Monday, November 9, 2009

சிரிக்கும் புத்தர்,பச்சை ரத்தம் - ஒரு விளக்கம்

முதலில் நான் எழுதும் கோபம் மட்டும் தான் இருந்தது.ஈரோடு கதிர் அண்ணாவிடம் காண்பித்த உடன் அவர் மாற்றி கொடுத்தார்.பிறகு தான் அதில் உணர்ச்சியும்,கோபமும் சரிவிகிதத்தில் தெரிந்தது.இப்படி இருந்த கவிதை மாதிரி

வாயில் பச்சை ரத்தம் வழிந்ததாக
அடிக்கும் கோழையைப் பார்த்து
சத்தமாக சிரிக்கிறேன்
அதிகம் வழிவதாக வாயில் துணி
அதுவும் நான் அணிந்ததையே கிழித்து
கண்களால் பேசினேன்
அதையும் கட்டி விட்டாய்
அதிலும் ரத்தம் வழிந்திருக்கும் என
ஊகித்து கொண்டேன்
நவ துவாரங்களிலும் வழிவதை பார்க்க
ஆடைகள் களைந்தாயோ
பெட்டை மாதிரி பின்னால் இருந்து
சுடும் முன்னாவது கேட்டிருக்கலாம்
ரத்தம் வழிந்த காரணம் சொல்லியிருப்பேனே.
அது உன் அப்பன்
ஊற்றிய புத்தரின் அபிஷேக ரத்தம்
இப்பொழுது தெரிந்திருக்குமே
காரணம் தமிழகத்தில் இருந்து
வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கண்ணிலும்,வாயிலும் வழிந்து இருக்குமே.

அவர் மாற்றிய பிறகு ஒரு முன் மாதிரி கவிதையாக மாறியது..

அடிக்கும் கோழையைப் பார்த்து
சத்தமாக சிரிக்கிறேன்

அதிகம் வழிவதாக வாயில் துணி
அதுவும் நான் அணிந்ததையே கிழித்து

பேசிய கண்களையும் கட்டினான்
அதில் ரத்தம் வழியாமலா இருந்திருக்கும்

ஆடைகள் களைந்தானே
நவ துவாரங்களிலும் வழிவதை பார்க்கவா

கோழையாய்...
பின்னால் சுடும் முன்னே கேட்டிருக்கலாமே
வழிந்த ரத்தம் உன் அப்பன் ஊற்றிய
புத்தரின் அபிஷேக ரத்தமென சொல்லியிருப்பேனே.

தமிழகத்தில் இருந்து வந்த பத்துப்பேரின்
கண்ணிலும், வாயிலும் வழிந்து இருக்குமே எச்சிலாக!.

இப்படியே மாற்றாமல் இருந்திருக்கலாம்..அதான் உடனே என் மேதாவித்தனம் முன்னால் குதிக்குமே..

அவர் தந்த தலைப்பையே முதல் வரியாக வைத்து இறுதியில் பச்சை ரத்தம் எண்டு சேர்த்து கொண்டேன்.

கடைசியாக வந்த கவிதை வடிவத்தை இங்கு பார்க்கலாம்..நான் வழ்க்கமா போடும் மொக்கையில் கதிர் அண்ணாவின் உழைப்பும் காணாமல் போனது தான் வருத்தம்.

3 comments:

தமிழினியன் said...

//தமிழகத்தில் இருந்து வந்த பத்துப்பேரின்
கண்ணிலும், வாயிலும் வழிந்து இருக்குமே எச்சிலாக!.//

//பெட்டை மாதிரி பின்னால் இருந்து
சுடும் முன்னாவது கேட்டிருக்கலாம்
ரத்தம் வழிந்த காரணம் சொல்லியிருப்பேனே.//

சத்தியமான வார்த்தைகள்

Unknown said...

இயலாமை சுடுகிறது..

ஆரூரன் விசுவநாதன் said...

மிக அருமை அரவிந்த்....தொடருங்கள்.....வாழ்த்துக்கள்