Monday, November 30, 2009

சாரு,கமல்,அமீர்

சாரு ஒரு கோமாளி என்று குமுதம் விமர்சனம் செய்து இருக்கிறது.நான் எப்பொழுதாவது ஓசியில் குமுதம் படித்தாலும் முதலில் படிப்பது அரசு பதில்கள் தான்.இந்த விமர்சனத்திற்கு காரணம் இளையராஜா.இந்த மூன்று பேருமே எனக்கு பிடிப்பதால் அதில் எல்லாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை மேலும் அந்த பதிலுக்கு சாருவே வெளுத்து வாங்கி இருப்பதால் ஓவர் டூ அமீர்.

என்னை பொறுத்த வரை சாரு ஒரு தீர்க்கதரிசி தான்.காரணம் இதோ..

பருத்தி வீரன் தொடங்கியதில் இருந்து படம் முடியும் வரை ஒரு எதிர்பார்ப்பும் இல்லை - யோகி அளவிற்கு.படம் வெளி வந்தப் பிறகு தமிழ் நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது.கமலில் ஆரம்பித்து சாதாரண கடைநிலை ரசிகன் வரை அமீருக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார்கள்.அதில் கமல் கொடுத்த அங்கீகாரம் தமிழ் சினிவாவில் வந்த பதினேழு சிறந்த திரைக்கதையில் பருத்தி வீரனும் ஒன்று. (கொடுமையிலும் பெரிய கொடுமை அந்த வரிசையில் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் இருந்தது.)

கமல் அங்கீகாரம் கொடுத்ததோடு நிறுத்தி இருக்கலாம்.அவர் கொடுத்த யோசனை தான் இன்று தமிழ்நாட்டு மக்களுக்கு எமனாக வந்து நிற்கிறது யோகியின் வடிவில்.கமல் சொன்னது இது தான் அமீர் உலக சினிமா பாருங்கள் என்று சொன்னது தான்.அப்போது வேண்டாம் அந்த தவறை செய்து விடாதீர்கள் என்று அலறிய ஒரே ஒரு நபர் சாரு மட்டும் தான்.

கமல் நிகழ மறுத்த அற்புதம் என்று இந்தியா டூடேயில் வெளியான கட்டுரையில் கமலின் அவ்வை சண்முகி படம் ஒரு அப்பட்டமான தழுவல் என்று சொன்னார்.அதே மாதிரி தான் யோகி அது ஆப்பிரிக்க படத்தின் அப்பட்டமான தழுவல் என்று கூட சொல்ல மனம் வரவில்லை.அப்பட்டமான உருவல்.

சாரு அதே கட்டுரையில் அமீருக்கு உலக சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னார்.இப்போது அமீருக்கு உலக சினிமா தெரியும் - அதனால் தான் ஆப்பிரிக்கப் படத்தைத் திருடி அப்பிரிக்கப் படங்கள் கலந்து கொள்ளும் பிரிவில் துபாய் திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைக்கிறார்.(இப்படி செய்ய கமல் சொல்லி தந்து இருக்க மாட்டார் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.அனுப்ப சொன்னவர் சுகாசினி மணிரத்னம்.ஆப்பு எங்கே தயார் ஆகுதுன்னே கண்டுப்பிடிக்க முடியவில்லை.)

அடுத்த வரியில் சாரு அமீருக்கு இலக்கியம் தெரியாது என்று ஆச்சர்யப்படுகிறார்.நல்லவேளை அமீருக்கு இலக்கியம் படியுங்கள் என்று யோசனை சொல்லவில்லை.நல்ல விதமாக இலக்கியம் தப்பி விட்டது.(இதில் சாரு மேல் எனக்கு வருத்தம் உண்டு.இலக்கியம் தெரியாதவரை வைத்து புத்தகம் வெளியிடுவதை விட இலக்கியத்தில் ஆர்வம் உள்ள வாசகர்களை வைத்து புத்தகம் அறிமுகம் செய்து இருக்கலாம்.இது சாரு அமீரின் பருத்திவீரனுக்கு கொடுத்த அங்கீகாரமா..)

கமலும்,மணிரத்னமும் தான் காப்பி அடிக்க சொல்லி தந்தார்கள் என்று வெண்ணிற இரவுகள் கார்த்தி என்னுடைய பதிவில் பின்னூட்டமாக எழுதி இருந்தான்.கமல் (காட் பாதர் - தேவர்மகன்) அதில் ஒரு நேர்த்தி இருந்தது.நேடிவிட்டி இருந்தது.தி ராக் என்ற படத்தை தான் உருவி தசாவதாரமாக எடுத்து இருந்தார் என்று நான் கத்தியது என் காதிலே விழவில்லை.காரணம் கமல் என்ற மந்திரம்.அவர் படத்தில் தெரியும் இசம்,ரசம் எல்லாம் தான் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.கமல் ஒரு பார்பினீயவாதி.இந்துத்துவா தீவிரவாதி என்று தான் அடிப்பார்களே தவிர அவர் எந்த படத்தில் இருந்து தழுவினார் என்று யாரும் கண்டுக் கொள்ளவதில்லை.

