Thursday, November 5, 2009

10 பிடித்த,பிடிக்காத பதிவர்கள்

அகல்விளக்கு - இவருக்கு என் மேல என்ன கோபமோ தெரியல..அவருக்கு கிடைத்ததை விட எனக்கு அதிகமாக கிடைக்கட்டும் அப்படி இதுல என்னை கோர்த்து விட்டு இருக்கார்.ஏன்யா பேராண்மை கோபம் இன்னுமா தீரல..வேணாம் வலிக்குது..நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே இருக்குறது..இருந்தாலும் இந்த தொடர்பதிவு மோகம் என்னை விட்டு இன்னும் போகவில்லை..அதனால என்ன நடந்தாலும் சிங்கிளாக களத்தில் இறங்க முடிவு செய்து விட்டேன்..(ஒரு தடவை நான் முடிவெடுத்துட்டா எம் பேச்ச நானே கேக்க மாட்டேன்..அட ச்சீ பயத்துல இந்த வசனத்தைப் பேசிட்டேனே..நல்ல வேளை யாரும் கவனிக்கலை..)

முன் டிஸ்கி : எனக்கு பிடிக்காதங்க இந்த உலகத்திலே இல்ல..அட ஒரு சேப்டிக்கு தான்..(என்ன சேப்டி பின்னால் பின்னால குத்துவாங்களா) அதனால கொஞ்சம் பிடித்தவர்.

இத்தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்.

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து நபர்களை அழைக்க வேண்டும்

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி

பிடித்தவர் - முதல்வர் தான்..(அது பாரம்பரியமா வருவது..இவர் சாகுற வரைக்கும் இவருக்கு தான் ஓட்டு இப்படி எந்த நேரத்தில் சொன்னேனோ தெரியல..எங்க குடும்பத்துக்கே ஓட்டு இல்லாம செஞ்சுட்டாங்க..)

கொஞ்சம் பிடித்தவர் - ஜெயலலிதா..(கொஞ்சமா இவரோட ஆளுமை பிடிக்கும்..கிடா வெட்ட கூடாது இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்துட்டு தேர்தல் சமயத்துல அடிச்ச பல்டியில நான் அமுங்கி போயிட்டேன்)

நடிகர்

பிடித்தவர் - விக்ரம் (அவரோட உழைப்பு,கடின முயற்சி,கால் உடைந்த நிலையிலும் ஐந்து வருட போராட்டம்)

கொஞ்சம் பிடித்தவர் - வி..(இவரோட டான்ஸ்,பைட் எல்லாம் எனக்கு பிடிக்கும்..ஆனா ஒரே மாதிரி நடிச்சி எதுக்கு இப்படி பாடு படுத்தனும்..இப்படி நான் நடிகர் விஜய் பத்தி சொன்னேன்னு யாரும் நினைத்தால் நான் காரணம் அல்ல அது விவேக் அப்ப டான்ஸ் - 12 பி பைட் - ஆதி)

இயக்குனர்

பிடித்தவர் - பாலு மகேந்திரா(பாலா மாதிரி தரமான இயக்குனர்களை உருவாக்கி தந்ததால்..)

கொஞ்சம் பிடித்தவர் - விஜய டி.ராஜேந்தர்(இன்னும் நான் யூத்து..டெலிபோன் பூத்து அப்படி சொல்லிகிட்டு..நான் ரஜினி,கமலை விட சின்னப் பையன்,சினைப் ப.. அப்படி உளறிகிட்டு..நாலு வருஷம் கஷ்டப்பட்டு வீராசாமி என்ற காவியம் உருவாக்கி..அவ்வ்வ்வ்வ்வ்வ்..முடியல..லிஸ்ட் இன்னும் இருக்கு...)

கவிஞர்

பிடித்தவர் - வாலி (எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இளமையாகவே சிந்திப்பதால்..)

கொஞ்சம் பிடித்தவர் - பேரரசு(அரைச்ச மாவ அரைப்போமா..இப்படி பாட்டு எழுதி அவரை பத்தின உண்மையை அவரே உளறியதால்..)

