Wednesday, November 11, 2009

சினிமா படம் எடுப்பது எப்படி..

முன் டிஸ்கி : நான் ஒரு பொட்டி தட்டுற ஆளு..நான் என் பாணியில் தான் சொல்லி தருவேன்..அப்புறம் அத விட்டுட்டேன்,இத விட்டுட்டேன் யாரும் போய் எங்க அண்ணன் கேபிள் கிட்டயோ இல்ல அண்ணன் தண்டோரா கிட்டயோ அடம் பிடித்தால் நான் பொறுப்பு கிடையாது..வேணா உண்மை தமிழன் அண்ணன் கிட்ட சொல்லலாம்..அப்புறம் அவர் விரிவா கிளாஸ் எடுப்பார்..அதுக்கும் நான் பொறுப்பு கிடையாது..

நான் எல்லாம் வேலைக்கு சேரும் போது எனக்கு கோடிங்கே தெரியாது..கூகிள் பாத்து தான் கத்துகிட்டேன்..முதல்ல படம் பாக்கும் போது ஒரு சாதாரண சி செண்டர் ரசிகனா இருந்த நான் இப்போ ஏ செண்டர் ரசிகனாக மாறி தொலைத்த கா"ரணத்தால்" வந்த வினை இது..

படம் எடுப்பதை நாலு விதமா சொல்லி தர்றேன்..

முதல்ல - பழைய கதை ----------------------என்ன புரியலையா புதுசா அதோட நீட்சி

உதாரணத்துக்கு இப்போ ஒரு காதலர்களை எடுத்து கொள்வோம்.முதல்ல அவங்க போராடுவாங்க..இறுதி காட்சியில் சேர்ந்து விடுவாங்க இல்ல பிரிஞ்சு விடுவாங்க..

சேர்ந்தால் - அலைகள் ஒய்வதில்லை படம் அதோட நீட்சி போய் கஷ்டப்படுவது மாதிரி இருந்தால் சித்ரம் (படிக்கும் போதே திருமணம் குழந்தை)

காதலர்களை சேர்த்து வைத்தால் கிழக்கே போகும் ரயில்,ஷாஜகான் ------> அவர்கள் பிரிந்து விட்டால்,சேர்த்து வைத்தவன் தட்டிக் கேட்டால் அது நாடோடிகள்.

மன நலம் பாதிக்கப்பட்டு மறந்து போய் இருப்பவளைப் பாதுகாத்தால் மூன்றாம் பிறை - நீட்சியாக தீபாவளி.

இரண்டாவது பழைய பேண்டை கொஞ்சம் ஆல்டர் செய்து போடுவது..

அதாவது ஒரு படத்தில் இருந்த காட்சியை எடுத்து கொஞ்சம் மாத்தி படத்தில் சேர்த்து கொள்வது..

மன்மத லீலை படத்தில் மனைவிக்கும்,ஒரு பைத்தியம் பிடித்த பெண்ணிடமும் மாட்டி கொண்டு அல்லல் படுவார் கமல்.இரண்டு பேரும் கை தட்டுவார்கள்.மனைவி மாடியில் இருப்பார்.அந்த பெண் கீழே..மேலேயும் கீழேயும் ஓடி ஓடி சுருண்டு விடுவார்.

இதை எப்படி மாற்றுவது இரண்டு பெண்களுக்கு பதில் இரண்டு கிழவிகளை வைத்து கொள்வோம்.இரண்டு பேரும் சமதரையில் நிற்கிறார்கள்.கை தட்டுகிறார்கள்.நாயகன் இரண்டு பக்கமும் ஓடுகிறார். படம் பூவே உனக்காக.

இன்னோரு உதாரணம்..

சாமி படத்தில் இரவு படம் பார்த்து விட்டு வரும் பெண்களுக்கு டார்ச் கொடுப்பார் விக்ரம்.அடுத்த நாள் அந்த பெண்ணின் கணவரிடம் கொடுத்து விட சொல்வார்.காலையில் கணவருக்கு ரெண்டு மொத்து கொடுப்பார்.இந்த காட்சியின் மூலம்..