மணிரத்னம் காட்பாதர் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் படத்தை எடுத்து(தழுவி) டைம்ஸ் பத்திரிக்கையின் முதல் நூறு படங்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த இடத்தில் தான் வசந்தபாலனை உதாரணம் காட்ட வேண்டும்.சினிமா பேரடைஸோ தான் வெயில்.அந்த கதைக்குள் அழகாக பசுபதியைக் கொண்டு நிரப்பினார்.உடனே பசுபதிக்கு நான் தானே நடிக்க சொல்லி குடுத்தேன் என்று அடுத்த படத்தில் நடிக்க முடிவு செய்யவில்லை.

ட்ரைலர் பார்த்து அனுமானத்தில் அமீரின் நடிப்பை விமர்சனம் செய்தேன் என்று கடும் கண்டனம் வந்தது.இதற்கும் சாரு பாணியில் தான் பதில் சொல்வேன்.இருபது வருடம் சினிமா பார்த்தே வளரும் ஒருவனால் ட்ரைலர் பார்த்து மிக சரியாக முடிவு செய்ய முடியும் அதற்கு உதாரணம் தான் அமீரின் நடிப்பு.

இந்த பதிவை அரைவேக்காடு என்றோ அறிவுஜீவி என்றோ இல்லை கோமாளி என்றோ சொல்லலாம்.

டிஸ்கி :

தொடரும் - விமர்சங்கள் மட்டும் அல்ல இந்த பதிவும் தான்.இரண்டாவது பாகம் விரைவில்..

சாரு பேச்சைக் கேட்காமல் கமல் பேச்சைக் கேட்டு எங்க உயிரை வாங்கிடீங்களே அமீர்.இது நியாயமா..கண்ணபிரான் எந்த படத்தின் காப்பி - இது நான் கேட்கவில்லை குசும்பன் கேட்டார் ஆதியின் பதிவில்.எனக்கும் அதே சந்தேகம் தான்.

25 comments:

சென்ஷி said...

தலைவரே.. கூடுமானவரை எழுத்துப்பிழைகளை அகற்றிட்டு பதிவேத்துங்க. படிக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்குது.

மத்தபடி கட்டுரை ஓக்கேய்.....

ஜெட்லி... said...

சாருவை விட மாட்ட போல....

மேவி... said...

தொடருங்க ....... நான் எல்லாம் உதவாத சினிமா பார்த்து தான் வளர்ந்தேன்...... அது என்ன உலக சினிமா ?????

அப்ப தமிழ் நாடு, இந்திய எல்லாம் உலகத்தில் இல்லையா ?????

Raju said...

பாஸு..பின்னூட்டத்துல நாங்க கேக்க வேண்டிய கேள்வியெல்லாம் நீங்களே கேட்டுக்கிட்டா என்னான்னு சொல்றது.

Raju said...

\\தொடரும் - விமர்சங்கள் மட்டும் அல்ல இந்த பதிவும் தான்.இரண்டாவது பாகம் விரைவில்..\\

விமர்சம்னா..?

புலவன் புலிகேசி said...

அரசு பதில்களை நானும் படித்தேன்...

அகல்விளக்கு said...

ஓ.கே. தல

அரசு பதில்களை நானும் பாத்தேன்.

:-)

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ட்ரைலர் பார்த்து அனுமானத்தில் அமீரின் நடிப்பை விமர்சனம் செய்தேன் என்று கடும் கண்டனம் வந்தது//

த‌ல‌
"எல்லாரும் அம்ம‌ண‌மா இருக்கிற‌ ஊர்ல‌ கோம‌ண‌ம் க‌ட்ன‌வ‌ன‌த்தான் கிறுக்க‌ன்னு சொல்வாங்க‌"
விடுங்க‌ பாஸ் இவிய்ங்க‌ எப்ப‌வுமே இப்ப‌டித்தான் இதுக்கெல்லாம் ப‌ய‌ந்தா தொழில் ப‌ண்ண‌ முடியுமா?

பெசொவி said...

ஓவர் பில்டப் கொடுத்து அமீர ஏத்தி விட்டாங்க, இப்ப அமீரும் கஷ்டப் படறாரு, மத்தவங்களையும் கஷ்டப் படுத்தறாரு

பனிமலர் said...

தசாவதாரம் தி இராக் படத்தின் உருவல் இல்லை, சில் பெக்டரின் உருவல், விபரங்களுக்கு பதிவை பார்க்கவும். அம்மாம் அது என்ன காரணம் இளையராசா என்று சொல்லிவிட்டு சேதி ஒன்றும் கனோம்.......

http://panimalar.blogspot.com/2008/08/chill-factor.html

பனிமலர்.

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா ...சாரு வலைத்தளத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்

ஊடகன் said...

நான் சாரு தளத்தை தொடர்ந்து படிப்பவன்.......

சாரு வலைத்தளம் மூலமாக தான், தங்கள் பதிவை படித்தேன்....

