Friday, November 27, 2009

நம்பர் 6,விவேகானந்தர் தெரு,துபாய்

நம்பர் 6,விவேகானந்தர் தெரு,துபாய் இந்த காமெடி பாக்கும் போதெல்லாம் என்னை மறந்து சிரித்து இருக்கிறேன்.ஆனா இப்போ இந்த காமெடி வந்தாலே உடனே சேனல் மாற்றி விடுவேன்.அப்படி என் வாழ்க்கையிலே வேட்டையாடாமல் விளையாடிய வில்லியின் கதை

ஜூலை 2, 2008

அப்போ எல்லாம் ரொம்ப வெட்டி தான்.பதிவு கூட எழுதுறது இல்லனா பாத்துக்கோங்க.யார்கிட்டயாவது வம்பு இழுக்கணும் போல ஒரு நினைப்பு ஓடிக்கிட்டே இருந்தது.அப்படி இருக்கும் போது அந்த போன் கால் வழியா ஒரு சோதனை வந்தது.உங்களுக்கு பிஎல்/எஸ்க்யூஎல் எக்ஸ்பிரியன்ஸ் எத்தனை வருஷம் இருக்கு அப்படி அந்த முனை கேட்டு வைக்க நானும் நாலு வருஷம் இருக்குதுன்னு சொல்லி வைச்சேன் என் வாழ்க்கையிலே விதி விளையாடப் போவது தெரியாம.

உடனே அந்த பெண்ணும்(ஆன்ட்டியும்) துபாய்ல ஒரு வேலை இருக்கு.உங்களுக்கு விருப்பமா.இல்லை எனக்கு துபாய் எல்லாம் வேண்டாம்.(எங்கிட்ட பிளாஸ்டிக் பாய் இருக்கு.அது போதும்) என்று சொன்னேன்.அவள் காரணம் கேட்டதற்கு எனக்கு சென்னையில் வேலை செய்ய தான் விருப்பம்.(இங்க தான் நான் சிக்கி விட்டேன்.நானா உளறிட்டேன்).அவளும் என்னை விடாமல் சென்னையில் நீங்கள் சேர்ந்து கொள்ளலாம்.அதற்கு முன் ஒரு வருடம் துபாயில் வேலை செய்ய வேண்டும்.சம்பளம் மாதம் 75000.அந்த சம்பளம் கூட என்னை ஈர்க்கவில்லை.ஒரு வருடம் கழித்து சென்னை - அந்த உத்திரவாதம் தான் என்னை அறியாமல் சம்மதம் சொல்ல வைத்தது.

ஜூலை 3,2008

நான் பொதுவா ஆபிஸ்ல லீவ் போட மாட்டேன்.அங்க தான் நல்லா பொழுது போகும்.இப்போ எடுத்தா நிச்சயம் சந்தேகம் வரும் என்று நினைத்து காலையில் ஆபிஸ் வந்து மதியம் தம்பி வருகிறான் என்று பொய் சொல்லி அவள் அலுவலகத்தை அடைய வழி தேடி அலைந்து திரிந்து ஒரு வழியாக கண்டுப் பிடித்து அங்கே போனால் கொஞ்சம் அழகாக தான் இருந்தாள்.சென்னை போகும் ஆர்வத்தில் அவள் சொல்வதற்கு அதிகமாகவே தலையாட்டி தொலைத்தேன்.என்னுடைய பத்தாவது மதிப்பெண் சான்றிதழ் வாங்கி பார்த்து அவளே வைத்து கொள்வதாய் சொன்னாள்.தலையை ஆட்டி வைத்தேன்.சென்னை மோகம் அந்த அளவிற்கு என்னை ஆட்டிப் படைத்தது.பாஸ்போர்ட் உடனே வாங்க சொன்னாள்.நான் வேலை செய்யாத துறையை கூட தெரிந்து இருக்க வேண்டும் என்று சொன்னாள்.என்னை இந்த அளவிற்கு சரி என்று சொல்ல வைத்த பெண் இவள் ஒருத்தி தான்.