ராம்கி நடித்த மருதுபாண்டி..டார்ச்சுக்கு பதில் அரிக்கேன் விளக்கு..பெண்களுக்கு பதில் ஒரே ஒரு பெண்.கணவரும் வருவார் அடி கிடையாது அட்வைஸ் மட்டும் உண்டு..

மூன்றாவது மொத்த படத்தில் கருவையும் உருவுவது..

துள்ளாத மனமும் துள்ளும் - இந்த படத்தில் விஜய் அழுவதை தான் இன்று வரை விஜய்க்கு நடிக்க வரும் என்பதற்கு ஒரே ஒரு சாட்சி.கக்கூஸ் நாத்தம் அழுது இருப்பார் என்று நினைக்கிறேன்.கதை - தன்னால் கண்ணைப் பறி கொடுத்த பெண்ணுக்காக சேவை செய்வது.

இந்த படத்தின் மூலம் - புதையல் - சிவாஜி கணேஷன்,வாணிஸ்ரீ நடித்தது.நாயகி பார்வை கண் ஒரு விபத்தில் போய் விடும்.அதற்கு காரணம் சிவாஜி..பிறகு வாணிஸ்ரீயை அவருக்கு தெரியாமல் கல்யாணம் செய்து அவர் சிகிச்சைகாக பாடுபடுவார்.என்ன ஒரு வித்தியாசம் - சிவாஜி இந்த ப்டத்தில் டாக்டர்.

மன்மதன் படத்தை சிகப்பு ரோஜாக்கள் படத்துடன் ஒப்பிடலாம்.

இன்னும் ஒரு உதாரணம் வேண்டுமா - போக்கிரி விஜய் ஒரு போலிஸ் அதிகாரி.ஆனால் பொறுக்கி மாதிரி நடந்து கொண்டு டிரிபிள் கேம் ஆடுவார்..அந்த படத்தை கமல் நடித்த காக்கிசட்டை படத்துடன் ஒப்பிடலாம்.என்ன ஒண்ணு அவர் அம்பிகாவிடம் உளறி விடுவார்.இதில் அசினிடம் உளற மாட்டார்.காக்கிசட்டையில் மாதவி உண்டு.போக்கிரியில் பிருந்தா.

அதில் கல்லாப்பெட்டி சிங்காரத்தை கொல்ல மாட்டார்கள்.இதில் நாஸரை கொன்று விடுவார்கள்.அதில் இறுதியில் சண்டை தீவில் நடக்கும்.இதில் ஒரு மில்லில் நடக்கும்.அதில் வரும் செந்தாமரை கெட்டவராக நடிக்கும் நல்லவர்.இதில் கெட்டவர்.

காக்கிசட்டையில் செந்தாமரையையும்,மாதவியையும் சத்யராஜ் கொல்வார்.இதில் அந்த போலிஸ் அதிகாரியையும்,பிருந்தாவையும் விஜய் கொல்வார்.

நாலாவது நோகாமல் நோன்பு கும்பிடுற வேலை..

எடுத்த படத்தை பெயர் முதல் கொண்டு அப்படியே எடுப்பது...

நான் அவன் இல்லை (1974) ஜெமினி கணேஷன் - நான் அவன் இல்லை (2007) - ஜீவன்.

பில்லா (1980) ரஜினி - பில்லா (2007) - அஜித்

முரட்டுகாளை (1982) ரஜினி - முரட்டுகாளை (2010) சுந்தர்.சி

மாப்பிள்ளை (1987) ரஜினி - மாப்பிள்ளை (2010) தனுஷ்

பாலைவனச்சோலை (1981) சந்திரசேகர் - பாலைவனச்சோலை (2009) நிதின் சத்யா

நூற்றுக்கு நூறு (ஏதோ ஒரு வருஷம் ரொம்ப முக்கியம்..தெரியல அதுக்கு என்னா சேட்டை) ஜெய்சங்கர் - நூற்றுக்கு நூறு வினய்

இது ரொம்ப சுலபம்..இப்படி கட் காப்பி பேஸ்ட் பண்ணி ஜாலியா இருக்கணும்..

