நாணயம் - ரிச்னெஸ் இருக்கு.என்ன இருந்து என்ன பண்ண.மொக்கை வில்லன்.பாடாதி டூவிஸ்ட்.மனதில் ஒட்டாத பாட்டு.சேர் எல்லாம் எடுத்து அடிக்கிற என்று இறுதியில் சிபிராஜ் சொல்லும் போது கண்ணைக் கட்டி விட்டது.காரணம் மணி இரண்டு.பாட்டில் கவனம் செலுத்தியிருந்தால் கொஞ்சமாவது படம் பிழைத்திருக்கும்.ஒரு பேட்டியில் சரண் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது."எனக்கு கதை கேட்கும் போது தூக்கம் வராமலிருந்தால் அதை தயாரிப்பேன்..".அப்படி அவர் தூங்கி மிஸ் பண்ணிய படம் தான் பசங்க.குங்குமப் பூவும் கொஞ்சு புறாவும்,நாணயம்,மழை இந்த படத்தின் கதை கேட்கும் போதெல்லாம் தூக்கம் வரவில்லை போலும்.பார்த்த எனக்கு தான் தூக்கம் வந்து விட்டது.
தீராத விளையாட்டுப் பிள்ளை - சொல்ல என்ன இருக்கு.பசங்க படம் பிடிக்காமல் இருந்தால் இதை ரசிக்கும் மன நிலைக்கு நான் வரலாம்.விடுகதை,கோகுலத்தில் சீதை,காதல் கோட்டை என்று பெண்களுக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்து இயக்கிய அகத்தியனுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை.பெயர் அதை விட முரண்பாடு திரு.முரண்பாடுகள் நிறைந்தது தான் வாழ்க்கை போலும்.அடுத்து சன் பிக்சர்ஸ் சுறா விடுவார்கள்.வெற்றி வெற்றி என்று கத்துவார்கள்.நம்பகத்தன்மை குறையும்.அதன் பாதிப்பு எந்திரனில் தெரியும்.
விமர்சனம் தான் படத்தின் மேல் இல்லை.எடுத்தவர்களின் மேல்.
Sunday, February 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
எந்திரன் வெற்றி வெற்றி வெற்றி - வெளியிட்ட முதல் நாளில் மட்டும் 1000 கோடி ரூபாய் வசூல்
விமர்சனம் தான் படத்தின் மேல் இல்லை.எடுத்தவர்களின் மேல்.
/////
விமர்சனம் அருமை
சரண் மரப்பெட்டியில் சொன்னாரா..? அல்லது இரும்புப்பெட்டியா..?
Post a Comment