Wednesday, November 25, 2009

விஜய் முதல்வராகாமல் தடுக்க இன்னும் சில வழிகள்

விஜய் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைக்க காரணம்..இது எல்லாம் ஏற்கனவே நடந்தது..

1.காங்கிரஸில் சேர்ந்தால் வேட்டைகாரன் படத்தை ஈழத் தமிழர்கள் அயல் நாடுகளில் புறக்கணித்து விடுவார்கள் என்ற பயம்.

2.வேட்டைகாரன் படத்தில் இருந்த பன்ச் வசனங்களை எல்லாம் பன்ச் பஞ்சு பஞ்சாக பறந்து போகட்டும் என்று வெட்டி எறிந்து விட்டார்கள்.

3.பெரிய ஹீரோக்களின் படங்கள் எல்லாம் பண்டிகை தினத்தில் தான் வெளி வர வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் முடிவு.எந்த பண்டிகையும் இல்லாமல் டிசம்பர் 18 அன்று வெளி வருகிறது.அப்ப விஜய் பெரிய ஹீரோ இல்லையா என்று கேள்விக்கு இடம் கொடுத்தது.

4.கல்யாண மண்டபத்துக்கு நோட்டீஸ்.

5.அடுத்த ஆயுதமாக நில மோசடி வழக்கு.(விஜய்க்கு சாதகமாக தீர்ப்பு வந்து விட்டது)

இன்னும் சில வழிகளை நான் சிபாரிசு செய்கிறேன்.

1.வேட்டைகாரன் படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக என்று வரும் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று நேரடியாக சன்னில் ஒளிப்பரப்பலாம்.இப்படி செய்தால் விஜய் சின்னத்திரைக்கு வந்து விடுவார்.

2.கோலங்கள் வரும் டிசம்பர் நாலாம் தேதி முடிவதால்,ஏழாம் தேதியில் இருந்து ஒன்பது மணி ஸ்லாட்டில் வேட்டைகாரனை ஒளிப்பரப்பலாம்.

மேலே கூறிய வழிகளுக்கு ஒரே ஒரு நிபந்தனை தான்.

சன் டி.டி.ஹெச் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் குடுக்கலாம்.ஒரே கல்லில் இரண்டு மாங்கா.டி.டி.ஹெச்சும் விற்பனை ஆகும்.டி.ஆர்.பி யும் எகிறும்.

3.டீலா நோ டீலா நிகழ்ச்சியில் விஜய்யை பங்கேற்க சொல்லலாம்.அல்லது ரிஷிக்கு பதில் நிகழ்ச்சியை நடத்த சொல்லலாம்.

4.சுறாவுக்கு போட்டியாக இறா,புறா என்று படம் எடுத்து வெளியிடலாம்.படம் வரும் முன்னே லொள்ளு சபாவில் போட்டு கந்தல் செய்யலாம்.

5.தெலுங்கு படத்தின் ரைட்ஸ் விஜய் வாங்குவதற்கு முன் அந்த படத்தை டப் செய்து வெளியிடலாம்.மகேஷ் பாபு எந்த படமும் நடிக்காமல் அவரை கேட்டுக் கொள்ளலாம்.

டிஸ்கி :

இதையும் மீறி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் உடனே வரவும் - விஜய்காந்துக்கு நடிக்க தெரியாது என்று இப்போது தான் அவருக்கு தெரிந்து அரசியலுக்கு வந்து விட்டார்.உங்களுக்கு தான் நடிப்பு வராது என்று தெரியுமே.அதனால் உடனே வரவும்.

இன்னும் பத்து வருடம் கழித்து வரலாம்.விஜய் மகனுக்கு பதினெட்டு வயது ஆகி விடும்.அவர் மகன் நடிகராகி விட்டால் விஜய் அரசியலில் இறங்கி விடலாம்.காரைக்குடி,திரு நெல்வேலி பக்கம் ஆச்சிகளின் எண்ணிக்கை அதிகம் ஆகி விடும்.அவர்களைப் பிடித்து விடலாம்.

இன்று உடம்பு சரியில்லாத காரணத்தினால் இந்த பதிவு இத்துடன் முடிகிறது.வேறு எதுவும் வழி இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

13 comments:

ஊர்சுற்றி said...