இப்ப எனக்கே ஒரு சந்தேகம் வந்துரிச்சே..இதை தீர்த்து வைக்க முன் டிஸ்கியில் வரும் மூவர்களுக்கும் உரிமை உண்டு.

சந்தேகம் என்னவென்றால் - அது ஏன் ஐட்டம் சாங்கில் மட்டும் பச்சை அல்லது சிகப்பு கலர் உடை பக்காவாக செட் ஆகுது..உதாரணம் நிகிதா - சரோஜா,சிம்ரன் - தமிழ் வேண்டாம் போதும்டா சாமி..

இது சந்தேகத்தோட நீட்சி - வெள்ளை சேலை கட்டி ஆடும் போது மட்டும் மழை வருது..ஏனி ரீசன் பிஹைன்ட் திஸ்..ரீசனா இல்ல ரீசஸ்சனா.. டெல் மீ..

டிஸ்கி :

தலைப்பு படம் உருவது எப்படி - இப்படி வைச்சிருந்தா பொருத்தமா இருக்குமா..இன்னும் நிறைய உருவல் இருக்குது..அப்புறமா சொல்லி தாரேன்..நான் தமிழ் பட உருவலை மட்டும் தான் இதில் சொல்லி தருவேன்..ரஷ்யப் படம் உருவல் வேணுமா..

11 comments:

Unknown said...

தகவல்களும் ஒப்பிடுகளும் அருமை.. நாள்களுக்கு நாள் தகவல் களஞ்சியமாக மாறி வருவது நன்று:)

Unknown said...

ம்ம்.. அப்புறம்..

velji said...

nice way of sharing!

Raju said...

\\..ரஷ்யப் படம் உருவல் வேணுமா..\\

அண்ணனுக்கு ஒரு "கருடபுராணம்" பார்சல்ல்ல்.....!
:-)

ஜிகர்தண்டா Karthik said...

//சிவாஜி இந்த ப்டத்தில் டாக்டர்//
விஜய் இப்போ டாக்டர்...

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல நகைச்சுவை பதிவு ...............காதல் ஒன்று தானே அதை எப்படி எடுக்க சொல்லுங்கள் பார்ப்போம் .......................பழைய வடிவில் பில்லா வரவில்லை என்றால் காரி துப்பிவிடுவார்கள் .நண்பா ..............அதுவும் கடினம் ......
மொத்தத்தில் இது எளிதான காரியம் அல்ல .......................நண்பா

வனம் said...

வணக்கம் அரவிந்த்

......... தொடருங்க
இராஜராஜன்

அகல்விளக்கு said...

//ரஷ்யப் படம் உருவல் வேணுமா..//

வேணாஞ்சாமி...

எல்லாரும் கேட்டுக்கங்க

எனக்கும் இந்த இடுகையோட கடைசி வரிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...

ஆனாலும் அது உண்மைதான்...

என்ன செய்ய.

:-)

தினேஷ் said...

என்ன பண்ணித் தொலைக்க, கேக்க இப்போ இங்க தயாரிச்சாதானே சாப்பிட முடியும்..

அதிலை said...

//பில்லா (1980) ரஜினி - பில்லா (2007) - அஜித்//

Ajith's billa is Ctl+C from SRK's DON... not rajini's Billa... eppadi innum idhe nambittu irukkeenga!!

முரளிகண்ணன் said...

துள்ளாத மனமும் துள்ளுதே வின் அடிப்படை சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ் என்றும் கொள்ளலாமே?

நல்ல சுவராசியமான பதிவு