தொழிலதிபர்

பிடித்தவர் - இயக்குனர் ஷங்கர்(150 கோடியில் அடுத்தவங்க காசில் படம் எடுத்தாலும்..அவர் தயாரிக்கும் போது நாலு கோடியை தாண்டினாலே பெருசு..)

கொஞ்சம் பிடித்தவர் - விகடன் டாக்கீஸ்(நூறு தடவை கதை கேட்டு வால்மீகி போன்ற மொக்கை படம் தயாரிப்பதால்..பசங்க படத்தின் கதை இவர்களுக்கு பிடிக்கவில்லையாம்..)

நடிகை

பிடித்தவர் - நதியா(கவர்ச்சி என்ற அஸ்திரத்திற்கு அடிபணியாத காரணம் ஒன்றே போதுமே..)

கொஞ்சம் பிடித்தவர் - சுகாஷினி(அவருக்கு தெரிந்தவர் என்பதால் விமர்சனம் செய்யும் போது கந்தசாமி படத்தை தடவி கொடுத்து விமர்சித்தது.. இராவண் படத்தை இவர் எப்படி விமர்சனம் செய்வார் என்று பார்க்க ஆசை..)

இசையமைப்பாளர்

பிடித்தவர் - இளையராஜா..(நான் அவருக்கு பெரிய விசிறியாக்கும்..)

கொஞ்சம் பிடித்தவர் - பேரரசு(திருத்தணி படத்துக்கு இவர் தான் இசை..பூமாதேவி வாயை திறக்க போறா..எல்லோரும் உள்ளே போக வேண்டியது தான்..காசு குடுத்து டியூன் வாங்கி நம்ம பெயர்ல போடக் கூடாது..)

எழுத்தாளர்

பிடித்தவர் - சாரு நிவேதிதா(காலத்திற்கு ஏற்ப மாறுவது..இது இல்லாமல் போனதால் தான் இந்த இடத்தில் பாலகுமாரன் பெயர் வரவில்லை..)

கொஞ்சம் பிடித்தவர் - பட்டு கோட்டை பிரபாகர்(காலத்திற்கு ஏற்ப எழுதுகிறேன் என்று சொல்லி படிக்கும் என் உயிரை வாங்குவது)

விளையாட்டு

பிடித்தவர் - கிரிக்கெட்(சச்சின் விமர்சனம் செய்பவர்கள் வாயை விளையாடி அடைக்கும் போது எனக்கும் அது வெறி வரும் மேட்ச் முடிந்தவுடன் மறந்து விடும்,ஆண்டி கேடிக் பந்தை உலக கோப்பை 2003ல் சிக்ஸ் அடித்தது, போட்டிக்கு முன் அவர் சச்சினை விமர்சனம் செய்தவர்..அடிக்கடி விமர்சனம் செய்ங்க..)

கொஞ்சம் பிடித்தவர் - பீச் வாலிபால்(அந்த நேரத்தில் சேனல் மாத்த முடிவதில்லை,இந்த விளையாட்டு தமிழ் நாட்டில் விளையாடினார்கள்)

பதிவர்

பிடித்தவர் - அவர் எழுதிய பதிவு பிடித்து இருந்தால் அவரையும் பிடிக்கும்..(அதுக்காக பிடிக்காத பதிவு என்றால் அவரை பிடிக்காது என்று அர்த்தம் அல்ல..)

கொஞ்சம் பிடித்தவர் - இரும்புத்திரை அரவிந்த்..(அடப்பாவி இப்படி கூசாமல் பொய் சொல்வதால்..தப்பிக்க வேற வழி தெரியல..விதிமுறையில் பிரபலம் என்று இருந்ததால்..நான் பிராபளம் என்பதால்..)

நான் அழைப்பு விடுத்தவர்கள் :-

1. நையாண்டி நைனா

2. வெண்ணிற இரவுகள் கார்த்திக்

3. ஜார்ஜ் புஷ் (யோவ் சும்மா தானே இருக்கீங்க..எழுதுங்க..)