ஜூலை 4 - 15,2008

பாஸ்போர்ட் வாங்க நாயாக அலைய ஆரம்பித்தேன்.காலையில் ஆறு மணிக்கு எழுந்து பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு போவேன்.நான் பிளஸ் டூ படிக்கும் போது கூட ஆறு மணிக்கு எழுந்தது கிடையாது.தமிழ்,அம்மா,அப்பா,தம்பி,சினிமா,புதுசாகவே பழைய நண்பர்கள்,பழைய தோழி இதெல்லாம் கூட காரணம்.ஒவ்வொரு நாள் ஒவ்வொரு காரணம் சொல்லி எனக்கு பாஸ்போர்ட் தராமல் இழுத்து அடித்தார்கள்.புரியாத மொழி.முதல் முறையாக இரயில் மறியல் செய்த முதல்வர் மீது கோபம்.(தீவிரவாதியின் பின்பக்கத்தைக் கூட தங்கத்தட்டில் வாங்கி கழுவி விடும் அவர்கள் எனக்கு மட்டும் ஏதாவது காரணம் கண்டுப்பிடித்தது மாதிரி இருந்தது.அதை தனிப் பதிவாகவே எழுதுகிறேன்.)

ஜூலை 16 - 22,2008

அவள் எந்த நேரமும் அந்த பாழாய் போன க்ளையன்ட் கால் செய்யான் என்று பயமுறுத்தி வைத்து இருந்தாள் அந்த பாதகத்தி.எந்த நேரமும் செல்போனுடன் சகவாசம்.குளிக்கும் இடத்தில் ஆரம்பித்து கழுவும் இடம் வரை.ஒரு நாள் கைத்தவறி அது தண்ணீரில் விழுந்து விட்டது.தக்கல் முறையில் எடுக்க முயன்ற பாஸ்போர்ட் ஒரு பக்கம் என்றால் ரிப்பேர் செய்ய குடுத்த போன் ஒரு பக்கம்.கடைசியில் இரண்டு நாட்கள் கழித்து இரண்டாயிரம் கொடுத்து ஒரு போன் வாங்கினேன்.என்ன கொடுமை ஒரு தடவை கூட யாரும் அழைக்கவில்லை.பாதி நாட்கள் தான் அலுவலகம் செல்வேன்.அதற்குள் உங்க முகவரி சொல்லுங்க என்று நக்கல் நண்பர்களிடம் இருந்து.நான் சொன்ன முகவரி தலைப்பில் இருக்கிறது.

ஜூலை 23,2008

எனக்கு வந்து கோபத்தில் அவளுக்கு போன் செய்து எனக்கு இந்த வேலையே வேண்டாம் என்று சொன்னேன்.அந்த க்ளையன்ட் வேறு ஒருவனை தேர்வு செய்து விட்டதாக சொன்னாள்.அவள் இப்படி சொல்வதற்கு அரை மணி நேரம் முன்பு தான் பாஸ்போர்ட் அலுவகத்தில் சண்டைப் போட்டு என் விண்ணப்பத்தை ஏற்று கொள்ள செய்தேன்.அவள் அப்படி சொன்னதும் நான் கத்தியே விட்டேன்."அப்புறம் என்ன ம...".அவளுக்கு புரியவில்லை.எனக்கு அப்போது தான் உரைத்தது என் பத்தாவது மதிப்பெண் சான்றிதழ் அவளிடம் இருப்பது."எனக்கு உடம்பு சரியில்லை..அதான் யாரோ நடுவில் இப்படி செய்து விட்டார்கள்.." என்று சொன்னாள்.பெண்களிடம் ஏமாறுவது வழக்கம் என்றாலும் இது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.என் மதிப்பெண் சான்றிதழ் தான் எனக்கு பெரிதாக தெரிந்தது.சண்டை போடாமல் வாங்கி விட்டேன்.

டிஸ்கி :

இருங்க ஒரு கால் வருது.என்ன துபாய்ல ஆபரா.அப்புறம் சென்னையா..மதிப்பெண் சான்றிதழ் வேண்டுமா..எங்கே வரட்டும்..போனை வைத்து விட்டேன்.யாராவது சொல்லுங்க கலர் ஜெராக்ஸ் குடுத்து ஏமாத்த முடியுமா..

இன்னும் பாஸ்போர்ட் வாங்கவில்லை.தீவிரவாதிகளுக்கு தான் முன்னுரிமையாம்.

