Sunday, November 1, 2009

ஒரு வீணாபோன நடிகனின் கத

அந்த வருசம் அந்த ஊரு வானம் பாத்தப் பூமியா காய்ஞ்சு கிடக்க,விடிஞ்சா பொங்கல் பண்டிகை.அப்ப தான் இந்த கதையோட நாயகன் பொறந்தான். வீட்டுல முத புள்ள.. மழையும் வானத்தக் கிழிச்சிகிட்டு கொட்ட..ராசியான புள்ள தான் நினச்சிகிட்டாங்க..சின்ன வயசுல இருந்து சூசகமாதான் சொல்வாரு..எப்படின்னு பாத்தா கழுத்துல இருந்த தங்கச் சங்கிலிய தொலச்சிபுட்டு ஐயா நெல்லு மூட்டயில வந்து படுத்துகிட்டாரு..வீட்டில எப்படி சொல்லறது யோசிச்சி சொக்காய கழத்திப் போட்டுட்டு பள்ளி கொண்ட பெருமாள் மாதிரி ஒரு போஸ் குடுத்தாரு..மவன் கழுத்தில சங்கிலிய காணாம ஊர் முழுக்க தேடி எடுத்துகிட்டு வந்தாங்க..

பள்ளிகூடத்துல படிக்க போறேன் சொல்லிட்டு போன இந்த பக்கி முத நாளே வாத்திச்சி கூட சண்ட..துரைய அப்பவே இங்கிலீஸ் பேசட்டும்னு சொல்லி இங்கிலீஸு பள்ளிகூடத்துல சேத்தாங்க..இவன் போயி சேந்த நேரமோ என்னமோ அங்க இருந்த ரேகாவுக்கு - கடலோர கவிதைகள் டீச்சருக்கு வாயில சனி.இவன் என்னமோ கேக்க அவுக என்னமோ சொல்ல..வீட்டுக்கு வந்த புள்ள்கிட்ட அவன் தாத்தா ஆசையோட இது என்ன எழுத்து அப்படி ஹெச்சை காட்டி கேக்க..ஆன் அதுவா செத்த எழுத்து அப்படினு ரேகா சொன்ன மாதிரியே சொல்லிபுட்டான்.மறுனா ஒரு படையே கிளம்பி போயி டீச்சர ஒரு வழி ஆக்கிட்டு வந்தாங்க..

நாலு வயசு பையன கலக்டர் ஆக்கியே தீரணும் அந்த வெறியில ஒரு விடுதியில தூக்கி போட்டுட்டாங்க.."ரயில் போகுது..ரயில் போகுது.." அப்படி ஒரு பாட்டு அந்த பாட்டுக்கு எல்லா பிள்ளையும் வகுப்ப சுத்தி ஓட இது மட்டும் பிடிச்சி வைச்ச பிள்ளையார் மாதிரி பாட்டும் பாடாம இடத்துல உக்காந்து இருக்கு...மவன் படிக்கிற ஆழக ஆசையா பாக்க வந்த அம்மாவுக்கு அதிர்ச்சி..விடுதியில படிக்கிற பையன் அதானால அப்படி ஒரு சலுகையாம்..வந்த கோவத்துல டீச்சரப் பிடிச்சி கிழிக்க..அப்புறம் இந்த ஓடாத பயபுள்ள தான் அந்த ரயிலுக்கு இஞ்சின்..அதன் பின்னடி இஞ்சினியருக்கு படிச்சான்.இப்ப எல்லா புள்ளையும் இவன் பின்னால ஓடி வந்தாங்க..

அப்புறம் இவன் இருந்த கோலத்தப் பாத்துட்டு சாக கிடந்த பாட்டியக் கூட விட்டு போட்டு இவங்க அம்மாவும் தம்பியும் அந்த ஊருக்கே வந்துட்டாங்க.அவன் தம்பி இருக்கானே குசும்பு பிடிச்சவன்..பேச கத்துகிட்ட உடனே ரீமிக்ஸ் போட்டவன்..வீட்ல அவன் பாம் போட்டுட்டு "அம்மா அண்ணன் டியூசன்ல இருந்து விட்டுட்டான்.." - இப்படி சொல்லிட்டு முத ஆளா மூக்க பிடிப்பான்.ஒம்போது வயசு பையன மிலிட்டரி ஆபிஸரா உருவாக்க சபதம் போட்டு திரும்ப விடுதியில விட்டுட்டாங்க..அதனால வந்த கோவத்துல மிலிட்டரி ரம் கூட குடிக்கிறது இல்லனா பாத்துகோங்க..ஒரு வழியா அந்த முயற்சி தோத்து போக..இவன போய் சாமான் செட்டோடு அள்ளிகிட்டு வந்தாங்க..