4. ஜாக்கிஜான் (அழைப்பவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று விதிமுறையில் இல்லை..)

5. எமதர்மன்(நேர்மையாக நீதி வழங்குகிறாரா..இல்லை பிடித்தவர்கள்,பிடிக்காதவர்கள் என்று பாரபட்சம் காட்டுகிறாரா என்று பார்க்க வேண்டும்..)

டிஸ்கி :

யாரும் அடிக்க சட்டையை பிடிக்க வேண்டாம்..அது ஏற்கனவே தேவையான அளவு கசங்கி தான் இருக்கிறது. வாங்க நண்பர்களே!!!!!

21 comments:

Raju said...

அப்பாடா, யாராவது சாரு நிவேதிதான்னு கரெக்ட அவர் பேர சொல்லுவாங்களான்னு பார்த்துக்கிட்டே இருந்தேன். நான் பார்த்த வரைக்கும் நீங்க ஒரு ஆளுதான் கரெக்ட்டா சொல்லியிருக்கீங்க..மத்தவங்க எல்லாரும் "சாரு நிவேதா".. ஹி..ஹி...

எமதர்மன் வரிசையில் நையாண்டி நைனாவை வைத்து, அவர் "கொல்லுகிறார்" என சொல்லி இருந்த நுண்ணரசியலை வெகுவாக ரசித்தேன். வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
கொலை வெறியுடன் குறீயீடு தேடும் சங்கத்தின் ஆயுட்கால மெம்பர்.
எத்தியோப்பியா.

அகல்விளக்கு said...

செமயா பட்டய கிளிப்பிட்டிங்க போங்க.....

வனம் said...

வணக்கம் அரவிந்த்
இது அழுகுனி ஆட்டம்
இங்க பிடித்தவர், பிடிக்காதவர் என்றுதான் இருக்கின்றது, இந்த கொஞ்சம் பிடித்தவர் என்பதெல்லாம் இல்லை

இராஜராஜன்

லோகு said...

//இவரோட டான்ஸ்,பைட் எல்லாம் எனக்கு பிடிக்கும்..ஆனா ஒரே மாதிரி நடிச்சி எதுக்கு இப்படி பாடு படுத்தனும்..இப்படி நான் நடிகர் விஜய் பத்தி சொன்னேன்னு யாரும் நினைத்தால் நான் காரணம் அல்ல அது விவேக் அப்ப டான்ஸ் - 12 பி பைட் - ஆதி//

வருங்கால முதல்வர் விஜய் யை விவேக்கோடு ஒப்பிட்டு அவரை காமெடியன் ஆக்கிய உங்கள் நுண்ணரசியலை வெகுவாக ரசித்தேன்..

இப்படிக்கு,
கொலை வெறியுடன் குறீயீடு தேடும் சங்கத்தின் இன்னொரு ஆயுட்கால மெம்பர்.
எத்தியோப்பியா.

இரும்புத்திரை said...

வர்ற கூட்டத்த கலைக்கிறதே வேலையா இருக்கு எத்தியோப்பியாவின் ஆயுட்கால உறுப்பினரான திரு ராஜு அவர்களே

இரும்புத்திரை said...

நன்றி அகல்விளக்கு நினைத்தது நடந்ததா ?

இரும்புத்திரை said...

நன்றி வனம் குறியீடு தேடி அலையும் கூட்டத்தில் இருந்து தப்பவே இந்த ஆட்டம்

Raju said...

\\நன்றி வனம் குறியீடு தேடி அலையும் கூட்டத்தில் இருந்து தப்பவே இந்த ஆட்டம்\\

ஹலோ..ராங் நம்பர்ன்னா ராங் நம்பர்ன்னு சொல்லுங்க.. அத விட்டுட்டு என்ன ராங்கா பேசுறது.

இரும்புத்திரை said...

நன்றி லோகு..என்ன வருங்கால முதல்வரா..எந்த படத்துல..படத்திலையும் வருங்காலம் தானா..உங்க வஞ்சப் புகழ்ச்சி அளவே இல்லையா

லோகு said...

