிலே கதையை ஆரம்பித்து விடுங்கள்.
நானே கற்றுக் கொண்டது - சிறுகதையில் தேவையில்லாத விவரணைகள் வேண்டாம்.இன்னும் கேட்டால் விவரணைகள் வேண்டாம்.குறிப்பாக முதல் பத்தியில் வேண்டவே வேண்டாம்.அது நாவலுக்கு உகந்தது.அதனால் பாலகுமாரன் எழுதிய நாவல்கள் அவர் சிறுகதைகளை விட அதிகம் ஈர்த்தது
நன்றி ஜெகநாதன்,சாறு சங்கர்,ராஜூ(அவர் இந்த ரூலை எல்லாம் படித்து விட்டு கதை எழுதியுள்ளார்.)
விவாதம் நாளையும் தொடரும்.
Friday, March 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
திங்கர்கிழமை சிறுகதைகளால் தமிழ் மணம் ஸ்தம்பிக்கணும்.தமிலீஷ் அவங்க சூடான இடுகைகளை குறிச்சொற்கள் எல்லாம் மாறணும்.படிக்கிறவங்க ______ணும்.
ரூபாய்க்கு ரெண்டு கதையா? எனக்கு யாராவது ஒரு கதை எழுதி தாங்க பா ப்ளீஸ்
நாளைக்குமா..அந்த பஸ் புஸ்ஸாக..
இந்த பஸ்ஸ நான் எப்பிடி மிஸ் பண்ணேன்?
இதே தலைப்பில் டுவிட்டரில் நாங்கள் நடத்திய விவாதம் சுவாரசியம்.
:)
நாளை தொடரும் விவாதமா..? வெயிட்டிங்.
//பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். ‘உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.’ என்று சொல்வதை விட ‘துப்பினான்’ என்பது மேல்.//
இப்படி கதை எழுதினா 10 வரிக்கு மேல தேராது . துப்பினான் , போனான், வந்தான் இப்படி எழுதினா அது என்டர் கவிதையா மாறிடும் . இப்படி நீட்டி முழக்கி எழுதினாதான் கதை எழுத முடியும் . நானும் முயற்சி பண்றேன் ஒரு கற்பனைக்கதை கூட வர மாட்டேங்குது . எப்படி கதை எழுதுறது ??????????????????????
நாஆஅ லைக்குமாஆஅ ஆஆஆஆஆ???
நானும் ஒரு சிறுகதை முயற்சி செஞ்சிருக்கேன்!
Post a Comment