மூனு வருசம் ஊர்ல படிச்ச பெறவு சென்னைய நாசம் பண்ண பட்டிண பிரவேசம் செஞ்சாங்க இந்த பயபுள்ள..பத்து படிக்கும் போதே ஒரு பனிரெண்டு படிச்ச புள்ள கூட டூயட் பாட ஆச.அது ஒரு விபத்தால அப்பள வடையாக மாற.. வால சுருட்டிகிட்டு படிச்சி பிட் பாஸ் பண்ணி வெளிய வந்தாச்சு..அடுத்த வருசம் தேற மாட்டான்னு எல்லாரும் நினைக்க அத பொய்யாக்கி காட்ட..ஒரு காட்டுக்குள்ள இருந்த காலேசில சேத்து போட்டு வந்தாங்க..

ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருக்கு.ரொம்ப கோவம் வரும்..அந்த நேரத்துல பூடம் தெரியாம சாமியாடுவான்..அதான் அவன எல்லோரும் சின்ன வயசுல அடிக்கடி சீண்டி பாப்பாங்க.. அங்க ஒரே நேரத்துல ரெட்ட குதிரையிலே சவ்வாரி செய்ய இரண்டும் அவன கீழே தள்ளி விட்டு காணாம போயிருச்சி..அப்புறம் ஒரு வழியா படிச்சி முடிச்சி,கிழிச்சி அடிச்சி வெளிய வந்தா வேல கிடைக்கிறது தான் குதுரக் கொம்பா இருந்துச்சி..அதையும் தாண்டி வேல கிடைக்க மும்பை கிளம்ப.. வீடே வந்து ஏத்தி விட்டு வந்தாங்க..

அப்புறமா திறமையெல்லாம் காமிக்கிறேன்னு சொல்லி பிளாக்கு ஆரம்பிச்சி எல்லாரையும் ஒரு வழி பண்ணுது.இது கண்ணாடி இதயம்,கூறு கெட்ட இதயம் அப்படி விளம்பரம் மட்டும் பெருசா இருக்கும்..பதிவுலயும்,சில சமயம் பின்னூட்டதிலயும் டெரர் மாதிரி பதில் சொல்வான்.சாட்ல பேசுங்க..அப்படியே பம்முவான்..வழக்கமா ஒரு டயலாக் வேற அடிப்பான்..அது கரகாட்டகாரன் படத்துல இருந்து ஆரம்பிச்சது..அது தாங்க "எல்லாம் உங்க ஆசீர்வாதம்.."நேத்து தான் அந்த படம் போட்டாங்க..அவன் கேள்வியா கேப்பான்..அவன நீங்க ஒரு கேள்வி கேளுங்க..பதில் சொல்ல மாட்டான்..ஏன்னா தெரியாது..படிக்கும் போது கூட அவன கேள்வி கேட்டு நிப்பாட்டிட்டு தான் மறுவேல பாப்பாங்க..க்ரிப்பிட்டிங்கு முறைய கண்டுப் பிடிச்சது யாருனு கேட்டாங்க..இவன் சொன்ன பதில கேட்டு அந்த டீச்சரம்மா அடுத்த செமஸ்டர்ல வேலய விட்டு போட்டு போயிட்டாங்க..இவன் சொன்ன பதில் அப்படி க்ரிப்பிட்டிங்கு முறைய கண்டுப் பிடிச்சது ஜிங்காரோ அப்படி பீர் பேர சொல்ல..கேட்டவங்க மட்டும் பொங்கி வந்தாங்க..

ஆ..என்னமோ மறந்துட்டேனே..டிஸ்குவா இல்ல டிஸ்க்கியா என்னமோ கடைசியில போடுவானே..அதே தான் மக்களே..இவன் எழுதுற அழகப் பாத்து யாருமே கடுதாசி போடலையாம்..அதான் மனசாட்சியோட கால்ல இல்ல இல்ல மனசுல விழுந்து எழுத சொன்னான் அதான் இப்படி..125 வது பதிவு வேற..அதனால தான் இந்த கொசுவர்த்திய சுத்த வேண்டியதா போச்சு..இதுல ஒரு ஒத்தும என்னனா எல்லா பத்தியும் ஒரே மாதிரி முடிஞ்சு இருக்கு..அதாங்க வந்தாங்க..

8 comments:

அகல்விளக்கு said...

நடிகன்னு சொன்ன உடனே யாரோன்னு நினைச்சிபுட்டேன்.

மாநடிகன்னு போட்டிங்கன்னா தலைப்பு கரீசிட்டா இருக்கும் தல.

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

ரைட்டு.. :))

துபாய் ராஜா said...

அவனா நீயி...... :))

சந்திர கிருஷ்ணா said...

super

Prathap Kumar S. said...

நல்லா இருந்துச்சு...

ஆ.ஞானசேகரன் said...

nice

Raju said...

என்ன சொல்லி பாடுவதோ.....
என்ன வார்த்தை கூறுவதோ..!
லாலேலாலலல்லா......
ஆஆஆஆஆஆஆஆங்...

தினேஷ் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

இந்தாப்பா ஏன் இந்த கொலவெறி..

125 :)