18 comments:

நையாண்டி நைனா said...

நல்ல அனுபவம்.

Anonymous said...

நல்லா இருக்கே..

அகல்விளக்கு said...

சூப்பரு...... தல....

குறை ஒன்றும் இல்லை !!! said...

haaaaaaaaaaa.....

வெண்ணிற இரவுகள்....! said...

படிச்சேன் நண்பா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,நீ எங்க இருந்து வர துபாய் ,பஹ்ரைன் ,அபுதாபி

Prathap Kumar S. said...

நல்லவேளை துபாய்க்கு வராம போனது நல்லதுக்குன்னே நினைச்க்கோங்க... இங்க எலலாம் நாறிப்போய்கிடக்கு... நல்ல அனுபவம்...

நையாண்டி நைனா said...

/*அப்போ எல்லாம் ரொம்ப வெட்டி தான்.*/

இப்பவும் அப்படி தானாமே...

நையாண்டி நைனா said...

/*அப்படி இருக்கும் போது அந்த போன் கால் வழியா ஒரு சோதனை வந்தது*/

"கால்"-ன்னாலே உங்களுக்கு பிரச்சினையா தான் இருக்கு... அதனாலே இனி "கால்" இல்லாத போன யூஸ் பண்ணுங்க...

நையாண்டி நைனா said...

/*எனக்கு துபாய் எல்லாம் வேண்டாம்.(எங்கிட்ட பிளாஸ்டிக் பாய் இருக்கு.அது போதும்) என்று சொன்னேன்*/

துபாய் ராஜாவே எங்ககிட்டே தான் இருக்காருன்னு சொல்ல வேண்டியது தானே...

நையாண்டி நைனா said...

/*நான் வேலை செய்யாத துறையை கூட தெரிந்து இருக்க வேண்டும் என்று சொன்னாள்*/

அடப்பாவி அப்படியா சொன்னா....? அப்படின்னா அண்ணன் கேபிள் கிட்டே அனுப்பி வைக்க வேண்டியதுதானே அவளை... அவருதான் துரை.. நான்.. ரமேஷ் சார்.. எழுதுனவரு...

நையாண்டி நைனா said...

/*எந்த நேரமும் செல்போனுடன் சகவாசம்.குளிக்கும் இடத்தில் ஆரம்பித்து கழுவும் இடம் வரை.*/

ஏண்டா... அம்பி... இப்படி பொய் சொல்றே...
உடனே... நான் நீ குளிக்குறதை பற்றி சொல்றேன்னு நெனைக்காதே...
நீ வச்சிருக்குறது பேரு செல்போன்-ன்னு சொன்னியே அதை சொன்னேன்.

நையாண்டி நைனா said...

/*ஒரு நாள் கைத்தவறி அது தண்ணீரில் விழுந்து விட்டது.*/

எது...????
தெளிவா சொல்லுடா ராசா...

புலவன் புலிகேசி said...

நல்ல அனுபவம் தான்..ஆமாம் துபாய்ல எங்க சார்ஜாவா? அபுதாபியா? பக்ரைனா?

ரெண்டு said...

"இன்னும் பாஸ்போர்ட் வாங்கவில்லை.தீவிரவாதிகளுக்கு தான் முன்னுரிமையாம்." - It may look funny but its true

thamizhparavai said...

அடப்பாவமே... இவ்வளவு அப்பாவியா நீரு...
பாஸ்போர்ட் எடுப்பதே அக்கப்போர்ரு..இதில வடமாநிலத்தில மொழியும் புரியாம எடுக்கிறது கொடுமை..
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நானும் அந்தக் கொடுமையை அணுஅணுவா அனுபவிச்சேன்...’வெள்ளையப்பன்’ தான் கொஞ்சம் அதிகமாவே செலவானாரு...

சிநேகிதன் அக்பர் said...

சோகத்தை கூட சுவையா சொல்லியிருக்கீங்க.

அதனாலதான் இரும்புத்திரை போட்டிருக்கிங்களா.

நீங்க ரொம்ப நல்லவரு மாதிரி தெரியிது.

வேலன். said...

சூப்பர் நண்பரே....

வாழ்க வளமுடன்,
வேலன்.

ரமேஷ் வைத்யா said...

சூப்பர்