:) நல்லா யோசிக்கிறீங்கப்பா! விஜயின் சீடர்கள் பின்னூட்டத்தில் பின்னுவார்கள் என்பதால் நான் இத்துடன் விடைபெறுகிறேன். :)

குசும்பன் said...

//உடம்பு சரியில்லாத காரணத்தினால் இந்த பதிவு இத்துடன் முடிகிறது.வேறு எதுவும் வழி இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லலாம். //

உங்களை அதே நிலையில் தொடர்ந்து வைக்க , விஜய் ரசிகர்கள் வரட்டும், அல்லது வேட்டைக்காரன் சீக்கிரம் வரட்டும்:))

வெண்ணிற இரவுகள்....! said...

ஏற்கனவே விஜய்க்கும் சன் தொலைக்காட்சிக்கும் பிரச்சனையாம் ..........தீபாவளி முடிந்து ஒரு இரு வாரத்தில் படத்தை விட்டுருக்கலாம் ....ஆனால் கடுமையான போட்டி இருக்கும் நேரத்தில் படத்தை வெளிடுயுடுகிறார்கள் ...ஜக்கு பாய் பொங்கலுக்காம் ....இது சாதாரண தினத்தில் வருகிறது நல்ல போட்டியாக நிறைய படங்கள் இருக்கின்றன ..............................
"ஈழம் பற்றி பேசி விட்டு ராகுலுடன் பேசிய விஜய்க்கு தேவை தான்.." இது ....நாளுக்கு நாள்
காமெடியனாக போய்க்கொண்டிருக்கிறார் விஜய் ....அவர் அப்பாவுடன் சண்டை போட்டு வெளியே வருவது நல்லதுங்க ணா

அகல்விளக்கு said...

விசய வச்சு காமெடி கீமெடி பண்ணலயே...??

//இன்று உடம்பு சரியில்லாத காரணத்தினால் இந்த பதிவு இத்துடன் முடிகிறது.//

வேட்டைக்காரன் படத்த நினைச்சாலே இப்படியா ??

அப்ப படத்த பாத்தா பரலோகம்தான் போல !

தர்ஷன் said...

எப்படியோ அவர் நடிக்காமல் இருந்தால் சரி

க‌ரிச‌ல்கார‌ன் said...

//கோலங்கள் வரும் டிசம்பர் நாலாம் தேதி முடிவதால்,ஏழாம் தேதியில் இருந்து ஒன்பது மணி ஸ்லாட்டில் வேட்டைகாரனை ஒளிப்பரப்பலாம்//

ம‌க்க‌ள‌ மொத்தமா கொல்ர‌துக்கா ????????
உயிர் கொல்லி ஆயுத‌ங்க‌ள் அனும‌தி இல்ல‌ தெரியுமா??

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லதான் இருக்கு யோசனை

இதுக்கு விஜய் ஒத்துக்கணுமே

புலவன் புலிகேசி said...

தல வேட்டைக்காரன் படத்த அவரையே பாக்க வச்சா போதும் கோமா ஸ்டேஜ்க்கு போய்ருவான்...

Unknown said...

நல்ல இருக்கே யோசனையெல்லாம்... வேட்டைக்காரன் வெள்ளி விழாவில் அவர் இதன் முடிவை அறிவிப்பார்...

மேவி... said...

அப்ப 2011 ல விஜய் சிறத நகைச்சுவை நடிகருக்கான விருது வாங்குவர் ன்னு சொல்லுங்க .......

இன்னும் கொஞ்சம் அவரை தமகே செய்து இருக்கலாம்.... கொஞ்சமா பண்ணினதற்கு அவரு வருத்த பட போறாரு

தமிழினியன் said...

நல்லாத்தான் இருக்கு

அட நல்லாத்தான் இருக்கு

அடடே நல்லாத்தான் இருக்கு


//நகைச்சுவை நடிகருக்கான விருது வாங்குவர் ன்னு சொல்லுங்க ....... //

இதுக்கு கூட தகுதியில்லைன்றது என் எண்ணம்.

நகைச்சுவை நடிகர் விருது நகைச்சுவையா நடிக்குறவங்களுக்குத் தானே தருவாங்க?

Unknown said...

ரொம்ப டெரர்ரா இருக்கு..

தேவன் மாயம் said...

தாங்காது சாமி!! ஆளை விடுங்க!!