முன்னர் இரண்டு தொடர் பதிவுக்கு என்னை அழைத்து, நான் எழுதாதால் இம்முறை ஜார்ஜ் புஸ்ஸையும், ஜாக்கி சானையும் அழைத்து எனக்கு கண்டனத்தை மறைமுகமாக தெரிவித்த உங்கள் நுண்ணரசியலை மீண்டும் ஒரு முறை ரசித்தேன்..

இரும்புத்திரை said...

இன்னைக்கு நான்தான் சிக்கி விட்டேனா எத்தியோப்பியாவின் ஆயுட்கால உறுப்பினர்களே..

லோகு said...

\\ ♠ ராஜு ♠ said...

\\நன்றி வனம் குறியீடு தேடி அலையும் கூட்டத்தில் இருந்து தப்பவே இந்த ஆட்டம்\\

ஹலோ..ராங் நம்பர்ன்னா ராங் நம்பர்ன்னு சொல்லுங்க.. அத விட்டுட்டு என்ன ராங்கா பேசுறது.\\

ரிப்பீட்டுகிறேன்..

வனம் said...

வணக்கம் அரவிந்த்

\\நன்றி வனம் குறியீடு தேடி அலையும் கூட்டத்தில் இருந்து தப்பவே இந்த ஆட்டம்\\

நான் நிணைத்தேன் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரர் பரம்பரைனு ஆனா.....

இராஜராஜன்

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா பிடித்தவர் பிடிக்காதவர் என்பது தான் தலைப்பு.............இது ஏமாற்று வேலை .....இந்த பதிவிலே எனக்கு பிடித்தது என் பெயரை சொல்லி இருக்கிறீர்கள்....
அது பிடித்து இருந்தது.....

வெண்ணிற இரவுகள்....! said...
This comment has been removed by the author.
பிரபாகர் said...

தம்பி... அதகளம் பண்றே...

ம்... வயசு. செய்யு ராசா செய். நல்லாருக்கு.

பிரபாகர்.

நர்சிம் said...

கலக்கல்.

தொடர அழைத்தவர்கள் கலக்கலோ கலக்கல்.

ராஜூவின் நேற்றைய பின்னூட்டம் டாப் என்றால் இன்னிக்கு டாப் மோஸ்ட்.

Ashok D said...

//தொடர அழைத்தவர்கள் கலக்கலோ கலக்கல்.
ராஜூவின் நேற்றைய பின்னூட்டம் டாப் என்றால் இன்னிக்கு டாப் மோஸ்ட்.//


ரிப்பீட்டு போட்டுகிறன்பா

வால்பையன் said...

உங்களுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் தல!

Unknown said...

///சச்சின் விமர்சனம் செய்பவர்கள் வாயை விளையாடி அடைக்கும் போது எனக்கும் அது வெறி வரும் மேட்ச் முடிந்தவுடன் மறந்து விடும்,ஆண்டி கேடிக் பந்தை உலக கோப்பை 2003ல் சிக்ஸ் அடித்தது, போட்டிக்கு முன் அவர் சச்சினை விமர்சனம் செய்தவர்..அடிக்கடி விமர்சனம் செய்ங்க///

கொஞ்ச நாளா எல்லாரும் மூடிட்டு இருக்காங்க. டெக்னிக் தெரிஞ்சு போச்சோ???? ஏ..சேப்பல் எங்க இருக்கே??? வா, வந்து சச்சினைத் திட்டுடா. (என் பாட்டுக்குத் திட்டிவைபோம்: சச்சின் எல்லாம் எதற்குக் கிரிக்கெட் ஆட வேண்டும். இளைஞர்களுக்காக ஒதுங்கி வழிவிடாமல் கருணாநிதி மாதிரி அணியிலேயே உட்கார்ந்திருப்பது நியாயமா. சச்சின் டவுண் டவுண்)

ஆ.ஞானசேகரன் said...

வால்பையன் போல நீங்களும் மாற்றியமைத்தது நல்லாயிருக்கு