மிகச்சரியான பார்வை....

அமீர் செய்த மிகப்பெரிய தவறு, நடிகனானது....

சாரு சொன்னது சரிதான்..........

Raju said...

\\வெண்ணிற இரவுகள்....! said...
நண்பா ...சாரு வலைத்தளத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்\\

Hello Mr.Aravind,
You have done a very good wonderful and good Job. oh.. What a record..!
Keep Rocking Boss.


Raju.
:-)

முல்லை மயூரன் said...

ammer patri koorinathu sarithaan,, but charu komalithaan kameene vimarsanaththa parththa

Vinay said...

U look like a jaalra for charu...

KANTHANAAR said...

அதுக்கு என்ன பண்றதுண்ணா... வெள்ளக் காரன் முதல்ல சிந்திக்கிறான்.. முந்திரி கொட்ட மாதிரி.... நாம கொஞ்சம் லேட்டு.....நாம போடற பேண்ட் கூட அவ டசைன் பண்ணதுதான்... சாரு பேசற பின் நவீனத்தும் கூட அங்க சொன்னதுதான்... முதல்ல எடு முதல்ல எடுன்னு உயிர வாங்கனா எப்பபுடிங்க....

ARV Loshan said...

ஊடகன் said...
நான் சாரு தளத்தை தொடர்ந்து படிப்பவன்.......

சாரு வலைத்தளம் மூலமாக தான், தங்கள் பதிவை படித்தேன்....//

ரிப்பீட்டு..

நல்லா சொல்லி இருக்கிறீங்க..
தழுவலுக்கும் உருவலுக்கும் உள்ள வித்தியாசம் உணர்ந்தமை மகிழ்ச்சி..

Nathanjagk said...

எந்த கருத்திலும் பேதம் தோணவில்லை. உண்மைதான்.. ஆனால் தழுவி எடுப்பது, உருவி எடுப்பதால் ஒரு படத்தின் தரத்தை குறைத்து மதிப்பிடலாமா?

கமல் ஒரு பார்ப்பனியவாதி என்பதை மறுக்கிறேன்.

சாரு திரைக்கலைஞர்களை பற்றி நன்றி அறிந்து எழுதுபவர். ஆனால் அதில் சுயலாபம் நிறைய இருக்கிறது. சாதாரணமாகப் பார்த்தாலே தெரியும்.

ஏற்கனவே சொன்னதுதான், இலக்கியத்தை தவிர்த்து இலக்கியவாதியை பர்ஸனலாக அணுகினால் அரசியல்தான் மிஞ்சும்.

பெரியண்ணன் சென்ஷி சொன்னமாதிரி எழுத்துப் பிழை அப்படியொண்ணும் தெரியலியே!

வேகமான எழுத்து! ஜமாயுங்க அரவிந்த்

suresh.ekaa said...

நண்பரே, நானும் தெரியமால் யோகியில் புதுசா யேதோ சொல்லிருபாங்கனு போய்டேன் ஓப்பனிங்க பாத்ததுமே தெரிஞ்சு போச்சு 'டிசொடி' னு, எனக்கு தெரிந்த இளம் இயக்குனரிடம் கூப்பிட்டு புலம்பினேன் .. சரியா சொன்னீங்க..

prabhu ramakrishnan said...
This comment has been removed by the author.
Hai said...

யோவ் நல்லா அவுத்து விடறீங்கய்யா அவுங்க இந்த மாதிரி காப்பி அடிக்கலீன்னா என்ன மாதிரீ தக்குறீல்லாம் எப்படிய்யா அந்த ஒலகப் படமோ ஆப்பிள் படமோ பாக்கறது. நீங்கலாம் ரொம்ப சின்னதா ஓசனை பண்ணுறீங்கப்பா.

Hai said...

யோவ் நல்லா அவுத்து விடறீங்கய்யா அவுங்க இந்த மாதிரி காப்பி அடிக்கலீன்னா என்ன மாதிரீ தக்குறீல்லாம் எப்படிய்யா அந்த ஒலகப் படமோ ஆப்பிள் பலமோ அதப் பாக்கறது. நீங்கலாம் ரொம்பச் சின்னதாஆஆஆ ஓசனை பண்ணுறீங்கப்பா.

Hai said...

இந்தப் படம் வார வரையிலும் சும்மா இருந்துப்புட்டு இப்ப வந்து அது வந்து இது மாதிரி அது மாதிரிங்கறீங்களேய்யா

Hai said...

இந்தப் படம் வார வரையிலும் சும்மா இருந்துப்புட்டு இப்ப வந்து அது வந்து இது மாதிரி அது மாதிரிங்கறீங்களேய்யா

DR said...

"நான் எல்லாம் உதவாத சினிமா பார்த்து தான் வளர்ந்தேன்...... அது என்ன உலக சினிமா ?????

அப்ப தமிழ் நாடு, இந்திய எல்லாம் உலகத்தில் இல்லையா ?????"

நெத்தி அடி தல...